சித்த மருத்துவம் ஒரு அறிமுகம்
Category: சித்தா மருத்துவம்
தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான திராவிட நாகரிகத்தின் வளர்ச்சியினிடையே தோன்றிய மருத்துவ முறையே சித்த மருத்துவம்.
அறுசுவை உணவுகள் மருத்துவமா? மகத்துவமா?
Category: சித்தா மருத்துவம்
நாம் சாப்பிடும் உணவிலுள்ள சுவைகளான இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளின் மாறுபாடும் நோயை உண்டாக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய ஒழுக்க முறைகள்
Category: சித்தா மருத்துவம்
• தினமும் கடைப்பிடிக்கும் செயல்கள், நித்திய ஒழுக்கம் என்று அழைக்கப்படுகிறது.
பொதுவான நோய்களும், அவற்றின் கைமுறை மருந்துகளும்
Category: சித்தா மருத்துவம்
1. துளசி இலை கஷாயத்துடன் தேன் சேர்த்து ஐந்து நாள்களுக்கு காலை, மாலை குடிக்க வேண்டும் (60 மி.லி.)
பொதுவான நோய்களும் அவற்றின் கைமுறை மருந்துகளும் - தொடர்ச்சி
Category: சித்தா மருத்துவம்
ஆ. தூதுவளை : உலர்ந்த செடியின் பொடியைத் தேனில் கலந்து சாப்பிட சுவாச நோய்கள் குணமாகும்.
வர்ம மருத்துவம் ரகசியங்கள்
Category: சித்தா மருத்துவம்
வர்ம நிலைகளில் அடிபடும் போது, சிறு வெளிக்காயமும் இல்லாமல் சாதாரண வலி முதற்கொண்டு இறப்பு வரை ஏற்படும் அளவுக்கு அவை முக்கியத்துவம் பெறுகின்றன.
காயகல்பம்
Category: சித்தா மருத்துவம்
நரை, திரை, பிணி, மூப்பு, சாவு இவற்றிலிருந்து உடம்பைக் காத்து கல்போல் ஆக்குவதே காயகற்பம் என்பதாகும்.
யோக முறைகள், ஆசனங்கள் அறிய வேண்டுமா?
Category: சித்தா மருத்துவம்
நாம் யோகம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் ‘யோகாசனம்' யோக முறைகளின் ஒரு பகுதியே ஆகும்.
சிறப்பு இயற்கை மூலிகைகள்
Category: சித்தா மருத்துவம்
இந்தியாவில் இருந்து மூலிகைச் செடிகளையும், மூலிகைகளையும், மூலிகை மருந்துகளையும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம், ஆண்டு தோறும் சுமார் ரூ. 15,000 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கிறது.
சர்க்கரை நோய் என்பது பரம்பரை நோயா?
Category: சித்தா மருத்துவம்
தற்காலங்களில் மனிதர்கள் சந்தித்தால் வார்த்தைகளின் பரிமாற்றம் உங்களுக்கு சுகர் எப்படி இருக்கிறது? கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று தான் கேட்டுக் கொள்கிறார்கள் என்கிற நிலையில் சர்க்கரை நோய் நிலவி வருகிறது.
ஏன் உடல் பலகீனம் அடைகிறது?
Category: சித்தா மருத்துவம்
கணையம் பழுதடைந்து விட்டதால் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை பிரித்து கொடுக்கும் தன்மையை இழந்து விடுகிறது.
சர்க்கரை நோயை எப்படி குணப்படுத்துவது?
Category: சித்தா மருத்துவம்
சர்க்கரை நோயை குணப்படுத்துதல் என்பது நம் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அப்படி அந்த நோயை குணப்படுத்த சில வழிமுறைகள் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
சர்க்கரை நோய் இருப்பதை தெரிந்து கொள்வது எப்படி?
Category: சித்தா மருத்துவம்
சர்க்கரை நோய் ஒருவருக்கு ஒரு நாளிலோ அல்லது ஒரு மாதத்திலோ வருவதில்லை. தவறான உணவுப் பழக்கங்களும் அதிகமாக உணவுகளை உண்பதாலும் கணையம் சிறிது சிறிதாக பழுதடைய ஆரம்பிக்கிறது.
