ஆரோக்கியம் அறுசுவை உணவுகள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
இறைவன் நம்முள்ளேயே இருக்கிறான் என்பதுபோல், தீர்வு நம்மிடமே இருக்கிறது. ஆமாம்; உணவே மருந்து; மருந்தே உணவு!
இயற்கை உணவால் குணத்தை மாற்றலாம்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
மூன்று வேளையும் சமைத்த உணவுவகை களையே ருசித்து அடிமைப்பட்டுப் போன நாவிற்கு இயற்கை உணவுகள் ருசிக்குமா....? கண்டிப்பாய் ருசிக்கும். அது எப்படி....?
மருந்தில்லா மருத்துவம்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
மனிதனின் உடல் தத்துவங்கள் 96-ல் மூன்று தத்துவங்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியது.
48 ரூபாயில் உன்னத அழகு
Category: ஆரோக்கிய குறிப்புகள்
எது இரத்தத்தைச் சுத்திகரிக்கிறதோ, எது இரத்தத்தில் பிராணசக்தியை அதிகரிக்கிறதோ அதுவே மிகச் சிறந்த உணவாகும்.
நீங்களும் ஐஸ்வர்யாராய் ஆகலாம்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
பத்து வருடத்திற்கு முன் எடுத்த போட்டோவில் தன் உடல் அழகையும், உடல் அமைப்பையும் பார்க்கும் முப்பதைக் கடந்த பெண்களும் இப்படித்தான் யோசிக்கிறார்கள்.
உடல் பருமனைக் குறைத்திட இயற்கை முறைகள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
1. பசியைக் குறைக்கும் மருந்துகள் 2. நீரைப் பிரிக்கும் மருந்துகள் 3. ஹார்மோன் மருந்துகள்
அழகு தரும் இயற்கை உணவுகள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
அழகு என்பது மிகவும் அழகான விஷயம். ஒவ்வொருவரும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதை மிக முக்கியமான வேலை என்று கருதக்கூடிய காலமிது.
பெண்களின் பெரும் சிக்கலுக்கு எளிய தீர்வுகள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
பெண்களைத் துரத்தும் மாதவிடாய்க் கோளாறுகள் - அதற்கான தீர்வுகளைப் பற்றிக் காண்போம்.
சிக்கலற்ற கழிவு சீரான வாழ்வு
Category: ஆரோக்கிய குறிப்புகள்
மூன்று வேளை உண்ணும் மனிதன், ஒரு வேளை மலம் கழிக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி.
இதயம் காக்கும் இயற்கை உணவுகள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
இதயத்தின் செயல்பாடுகள் என்ன? இதயநோய் வகைகள் என்ன? மாரடைப்பு உண்டாக காரணங்கள்தான் என்ன? மாரடைப்பு வராமல் தடுக்க இயற்கை மருத்துவத்தால் முடியுமா? மாரடைப்பை தடுக்க தள்ள வேண்டிய உணவுகள்?
சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க....
Category: ஆரோக்கிய குறிப்புகள்
அடிக்கடி திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். தினசரி இரண்டு லிட்டர் அளவில் சிறுநீர் கழியுங்கள்.
ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?.
Category: ஆரோக்கிய குறிப்புகள்
• விலைமதிப்பற்ற தரமிக்க தூக்கத்தை மனிதன் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? • எதையெல்லாம் செய்யக் கூடாது? • அந்த ஆழ்ந்த தூக்கம் என்னவெல்லாம் பலனைத் தருகிறது?
சுறுசுறுப்பின்மை போக்க வழிகள் இனி உங்கள் வாழ்க்கையில் வலிகள் இல்லை
Category: ஆரோக்கிய குறிப்புகள்
சுறுசுறுப்பின்மை என்பது சோம்பலின் நண்பன். நெருங்கிய தோழன்.
பசியின்மை என்பது ஒரு நோயா? நல்லதா? கெட்டதா?
Category: ஆரோக்கிய குறிப்புகள்
இவ்உலகத்தில் நாம் பசியைத் தீர்க்க நாம் போராடுகிறோம். பசியின்மையால் சிலர் அவதிப்படுகிறார்கள் என்றால் வியப்பாய் இருக்கிறது அல்லவா? உண்மை தான். அப்பேற்பட்ட மனிதர்களுக்கான தீர்வாகத் தான் இந்த கட்டுரைப் பதிவிடப்படுகிறது.
மனநலம் தான் மகிழ்ச்சிக்கு காரணம்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
உடல் ஆரோக்யத்திற்க்கு முதலில் தேவைபடுவதே இந்த மனநலம் தான். மனம் நலமாக இருந்தாலே அனைத்தும் நலமாக இருக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உளவியல் முறைப்படி அதுவே உண்மையாகும்.
மனநலம் காக்க இந்த சாதாரண, ஆனால் பவர் புல் வழி போதுமே!
Category: ஆரோக்கிய குறிப்புகள்
மனநலம் நன்றாக இருப்பதற்கு நம் நாட்டில், நம் சமுதாயத்தில் தற்பொழுது அதிகமாகத் தேவைப்படும் வெள்ளையப்பன் என்கிற காசு, பணம், துட்டு, மணி மணி இல்லையேல் இங்கே மரியாதை எல்லாம் கிடைக்காது.
நோயில்லாமல் வாழ ஆசையா?
Category: ஆரோக்கிய குறிப்புகள்
நாம் அனைவருமே நோய் என்ற எமனிடமிருந்து தொலைவில் இருக்கவே ஆசை படுவோம்.
