ஆண் ஒரு குலதெய்வம்
Category: அப்பா
ஒரு தாய் தன் குழந்தையை பத்து மாதம் "வயிற்றில்" சுமக்கிறாள் ஒரு ஆண் வாழ்நாள் முழுவதும் தன் குடும்பத்தை "இதயத்தில்" சுமக்கிறான்.... "தாய் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்வாள்.... தந்தை அதை தான் மனதில் தாங்கிக் கொண்டிருக்கிறான்....
மகள்களை பெற்ற அப்பாக்களா அவசியம் படிங்க....
Category: அப்பா
பெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது. பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு. ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய இடம்பெயரும் தருணம் உணர்வுப்பூர்வமானது.
அப்பா ஏன் எப்போதும் பின் தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை
Category: அப்பா
1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25 வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. 4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பதில்லை என்று அப்பா எப்போதாவது நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடமிருந்து அன்பைப் பெறும்போது, தலைமுறை தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின் தங்கியே இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை.. 5. அலமாரியில் வண்ணமயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
அப்பா - மகள் ஒரு அழகான கவிதை
Category: அப்பா
அப்பாவை பெயர் சொல்லிக்கூப்பிடும் மகள்கள் ஒருவித அழகு. மகளை தன் அம்மாவாக பார்க்கின்ற அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பாவுக்கு மேக்கப் போட்டு ரசிக்கும் மகள்கள் ஒருவித அழகு. மகளுக்கு தன் கையால் உணவூட்டி மகிழும் அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பாவின் கழுத்தில் தொங்கி விளையாடும் மகள்கள் ஒருவித அழகு. மகளின் கால்களில் கொஞ்சி விளையாடும் அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பா சொல்லும் அத்தனை உண்மைகளையும் ஆர்வமாய் கேட்கின்ற மகள்கள் ஒருவித அழகு. மகள் சொல்லும் அத்தனை பொய்களையும் சிரிக்காமல் ரசிக்கின்ற அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பாவைத் தேடவைத்து மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளும் மகள்கள் ஒருவித அழகு. மகளைக் கண்டபிறகும் மரத்தையே கண்டுபிடிக்க முடியாதவர்களாய் தேடும் அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பாவை ஹீரோவாக பார்க்கும் மகள்கள் ஒருவித அழகு.
அப்பா மகளிடம் சொன்ன வாழ்க்கை பாடம்
Category: அப்பா
ஒரு இளம் பெண் தன் தந்தையிடம் சென்று, "அப்பா, எனக்கு ஒரு மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடத்தைக் சொல்லிக்கொடுங்கள். ஒரு இளம் பெண்ணாக, நான் என்னை நன்கு புரிந்துகொண்டு என் வாழ்க்கையில் வரும் சவால்களை சமாளிக்க கற்றுக்கொள்ள விரும்புகிறேன். தந்தை ஒரு கணம் யோசித்தார், பின்னர் தனது தொண்டையை செருமிவிட்டு, "ஒரு சோகமான இளவரசியைப் பற்றிய கதையைச் சொல்கிறேன். கதையை கவனமாகக் கேளு. மாயா என்ற அழகான இளம் வயது இளவரசி ஒருவள் இருந்தாள். அவள் மிக அழகாகவும், பிரகாசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாள். அவளுடைய அன்பும், பிரகாசமான அழகும் அவளைச் சுற்றியுள்ள அனைத்தையும் பிரகாசமாக்கியது. 21 வயதில், இளவரசி மாயா தொலைதூர இராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார இளவரசனை மணந்தார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு, அவள் நினைத்த இனிமையான வாழ்க்கை அவளுக்கு அமையவில்லை. ஏனென்றால் அவளுடைய கணவர் அடிக்கடி அவளை அடித்து துன்புறுத்துவதும், வன்முறையில் ஈடுபடுவதுமாக இருந்தார். தினமும் கொடுமைகளை அனுபவித்தாள். அவள் மிகவும் தனிமையை உணர்ந்தாள், மற்றவர்களால் நேசிக்கப்படவில்லை, அனைவராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டாள். ஒரு நாள், மாயா தனது தந்தையிடம் சென்று: அப்பா, என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க. நான் இனிமேல் இந்த திருமண வாழ்க்கையில் இருக்க மாட்டேன். என தனது துயரங்களை விவரித்தாள். இருப்பினும், அவரது தந்தை அதற்கு சம்மதிக்கவில்லை. திருமணமான பெண் கணவரை வேண்டாம் என்று விட்டுவிட்டு வருவது நம் சமுதாயத்திற்கே அவமானம். என்னால் வீட்டிற்கு உன்னை அழைத்துச் செல்ல முடியாது என்று கூறிவிட்டார். மாயா கண்ணீருடன் தனது தாயிடம் சென்று, "அம்மா, என் திருமண வாழ்க்கையை இனி என்னால் சமாளிக்க முடியாது. தயவுசெய்து என்னை வீட்டிற்கு வர விடுங்கள்! ".என்றாள். அம்மாவும் அதற்கு சம்மதிக்கவில்லை. திருமண வாழ்க்கை என்றால் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும். கவலைப்படாதே அவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுவார்... என்றார். மாயா, மிகுந்த வேதனையுடன் தனது நண்பர்களிடம் சென்று உதவி கேட்டாள். "என் கணவர் என்னை எப்போதும் அடிக்கிறார். நான் அவரை விட்டுவிட்டு வீட்டிற்கு வர விரும்புகிறேன்! ". என்னை காப்பாற்றுங்கள்... என்று அழுதாள். அவளுடைய நண்பர்கள் அவளை ஆறுதல்படுத்தி அறிவுரை கூறினர். "திருமணம் வாழ்க்கை எளிதானது அல்ல", இன்ப துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், போகப் போக அனைத்தும் சரியாகிவிடும். உன் கணவருடனே இரு என்று அறிவுரை கூறினர்.
