வகை பட்டியல்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் வியாபாரத்தில் தாக்கம் | The importance of digital technology and its impact on business

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் வியாபாரத்தில் தாக்கம்

நவீன உலகில், டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இது உலகளாவியமாக வியாபாரத்தை மாற்றி அமைத்து, திறம்பட செயல்பட உதவும் வழிகளை உருவாக்கியுள்ளது.

பிரபலமான செய்தி | Trending news

பிரபலமான செய்தி

2024 இல் உலகம் பல்வேறு துறைகளில் வேகமாக நடைபெறும் நிகழ்வுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள், அரசியல் மாற்றங்கள், சமூக இயக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் போன்றவை அனைத்தும் முக்கியமான செய்திகளாக மாறியுள்ளன. இப்போது, 2024 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் எவ்வாறு இந்த செய்திகள் பேசப்படுகின்றன என்பதை விரிவாக பார்ப்போம்.

மகிழ்ச்சி  | happiness

மகிழ்ச்சி

து உண்மையான ஆனந்தம்? ஆனந்தமான வாழ்வில் மகிழ்ச்சி தானாக வந்து சேர்ந்து விடும். மகிழ்ச்சியைத் தேடி நாம் செல்ல வேண்டியது இல்லை. அது தானாக நம்மிடம் வந்து சேர வாழ்வில் சில விஷயங்களை பின்பற்றினாலே போதும் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடி விடலாம்.

விழிப்புணர்வு சிந்தனை | Awareness thoughts

விழிப்புணர்வு சிந்தனை

நேரம் இருந்தால் வாசியுங்கள்…மனதை கலங்க செய்யும் வரிகள். படியுங்கள்! அனைவருக்கும் பகிருங்கள்!! சாலைகளுக்குத் தெரியாது நீ சாதிக்கப் பிறந்தவன் என்று விரைந்து செல்லும் வாகனங்களுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் வீட்டின் விடியலென்று…… முந்திச்செல்லும் முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் வீட்டின் முகவரி என்று……. கடந்துச் செல்லும் கனரக வாகனங்களுக்குத் தெரியுமா? நீ தான் எங்கள் கண்மணி என்று.,….. விடியலும் விலாசமுமாய் நம்பிக்கையும் எதிர்காலமுமாய் நம்பியிருக்கிறோம் உன்னை…… ஐந்து நிமிடங்கள் காத்திருந்து அடுத்து வரும் பேருந்திற்காக காத்திருக்க முடியாத உனக்காக நீ பிறந்த நாள் முதல் இன்று வரை காப்பாற்றுவாயென்று காத்திருக்கிறோம் காலமெல்லாம் உடனிருப்பேனென்று கட்டியத்தாலி நினைவிருக்கிறதா கண்ணாளா காத்திருப்பேன் கடைசிவரை விரல் பிடித்து நான் நடந்து கரை தாண்டவும், கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட உன் நிழல் நான் தந்தையே விழித்திருப்பேன் நீ வரும் வரை…,..