டாக்டர் கேட்கும் கேள்விகள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
டாக்டர் நம்மிடம் கேட்கவே கூடாத கேள்விகளும், கேட்கக் கூடிய கேள்விகளும் இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
தியானம் - யோகம் சிறப்புச் செய்திகள்
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
தினமும் சில நிமிடங்கள் தியானத்தைப் பயிற்சி செய்பவன் தாம் தினமும் செய்யும் பணிகளில் தன்னுடைய தெய்வீகத் தன்மை இருப்பதாக உணர்கிறான்.
பிராணயாமம் செய்யும் முறை
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
மனம் என்ற ஏரியில் அலைகள் என்ற விருத்திகள் இருக்கும் வரை ஏரிக்கரையின் அழகை இரசிக்க முடியாது.
மூச்சு விடும் எண்ணிக்க வைத்து வாழ்நாள் வருடம் தெரியுமா?
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
அதிக நாட்கள் உயிர் வாழ்வது, குறைந்த நாட்கள் உயிர் வாழ்வது
பழங்களின் மருத்துவப் பயன்கள்
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
வேறு எந்த வகையான பழத்திலும் இல்லாத அளவு வைட்டமின் A உயிர்ச்சத்து மாம்பழம் ஒன்றில் தான் இருக்கிறது.
கொய்யாப் பழம்
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
மாம்பழத்தை அடுத்து மார்க்கெட்டில் விற்பனைக்கு வரக்கூடிய பழம் கொய்யாப் பழமாகும்.
அன்னாசிப் பழம்
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
அன்னாசிப் பழம் கோழி முட்டை வடிவத்தில் சுமார் 18 சென்டிமீட்டர் உயரம் 10 -12 சென்டிமீட்டர் கனத்தில் உருண்டு திரண்டிருக்கும்.
விளாம் பழம்
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
விளாம் பழம் பல வியாதிகளைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
மாதுளம் பழம்
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
மாதுளம் பழம் பந்து போல உருண்டு திரண்டு லேசாக சற்று நீண்ட வடிவத்திலிருக்கும்.
அறிந்து கொள்ள வேண்டிய அருமையான தகவல்...
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
கோடைக்காலத்தில் அதிகநேரம் டயப்பர் பயன்படுத்தினால் என்ன ஆகும்?
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
குழந்தைகளுக்கு டயப்பரை…❗ குறைவான நேரமே பயன் படுத்தவேண்டும்.…❓❓❓ ☀கோடைக்காலத்தில் அதிகநேரம் டயப்பர் பயன்படுத்தினால்…… அதிகப்படியான வியர்வை, சிறுநீர், மலம் காரணமாக தோல் அரிப்பு, பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும்.
ஆண்மை குறைபாட்டை நீக்குமா செவ்வாழைப்பழம்?
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
வாழை பழங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த பழம் என்றால் அது செவ்வாழை தான். இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அளப்பரிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 20 பாட்டி வைத்தியங்கள்
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
1. பெண் வளர்ந்து பெரியவளானால் சோகை தவிர்க்க நாகப்பழம். 2. கூடவே கூடாது சூடேற்றும் பப்பாளி.
அல்சர் குடல் புண் பிரச்சனைதீர சில எளிய வழிமுறைகள்
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
அல்சர் என்பது இரைப்பையின் சுவற்றில் ஏற்படும் புண்கள் . இந்த புண்கள் உணவை தவிர்த்து வருவோருக்கு வரும்.
முன்னோர்களின் முக்கியமான ஆரோக்கிய குறிப்பு
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
1. அமிலத்தன்மை உணவினால் மட்டும் உருவாவதில்லை , மாறாக மன அழுத்தம் காரணமாக உடலில் அதிக அமிலத்தன்மைஆ திக்கம் உருவாகிறது.
கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் இயல்பைவிட 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து, வாட்டி வதைக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் கோரத் தாண்டவத்தை பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 5 டிகிரி வரை வெப்ப அலை அதிகரித்து வெயில் உக்கிரமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.'எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கிவிடலாம், ஆனால் ஒரு மழைக்கு நம்மால் தாங்க முடியாது' என்ற பேச்சு இருந்து வருகிறது.
சக்கரை நோய் ஏன் வருகிறது? கட்டுப்படுத்துவது எப்படி?
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
சக்கரை நோயை வைத்து, இந்தியாவில் 1000க்கும் மேல் மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்கு பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளி செல்கின்றனர்.
உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? இதை செஞ்சா போதுமே!
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது இன்றைய தலைமுறையின் மிகப்பெரும் சவால் என்றே கூறலாம்.
இதயத்தை காக்கும் வழிகள்
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க.
ஒழுங்கற்ற மாதவிடாய் - சீராக்கும் எளிய வழிமுறைகள்!!
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
அக்குபிரசர் -உடலில் உள்ள முக்கிய புள்ளிகளை அக்குபிரசர் முறையில் கையாள்வதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்
நோய் என்றால் என்ன? மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது?
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
இந்த உடலானது நாம் உண்ணும் உணவினாலும், குடிக்கும் தண்ணீராலும், சுவாசிக்கும் காற்றினாலும், சூரிய வெளிச்சத்தாலும், சூழ்நிலையின் தட்பவெப்பங்களாலும் வாழ்வு உடையதாய் இருக்கிறது.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க கண்டிப்பாக இதை செய்தாலே போதுமே!
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
பசி எடுப்பது ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும், நன்றாக சாப்பிட்டும் பசி எடுத்தால், இது உடலில் உள்ள பிரச்சனையை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். அதற்கான காரணங்கள்.....
ஆளி விதை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
• ஆளி விதைகளை பச்சையாக சாப்பிடுவதை விட வறுத்து சாப்பிடுவது நல்லது. • ஆளி விதைகளை வறுப்பதால் அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பைடிக் அமிலம் நீக்கப்படுகிறது.