இள நரையை மறைக்கும் இயற்கை பீட்ரூட் கலவை
Category: சித்தா மருத்துவம்
காரட்டை நாம் எல்லோரும் பச்சையாக கடித்து சாப்பிடலாம். ஆனால் பீட்ரூட்டை பச்சையாக கடித்து சாப்பிட முடியாது. பச்சையாக சாப்பிட ஒரு மாற்று முறை.
சித்த மருத்துவம் என்றால் என்ன?
Category: சித்தா மருத்துவம்
ஒருவன் நோயாளியாக வாழ்கிறான். அது அவனுக்கு நரக வாழ்வு. நோய்களை குணமாக்கி நரக வாழ்விலிருந்து அவனுக்கு விடுதலை வாங்கித் தர வேண்டும்.
சர்க்கரை நோயின் அளவை குறைக்க வேண்டுமா?
Category: சித்தா மருத்துவம்
சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டுமென்றால் முதலில் அதன் அளவை அதிகரிக்க விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
சர்க்கரை நோயாளிகளின் எதிர்காலம் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?
Category: சித்தா மருத்துவம்
சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய வேலை-வியாபாரம், குடும்ப பொறுப்பு இவைகளை பத்து நாட்களுக்கு சரிசெய்து விட்டு இயற்கை மருத்துவத்துக்கு வந்தால் உங்களின் எதிர்காலம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருக்கும்.
இளைய சமுதாயத்தினரின் வழிகாட்டிகள் யார்?
Category: சித்தா மருத்துவம்
இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் வயதில் மூத்த பெரியவர்கள் உணவு வகையில் சொல்லும் கருத்துக்களை நாம் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியாது.
எதிர்மறை வார்த்தைகள் ஏன் மனதை ஆள்கிறது?
Category: சித்தா மருத்துவம்
நம்மிடம் முரண்பாடான வார்த்தைகளே முதலில் மனதை சென்று அடைகிறது?
வழிகாட்டிகள் அவசியமாக இருக்க வேண்டுமா?
Category: சித்தா மருத்துவம்
வழிகாட்டிகள் நல் வழியாக காட்டவேண்டும் கல்-முள் நிறைந்த வழியை காட்டினால் பயணம் எப்படி தொடரும்?
முப்பது முக்கியமான கேள்விகளும் பதில்களும்
Category: சித்தா மருத்துவம்
பூக்களில் சிறந்த பூ என்ன பூ? அன்பு
நல்லவை நாற்பது கேள்வி - பதில்
Category: சித்தா மருத்துவம்
இன்றைய வாழ்வில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? நல்லது நடக்குது தள்ளாடி. கெட்டது போகுது முன்னாடி.
சர்க்கரை நோயிலிருந்து விடுதலை பெற வேண்டுமா?
Category: சித்தா மருத்துவம்
இன்று இளம் வயதில் கூட சர்க்கரை நோய் வருவது கொடுமையிலும் கொடுமை.
நோய்களும் கை வைத்தியங்களும்
Category: சித்தா மருத்துவம்
எந்த ஒரு பேதி மருந்தையாவது சாப்பிட்டு அளவு மீறி பேதியானால் அதை நிறுத்த எலுமிச்சம் பழத்தால் தான் முடியும்.
மூல நோய் குணமாக என்ன செய்யலாம்?