திருவண்ணாமலை சிறப்புகள் | Tiruvannamalai specialty

திருவண்ணாமலை சிறப்புகள்

திருவண்ணாமலைக்கு “நவதுவார பதி” என்றும் ஒரு பெயர் உண்டு. அதற்கு 9 நுழைவாயில்களைக் கொண்ட நகரம் என்று அர்த்தமாகும். திருவண்ணாமலை ஆலயத்தில் 9 கோபுரங்கள் உள்ளது. இந்த 9 கோபுரங்களில் 4 கோபுரங்கள் பெரியது. 5 கோபுரங்கள் “கட்டை கோபுரம்” என்றழைக்கப்படும் சிறிய கோபுரங்களாகும். 1. ராஜகோபுரம் (கிழக்கு) 2. பேய்க் கோபுரம் (மேற்கு), 3. திருமஞ்சன கோபுரம் (தெற்கு) 4. அம்மணியம்மாள் கோபுரம் (வடக்கு) 5. வல்லாள மகாராஜா கோபுரம் 6. கிளி கோபுரம், 7. வடக்கு கட்டை கோபுரம் 8. தெற்கு கட்டை கோபுரம் 9. மேற்கு கட்டை கோபுரம் 1. ராஜகோபுரம் திருவண்ணாமலை ஆலயத்தில் கிழக்கு திசையில் கம்பீரமாக ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்துக்கு ராயர் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. தென்னகத்தில் மிகப்பெரும் ஆன்மிக பணி செய்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இந்த கோபுரத்தை கட்டுவதற்கு அடித்தளம் அமைத்தார் என்பதால் அவர் பெயரால் இந்த கோபுரம் அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த கோபுரம்தான் தமிழ்நாட்டிலேயே மிக உயர்ந்த கோபுரமாக திகழ்ந்தது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை அமைக்கும்போது கருவறை கோபுரத்தை 216 அடிகள் உயரம் கொண்டதாக அமைத்து இருந்தார். அவருக்கு பிறகு 15-ம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தனது வெற்றிகளுக்கு நினைவாக திருவண்ணா மலையில் பிரமாண்டமான ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ராஜராஜன் சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜகோபுரம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். 1550களில் அந்த ராஜ கோபுரத்தை கட்டும் பணியை கிருஷ்ண தேவராயர் தொடங்கி தீவிரப்படுத்தி இருந்தார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைத்து ராஜகோபுரத்தை அவர் எழுப்பினார். ஆனால் அதன் பணிகள் முடிவதற்குள் அவர் காலம் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த ராஜகோபுரத்தை கட்டும் படி சிவநேசர் லோகநாதர் என்ற முனிவர்கள் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம் தெரிவித்தனர். அதை ஏற்று செவ்வப்ப நாயக்கர் திருவண்ணாமலை ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார். கிருஷ்ணதேவராயரின் ஆசைப்படி தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட ஒரு அடி உயரமாக 217 அடி உயரத்துடன் திருவண்ணாமலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. ஆங்கிரச ஆண்டு கார்த்திகை மாதம் புதன்கிழமை பவுர்ணமி ரோகிணி நட்சத்திர நாளில் அந்த ராஜகோபுரத்தில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த ராஜகோபுரம் பார்க்க பார்க்க கண்களுக்கு சலிப்பே தராத சிறப்பை கொண்டது. எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும். தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி அமைக்கப்பட்டது என்று சொல்வார்கள். அதேபோன்றுதான் இந்த கோபுரமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து அழகுற கட்டி முடிக்கப்பட்டதாகும். கோபுரத்தின் கீழ் பகுதி கற்களாலும் மேற்பகுதி செங்கல் மற்றும் சுதையாலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 11 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிட கலை அம்சங்களை அதிகமாக காணலாம். கோபுரத்தின் சுற்றுப்பகுதிகளில் நிறைய நாட்டிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. விநாயகர், முருகர், பிரம்மா, துர்க்கை, காளை வாகனம், மயில்மேல் அமர்ந்த முருகன், அன்னபறவை, லிங்கத்திற்கு பால் வார்க்கும் பசு உள்பட பல்வேறு சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோபுரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பூதகனங்களும் கண்களுக்கு விருந்து கொடுப்பதாக உள்ளன. கோபுரத்தின் இடது பக்கத்தில் செல்வகணபதி சிலை உள்ளது. விறன்மிண்ட நாயனாரின் சிலையும் இடம் பெற்றுள்ளது. ஆங்காங்கே மன்னர் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன. அந்த காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இந்த கோபுரத்தின் அழகை புகழ்ந்து பாடியுள்ளனர். அந்த பாடல்களும் கல்வெட்டுகளாக உள்ளன. அந்த காலத்தில் இறந்தவர்களின் 16-வது நாள் தினத்தன்று மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவார்கள். திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்த ராஜகோபுரத்தின் ஒரு பகுதியில் மோட்ச தீபம் ஏற்றுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். சமீப காலமாக இந்த பழக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2. பேய்க்கோபுரம் ராஜகோபுரத்திற்கு நேரே மேற்கு பகுதியில் பேய்க்கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் மலையை பார்த்தப்படி இருப்பதால் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ராஜகோபுரத்தை கட்டுவதற்கு கிருஷ்ணதேவ ராயர் திருப்பணிகள் தொடங்கியபோதே இந்த மேற்கு கோபுரத்தை கட்டுவதற்கும் திருப்பணிகளைத் தொடங்கி நடத்தினார். இந்த கோபுரத்தின் பணிகளையும் செவ்வப்ப நாயக்கர்தான் கட்டி முடித்தார். இதன் உயரம் 160 அடியாகும். இந்த மேற்கு கோபுரம் பேச்சு வழக்கில் மேக்கோபுரம் என்று மாறியது. பிறகு அது பேக்கோபுரம் என்று பேசப்பட்டது. கடந்த நூற்றாண்டில் பேக்கோபுரம் என்பதை மக்கள் தவறாக பேசி பேசியே பேய்க்கோபுரம் என்று அழைக்க தொடங்கி விட்டனர். மற்றபடி பேய்க்கும் இந்த கோபுரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 9 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் மகிசாசூரணை துர்க்கை வதம் செய்யும் காட்சி, காளை வாகனத்தில் அமர்ந்த சிவன், உமை அம்மை, பிரம்மா, முருகன், சரபேஸ்வரர், முனிவர்கள், பூதகனங்கள் இடம் பெற்றுள்ளனர்.

