 
		
		          நபிகள் நாயகம்
▪ திருடக் கூடாது. ▪ பொய் சொல்லக் கூடாது. ▪ லஞ்சம், ஊழல் கூடாது. ▪ கடத்தல் கூடாது.
 
		
		          சுற்றுலா தளங்கள்
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ள நெல்லை என்றழைக்கப்படும் திருநெல்வேலி தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரமாகும். தமிழ்நாட்டின் மிக முக்கிய சிறந்த யாத்திரை ஸ்தலமான காந்திமதி - நெல்லையப்பர் கோயில் தொடங்கி மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் பாபநாசம், ஆரியகுளம் மற்றும் கூந்தகுளம் பறவைகள் சரணாலயம், மற்றும் மேல் கோதையாறு என திருநெல்வேலியில் சுற்றிப் பார்க்க ஏராளமான அழகிய இடங்கள் உள்ளன.
 
		
		          வாழ்க்கை வரலாறு
உலகில் பௌத்த சமயத்தை உருவாக காரணமாக இருந்தவர் புத்தர். இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார். புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள். சீட பரம்பரையூடாக வாய்மொழிமூலம்கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர்திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது. சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினிஎன்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார். சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர். அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார். ஒருமுறை வட வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார்.துறவறம் பூண்ட சித்தார்த்தர், யோக நெறியில் கடுந்தவம் புரிந்தார். தன் தவங்களின் மூலம் உயர்ந்த யோக நிலைகளை அடைந்தாலும், உலக வாழ்க்கையின் துன்பங்களின் ஆதாரத்தை அறிய முடியாததால் அதிருப்தி அடைந்தார். எனினும் தவ வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தார்.
 
		
		          பகவத்கீதை
1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
 
		
		          வாழ்க வளமுடன்
தற்சோதனை என்பது மனத் தூய்மையை நாடிச் செல்லும் ஒரு தெய்வீகப் பயணம். ஐயுணர்வின் வயப்பட்டு ஆன்மாவானது உணர்ச்சிப் பெருக்கில் பல செயல்களைப் புரிகிறது. விளைவறிந்து செயலாற்றும் பண்பு ஓங்கும் வரையில் ஆன்மாவின் செயல்களால் பெரும்பாலும் துன்பமே விளைகின்றது, துன்பமோ பொருந்தா உணர்வு.
 
		
		          சக்கரங்கள்
முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது.
 
		
		          மந்திரங்கள்
திருமணம் கை கூடுவது எவ்வளவு முக்கியமோ. அவ்வளவுக்கு நல்ல கணவன் அமைவதும் முக்கியம். அதற்கு கீழ்கண்ட மன்மதன் காயத்திரி மந்திர துதி மிகச் சிறப்பானது.
 
		
		          வாழ்க்கை பயணம்
பாதைகள் எப்போதும் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. அங்கே நீங்கள் எடுக்கும் முயற்சி தான் உங்களின் வெற்றியை தீர்மானிக்கும். நீங்கள் முன்னேறும் நேரம் பார்த்து முட்களைப் பாதையில் வீச பலர் வருவார்கள். அதைக் கண்டு மிரளாது உங்கள் பயணத்தைத் தொடர்ந்தால் இலக்கை அடையலாம். ஒவ்வொரு பிரச்சனையும் ரெட் சிக்னல் போல, சிறிது நேரம் காத்திருந்து அது பச்சை நிறமாக மாறிய பிறகு செல்வதைப் போலத்தான் வாழ்க்கை. வாழ்க்கை பிரச்சினைகள் மட்டுமே கொடுப்பதில்லை. பிரச்சினைகளைக் கடந்து செல்லும் வழியையும் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது கவனத்துடன் கையாளுங்கள். வாழுகின்ற வாழ்க்கை வெறுப்பாக இருக்கிறதே என்று வேறொன்றைத் தேடாதே அது வேதனையாகத்தான் இருக்கும். நிம்மதி என்பது இருப்பதில் திருப்திபடுவது தானே தவிர இல்லாததிலும் இழந்ததிலும் தேடுவதல்ல.
 