அப்பா என்பவர் யார் என்னும் கவிதை
Category: அப்பா
கேட்க காதுகள் இருந்தால் போதும்... அப்பாவின் மிதிவண்டியும், அவரின் கழுத்து துண்டும் சொல்லும் ஓய்வில்லா கதைகளையும், ஓராயிரம் கவிதைகளையும்... அப்பா என்பவர் மகளுக்கு கொடைக்கானல், மகனுக்கு ஊட்டி, மனைவிக்கு சிரபுஞ்சி, உடன் பிறந்தவனுக்கு ஏற்காடு, உடன் பிறந்தவளுக்கு காஷ்மீர், பேரனுக்கு சாரல், பேத்திக்கு தூறல்,
1) நீயெல்லாம் எங்கடா உருப்படப் போறன்னு திட்டிட்டு... எப்பதான் என் புள்ளப உருப்படுவானோன்னு ஏங்கறவருதான்.. *அப்பா*
: அப்பா - அப்பாவை பற்றி மனதை தொட்ட வரிகள் [ அப்பா ] | : Dad - Touching lines about father in Tamil [ Dad ]
அப்பா
1) நீயெல்லாம் எங்கடா
உருப்படப் போறன்னு திட்டிட்டு...
எப்பதான் என் புள்ளப உருப்படுவானோன்னு ஏங்கறவருதான்..
*அப்பா*
2) பெரும்பாலும்
அப்பா நமக்காக வாங்கிவரும் ஒவ்வொரு பொருளும்,
அவர் காலத்தில் அவருக்கு அது கிடைக்கப் பெறாதவையாகவே
இருந்திருக்கும்.!!அப்பா
3) மழுங்கிப்போன அப்பாவின் கண்ணாடியை அணிந்த போது, பூதாகரமாய்த்
தெரிந்தது எங்களுக்காக அவர் தொலைத்த
வாழ்க்கை.!
அப்பா
4) தான் கோமாளி வேஷமிட்டு தன்
மகனை(ளை) ஹீரோ/ ஹீரோயின் ஆக்கும் தந்தை நாம் பெற்ற வரம்.அப்பா
5) கடைசி வரை புரிந்துகொள்ள முடியாத; புரிந்து கொள்ளும் போது படிக்க கிடைக்காதபுத்தகம் - அப்பா
6) சாப்டியாப்பா என்பது அம்மாவின்
பாசமென்றால்...
சாபிட்டானான்னு கேளு என்பது அப்பாவின் பாசம்..
7) வலிக்காத மாதிரி அடிச்சிட்டு தூங்க வைக்கிறது, அம்மா;
வலிக்கிற மாதிரி அடிச்சிட்டு தூங்காம தவிக்கிறது, அப்பா..
8) மகனையோ மகளையோ அடித்துவிட்டால் அவர்கள் தூங்கிய பின் அவர்கள்அருகில் அமர்ந்து அழுகும் போது
தந்தையிடம் காணலாம் ஆயிரம் தாயின் பாசத்தை
9) ஒரு சொல்லில் கவிதை என்றால் அது அம்மா.
ஒரு சொல்லில் சரித்திரம்
என்றால் அது அப்பா...
10) படிப்பை முடித்து நடு ரோட்டில் அலையும் போது தகப்பனின் வேர்வையை
உணர்கிறான் ஆண்..அப்பா
11) ஐந்து வயதில் ஹீரோவாகி இருவது வயதில் வில்லனாகி ஐம்பது வயதில்
தெய்வமாகிறார் .அப்பா
12) தனக்கென எந்த ஆசையும் இல்லாமல், என் ஆசைகளை
தத்தெடுத்துக்கொண்ட என் தந்தையைவிடவா ஒரு பெரிய செல்வத்தை அட்சய திரிதியை
தந்துவிடப்போகிறது.
அப்பாவின் நினைவுகள் பின் தான் தெரியும் புரியும்🙏
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
: அப்பா - அப்பாவை பற்றி மனதை தொட்ட வரிகள் [ அப்பா ] | : Dad - Touching lines about father in Tamil [ Dad ]