ஜலதோஷத்தை குணப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம்?
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும். குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.
உடல் எடையைக் குறைக்க.. இதை முயற்சி பண்ணுங்க!
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள் மிகவும் அவசியமாகும். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கும், எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்புவோருக்கும் சூப் வகைகள் சரியான சரிவிகித உணவாக கருதப்படுகிறது.
தண்ணீரை குடிப்பதால் இத்தனை நன்மைகளா?
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
மனித உடலில் சராசரியாக 60 முதல் 70% அளவுக்கு நீர் இருக்கிறது.
உடல் ஆரோக்கியத்தை பேண தோப்புக்கரணம் மட்டும் போதும் முயற்சித்து பாருங்க
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
🌼 தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. 🌼 தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக் கரணத்தை வைத்திருந்தார்கள். 🌼 உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம்.காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. 🌼 காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.
பாட்டி வைத்தியம் பற்றி தெரிந்து கொள்வோமா
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
இளம் சூட்டில் உள்ள நீரில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து இரவு படுக்கச் செல்லும் சமயம் குடித்துவிட்டுச் செல்ல, காலையில் வயிறு சுத்தம் அடைவதுடன், தேவையில்லாத கழிவுகளும் வெளியேற்றப்பட்டுவிடும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வயிற்றை சுத்தப்படுத்த இந்த விளக்கெண்ணையைதான் பயன்படுத்தினார்கள். இதனை மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக்கொள்வது நல்லது. கொழுப்பு நிறைந்த உணவுகளையும், எண்ணெயில் பொரித்ததையும், எளிதில் செரிக்காத உணவுகளையும் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. மோர்: தயிரை விட மோர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. தயிரைக் கடைந்து மோராக்கி சிறிது உப்பு, சுக்கு பொடி, பெருங்காயம் சேர்த்து பருக வயிற்றுப் பிரச்னைகள் எதுவும் வராது. மேலும் பசி உணர்வு ஏற்படாமல் இருப்பவர்கள் மோரில் வெந்தயத்தை கலந்து நன்பகல் வேளையில் பருகி வர பசி உணர்வு தூண்டப்பட்டு நன்கு சாப்பிட முடியும் கவுனி அரிசி: முழு தானிய உணவான கவுனி அரிசியில் உடலுக்குத் தேவையான மெக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு போன்ற தாதுக்கள் உள்ளன. இவை இரத்தத்தில் சேர்ந்துள்ள அசுத்தங்களை சுத்தம் செய்வதுடன், உடலுக்கு புத்துணர்ச்சியும் கொடுக்கிறது. பழங்கள்: பழங்களில் இயற்கையாகவே பல வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இவை இரத்தத்தை சுத்தம் செய்வதுடன், இயற்கையான முறையில் வயிற்றையும் சுத்தம் செய்யும். எனவே, தினமும் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிடுவது நல்லது. எலுமிச்சை: வைட்டமின் சி சத்து நிறைந்த இது டீடாக்ஸ் உணவு வகைகளில் மிகவும் முக்கியமானது. காலையில் வெறும் வயிற்றில் வெந்நீருடன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க, இரவு சாப்பிட்ட உணவில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அகற்றுவதுடன் மலம் எளிதாகவும் வெளியேறவும் உதவுகிறது. இஞ்சி: இது அஜீரணக் கோளாறு, வாயு பிரச்னைகளை சரி செய்யும். இஞ்சியை தேநீரில் போட்டு கொதிக்க வைத்து பருகலாம். தோல் நீக்கி துருவிய இஞ்சியுடன் சிறிது வெல்லம் சேர்த்து மென்று சாப்பிடுவதும் நல்லது. இஞ்சி சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து பருகலாம். கடுக்காய்: இது சிறந்த நச்சகற்றி. ஒரு ஸ்பூன் அளவு கடுக்காய் தூளை வெந்நீரில் கலந்து இரவு தூங்கச் செல்வதற்கு முன் குடிக்க வயிற்று கழிவுகளை எளிதில் அகற்றி விடும். திரிபலா சூரணமும் சிறந்தது. இதனையும் வெந்நீரில் கலந்து இரவு படுக்கச் செல்லும் முன் பருக சிறந்த பலன் கிடைக்கும். வெள்ளைப் பூண்டு: இது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை முழுவதுமாக வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனை நாம் அன்றாட உணவில் துவையலாகவோ, ரசத்திலோ, பாலில் வேக வைத்தோ சாப்பிட நல்லது. இவை தவிர, உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளான காய்கறிகள், பீன்ஸ் வகைகள், முளைகட்டிய பயிர் வகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது நம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
ஒரு பைசா செலவழிக்காமல் ஆரோக்கியம் பெறலாம்! எப்படி தெரியுமா
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
தற்போது விதவிதமான நோய்கள் நம்மை பயமுறுத்தி வருகின்றன. சாதாரணக் காய்ச்சல், சளி என்றாலே மருத்துவமனையில் சில ஆயிரங்களை எடுத்து வைக்கும் காலம் இது. இதற்கு தீர்வே இல்லையா? ஏன் இல்லை? காசு தராமலேயே ஆரோக்கியம் பெற எளிதான வழி ஒன்று இருக்கிறது. எப்படி தெரியுமா? தினமும் பத்து நிமிடம் சூரிய ஒளியில் நின்று பயிற்சி எடுப்பதுதான். உடலில் சூரிய ஒளி படும் பட்சத்தில் நமது உடலின் சருமத்துக்கு அடியில் உள்ள செல்கள் தாமாகவே வைட்டமின் டியை உருவாக்கிக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. முன்பு மக்கள் விடியற்காலையில் எழுந்து சிறிது நேரம் வெயிலில் வேலை செய்வார்கள். இதனால் உடலுக்குத் தேவையான சூரிய ஒளி கிடைத்தது. ஆனால், தற்போதைய பணி சூழலில் பெரும்பாலும் ஏசி அறைகளுக்குள்ளும், வெளியே வராமல் வீட்டுக்குள் இருப்பதுமே இதன் காரணம். சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி கிடைக்காததால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. வைட்டமின் டி என்பது கொழுப்பில் கரையக்கூடிய செக்கோஸ்டிராய்ட் குழுவின் ஒரு பகுதியாகும். இது குடலில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு அவசியமாகிறது. இது சூரிய ஒளியிலிருந்து மற்றும் அச்சத்து அடங்கிய உணவில் இருந்தும் நமக்கு கிடைக்கிறது. நமது சருமம் நேரடியாக சூரிய ஒளியில் படும்போது இந்த வைட்டமின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் வைட்டமின் டி ஆய்வில் 40 முதல் 99 சதவீதம் வரை குறைபாடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது விட்டமின் டி.
