வகை: தன்னம்பிக்கை
நம் எல்லோருக்குமே வாழ்வில் ஒரு லட்சியம் இருக்கும். அதை அடைவதற்காக கடினமாக உழைக்கவும் செய்வோம். இருப்பினும், அந்த இலக்கை அடைய தாமதம் ஏற்படக்கூடும். அது ஏன் என்று புரியாமல் இருக்கிறீர்களா? நம்முடைய லட்சியத்தை அடைய உழைப்பு மட்டுமே போதுமானாதா? அதையும் தாண்டி எது தேவை என்பது புரிந்துக்கொள்ள இந்த கதையை முழுமையாக படியுங்கள்.
வகை: அம்மன்: வரலாறு
🌱 பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், கர்கடக மாதம் என்றும் சொல்வார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.
வகை: அம்மன்: வரலாறு
காஞ்சி மகா பெரியவர் சென்னை பரங்கிமலையில் இருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்கும் பொருட்டு, தனது பக்தர்களுடன் பாத யாத்திரையாக வந்து கொண்டிருந்தார். வரும் வழியில், திரிசூலம் சென்று அங்கு திரிசூலநாதரையும் திரிபுரசுந்தரியையும் தரிசித்தார். பின்பு பழவந்தாங்கலில் ஓரிடத்தில் சற்று ஓய்வு கொள்ள எண்ணம் கொண்டவராக, அங்கிருந்த அரச மரத்தடியில் அமர்ந்தார்.
வகை: மஹாலட்சுமி தேவி வழிபாடு
கல வளங்களையும் தரும் வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். அன்று பெண்கள், குறிப்பாக சுமங்கலிப் பெண்கள் தங்களின் தாலி பாக்கியத்துக்காகவும், குடும்ப சுபிட்சம், மற்றும் சௌபாக்கியம் நிலைக்கவும், இந்த விரதத்தை பக்தியுடன் மேற்கொள்ள வேண்டும். கேட்கும் வரங்களை அள்ளித் தரும் லட்சுமி தேவியை பூஜிப்பதால், வாழ்க்கையில் நிலையான செல்வமும், நீடித்த புகழும் கிடைக்கும். திருமணமான பெண்கள், ஒவ்வொரு வருடமும் தவறாமல் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
குரோதி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று அபூர்வ பிரதோஷம் வருகிறது!!! நம் வாழ்விலே ஏராளமான அற்புதங்களும், அதிசயங்களும் நடந்து வருகிறது. ☘ அந்த வகையில் ஆகஸ்டு மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது. ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷம் தான் வரும்.
வகை: ஆரோக்கியம் குறிப்புகள்
. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
சதுரகிரி – இம்மலையில் எல்லாவித மூலிகைகளும், மரங்களும், விலங்கினங் களும், பறக்கும் பாம்பு முதல் அனைத்துப் பறவையினங்களும் வாழ்கின்றன. சுந்தரமூர்த்தி: கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
நம்மூர் ஆலயங்கள் தோறும் வருடாந்தம் பிரம்மோத்ஸவம் ஆரம்பத்தில் கொடியேற்ற விழா நடைபெறுகின்றது. கொடியேற்றம் செய்ய வேண்டிய முறைகள் பற்றி ஆகமங்கள் பலவற்றைக் குறிப்பிடுகின்றன. ஆகமங்களின் வழிநின்று பிரம்மோத்ஸவத்தை ஆற்றும் ஆலயங்கள் அவற்றை அனுசரித்தே கொடியேற்ற விழாவை பேணுவதனைக் காணமுடியும்.
வகை: இராமாயணம்: குறிப்புகள்
ராமன் 14 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டார். அதாவது 365 நாட்கள் X 14 ஆண்டுகள் + 3 லீப் வருட நாட்கள் = 5113 நாட்கள். இந்த 5113 நாட்களில் அவர் எங்கெங்கு போனார்? யார் யாரைப் பார்த்தார்? என்னென்ன செய்தார்? நாம் அனைவரும் யோசிக்காத வகையில் யோசித்து வால்மீகி ராமாயணப்படி தொகுத்துக் கொடுத்துள்ளார் டாக்டர் ராமாவதார் சர்மா . ராமன் 14 ஆண்டுகளுக்குள் வராவிடில் தீக்குளித்து விடுவேன் என்று அருமைத் தம்பி பரதன் செப்பியதும், அதன்படி சரியாக 14 ஆண்டுகள் முடியும் தருவாயில் ராமன் வந்ததும், பரதன் சொன்ன சொல் மீறாதவன் அவசரப்பட்டு ஏதேனும் செய்து விடப்போகிறான் என்று ஹனுமாரை ராமன் அனுப்பியதும் நாம் அறிந்ததே. மற்ற விஷயங்களை நாம் நுணுகிப் பார்க்கவில்லை. டாக்டர் ராமாவதார் சர்மா செய்த ஆராய்ச்சியை டாக்டர் ராஜேந்திர சிங் குஷ்வாஹா – ‘’பாரதீய வரலாறு- ஒரு கண்ணோட்டம்’’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் பட்டியலிட்டுள்ளார். இதோ சில சுவையான தகவல்கள்:– கைகேயி உத்தரவு போட்டபின்னர் என்ன நடந்தது? 1.அயோத்தி- பிறந்த ஊரில்– ராம ஜன்ம பூமியில் — எல்லோரையும் நமஸ்கரித்து விட்டுப் புறப்பட்டார்- ஸீதா தேவியோடு கடும் வாக்குவாதம்; காடு என்பது கல், முள் நிறைந்தது என்பது ராமர் வாதம்- ஸீதையோ பிடிவாதம்- கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை- ராமன் ஸாமியே அப்பப்பா! என்றாள். கணவனே கண் கண்ட தெய்வம் என்றாள். ராமனும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்- போகும் இடம் வெகு தூரம்!- புறப்படு என்றான். 