Category: சித்தா மருத்துவம்
அனைத்து நோய்களும் தோன்ற காரணமாக இருப்பது இரண்டு ஒன்று மலம் மற்றொன்று கபம் இவை இரண்டில் எது காட்டினாலும் ஒரு நோய் தோன்ற இதுவே கரணம் என்று சித்த நூல் குறிப்பிடுகிறது,
மருந்தென்பது உடல் பிணியையும், உள்ளப் பிணியையும் தீர்த்து வைப்பதோடு மட்டு மில்லாமல் நோய் வருவதற்கு முன்பே காத்து, இறக்காத நிலையை உடலுக்கும் உள்ளத்துக்கும் தரவேண்டும் என்ற உயர்ந்த கருத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் அவர்கள். இந்த சித்தர்கள் அளித்த மருத்துவ முறையே, தமிழ் மருத்துவம் என்னும் ‘சித்த மருத்துவம்’
: சித்தா மருத்துவம் - மருத்துவ குறிப்புகள் [ சித்தா மருத்துவம் ] | : Siddha Medicine - Medicine Tips in Tamil [ Siddha medicine ]
மற்ற
நாகரிகங்களில் எல்லாம் பேச்சு வழக்கு மட்டுமே இருந்த காலத்தில் எழுத்து வடிவம் பெற்று
சிறந்து விளங்கிய நம் தமிழ் மொழியில் மருத்துவம், சோதிடம்,
பஞ்சபட்சி சாத்திரம், வர்மக்கலை, யோகம், ஆன்மிகம் என அனைத்திலும் சிறந்து விளங்கியதோடு
அவற்றில் பல்வேறு நூல்களைச் சுவடிகளாகவும் கல்வெட்டுகளாகவும் திராவிட நாகரிகத்துக்கு
தந்தவர்கள், சித்தர்கள்.
மருந்தென்பது
உடல் பிணியையும், உள்ளப் பிணியையும் தீர்த்து வைப்பதோடு
மட்டுமில்லாமல் நோய் வருவதற்கு முன்பே காத்து, இறக்காத நிலையை
உடலுக்கும் உள்ளத்துக்கும் தரவேண்டும் என்ற உயர்ந்த கருத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே சொன்னவர்கள் அவர்கள்.
இந்த
சித்தர்கள் அளித்த மருத்துவ முறையே, தமிழ் மருத்துவம்
என்னும் ‘சித்த மருத்துவம்’
சித்தர்களின்
மருத்துவ முறைகள் உடல், மன பிணிகளை தீர்ப்பதில் பெரும்பங்காற்றி
உள்ளன. சித்த மருத்துவம், மக்கள் நோயுற்ற போது அதனைத் தீர்ப்பதோடு
நின்றுவிடாமல் நோய் வராமல் காப்பதிலும் சிறந்து விளங்குகிறது.
மேலும், சித்த மருத்துவ மூலிகைகள் எந்தவித பக்க விளைவுகள் இன்றி நோயைத் தீர்ப்பதால்,
இது கற்றறிந்தவர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. சித்த மருத்துவத்தில்
சில குறிப்பிட்ட, நீண்ட காலம் மருத்துவம் செய்யவேண்டிய நோய்களான
தோல் நோய் கள், மூட்டு நோய்கள், வயிற்று
நோய்கள், மஞ்சள் காமாலை, மகளிர் நோய்கள்
போன்றவற்றுக்கு மட்டுமே மருந்துகள் உள்ள தாக மக்கள் கருதுகின்றனர். ஆனால் அப்படி இல்லவே
இல்லை. மேற்கூறிய நோய்களோடு கர்ப்பிணி பராமரிப்பு, குழந்தைகள்
நோய்களிலும் மற்றும் அவசர கால மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படாத எந்த நோய்க்கும் சித்த
மருத்துவத்தால் மிகச்சிறந்த சிகிச்சை அளிக்க முடியும். இது நிரூபிக்கப்பட்ட உண்மை.
கர்ப்பிணி
சிகிச்சையின் போது, முதல் மூன்று மாதங்களுக்கு மருத்துவ
சிகிச்சையளிப்பதில் எல்லா மருத்துவ முறைகளும் பின் தங்கியே உள்ளன. ஆனால், சித்த மருத்துவத்தில் கர்ப்பமுற்று முதல் மாதத்தில் ஏற்படும் தொந்தரவுகளுக்குத்
தாமரைப் பூவும், சந்தனமும் பசும்பாலில் அரைத்துக் குடிக்கலாம்
என்றும், இரண் டாம் மாதத்தில் தக்கோலம், தாமரைப் பூ, சந்தனம் இவற்றைப் பசும்பாலில் அரைத்துக்
குடிக்க வேண்டும் என்றும், மூன்றாம் மாதம் சந்தனம், சீந்தில் தண்டு மற்றும் நெய்தற் கிழங்கை அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம்
என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. இதுபோலவே, ஒவ்வொரு மாதமும்
கர்ப்பிணிகளுக்கு நேரும் உபாதைகளையும் அவற்றிலிருந்து காக்கும் மருந்துகளையும் விவரித்துள்ளனர்.