இரத்த உற்பத்தி அதிகரிக்க செய்யும் உணவு வகைகள்...! பற்றி அறிந்து கொள்வோமா
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். ரத்த உற்பத்தி அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். ஹீமோகுளோபின் அளவு வெகுவாக குறைந்தால், அது இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். அதன் அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருக்கும். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான காரணம் ஆகும். சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினான ஃபோலிக் அமிலமாகும். அதனால் ஃபோலிக் அமில குறைபாடு இருந்தால், ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். ஃபோலிக் அமிலம் வளமையாக உள்ள பச்சை காய்கறிகள், ஈரல், அரிசி சாதம், முளைத்த பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, தானியங்கள், கடலை, வாழைப்பழம் மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகள் ஆகும். பேரீச்சம்பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பதுடன் உடலில் ரத்தமும் அதிகமாகும். தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.
கால் ஆணிக்கு நிவாரணம் பற்றி தெரிந்து கொள்வோமா
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மல்லிகை செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள். இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும். மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும். அம்மான் பச்சரிசி செடியை சிறு சிறு துண்டுகளாக உடைத்து அதில் வரும் பாலை பயன்படுத்தலாம். ஒரு தடவை தடவினதும் குணம் கிடைக்காது. தொடர்ந்து இரண்டு வாரமாவது செய்ய வேண்டும். முதலில் வலி குறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைந்துவிடும்.
வாய்ப்புண் ஏற்பட காரணங்கள் தீர்வுகள் பற்றி தெரிந்து கொள்வோமா
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
உடலில் நீர் சத்துபற்றாக்குறையை வாய்ப்புண்ணுக்கு முக்கிய காரணம் வாய்ப்புண்ணிற்கு முதன்மையான காரணம் வயிற்றிலும் அல்சர் இருப்பதே ஆகும். இரைப்பையில் உணவுக் குடல் வால்களில் சுரக்கும் அதிகப்படியான அமிலம் அல்லது நேரந்தவறிய உணவு முறைகளால் வயிற்றில் அல்சர் ஏற்படுகிறது. இது வாயிலும் வெளிப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் குறைபாடு, இரத்தசோகை மற்றும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் குறைபாடும் வாய்ப்புண்ணுக்கு மற்றொரு காரணமாக அமைகிறது 🍯 வாய்ப்புண் இருக்கும் போது கொய்யா பழத்தை தொடர்ந்து 1 வாரம் சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும். மேலும் கொய்யா இலைகளை வாய் ழுமுவதும் படும்படியாக நன்கு மென்று விட்டு துப்பி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கொய்யா இலையின் மருத்துவ குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றுகிறது. இதற்கு பதில் கொய்யா இலை இரண்டை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் போல தயாரித்து அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தாலும் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
சுக்கு மருத்துவக் குணங்கள் பற்றி அறிந்து கொள்வோமா
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். 2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். 3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும். 4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். 5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும். 6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும். 7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். 8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும். 9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும். 10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும். 11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும். 12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
உடல் ஆரோக்கியத்திற்கு தேனை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
நாட்டு வைத்தியத்தில் தேனின் பங்கு மிகவும் பெரிது. வீட்டு கை வைத்தியத்திலும் தேனுக்கு பெரும் பங்கு உண்டு. ஒரு ஸ்பூன் துளசி சாறுடன் சிறிது தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், தலைவலி, தொண்டை வலி பிரச்னைகள் வராது. வேப்பம்பூவை தேனில் ஊற வைத்து, தினமும் இரவு உறங்கச் செல்லமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து, உடல் பலம் பெறும். குழந்தைகளுக்கு தினம் அரை ஸ்பூன் தேன் கொடுத்து வந்தால் பல், எலும்பு உறுதியாக இருக்கும். உஷ்ணத்தினால் வயிற்று வலி ஏற்பட்டால், ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், வலி உடனடியாக நின்று விடும். காலையிலும், மாலையிலும் பசும்பாலில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர, நரம்புகள் உறுதி பெறும். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளும் தீரும். தேனில் சிறிது மாதுளம் பூக்களை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், தொண்டைப்புண், வயிற்றுப்புண் நீங்கும். சிறு காயங்களின் மீது தேன் தடவினால் விரைவில் ஆறிவிடும். வடு கூட ஏற்படாது. குழந்தைகளுக்கு தினமும் இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிடக் கொடுத்தால், இரத்தம் சுத்தமாகும். தசைகள் உறுதி பெறும். கரும்புச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகி வர, மலச்சிக்கல் தீரும். தீக்காயங்களின் மீது தேனை தடவி வர சீக்கிரம் ஆறி விடும். எரிச்சலும் இருக்காது.
மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் இருக்கிறதா?
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் உள்ளன என்று தமிழ் சித்தர் அகத்தியர் கூறுகின்றார். வாதம் - 84 பித்தம் - 48 கபம் - 96 தனுர்வாயு - 300 சயம் - 7
வடிகஞ்சியின் ஆரோக்கிய பலன்கள்!
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
சோறு வடித்த கஞ்சி எளிதாக எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடியது. அதன் பலன்கள் பலவித உடல் உபாதைகளை போக்கி நலம் தர வல்லது. சோறு வடித்த கஞ்சியை பருகிட பித்தம், கபம், வாதம் மூன்றும் சீராக இயங்கும்.
இதய நோயைத் தவிர்க்கும் - இஞ்சி பீட்ரூட் ஜூஸ்
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
பீட்ரூட் மற்றும் இஞ்சியைத் தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன், தண்ணீர் விட்டு, மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். இதை வடிகட்டி, தேவையான அளவு தேன் சேர்த்து அருந்தலாம். பலன்கள்: ஹோமோசிஸ்டீன் (Homocysteine) எனும் அமினோஅமிலத்தின் அளவு அதிகரிக்கும்போது, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. பீட்ரூட்டில் உள்ள கிளைசின் பீட்டைன் (Glycine betaine) எனும் நுண்ணூட்டச்சத்து, இந்த ஹோமோசிஸ்டீன் அளவைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இதனால், இதய நோய்கள், பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. அதேபோல, பீட்ரூட்டில் ஃபோலேட், வைட்டமின் ஏ, பி6, சி, இ, கே சத்துக்களும் நிறைவாக உள்ளன.
உணவு உண்ட பின் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
இன்றைய அவசர யுகத்தில் உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரமே இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. அவர்கள் எல்லாம் குறைந்தபட்சம் நடைபயிற்சி செய்வதன் மூலமாக தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது. ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தினமும் 10,000 அடி நடக்க வேண்டும் என்றுதான் பல காலமாக கூறப்பட்டு வருகிறது.இந்நிலையில், அதைவிட குறைந்த தூரம் நடப்பதன் மூலமே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. உடல் எடையை எவ்விதப் பக்க விளைவுகளும் இல்லாமல் குறைக்க, உலகம் முழுவதும் உள்ள மருத்துவ முறைகள் பரிந்துரைக்கும் ஒரே தீர்வு நடைபயிற்சி. தினமும் 5,000 அடிகளுக்கும் குறைவாக நடப்பது மூலம் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று ஆய்வு முடிவு கூறுகிறது. இதற்கிடையே சாப்பிட்ட பிறகு உட்காருவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?ஒவ்வொரு உணவிற்கும் பிறகு நடப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நோய்களைத் தடுக்க ஒரு நாளைக்கு 100 நடைகள் (steps) நடக்க வேண்டும். சரியாக சாப்பிடுவது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
ஒரு கப் டீ தலைவலியை குணப்படுத்துமா
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
டீ....உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியை தரக்கூடியது தேநீர் அல்லது டீ.உலகின் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாக கருதப்படும் டீயில் ஏராளமான வகைகள் உள்ளன. ஒன்றாக கருதப்படும் டீயில் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றில் சில வகையான தேநீர் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்தியாவிலும் அனைத்து குடும்பங்களிலும் பிரதான பானமாக விளங்கும் டீயை குடித்தால் பலருக்கும் தலைவலி தீருவதாக கூறுகிறார்கள். இதைப்போல தினசரி வழக்கமான நேரத்திற்கு டீ குடிக்காவிட்டால் தலைவலி வருகிறது என சிலர் கூறுவதையும் காணமுடிகிறது. தேநீருக்கும், தலைவலிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என நிபுணர்கள் கூறியதாவது:- டீயில் கிரீன் டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ என பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் சில உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்திருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். பொதுவாக தேநீர் என்று சொல்லும் போது இந்தியாவில் பால் சேர்த்து தயாரிக்கப்படும் டீயை மட்டுமே குறிக்கிறோம். ஆனால் இந்த வகையான தேநீர் தலைவலியை தீர்க்க நேரடியாக உதவாது.தலைவலி பிரச்சனைக்கும், தேநீர் அருந்துவதற்கும் இடையே நேரடி ஆதாரம் இல்லை. ஆனால் நீரிழப்பு தலைவலியை தூண்டும் என்பதால், நீரேற்றத்திற்கு தேநீர் உதவும் என்று நினைப்பதில் பயன் உள்ளது.தேநீர் நாசி சைனசை குறைக்கும். மேலும் சைனசிடிசால் ஏற்படும் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதே போல சிலவகையான தேநீரில் காபின் உள்ளது. இது தலைவலிக்கு தீர்வாக அமையும். காபின் ரத்த நாளங்களை சுருக்கி தலைவலி அறிகுறிகளை குறைக்கும். தேநீர் அருந்துவதால் கிடைக்கும் பயன்கள் நபருக்கு, நபர் மாறுபடும். இஞ்சி டீ ஒற்றைத்தலைவலி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் சில வகையான தேநீர் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்தியாவிலும் அனைத்து குடும்பங்களிலும் பிரதான பானமாக விளங்கும் டீயை குடித்தால் பலருக்கும் தலைவலி தீருவதாக கூறுகிறார்கள். இதைப்போல தினசரி வழக்கமான நேரத்திற்கு டீ குடிக்காவிட்டால் தலைவலி வருகிறது என சிலர் கூறுவதையும் காணமுடிகிறது. தேநீருக்கும், தலைவலிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என நிபுணர்கள் கூறியதாவது:- டீயில் கிரீன் டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ என பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் சில உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்திருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். பொதுவாக தேநீர் என்று சொல்லும் போது இந்தியாவில் பால் சேர்த்து தயாரிக்கப்படும் டீயை மட்டுமே குறிக்கிறோம். ஆனால் இந்த வகையான தேநீர் தலைவலியை தீர்க்க நேரடியாக உதவாது.