2. முதல் மண்டகப்படி- தமஸா நதி முதல் நாள் இரவு தமஸா நதிக் கரையில் தங்கினார்; ஏன்? அயோத்தி நகரமே திரண்டு எழுந்து பின்னால் வந்து விட்டது; அவர்களுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்க வேண்டுமே! ராமனோ- சாந்த குண ஸ்வரூபன் – கோபமோ தாபமோ இல்லாத ஜீவன் முக்தன். 3.அடுத்த மண்டகப்படி- பூர்வ சகியா அயோத்தி மக்களுக்கு பெரிய கும்பிடு போட்டார்; காம்ரேட்ஸ் (Comrades)! உங்கள் ஆதரவுக்கு நன்றி; தயவு செய்து திரும்பிப் போங்கள். என்னப்பன் தஸரதனும் , என் தம்பி பரதனும் உங்களைக் காத்து ரக்ஷிப்பர் என்றார். ராமன் சொல்லைத் தட்ட எவரால் முடியும்? தயக்கத்தோடு, மனக் கலக்கத்தோடு திரும்பினர்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
கோடக நல்லூர் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயம், திருநெல்வேலி மாவட்டம்! கோடக நல்லூர் என்னும் அழகிய கிராமம், திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி என்னும் நநிக்கரையில் அமைந்துள்ளது. நெல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோடக நல்லூர் என்னும் இந்த ஊர். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி - முக்கூடல் செல்லும் ரோட்டில் நடுக்கல்லூர் என்ற ஊரில் இருந்து, தெற்கே ஒரு கிலோமீட்டர் சென்றால் கோடகநல்லூர் கிராமத்தை அடையலாம். இந்த ஊர் பழங்காலத்தில் ‘கார்கோடக ஷேத்திரம்’ என்றும், ‘கோடகனூர்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு சிவன் கோவில்களும், ஒரு பெருமாள் கோவிலும் மேலும் நங்கையார் அம்மன் என்னும் காவல் தெய்வமும் உள்ளது. இதில் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயம் சுமார் 2000 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட ஆலயம். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவாலயம். வயல் வெளிகள் சூழ்ந்த தாமிரபரணி நதிக்கரையோரம் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள திருக்கோயிலாகும். இந்தக் கோவிலின் சிறப்பு அம்சம் அமர்ந்தநிலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் . பல இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் கோடகநல்லூர் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில், அமர்ந்த(உட்கார்ந்த நிலையில்) கோலத்தில் காட்சி தருவது ஒரு விசேஷமாகும். இப்படி உட்கார்ந்த அர்த்தநாரீஸ்வரரின் நிலையானது ஸ்ரீ தட்சிணாமூர்த்தி திருக்கோலமாக காட்சியளிக்கிறது.
வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
1.♥♥கோவிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும். 2.♥♥கோவில் இருக்கும் பூரி என்ற ஊரில் எந்த இடத்தில் , எந்த பக்கத் தில் இருந்து பார்த்தாலும் , கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும். 3.♥♥.பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் , காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் , மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும். 4.♥♥இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத் திலும் கண்களுக்கு தெரிவதில்லை. 5.♥♥இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை. 6.♥♥இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி , இருபது லட்சமானாலும் சரி , சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதுமில்லை. மீந்து போய் வீணானதுமில்லை.
வகை: வாழ்க்கை பயணம்
புதிதாக ஒருவர் வேலைக்கு செல்கிறார். இப்போது அவர் குறித்துக் கொள்ள வேண்டிய இலக்கு? அங்கே சிறந்த சிப்பந்தியாக வரவேண்டும்! அடுத்ததாக சீனியரை போல் வர வேண்டும்!! அடுத்ததாக அந்த கம்பெனி மேற் பார்வையாளராக வரவேண்டும்!! அடுத்ததாக மேனேஜராக வரவேண்டும்!! அடுத்ததாக.. இதேபோன்று தானும் ஒரு கம்பெனி வைத்து அதற்கு முதலாளியாக வரவேண்டும்!! இலக்கு என்பதன் கருத்து இதுதான்!! மதுரையில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒவ்வொரு ஊராக கடந்த பிறகே சென்னையை அடைகிறது!! அதுபோல நம்முடைய லட்சியம், இலக்கு, குறிக்கோள், என்பதை அடைவதற்கு.. நமது முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகளாக.. நாம் கடக்க வேண்டிய, கடந்து செல்ல வேண்டிய, எல்லை பரப்புகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்!! அதாவது நமக்குள் நாமாகவே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்..