இத்தகைய மருந்துகளை, கர்ப்ப காலத்தில் குறிப்பிட்ட அளவில் சாப்பிடும்
பொழுது சுகப் பிரசவத்தின் வாய்ப்பு அதிகரிக்கிறது என்றும், பிரசவத்தின்
பின்விளைவுகள் குறைந்தோ அல்லது முற்றிலும் இல்லாமலோ அமைகிறது என்றும் ஆய்வுகளின் முடிவுகள்
தெரிவிக்கின்றன.
மேலும்
பச்சிளம் குழந்தைகள், இளம் குழந்தைகளுக்கு ஏற்ற பக்க விளைவுகள்
அற்ற மருத்துவ முறையில் சிறந்தது இந்த சித்த மருத்துவ முறைதான். சித்த மருத்துவ முறைகளில்
தான் நோயைத் தொடக்க நிலை யிலேயே மருத்துவம் செய்து குணப்படுத்த முடியும். வயது முதிர்ந்தவர்களுக்கான
பக்கவிளைவுகள் அற்ற மருத்துவமும், நோய் வராமல் காக்கும் யோக முறைகளும்
சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்புகளாகும். உணவையே மருந்தாகக் கொண்டு உணவின் மாறுபாடுகளும்,
அளவும், அதன் தன்மையுமே பெருமளவு நோய்களுக்குக்
காரணம் என்பதை உணர்ந்து, உணவுக்குப் பெரும் முக்கியத்துவம் தந்தவர்
கள் சித்தர்கள். பொது மருத்துவம் மட்டுமின்றி அந்தக் காலத்திலேயே அறுவை சிகிச்சையிலும்
சிறந்து விளங்கிய அகத்தியர், தேரையர், நாக
முனிவர் போன்றவர்களின் பங்கு, சித்த மருத்துவத்தில் மணி மகுடம்
போன்றதாகும்.
கண்காசம்' என்னும் கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். விலிசம்
என்னும் கருவியைக் கொண்டு அறுவை சிகிச்சை செய்யும் முறையை நாகமுனிவரின் நயனவிதி'
தெளிவாக எடுத்துரைக்கிறது. உடலில் உள்ள சீழ்கட்டிகளையும், ரத்தக் கட்டிகளையும் லீச் (LEECH) என்று சொல்லப்படும்
அட்டைப் பூச்சியைக் கொண்டு குணப்படுத்தி உள்ளனர். பவுத்திரம் (FISTULA) நோய்க்கு காரநூல் சிகிச்சை முறையில் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தி உள்ளனர்.
தற்காலத்தில்
உலகை அச்சுறுத்தி வரும் எய்ட்ஸ் (AIDS) நோயில் இருந்து
நோயாளியைப் பெரிதும் காக்கும் தன்மையுடைய மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன என்பது
நிரூபிக்கப்பட்ட உண்மை.
தொடக்க
நிலையிலுள்ள புற்று நோய்கள், மார்புக் கட்டிகள், கருப்பைப் புற்று, ரத்தப்புற்று போன்றவற்றைக் குணமாக்கு
வதில் சித்த மருத்துவம் சிறந்து விளங்குகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இத்தகைய
சிறப்புமிக்க சித்த மருத்துவத்தின் பெருமைகளை உலகறியச் செய்ய பல்வேறு அறிஞர்கள் பல்வேறு
முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அத்தகைய முயற்சிகளில் ஒன்றே இந்த ‘சித்த ரகசியமு’ம்.
இந்தப்
கட்டுரையின் மூலம் சித்த மருத்துவத்தின் அற்புதங்களை அறிந்துகொள்வோம் வாருங்கள்.
: சித்தா மருத்துவம் - மருத்துவ குறிப்புகள் [ சித்தா மருத்துவம் ] | : Siddha Medicine - Medicine Tips in Tamil [ Siddha medicine ]