தலைவலி பிரச்சனைக்கும், தேநீர் அருந்துவதற்கும் இடையே நேரடி ஆதாரம் இல்லை. ஆனால் நீரிழப்பு தலைவலியை தூண்டும் என்பதால், நீரேற்றத்திற்கு தேநீர் உதவும் என்று நினைப்பதில் பயன் உள்ளது.தேநீர் நாசி சைனசை குறைக்கும். மேலும் சைனசிடிசால் ஏற்படும் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
பசியின்மைக்கான அறிகுறிகள், காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
'பசித்து உண்' என்று பழமொழியே இருக்கிறது. ஒவ்வொரு வேளையும் பசி எடுக்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை:- 1) நாம் சாப்பிடும் பல மருந்துகளின் பக்க விளைவுகளில் பசி குறைவது 2) மனச்சோர்வு ஏற்படும் போது மூளையைத் தூண்டி ஒரு ஹார்மோனை சுரக்கச் செய்யும். இது பசியைக் குறைத்துவிடும். 3)விபத்துகளில் மூளையில் பாதிப்பு, காயம் ஏற்பட்டால், உணவு மேல் நாட்டம் இருக்காது. 4) ஜலதோஷத்தின் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பசிக்காது. 5) ஒற்றைத் தலைவலி, வாந்தி வருவது போன்ற உணர்வு காரணமாக சாப்பிட தோன்றாது. 6) கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதத்தில் மசக்கை வாந்தியினால் உணவைப் பார்த்தாலே ஓடத்தோன்றும். 7) ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு பசி குறைவாக இருக்கும். 8) வயிற்றுப் பிரச்சினை, வாந்தி, பேதி, வயிறு உப்புசம் போன்றவை இருந்தால் பசி சரியாக இருக்காது 9) புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பசி குறையும்.
கல்லீரல் பாதிப்பும்... அறிகுறிகளும்... பற்றி தெரிந்து கொள்வோமா
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு.உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத்தக்கது.எனவே கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், அதனால் உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும். அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.எனவே கல்லீரலில் பிரச்சனை இருந்தால் தென்படும் அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கால்களில் வீக்கம்ஒருவருக்கு கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், கால்களில் லேசாக வீக்கம் அவ்வப்போது ஏற்படும். எனவே திடீரென்று கால்கள் வீங்கியிருந்தால், உடனே மருத்துவரை சந்திக்கவும்.மஞ்சள் காமாலைஎப்போது ஒருவரின் சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதோ, அத்தகையவருக்கு மஞ்சள் காமாலை காரணமாக பித்தநீர் தேங்கியுள்ளது என்று அர்த்தம். வயிற்று உப்புசம் மற்றும் வலிகல்லீரலில் கட்டிகளானது அவ்வளவு சீக்கிரம் வராது. ஆனால் கல்லீரலானது தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால் தான், கல்லீரலில் கட்டிகள் உருவாகும். உங்கள் கல்லீரலில் கட்டிகள் இருந்தால், வலது பக்கத்தில் அடிவயிற்றிற்கு சற்று மேலே வலி எடுப்பதோடு, வயிறு உப்புசத்துடனும் இருக்கும்.வாந்தி, சோர்வு, காய்ச்சல்கல்லீரலை வைரஸ் தாக்கினால் உருவாவது தான் ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் அழற்சி.
உலகில் எந்த மருந்தகங்களிலும் கிடைக்காத அதி அற்புதமான மருந்துகள்
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
1. உடற்பயிற்சி என்பதும் ஒரு மருத்துவம் 2. விரதம் இருப்பதும் ஒரு மருத்துவம் 3. இயற்கை உணவு உண்பதும் ஒரு மருத்துவம் 4. சிரிப்பு என்பதும் ஒரு மருந்து 5. நல்ல தூக்கம் என்பதும் ஒரு மருந்து 6. பச்சைக் காய்கறிகள் உண்ணுவதும் ஒரு மருந்து 7. சூரிய ஒளியும் ஒரு மருந்து 8. ஒருவரிடம் அன்பாய் இருப்பதும் ஒரு மருத்துவம் 9. நன்றி உணர்வோடு இருப்பதும் ஒரு மருத்துவம் 10. தவறை மன்னிப்பதும் ஒரு மருத்துவம் 11. தியானம் என்பதும் ஒரு மருத்துவம் 12. இறைவனை நினைப்பதும் துதிப்பதும் ஒரு மருத்துவம் 13. மனதிற்கு பிடித்தமான பாடல் பாடுவதும் கேட்பதும் மற்றும் இசைக்கு நடனம் ஆடுவதும் ஒரு அற்புத மருத்துவம்
காய்ச்சல் வந்தால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