கடவுள் முருகன் பாடல்கள் | God Murugan Songs

கடவுள் முருகன் பாடல்கள்

ருகனுக்கு உரிய கந்த சஷ்டி கவசத்தை பாடி நம் வல்வினைகளை போக்கி வாழ்வில் வளமும், நலமும் பெற்று பெறுவாழ்வு வாழ்வோம். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா.... இந்த கந்த சஷ்டி கவசம் பாடினால் மனதில் இருக்கும் பயம் அகலும், எதிரிகள் விலகுவர், வெற்றியை தேடித் தரும். இந்த பாடலை தினமும் பாடலாம். சஷ்டி விரதம் தினங்களில் பாடுவது மேலும் விசேஷமானது. சூலமங்கலம் சகோதரிகளான ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் இந்த பாடலைப் பாடியுள்ளனர். கந்த சஷ்டி கவசம் என்றாலே அவர்களின் குரலும் சேர்ந்தே நம் மனதில் வந்து போகும். இந்த கந்த சஷ்டி கவசம் பாடினால் மனதில் இருக்கும் பயம் அகலும், எதிரிகள் விலகுவர், வெற்றியை தேடித் தரும். இந்த பாடலை தினமும் பாடலாம். சஷ்டி விரதம் தினங்களில் பாடுவது மேலும் விசேஷமானது. சூலமங்கலம் சகோதரிகளான ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் இந்த பாடலைப் பாடியுள்ளனர். கந்த சஷ்டி கவசம் என்றாலே அவர்களின் குரலும் சேர்ந்தே நம் மனதில் வந்து போகும்...

குல தெய்வ கோவில் வழிபாடு  | Worship at Kulatheiva temple

குல தெய்வ கோவில் வழிபாடு

குல தெய்வ வழிபாடு : நாம் எத்தனை பிரபலமான, பெரிய பெரிய கோவில்களுக்கு சென்று வழிபட்டாலும், எந்த தெய்வத்தை விழுந்து விழுந்து கும்பிட்டாலும், அந்த தெய்வங்களின் அருள் கிடைக்கும் வேண்டும், நாம் செய்யும் வழிபாடு, பரிகாரம் ஆகியவற்றிற்கு முழுமையான பலன் கிடைக்க வேண்டும் என்றால் எதற்கு முதலில் நமக்கு குலதெய்வத்தின் அருளும், நம்முடைய முன்னோர்களின் ஆசியும் இருக்க வேண்டும். குலத்தை காக்கக் கூடிய குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும். குல தெய்வம் என்பது யார் ? தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் ‘குலதெய்வங்கள்’ என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வம் கோவிலுக்கு அடிக்கடி செல்ல முடியா விட்டாலும், மாதத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக சென்று, வழிபட்டு விட்டு வர வேண்டும். குலதெய்வத்தின் சிறப்பு : குலதெய்வங்கள் பெரும்பாலும் கிராமங்களை ஒட்டியே வழிபாட்டு இடங்களைக் கொண்டிருக்கும். மேலும் குலதெய்வ கோயில்கள் பெரிய அளவில் கோபுரங்களை கொண்டிருப்பதில்லை. சிறிய கோயிலாக அல்லது வெட்ட வெளியிலேயே அமைந்துள்ளதாக தான் இருக்கும். ஆகம முறைப்படி அமைக்கப்பட்டிருக்கா விட்டாலும் இவை பெரும்பாலும் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியே அமைந்திருக்கும். வேம்பு அல்லது வில்வ வகை மரங்கள் குலதெய்வ கோயில்களில் இடம் பெற்றிருக்கும். குலதெய்வம் கோவிலுக்கு செல்ல தடை : சிலரது குடும்பங்களில் குல தெய்வம் கோவிலுக்கு செல்வதற்கு ஏதாவது ஒரு தடை வந்து கொண்டே இருக்கும். இதனால் அவர்களும் குல தெய்வம் கோவிலுக்கு செல்வதையே மறந்திருப்பார்கள். வீட்டிலேயே குலதெய்வத்தை நினைத்து வேண்டிக் கொண்டிருப்பார்கள் அல்லது குலதெய்வத்தை மறந்தே போய் இருப்பார்கள். இப்படி குலதெய்வத்தை வழிபட மறந்தவர்களின் குடும்பத்தில் ஏதாவது ஒரு கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். சுப காரிய தடைகள், பணக் கஷ்டம், குழந்தையின்மை, நிம்மதியின்மை போன்றவை இருந்து கொண்டே இருக்கும். இப்படி பிரச்சனை இருப்பவர்கள், குல தெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாமல் தடைகளை சந்திப்பவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வீட்டிலேயே குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