		
		          குடும்ப பொறுப்பு
திருமணம் முடிப்பது உடல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே என்பதைப் போல் தான் இன்று பல வாலிபர்கள் திருமண வாழ்க்கையில் இனைகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை மனைவி என்பவள் திருமணம் முடிக்கும் வரை அத்தியாவசியத் தேவை, அதன் பின் அவள் ஒரு வாழ்நாள் தொல்லை என்பதைப் போல் தான் நடந்து கொள்வார்கள். அதற்கு ஏற்றால் போல் நகைச்சுவைகளும், வீடியோ க்லிப்களும் மனைவியை கலாய்ப்பது, திருமணத்தின் பின் மனைவி ஒரு தொல்லை போன்று சித்தரித்து வெளிவர, அதனை இவர்கள் நிஜ வாழ்விற்கு உருக்கொடுத்து வாழ முயற்சி செய்கின்றனர். இவர்களுக்கு மனைவி தொல்லையாகிப் போவது எங்கென்றால், திருமணம் முடித்து விட்டோம், எமக்கு என்று ஒரு மரியாதை வேண்டும், எமது மனைவிக்கு என்று மரியாதை இருக்க வேண்டும். என் பிள்ளைகளுக்கு மரியாதையான தகப்பனாக நான் இருக்க வேண்டும், எனக்கு என்று ஒரு குடும்பம் உள்ளது அதன் மானத்தை காக்க வேண்டும் என்ற எந்த பெறுப்பும் இல்லாமல், 24-25 வயதாகும்போதே 17-18 வயதில் ஒருத்தியை தேடி திருமணம் முடித்துக் கொள்கின்றனர். சில நாட்களின் பின் "இவ்வளவு தானா பொம்புள" என்பது போல் அனைத்தும் தீர்ந்த பின், பொண்டாட்டியிடம் தீர்க்க வேண்டியதை தீர்த்து விட்டு குப்புரப்படுத்துக் கொள்கின்றனர். அல்லது கைத் தொலைபேசியில் மூழ்கி விடுகின்றனர். மனைவியின் வீட்டை, அங்கு செல்வதை கேவலமாக பார்ப்பது, அவளுடன் வெளியில் செல்வதில்லை என்று வீட்டோடு அவளை வைத்து விடுகின்றனர். இப்படி வாழ்ந்தால் தான் கெத்தாம் இல்லாவிட்டால் அவர் பொண்டாட்டி தாசனாம், இதைப் பற்றி எல்லாம் அந்த மனைவி கதைத்தால், இரவு தாமதமாகாமல் வீடு வாங்க என அவள் சண்டைபிடித்தால், தெருத் தெருவாக அலைந்து திரிய வேண்டாம் என அவள் கோபித்தால்,......, அது அடக்கு முறையாம் , வாய் காட்டுவதாம், அறப்படிக்கிறதாம் என்று சண்டை சச்சரவு, அடிதடி என்று வம்பிழுத்து, கடைசியில் தகாத உறவு, அது இது என எத்தனையோ குடும்ப சீரழிவுகள், பல இடங்களில் விவாகரத்து வரை வாழ்க்கை சென்று முடிந்தது என்று சீரழிவுகள் மட்டுமே மிஞ்சிய வாழ்க்கை பலருக்கு அமைந்து விடுகிறது.
 
		
		          மஹாபாரதம்
மஹாபாரதத்தில் ஓர் அருமையான காட்சியை சித்தரிக்கிறார் வேத வியாஸர். சோகத்தின் உச்ச கட்டம் அது. அதில்தான் ஸ்ரீகிருஷ்ணர் தன்னைப் பற்றியும் தன் அரும் குணநலன்களைப் பற்றியும் பேசுகிறார். அதாவது அவருக்குப் பேச வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கிருஷ்ண சரிதத்தைக் கேட்கும் பக்தர்களான நாம் பரவசப்படுகிறோம்.
 
		
		          TNPSC பாட குறிப்புகள்
Dear Parents & Dear friends & இளைஞர்களே இதனை தெரிந்துகொண்டு இனியாவது கல்வியில் முன்னுக்குவாருங்கள். TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு...
 
		
		          ஊழியர்கள்
இது ‘COMFORT ZONE’ எனப்படும் பிரபலமான பொறி பற்றிய கதை. ஓர் ஊரில் ராமு மற்றும் சோமு இரண்டு எலிகள் வாழ்ந்துவந்தது.