காய்ச்சல் வந்தால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு அசவுகரியம், மந்தம், பலவீனம் போன்றவை ஏற்பட்டு அன்றாட செயல்பாடுகள் முடங்கிப்போய்விடும். அப்படி அடிக்கடி காய்ச்சல் வருவதோ, ஒருசில நாட்களை கடந்தும் நீடிப்பதோ ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.ஆனால் எப்போதாவது திடீரென்று காய்ச்சல் வந்தால் அது உடல் நலனுக்கு நன்மை செய்யும். உடலின் பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது காய்ச்சலின்போது உடலின் வெப்பநிலை 99.1 டிகிரி பாரன்ஹீட் முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வரைக்குள் இருந்தால் சில ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். அவை பற்றி தெரிந்து கொள்வோம். ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்காய்ச்சலின் போது, உடலில் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கும். இந்த செல்கள்தான் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முன்னணி வீரர்கள்போல் செயல்படும். பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகளை கண்டறிந்து அவற்றின் மீது தாக்குதல் தொடுப்பது இவற்றின் பணியாகும். காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை அதிகரிப்பது, எலும்பு மஜ்ஜையில் அதிக ரத்த வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டும் என்பது ஆய்விலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த செயல்முறையின்போது நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுவதற்கு உடலின் செயல்திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு அமைப்பு பலப்படுத்தப்பட்டு நோயின் தீவிரத்தையும் குறைக்கும். பாக்டீரியா - வைரஸ் வளர்ச்சி குறையும்பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தி அவை குறைவான அளவுக்கு வளர்வதற்கு சாதகமான சூழலை காய்ச்சல் உருவாக்கும். நமது உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் (98.6 டிகிரி பாரன்ஹீட்). இந்த வெப்பநிலையை பல நோய்க்கிருமிகள், நுண்ணுயிரிகள் விரும்புகின்றன. காய்ச்சல் காரணமாக உடலின் வெப்பநிலை உயரும்போது இவற்றின் செயல்பாடுகள் முடங்கும். அதிக உடல் வெப்பநிலை, இன்புளூயன்ஸா வைரஸ் போன்ற சில வைரஸ்களின் வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் தடுக்கும். அவற்றின் வளர்ச்சியை குறைப்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக்கும். நோய்த்தொற்றுகளை அழிப்பதற்கு அதிக நேரத்தையும் அளிக்கும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம் வாழ்வில் வளம் பெறுவோம்.
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
கொத்தமல்லியோட விதைக்கு, 'தனியா'னும் ஒரு பேரு உண்டு. ரசம், துவையல், குருமா, சாம்பார்... இப்படி எதைச் செய்தாலும், அதுல நாலு கொத்தமல்லி தழையை கிள்ளிப் போடறதுதான் இப்ப வழக்கமா இருக்கு. இதுக்குக் காரணம்... அதன் மூலமா நமக்குக் கிடைக்கற பலவிதமான பலன்கள்தான். அதேபோல, கொத்தமல்லி விதைகள் மூலமாவும் ஏகப்பட்ட பலன்களை அடைய முடியும்! உடல் உஷ்ணத்தைக் குறைக்கறதோட... நாக்கு வறண்டு போய் இருந்தா, அதை சரிபண்ணுற தன்மை இந்த விதைகளுக்கு உண்டு. பித்த மயக்கம், நெஞ்செரிச்சல்னு நிறைய பிரச்னைகளை இது சரியாக்கும். ரெண்டு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை எடுத்து, பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, ரெண்டு டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க வைக்கணும். அது ஒரு டம்ளரா ஆனதும் இறக்கி ஆற வெச்சு, தேன் இல்லைனா சர்க்கரை சேர்த்து குடிச்சு வந்தா... மேலே சொன்ன பிரச்னைகள் எல்லாம் சரியாகறதோட... தலைசுற்றல், வயித்துப்போக்குகூட சட்டுனு நின்னுரும். தூக்கமில்லாம தவிக்கறவங்களுக்கும் இது சரியான தீர்வைக் கொடுக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு கண்கண்ட மருந்துனு சொல்லலாம் இந்த கொத்தமல்லி விதைகளை! அட, ஆமாங்க... கொத்தமல்லி விதை 10 கிராம்... அதே அளவு வெந்தயம் எடுத்து, ரெண்டையும் லேசா பொன்வறுவலா வறுத்து தூளாக்குங்க. இதுல ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, ரெண்டு டம்ளர் தண்ணிவிட்டு ஒரு டம்ளராகுற வரைக்கும் கொதிக்கவிடணும். பிறகு, காலையிலயும் (வெறும் வயித்துல), சாயங்காலமும் குடிச்சு வந்தா... சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள்ள வரும்.
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
உங்களை நீங்களே இந்த செயல்கள் செய்வது மூலம் காயப்படுத்தி கொள்ளாத்தீர்கள் உறவுகளே
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
1. காலை உணவை உட்கொள்ளாமல் விட்டால் அது உங்கள் வயிற்றை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 2. தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்தை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 3. இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருந்தாலும் அது உங்கள் பித்தப்பையை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகள்
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
குழந்தைகளுக்கு நீர்கடுப்பு ,அடி வயிற்றில் வலி, சிறுநீரில் ரத்தம், கை-கால்களில் வீக்கம், உடம்பில் வீக்கம் ஆகியவை ஏற்படும் போது சிறுநீரக பிரச்சினை இருக்கிறது என்பதை எண்ண வேண்டும்.
ஒவ்வொரு உயிரிலும் பஞ்சபூதங்களின் கூட்டுறவு காணப்படுகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவைகளின் கூட்டுறவால் உண்டாவதே மனித தேகம். ஆக மனிதனும் இயற்கையே.
: ஆரோக்கியம் - குறிப்புகள் [ ஆரோக்கியம் குறிப்புகள் ] | : Health - Tips in Tamil [ Health Tips ]
உலகில் உயிர்வாழ்தல் என்பது உணர்வுப் பூர்வமான விஷயம். ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒரு இலக்கினை நோக்கி, உலகின் இயல்பான சுழற்சிக்கு, இறைசக்தியால் இயக்கப்படுகிறது. ஆக ஒவ்வொரு உயிரிலும், இறை அம்சம் மறைபொருளாய் மறைந்து பிறவிச்சக்கரம் சுழல்கிறது.