பூக்களின் பயன்கள் | Uses of flowers

பூக்களின் பயன்கள்

🌹 பெண்களே தினமும் பூ சூடுங்கள் என்ற இக்கட்டுரையில் பூக்களின் பயன்கள், பூக்களை சூடும் கால அளவு, பூக்களை சூடும் முறை, பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை பற்றி பார்க்கலாம். 🌹 உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூக்களின் வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப் படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. 🌹பூக்களின் பயன்கள் 🌹 ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும். 🌹 மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும். 🌹 செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும். 🌹 பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும். 🌹 செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். 🌹 மகிழம் பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும். 🌹 வில்வப் பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும். 🌹 சித்தகத்திப் பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். 🌹தாழம் பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும். 🌹 தாமரைப் பூ – தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும். 🌹 கனகாம்பரம் பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும். 🌹தாழம் பூ, மகிழம் பூ, சந்தனப் பூ, ரோஜாப் பூ செண்பகப் பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.

மந்திரத்தின் பயன்கள் | Uses of Mantra

மந்திரத்தின் பயன்கள்

சப்த கோடி மஹா மந்திரம் என்று சொல்லப்படுகின்ற நமஹ, சுவாஹா, சுவதா, வௌஷட், வஷட், பட், ஹும் என்பதன் அர்த்தம் என்ன? நமது பெரியவர்கள் சொல்லும் ஒரு வாக்கியம் உண்டு அந்த வாக்கியம் "மந்திரத்தின் பலன் அதன் கோடியில்" என்பார்கள். இங்கே கோடி என்பது எண்ணிக்கை அல்ல கடைசி என்று பொருள்படும். தெருக் கோடி சொல்வோம்ல அப்படி. பொதுவாக கடவுளின் மந்திரத்தை நாம் பல முறை உரு ஏற்றினால் அது கடைசியில் ஒரு கட்டத்தில் சித்தி அடைந்து அந்த மந்திரத்தின் பலன் வெளிப்படும் எதுவும் தெரியாத வேடன் கண்ணப்ப நாயனார் என்ன மந்திரம் சொன்னார்னு நமக்கு தெரியாது இப்ப நம்ம சப்த கோடி மந்திரத்துக்கு வந்துருவோம் சப்த - ஏழு கோடி - கடைசி, இங்கே கோடி என்றால் எண்ணிக்கை கிடையாது. கடைசி இறுதி என்ற பொருளில் வருகிறது “நம:, ஸ்வஸ்தி, ஸ்வாஹா, ஸ்வதா, ஹீம், வஷட், வௌஷட்” ஆகிய இந்த ஏழு மந்திரங்களும் வாக்கியங்களின் கடைசி முனையில் வந்தமர்வதால் சப்த கோடி மந்திரங்கள் என்று பெயர் பெற்றன. இவை வெறும் ஏழு வார்த்தைகள்தானே தவிர ஏழுகோடி என்ற எண்ணிக்கை கிடையாது. என்றாலும் இந்த ஏழு வார்த்தைகள் இல்லையென்றால் எந்த ஒரு மந்திரமும் முழுமை அடையாது. ஒரு வாக்கியத்தை முழுமை அடையச் செய்வதோடு அதற்குண்டான முழுமையான பலனையும் தருகின்ற சக்தி இவற்றிற்கு உண்டென்பதால் இந்த ஏழும் சப்தகோடி மந்திரங்கள் என்ற பெயரில் சிறப்பு பெறுகின்றன. சமஸ்கிருதத்தில் மமஹ என்ற சொல்லிற்கு எல்லாம் என்னுடையது என்று பொருள். இந்த மமஹ என்ற சொல்லிற்கு முன்னால் ந