நட்பு

நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும்?, காது கொடுத்துக் கேளுங்கள்..

நண்பன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்... | A friend should be like this...

நண்பன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்...

Category: நட்பு

நிதானமாக படியுங்கள் நிச்சயம் பிடிக்கும்்்்்்் பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..

நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத்  தேவை  | Why and why do you need good friends

நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை

Category: நட்பு

தடுமாறும் போது தாங்கிப்பிடிக்க ஒரு நண்பன் தேவை ! தடம்மாறும் போது தடம்மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை ! ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை ! அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை ! கஷ்டத்தில் இருந்து நம்மை தேற்றி ஆறுதல் சொல்ல சில நண்பர்கள் தேவை !

எப்பொழுது ஒருவருக்கு அதிகமான நட்பு வட்டாரம் கிடைக்கும் தெரியுமா | You know when one gets a bigger circle of friends

எப்பொழுது ஒருவருக்கு அதிகமான நட்பு வட்டாரம் கிடைக்கும் தெரியுமா

Category: நட்பு

ஒருவரிடம் பணம், பதவி, ஏதோ ஒரு விதத்தில் வெற்றி இருந்தால் அவர்களைச் சுற்றி அதிகம் பேர் இருப்பார்கள் நிறைய நண்பர்கள் சொல்லிக்கொள்வார்கள். உண்மையில் அவர்கள் விரும்புவது உங்களை அல்ல. உங்கள் பணத்தை. உங்கள் பதவியை. உங்கள் வெற்றியை. உங்களால் கிடைக்கும் ஆதாயத்தை. நீங்கள் நேரடியாகக் கூட அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது இல்லை. உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டே அவர்கள் சில காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம்.

நட்பு | friendship

உங்களிடம் வந்து யாராவது தனக்கொரு பிரச்சனை என்று வந்தால்., அவர்களைப் பேச விட்டு அவர்கள் பேசுவதைக் கொஞ்சம் காது கொடுத்து கவனமாகக் கேளுங்கள்.

: நட்பு - நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும்?, காது கொடுத்துக் கேளுங்கள்.. [ நட்பு ] | : friendship - What should a good friendship look like?, Give your ear and listen.. in Tamil [ friendship ]

நட்பு

நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும்?

 ஓம் நமசிவாய 🙏🙏

காது கொடுத்துக் கேளுங்கள்..

 உங்களிடம் வந்து யாராவது தனக்கொரு பிரச்சனை என்று வந்தால்.அவர்களைப் பேச விட்டு அவர்கள் பேசுவதைக் கொஞ்சம் காது கொடுத்து கவனமாகக் கேளுங்கள்.

 

 மற்றவர்களின் துன்ப துயரங்களில் ஆழ்ந்த அக்கறை காட்டுங்கள்ஏனென்றால் யாருக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

 

 ஆம்.அது மாதிரியான நிகழ்வுகள் நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் கூட இருக்கலாம்.

 

ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்ததுவலையை விட்டுத் தலையை உயர்த்திப் பார்த்தது.

 

 வீட்டின் பண்ணையாளரும்அவரது மனைவியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டு இருந்தார்கள். ஏதோ நாம் சாப்பிடக் கூடிய பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.

 

 அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப் பார்த்ததும் எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

 

 உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது., "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது என்றது..

 

 அதற்கு அந்தக் கோழி,'' உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய செய்தி தான்..''.. நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது.,

 

 உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே செய்தியை போய்ச் சொல்லியதுவான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு, "நான் எலிப்பொறியை எல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.

 

 மனம் நொந்த எலி அடுத்துப் பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே செய்தியைச் ொல்லியது. ஆடும் அதே பதிலைச் சொல்லியது.. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை..,

"எலிப்பொறியைப் பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

 

 அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு வீட்டுக்காராரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

 

 ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக் கொண்டு விட்டது என்று பண்ணையார் மனைவி ஓடி வந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

 

 எலிக்குப் பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானி அம்மாளைக் கடித்து விட்டதுஎஜமானி அம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.

 

 விஷத்தை முறிக்க ஊசி போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்குக் காய்ச்சல் இறங்கவேயில்லை.

 

 அருகில் இருந்த ஒரு மூதாட்டி.," பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு கோழி ரசம் வைத்துக் கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.

 

 கோழிக்கு வந்தது ஆப்பு... கோழி அடித்து சூப் வைக்கப்பட்டதுகோழி உயிரை விட்டது.

 

 அப்போதும் பண்ணையார் மனைவியின் காய்ச்சல் தணியவில்லைஉறவினர்கள் சிலர் வந்தார்கள். அவர்களுக்குச் சமைத்துப் போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

 

 சில நாட்களில் அந்த அம்மாவின் உடல் நலம் தேறியதுபண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.

 

 நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது..

 

 பண்ணையார் மனைவியின் பாம்புக் கடிக்கு காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்எலி தப்பித்து விட்டது..

 

 ஆம்..,

 

 மற்றவர்களின் குறைகளைஅக்கறையுடன் கேளுங்கள்ஆறுதல் சொல்லுங்கள்;

 

 நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லைநாலு வார்த்தை ஆதரவாகப் பேசுங்கள்..இன்பத்தை விடதுன்பத்தில் கரம் பற்றி உடன் இருப்பதே நல்ல நட்பு.......

 

ஓம் நமசிவாய 🙏


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

: நட்பு - நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும்?, காது கொடுத்துக் கேளுங்கள்.. [ நட்பு ] | : friendship - What should a good friendship look like?, Give your ear and listen.. in Tamil [ friendship ]