ஒவ்வொரு உயிரிலும் பஞ்சபூதங்களின் கூட்டுறவு காணப்படுகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவைகளின் கூட்டுறவால் உண்டாவதே மனித தேகம். ஆக மனிதனும் இயற்கையே.
மனிதனிடமிருந்து எந்தவொரு மூலகங்களையும் பெறாமல், ஒரு உயிரை உருவாக்குதல் எந்தவொரு விஞ்ஞானியாலும் முடியாது. நவீன விஞ்ஞான வளர்ச்சி என்பது ஒருமித்த யூகமேயல்லாது, வேறொன்றுமில்லை. நவீன விஞ்ஞானமாய் இருந்தாலும் அல்லது அதனடிப்படையில் உண்டான மருத்துவமாய் இருந்தாலும் இயற்கைக்கு அடிபணிந்துதான் செல்லவேண்டும்.
உயிரின் அடிப்படைத் தத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு செயல்படுவதுதான் இயற்கை மருத்துவம். ஒருவனின் உடல்நலக் கேட்டிற்குப் பல்வேறு காரணங்களைப் பட்டியலிடலாம்.
மருத்துவனின் நுண்ணறிவினால் நோய் நிதானம் அறிந்து, நோயின் தன்மை அறிந்து, மருந்தானது உணவின் அடிப்படையில் தரப்பட வேண்டும்.
இயற்கை மருத்துவத்தின் உயரிய கோட்பாடே 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்பதாகும்.
இயற்கையால் பேணப்பட்ட இந்த உடலுக்கு ஏதேனும் உடற்கேடு உண்டாகும் சமயத்தில், இயற்கையோடு இயைந்த இயற்கை மருத்துவத்தையே தேர்ந்தெடுங்கள்.
உடல்பாதிப்பை உன்னிப்பாய்க் கவனியுங்கள். நுண்ணறிவு கொண்டு யோசியுங்கள்.
1. நோய் எப்பொழுது வந்தது?
2. எப்படி நோய் வளர்ந்தது?
3. உங்களுடைய தவறான பழக்கங்கள் என்னென்ன?
4. விருப்பமான உணவுகள் எவையெவை?
ஆழ்ந்து யோசியுங்கள். இந்த நான்கு கேள்விகளுக்கும் சரியான பதில் உங்கள் உள்ளத்திலிருந்து வந்தால், உடல் நோய்க்குத் தகுந்த மருந்தும் உங்கள் நுண்ணறிவால் உணரப்படும்.
உடலானது உங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறது. உடலும் உடல்நலக்கேட்டை விரும்புவதில்லை.
1. உங்கள் பழக்கங்களைப் பட்டியலிடுங்கள். தேவையற்ற நடைமுறை பழக்கங்களை உடனே நிறுத்துங்கள்.
2. உணவில் தேவையானதை மட்டுமே, தேவையான அளவில் உண்ணுங்கள்.
இந்த இரண்டு விஷயங்களைக் கடைப்பிடித்தால்கூட வளர்ந்த நோயானது தளர ஆரம்பிக்கும். மருந்து உங்கள் கையில் இருக்கிறது.
மருத்துவனையும், மருந்துகளையும் தேடி ஓடாதீர்கள். நல்ல உணவினால் நல்லுணர்வு உண்டாகும். நல்ல உணர்வினால் நல்ல சிந்தனை ஏற்படும். நல்ல சிந்தனையே நல்ல சொல்லாய் உருவாகும். நல்ல சொல்லே நற்செயலாய் உருவெடுக்கும்.
இந்நூலை தனிப்பட்ட மருத்துவ நூலாய்ப் பார்க்காதீர்கள். நல்லதொரு வாழ்வியல் நூலாய்ப் பாருங்கள். தினசரி பத்து ரூபாய் செலவில் நீங்கள் நீங்கா உடல்நலம் பெறவேண்டும் என்ற மாறா எண்ணத்தின் அடிப்படையில், இயற்கை மருத்துவத்தின் அடிப்படை விஷயங்களை தொகுத்தளித்திருக்கிறேன்.
இதுபோன்ற எளிய மருத்துவ முறைகள் கண்டிப்பாக உங்களுக்குப் பொருளாதார நஷ்டத்தை உண்டாக்காது. எளிய செலவில் நோய்கள் தீர அல்லது உடல்நலம்பெற எனது கருத்துக்களை நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள். நோயில்லா உடல் நலமும், நூறாண்டு வாழ்வும் நொடிப்பொழுதில் கை கூடும்.
என்னைத் தொடர்ந்து எழுதிடத் தூண்டி, பல்வேறு மருத்துவ நூல்களை வெளிக்கொணர விரும்பும் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கும் இயற்கை மருத்துவத்தில் தனி அடையாளம் உங்களுக்கும் வேண்டும் என்ற உந்தாற்றல் கொண்டு, தொடர்ந்து ஊக்குவித்து வரும் 'ஓம் சரவணபவ' பொறுப்பாசிரியர் அண்ணன் மா.முருகன் அவர்களுக்கும் என் நெஞ்சில் விளைந்த வணக்கங்களைச் சமர்ப்பித்து, தொடர்ந்து பல்வேறு நூல்களை எழுதிட முனைகிறேன்.
இயற்கை அம்சம் கொண்ட இந்நூலை நீங்களும் உங்கள் உறவுகளும் விரும்பிப்படித்து, நீடித்த வாழ்வு பெற, இதயப்பூர்வமாய் அர்ப்பணிக்கிறேன்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
: ஆரோக்கியம் - குறிப்புகள் [ ஆரோக்கியம் குறிப்புகள் ] | : Health - Tips in Tamil [ Health Tips ]