என்ற எழுத்தைச் சேர்த்தால் நமஹ என்று எதிர் அர்த்தத்தை குறிக்கும் பொருளாக அமைந்துவிடும். அதாவது எதுவும் எமக்குச் சொந்தமில்லை என்று பொருள். எல்லாம் பகவானுடையதே என்று அர்த்தம். அர்ச்சனையின் போது சமர்ப்பிக்கப்படும் பூஜை பொருட்கள் அனைத்தும் இறைவனுக்கே சொந்தமானது, வழிபடும் நாமும் இறைவனுக்கே சொந்தம் என்ற பொருள் படத்தான் இறைவனின் திருநாம மந்திரங்களோடு நமஹ என்று உச்சரிக்கப்படுகிறது. நமஹ - வணங்குகிறேன் என்று பொதுவான அர்த்தம் உண்டு. சப்த கோடி மஹா மந்திரம் என்று சொல்லப்படுகின்ற நமஹ, சுவாஹா, சுவதா, வௌஷட், வஷட், பட், ஹும் என்பதன் அர்த்தம் என்ன? நமது பெரியவர்கள் சொல்லும் ஒரு வாக்கியம் உண்டு அந்த வாக்கியம் "மந்திரத்தின் பலன் அதன் கோடியில்" என்பார்கள். இங்கே கோடி என்பது எண்ணிக்கை அல்ல கடைசி என்று பொருள்படும். தெருக் கோடி சொல்வோம்ல அப்படி. பொதுவாக கடவுளின் மந்திரத்தை நாம் பல முறை உரு ஏற்றினால் அது கடைசியில் ஒரு கட்டத்தில் சித்தி அடைந்து அந்த மந்திரத்தின் பலன் வெளிப்படும் எதுவும் தெரியாத வேடன் கண்ணப்ப நாயனார் என்ன மந்திரம் சொன்னார்னு நமக்கு தெரியாது இப்ப நம்ம சப்த கோடி மந்திரத்துக்கு வந்துருவோம் சப்த - ஏழு கோடி - கடைசி, இங்கே கோடி என்றால் எண்ணிக்கை கிடையாது. கடைசி இறுதி என்ற பொருளில் வருகிறது “நம:, ஸ்வஸ்தி, ஸ்வாஹா, ஸ்வதா, ஹீம், வஷட், வௌஷட்” ஆகிய இந்த ஏழு மந்திரங்களும் வாக்கியங்களின் கடைசி முனையில் வந்தமர்வதால் சப்த கோடி மந்திரங்கள் என்று பெயர் பெற்றன. இவை வெறும் ஏழு வார்த்தைகள்தானே தவிர ஏழுகோடி என்ற எண்ணிக்கை கிடையாது. என்றாலும் இந்த ஏழு வார்த்தைகள் இல்லையென்றால் எந்த ஒரு மந்திரமும் முழுமை அடையாது. ஒரு வாக்கியத்தை முழுமை அடையச் செய்வதோடு அதற்குண்டான முழுமையான பலனையும் தருகின்ற சக்தி இவற்றிற்கு உண்டென்பதால் இந்த ஏழும் சப்தகோடி மந்திரங்கள் என்ற பெயரில் சிறப்பு பெறுகின்றன. சமஸ்கிருதத்தில் மமஹ என்ற சொல்லிற்கு எல்லாம் என்னுடையது என்று பொருள். இந்த மமஹ என்ற சொல்லிற்கு முன்னால் ந என்ற எழுத்தைச் சேர்த்தால் நமஹ என்று எதிர் அர்த்தத்தை குறிக்கும் பொருளாக அமைந்துவிடும். அதாவது எதுவும் எமக்குச் சொந்தமில்லை என்று பொருள். எல்லாம் பகவானுடையதே என்று அர்த்தம். அர்ச்சனையின் போது சமர்ப்பிக்கப்படும் பூஜை பொருட்கள் அனைத்தும் இறைவனுக்கே சொந்தமானது, வழிபடும் நாமும் இறைவனுக்கே சொந்தம் என்ற பொருள் படத்தான் இறைவனின் திருநாம மந்திரங்களோடு நமஹ என்று உச்சரிக்கப்படுகிறது. நமஹ - வணங்குகிறேன் என்று பொதுவான அர்த்தம் உண்டு. வேறு பொருளும் உண்டு. 'நமஹ' என்ற வடமொழிச்சொல்லிற்கு 'போற்றி' என்றோ 'வணங்குகிறோம்' என்றோ பொருள் கூறலாம். மற்றும் அச்சொல்லிற்குள் ஒரு பெரிய வேதாந்த தத்துவமே அடங்கியிருக்கிறது. 'ந' என்றால் 'இல்லை' என்று பொருள். 'ம' என்ற மெய்யெழுத்து 'மம' என்ற சமஸ்கிருத சொல்லின் பொருளான 'எனது' 'என்னுடையது' என்ற எண்ணத்தைக் குறிக்கிறது. அதனால் 'நமஹ' என்று உச்சரிக்கும்போது 'என்னுடையது இல்லை' என்ற தத்துவத்தை வெளிப்படுத்துகிறோம். அதாவது, நம்முடையது என்று ஒன்றுமில்லை, எல்லாம் ஆண்டவனுடையது என்று பொருள்.

கணவன் மனைவி உறவு | Husband wife relationship

கணவன் மனைவி உறவு

பணிக்கு செல்லும் மனைவிகள் எல்லாம் குடும்பம் சுமக்கும் அன்பு தேவதைகள்! ஆணுக்கு ஒரு பக்க மத்தளம் என்றால் பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க மத்தளம்! பெண் என்கிற கிரீடம் அழகு தான் என்றாலும் அவளை வெளியில் உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்! கணவர்கள் கொஞ்சம் கை கொடுங்கள். உங்களுக்காக வாழ்ந்துகொண்டு இருக்கும் அந்த அன்பு பறவையை அரவணைத்து வைத்து கொள்ளுங்கள்! அன்பாகப் பேசுங்கள் சமையல் பணியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்!! மனைவிக்கு கை வலியோ, உடல் வலியோ, மனசு வலியோ புரிந்து கொள்ளுங்கள்! உங்கள் மகளை கவனிப்பது போல் உங்கள் மனைவியையும் கவனித்து கொள்ளுங்கள்! உடல் மனசு இரண்டையும் மென்மை படுத்துங்கள்!

பாட்டி வைத்தியம் | Grandma's Remedies

பாட்டி வைத்தியம்

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்? இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.மனிதனுக்கு ஏற்படும் மிக முக்கியமான சிக்கல்கள் இரண்டு. ஒன்று மனச்சிக்கல். மற்றொருன்று மலச்சிக்கல். மனச்சிக்கலை தீர்க்கதான் படாதபாடு படணும். ஆனால், மலச்சிக்கலை எளிய வைத்திய முறையை கொண்டு எளிதில் தீர்க்கலாம்.மலச்சிக்கல் பிரச்சனை முற்றிய நிலையில் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் அந்த மலச்சிக்கல் முற்றிய நிலையில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது இரத்தப் போக்கோ ஏற்படும்.கழிக்கும் மலத்தின் அளவு குறைவது, மலம் கடினமாகுதல், மலம் கழிக்கும் முறைகள் குறைவது அல்லது மலம் கழிக்கும்போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலியுடன் மலம் கழிப்பது மலச்சிக்கல் எனலாம். இப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஒரு வாரத்திற்கு 12 முறை மலம் கழிப்பது இயல்பான மலம் கழிக்கும் முறை எனலாம். ⭐ போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். ⭐ காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். ⭐ வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து தலை முழுகுதல். இது உடலில் உள் சூட்டை தணிக்கும்.மேலும் கண் பார்வை தெளிவாகும்.மூலாதார சூட்டையும் தணிக்கும். ⭐ தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை சேர்க்கவும்.மேலும் தண்ணீர் நிறைய குடியுங்கள். ⭐ தினமும் பச்சை காய்கறிகள்,பழங்கள் ஏதாவது ஒன்றை உணவாக சேர்த்து வரவும். இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. ⭐ இரவு உணவாக பாஸ்ட் புட் மற்றும் புரோட்டா போன்றவைகளை தவிர்த்து ஆவியில் வேகும் உணவான இட்லி,புட்டு,இடிஆப்பம் போன்றவைகளை உண்ணவும். ⭐ இதனுடன் வாழைப்பழம் ஒன்றிரண்டு சாப்பிடலாம்.

விளம்பரம் | Advertising

விளம்பரம்

பின்வரும் காரணங்களுக்காக இந்தியாவில் விளம்பரத்திற்கான மிகவும் பிரபலமான தளங்களில் சினிமா தியேட்டர் ஒன்றாகும்: