அபயம் அருளும் அட்டபுயகரத்தான்!
Category: பெருமாள்
திருமால் எட்டு கைகளுடன் ஒவ்வொன்றிலும் ஆயுதம் ஏந்தி அருள்புரியும் மகிமைமிக்க தலம், அட்டபுயகரம்.
திருமண வரமருளும் திருமால்!
Category: பெருமாள்
திருமகளைத் தன்னுள் இருத்தி த்ரிபங்க நிலையில் சென்னைக்கு அருகே அருள்கிறார் திருமால்.
மீசைப் பெருமாள்!
Category: பெருமாள்
நூற்றி எட்டு வைணவஸ்தலங்களுள் ஒன்று சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்.
கனவில் வந்து காலணி கேட்கும் பெருமாள்
Category: பெருமாள்
கரூர் அருகே உள்ளது 'தான்தோன்றி மலை' இத்தலத்தில் அருள்கிறார் ஸ்ரீகல்யாண வெங்கடேச ரமண சுவாமி.
நோய் தீர்க்கும் எண்ணெய் கிணறு!
Category: பெருமாள்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது நாங்குநேரி வானமாமலை பெருமாள் ஆலயம்.
அண்ணன் கோயில்!
Category: பெருமாள்
ஸ்ரீநிவாசர் - அலர்மேல் மங்கைத் தாயார் என்ற பெயர்களில் வழங்கும் இன்னொரு திவ்யதேசம், வெள்ளக்குளம் எனும் அண்ணன் கோயில்.
நீராடும் பெருமாள்...
Category: பெருமாள்
மகாவிஷ்ணு, ஸ்ரீ மகாலட்சுமியோடு வாசம் செய்யும் வைகுண்டக் காட்சி பார்த்த மாத்திரத்தில் பரவசம் தரக்கூடியது.
திருப்பதி: ஏகாந்த தரிசனம்!
Category: பெருமாள்
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க எட்டு திக்கில் இருந்தும் பக்தர்கள் குவிவார்கள்.
காணிக்கை வசூல்!
Category: பெருமாள்
காணிக்கைகள் மூலம் உலகில் அதிக வருமானம் வரும் கோயில் திருப்பதி. இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் தவறாது ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள்.
இன்னொரு திருவண்ணாமலை!
Category: பெருமாள்
தமிழ்நாட்டில் மிகப் பிரபலமாக விளங்கி வரும் சிவஸ்தலமான திருவண்ணாமலையை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.
மெட்டி அணிந்த பெருமாள்!
Category: பெருமாள்
திருச்சி மாவட்டத்தில் உள்ளது கோவிலடி. இக்கோவிலடியில் அப்பக்குடத்தான் என்ற திருநாமம் கொண்டு பெருமாள் அருள்கின்றார்.
தைல வடிவமாகத் திருமால்!
Category: பெருமாள்
திருமால் மாவட்டத்தில் உள்ள வானமாமலை தலத்தில் திருமால் தைல (எண்ணெய்) வடிவமாக அருள்வதாக ஐதீகம்.
தனாகர்ஷண யந்திர மலை!
Category: பெருமாள்
ஏழு மலைகளின் மீது எழிலாட்சி புரிந்து வரும் திருப்பதி வெங்கடாசலபதி அருள்புரியும் அற்புதத் தலம்.
சங்கடங்கள் போக்கும் சக்ரபாணி!
Category: பெருமாள்
கோயில் நகரம் என்று புகழப்படும் கும்பகோணத்தின் மையப்பகுதியில் உள்ளது அருள்மிகு சக்ரபாணி திருக்கோயில்.
குடைவரைக் கோயில் திருமால்!
Category: பெருமாள்
திருவண்ணாமலை அருகிலுள்ள ஆவூர் என்னும் ஊரில் உள்ள குடைவரைக்கோயிலில் திருமால் நான்கு கைகளுடன், தாமரை மலர்ப் பீடத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.
பேசும் பெருமாள்!
Category: பெருமாள்
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசிக்குச் செல்லும் வழியில் 18 கி.மீ தொலைவில் இருக்கிறது கூழமத்தல்.
வசை வாங்கிய பெருமாள்!
Category: பெருமாள்
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது திருஇந்தளூர். இத்தல இறைவனை திருமங்கையாழ்வார் தரிசிக்க வந்தபோது ஆலயக் கதவுகள் மூடிவிட்டன.
பாண்டுரங்கன் கோயில்!
Category: பெருமாள்
வந்தவாசி - காஞ்சிபுரம் வழியில் உள்ளது தென்னாங்கூர். இந்தத் தென்னாங்கூர் எழில் நிரம்பிய சிறு கிராமம்தான்!
கணக்கு எழுதும் பெருமாள்!
Category: பெருமாள்
சுவாமிமலை அருகே உள்ள திருஆதனூர் என்னும் ஊரில் கோவில் கொண்டுள்ள பெருமாள் கையில் ஏட்டுச்சுவடி, எழுத்தாணி ஆகியவற்றைக் காண முடிகிறது.
கருடாழ்வார் சந்நிதி!
Category: பெருமாள்
திருவண்ணாமலை கோவிலில் அம்மன் சந்நிதிக்கு எதிரில் ஆடிப்பூரம் அன்று தீமிதிக்கும் வழக்கம் உண்டு.
பத்மாவதி தாயார்!
Category: பெருமாள்
திருப்பதியில் பெருமாளுடன் வீற்றிருப்பவர் ஸ்ரீ பத்மாவதித் தாயார்.
அதிசயத் தாலாட்டு!
Category: பெருமாள்
ஆலயங்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் இரவு பூஜை முடிந்ததும் ஏகாந்த சேவை நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
பெருமாளுக்கு திருஷ்டிப் பொட்டு!
Category: பெருமாள்
பூவுலகின் பேரழகனான பெருமாள், விழாக் காலங்களில் புறப்பாடாகி வரும்போது, திருஷ்டி பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்போது அவரது கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைக்கிறார்கள்!
ஓணம் திருவிழா முதன் முதலில் நடைபெற்ற கோவில்!
Category: பெருமாள்
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றுதான்திருக்காட்கரை. ஓணம் திருவிழா இங்குதான் முதன் முதலில் நடந்தது என்கிறார்கள்.
புரட்டாசி சனிக்கிழமை!
Category: பெருமாள்
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் வரும் சனிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை.
பக்திக்குக் கிடைத்த கவுரவம்!
Category: பெருமாள்
பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பார்கள். அதுவும், புரட்டாசி சனி என்றால் சொல்லவே வேண்டாம்.
நெற்குன்றம் - கரிவரதராஜ பெருமாள் ஆலயம்!
Category: பெருமாள்
சென்னை கோயம்பேடு அருகில் அமைந்துள்ள நெற் குன்றத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் ஆலயம்.
துளசியை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்!..
Category: பெருமாள்
"துளசி பாதுமாம் நித்யம் ஸர்வ, ஆபத்யோபி ஸர்வதா, கீர்த்தி தாபி ஸ்ம்ருத்வாபி பவித்ரயதி மாநிவம்!..''
ஒரு விநாடி தரிசனம்!
Category: பெருமாள்
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் நடை பெறும் கருடசேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மார்கழி மாதச் சிறப்புக்கள்!
Category: பெருமாள்
மார்கழி மாத விடியற்காலையில் வீசும் காற்றில் நம் உடல் நலத்திற்கு நன்மை தரும் சக்திகள் உள்ளன.
திருநீறு அணியும் பெருமாள்!
Category: பெருமாள்
தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினம் - திருவாரூர் வழித் தடத்தில் 'திருக்கணங்குடி' என்னும் திருத்தலம் அமைந்துள்ளது.
திருக்கோஷ்டியூர்: ஸ்ரீ சௌமிய நாராயணர் கோயில்!
Category: பெருமாள்
திருப்பத்தூர் - சிவகங்கை பாதையில் திருப்பத்தூரிலிருந்து 9 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.
நாச்சியார் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள்!
Category: பெருமாள்
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் கோச்செங்கட் சோழன் சிறந்த சிவபக்தனாகத் திகழ்ந்தவர்.
இப்படியொரு பிரார்த்தனை!
Category: பெருமாள்
நாமக்கல் நகரிலிருந்து 12 கி.மீட்டர் தொலைவில், 2300 அடி உயரமுள்ள நைனாமலைக் குன்று உள்ளது.
புரட்டாசி மாதச் சிறப்புக்கள்
Category: பெருமாள்
மாதங்களில் மிகவும் சிறப்புமிக்க புரட்டாசி மாதம் பெருமாளுக்குப் பெரிதும் உகந்தது.
திருமணத் தடை நீக்கி கல்யாண வரம் அருளும் கோயில்!
Category: பெருமாள்
'திருமண் கல்யாண லக்ஷ்மிநாராயணப் பெருமாள் கோயில் கொண்டு அருள் பாலித்து வரும் 'திருமண் மலை' ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் அமைந்துள்ளது.
ஏழுமலையானின் எழுமலைகள் என்ன தெரியுமா?
Category: பெருமாள்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அல்லது திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட கோவிலாகும்.
திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!
Category: கடவுள்: பெருமாள்
தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும்.
திருப்பதியில் உள்ள ரகசிய தங்க கிணறு பற்றி தெரியுமா?
Category: பெருமாள்
ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். தினமும் பல லட்சம் மக்கள் வந்து வணங்கும் இந்த கோவில் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் அருளை பெறும் ராஜ மந்திரம்
Category: பெருமாள்
திருமணத்தடை, குழந்தை வரம், கடன் பிரச்னை, குடும்பத்தில் கருத்து வேறுபாடு, சொத்து பிரச்னை, தம்பதிகள் பிரிந்திருத்தல், தொழிலில் பின்னடைவு.இன்னும் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள் குறுக்கிடுகின்றன.
அவசியம் பார்க்க வேண்டிய 15 பெருமாள் கோயில்கள்
Category: கடவுள்: பெருமாள்
1. ஆசியாவிலேயே மிகப் பெரிய பள்ளி கொண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ள தலம் திருமயம். மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில் இது மட்டுமே. 2. திருப்பதி ஏழுமலைக்கு மேல் நாராயணகிரி என்ற தலம் உள்ளது. இங்கு ஏழுமலையானின் பாதச்சுவடுகள் உள்ளன. இதனை ஸ்ரீவாரி பாதம் என்பார்கள். பெருமாள் திருமலையில் முதலில் தடம் வைத்த இடம் இது தான் என சொல்லப்படுகிறது. 3. திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெருமாளின் உற்சவ மூர்த்தியின் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.
நரசிம்மரை வழிபட்டால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்
Category: கடவுள்: பெருமாள்
நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் தினமும் மனதார வழிபாட்டால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.
சென்னையை சுற்றி அமைந்துள்ள நரசிம்மர் ஸ்வாமி கோவில்கள்
Category: கடவுள்: பெருமாள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பார்த்த சாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக் கிறார். இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப் பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடு மென்பது நம்பிக்கை. அத்திரி முனிவருக்கும் காட்சி தந்த கோலம். இவரைத் தெள்ளிய சிங்கர் என்பார்கள். செங்காடு யோக ஆஞ்சநேயர், யோக நரசிம்மர் : யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் இருவரையும் ஒரே இடத்தில் சோளிங்கர் மாதிரி மலை ஏறாமல் தரையிலேயே பார்க்க வேண்டு மானால் திருப்போரூர் அருகே உள்ள செங்காடுக்கு செல்ல வேண்டும். பொன்னிமேடு நரசிம்மர் : சென்னை மூலக்கடை ரெட்ஹில்ஸ் சாலையில் மூலக்கடை யிலிருந்து வெகு அருகில் உள்ளது இத்தலம். இங்கு நரசிம்மரின் மிக உயரமாக நிற்கும் சிலை உள்ளது. கூடவே லட்சுமி தேவியும் இருக்கிறார். இந்தியாவில் உள்ள உயரமான இரண்டு நிற்கும் சிலைகளில் இதுவும் ஒன்று. ஸ்ரீவேங்கட நரசிம்மர் கோவில், மேற்கு சைதாப்பேட்டை : 900 ஆண்டு களுக்கு முன் திருவல்லிக்கேணி தெள்ளிய நரசிம்ம சுவாமி இங்கே எழுந்தருளி அவர் முன்னிலை யில் இங்குள்ளவர் பிரதிஷ்டை செய்யப் பட்டதால் பிரசன்ன வேங்கட நரசிம்மர் என்ற பெயர் பெற்றார்.
திருப்பதி கோவில் வழிபாடுகள் பற்றி தெரியுமா?
Category: பெருமாள்
திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.
ஸ்ரீசடாரி ஏன் தலையில் வைத்து ஆசிர்வாதம் செய்கிறார்கள் தெரியுமா?
Category: பெருமாள்
பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.
அவசியம் பார்க்க வேண்டிய 15 பெருமாள் கோயில்கள்.......
Category: பெருமாள்
1. ஆசியாவிலேயே மிகப் பெரிய பள்ளி கொண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ள தலம் திருமயம். மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில் இது மட்டுமே.
கருடன் பற்றிய 12 அரிய தகவல்கள் பற்றி அறிந்து கொள்வோமா
Category: பெருமாள்
மகாவிஷ்ணுவின் இரண்டு திருவடிகளையும் கருடன் தன் கைகளால் தாங்கியபடி வரும் காட்சியே கருட சேவை. மகாவிஷ்ணு, கருடன் அருள் ஒரே நேரத்தில் கிடைப்பது சிறப்பு. திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வம் கூறுகிறது. கருடனின் மனைவிகள் ருத்ரா, சுகீர்த்தி. ஏகாதசி, திருவோண நாட்களில் கருடனை வழிபட்டால் நோய் தீரும். கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பட்சிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்று கருடனுக்கு பல பெயர்கள் உண்டு. வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடியில் உள்ள மூலைக் கருடன் சிறப்பு மிக்கவர். இவருக்கு சிதறுகாய் உடைத்தால் தீமை அகலும். தடை நீங்கும்.
நாராயணா என்றால் என்ன அர்த்தம் பற்றி தெரிந்து கொள்வோமா
Category: கடவுள்: பெருமாள்
விஷ்ணு, பெருமாள் என்று பல பெயர்களை கொண்டவர் தான் நாராயணன். இவர் பல அவதாரம் எடுத்துள்ளார். ஒவ்வொரு முறை அவதாரம் எடுக்கும் போதும் மக்களுக்கு ஒரு கருத்தை எடுத்துரைக்கின்றார் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். கோவிந்தன் என்று அழைக்கும் நாராயணனின் பெயரின் அர்த்தம் தான் என்ன? அவரின் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணம் உண்டு. அதுபோல இந்த பெயருக்கும் இரு காரணம் உள்ளது. அதை தெரிந்து கொள்வோம். நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு. பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாக தான். நாரம் என்ற சொல்லுக்கு பிரம்ம ஞானம் என்ற பொருளும் உண்டு. இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துகிறது.
பெருமாளுக்கு முதன்முதலில் முடிகாணிக்கை செலுத்தியது யார் தெரியுமா?
Category: பெருமாள்
திருப்பதி என்றதும் நினைவுக்கு வரும் பல விஷயங்களில், பிரதானமான ஒன்று பெருமாளுக்கு முடி காணிக்கை செலுத்துவது. பெரும்பாலான பெருமாள் பக்தர்களின் குடும்பங்களில் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தும் வழக்கம் உண்டு. குழந்தை பிறந்ததும் முதல் முறையாக மொட்டை, திருப்பதிக்குத்தான் என்று சொல்லி மொட்டை அடிக்கும் வழக்கமும் உண்டு.
விஷ்ணு கோவில்களில் உட்காரலாமா
Category: பெருமாள்
ஆன்மா லயப்படும் இடமே ஆலயம். கோவில்களில் அதுவும் பழமையான கோவில்களில் ரசவாதம் போல் சில அறிவியல்களும். அதற்கு புலப்படாத பல அதிசய., அமானுஷ்யங்களும் உண்டு. கோவிலில் உள்ள இறைவனின் தெய்வீக அதிர்வலைகளை முழுமையாக வாங்கி அதை நமக்கு கொடுப்பதே கோவில்களில் உள்ள கொடிமரம். அதனால் தான் கொடிமரத்தின் முன் நாம் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்காரம் செய்கிறோம். மேலும் நமஸ்காரம் செய்த பின். கொடிமரத்தின் முன் அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்யும் பொழுது. வீட்டினில் நாம் தியானம் செய்யும் பொழுது நமக்கு அடங்காத மனம் கோவில்களில். அதுவும் புராதன கோவில்களில் அடங்கும். நீங்கள் உங்களது நியாயமான ஆசையை ஆழ்மனதில் நினைத்தவாறே கோவில் கொடி மரத்தின் முன் அமர்ந்து தியானம் செய்தல் இருக்கிறதே. அதை விட சிறந்த பரிகாரம் வேறு எதுவும் இல்லை. செலவே இல்லா பரிகாரம். அவ்வாறு தொடர்ந்து நீங்கள் கோவில் கொடி மரத்தின் முன் அமர்ந்து உங்களது ஆழ் மனதில் உள்ள ஆசையை நினைத்தவாறே , அந்த கோவிலில் இருக்கும் மூல மூர்த்தியை பிராத்தித்தவாறே தியானம் செய்து பாருங்கள். நிச்சயம் உங்களின் நியாயமான ஆசை என்றாவது ஒருநாள் நிறைவேறும். இவ்வாறு கொடிமரத்தின் முன் அமர்ந்து தியானம் செய்தல். சிவன் கோவில்களிலும் செய்யலாம். விஷ்ணு கோவில்களிலும் செய்யலாம். சிவன் கோவில்களில் உட்கார்ந்து வர வேண்டும். ஆனால் விஷ்ணு கோவில்களில் உட்கார கூடாது என்று யார்? சொன்னது.
லட்சுமி தாயார் திருமாலிடம், பெருமாளே! பக்தனுக்குரிய தகுதி என்ன
Category: பெருமாள்
🌹 🌿 தேவி! இறைவனுக்காக தன்னையே அர்ப்பணிக்க தயாராக இருப்பது தான் பக்தனின் லட்சணம். இதை நானும், சிவபெருமானுமே செய்து காட்டியுள்ளோம், என்றார். 🌹 🌿 அப்படியா! அந்த சம்பவத்தை விளக்குங்களேன்,என லட்சுமி தாயார் கேட்க, அதை ஆர்வமாக எடுத்துரைத்தார் திருமால். 🌹 🌿 தேவி! சலந்தரன் என்னும் அசுரன் தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரனை ஓடஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் பிரம்மாவின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி விட்டான். அவரை ஒருமுறை பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். பிரம்மா, அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. 🌹 🌿 இதையடுத்து, அவன் என்னைக் குறிவைத்தான். என்னை அவனால் வெல்ல முடியவில்லை. அதேநேரம்,அவனைக் கொல்ல என்னாலும் முடியவில்லை. அந்தளவுக்கு அவனது தவபலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய சிவனால் தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்கேற்ப, அவனும் ஒருமுறை கைலாயம் சென்றான். அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார். 🌹 🌿 அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான். சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி,என்றார். 🌹 🌿 தாராளமாக! தேர்வைத் துவக்கலாம், என்றான். சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார். சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். 🌹 🌿 அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான், என்று முடித்தார் பெருமாள். லட்சுமி தொடர்ந்தாள். சக்தி வாய்ந்த அந்த சக்கரம் இப்போது யாரிடம் உள்ளது? என்றாள். 🌹 🌿 இதோ! என் கையில் சுழல்கிறதே! அது தான் அந்த சக்கரம். எதிரிகளின் தலையை இது கொய்து விடும், என்றார் பெருமையாக. ஆமாம்! அசுரனைக் கொன்ற சக்கரம் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்றாள் லட்சுமி. 🌹 🌿 அன்பே! இந்த சக்கரத்தைப் பெறுவதற்காக நான் ஒரு கண்ணையே இழந்து திரும்பப்பெற்றேன், என்றார் பெருமாள். அப்படியா! அதைப் பற்றி சொல்லுங்களேன், என்றாள் தாயார்.
பேச்சிழந்தவர்களுக்கு உத்தமராயப் பெருமாள் பற்றி தெரிந்து கொள்வோமா
Category: பெருமாள்
இவ்வுலகைப் படைத்து, வழிநடத்தும் இறைவன், அவரவரது பாவ – புண்ணியங்களுக்கு ஏற்ப உயிர்களை பல வகையாகப் படைக்கின்றார். அதேசமயம், அவ்வுயிர்களின் குறைகளைக் களையவும், பல்வேறு திருத் தலங்களில் எழுந்தருளி, இடர் நீக்குகின்றார். அப்படி இறையருள் நிறைந்த ஓர் அற்புத மலைத்தலம் தான் பெரிய அய்யம்பாளையம் ஊமைக்கு வாய் கொடுத்த ஸ்ரீஉத்தமராய பெருமாள் ஆலயம். ‘‘ஓங்கி உலகளந்த உத்தமன்’’ என்கிற ஆண்டாளின் வரிக்கேற்ப உத்தமனாய் வீற்றிருக்கும் திருமால், இங்கு பேச்சுக் குறைபாடுள்ளவர்களை பேச வைத்த காரணத்தால், பேச வாய்க் கொடுத்த உத்தமராய பெருமாள் என்றழைக்கப்படுகின்றார். முன்பொரு சமயம், அய்யம்பாளையத்திலுள்ள மலைமீது ஆடுகளை மேய்த்து வந்தான் ஒரு வாய் பேச முடியாத சிறுவன். ஆதியிலிருந்தே மலை உச்சியில் ‘‘உத்தமராயர்’’ என்கிற பெயருடன் பெருமாள் சிலை ஒன்று இருந்தது. ஆடுகளை மேய்க்க வந்த சிறுவன், புதிய இடம் நாடி மலை உச்சிக்குச் செல்கின்றான். அப்போது அங்கிருந்த பெருமாளின் கற்சிலையை காண்கிறான். தனது நிலைக்காக கண்ணீர் மல்க வேண்டுகின்றான். உடன் அவன் தன்னையும் அறியாமல், ‘‘உத்தமராயா’’ என்று அலறினான். அவனுக்கு பேசும் திறன் வந்துவிட்டது. ஆனந்தத்தில் துள்ளிக் குதித்த அச்சிறுவன், இச்செய்தியை ஊர் முழுதும் பரப்பினான். அது முதல் மக்களும் இந்த பெருமாளை வழிபடத் தொடங்கினர். அன்று முதல் உத்தமராயப் பெருமாள், ‘‘பேச வாய் கொடுத்த உத்தமராயப் பெருமாள்’’ என்று போற்றலானார். விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், அந்தணர்களுக்கு அளிக்கப்பட்ட ஊரே அய்யர்பாளையம். அதுவே நாளடைவில் மருவி, இன்று அய்யம்பாளையம் ஆகிவிட்டது.
மகாவிஷ்ணு துளசி மாலை விரும்பி அணிவதன் காரணம் என்ன தெரியுமா
Category: பெருமாள்
மகாவிஷ்ணுவிற்கு உகந்த பொருட்களில் முதலிடத்தில் இருப்பது துளசியாகும். பெருமாள் கோவில்களிலும் துளசியை தனியாக பூஜையும் செய்வார்கள். மேலும் பல்வேறு பிணிகளுக்கு துளசி மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். பிருந்தா, பிருந்தாவனி, விஸ்வபாவனி, புஷ்பசாரை, நந்தினி, கிருஷ்ணஜீவனி, பிருந்தாவனி, விஸ்வபூஜிதா. என்று பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி. துளசியின் கணவன் பெயர் சங்க சூடன். சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மஹாஞானியாகும் பாக்கியமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது. துளசியின் கதை: கிருஷ்ணாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமாக சுதர்மரும், லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள். இவர்களிருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக்கிறார்கள். ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபமிடுகிறார். இதனால் சுதாமர் சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அதேபோல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள். மாதவியின் மகள் தான் துளசி. சங்கசூடனும், துளசியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும், சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது.
விமோசனமே கிடைக்காத மூன்று பாவங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா
Category: பெருமாள்
அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. சிவமே என் வரமே விமோசனமே கிடைக்காத 3 பாவங்கள் என்ன தெரியுமா? இந்த பாவங்களை செய்தவர்களுக்கு எந்தப் பரிகாரம் செய்தாலும் அவருடைய கஷ்டம் தீரவே தீராது. மனிதனாக பிறந்து விட்டால் ஏதாவது ஒரு பாவம் நிச்சயமாக செய்து விடுகிறான். அதனால் அவன் படும் துன்பங்கள் ஒரு கட்டத்தில், அவன் செய்த பாவத்தை நினைத்து வேதனைப்பட வைக்கிறது. இது தான் கர்ம விதி பயன் என்பார்கள். கர்ம விதி பயன் கெட்டதை மட்டுமல்ல, நீங்கள் செய்த நல்லதையும் சேர்த்து தான் குறிக்கிறது. எதை விதைக்கிறோமோ! அதை தான் அறுக்கவும் முடியும். நல்லது செய்தால் நல்ல விதி பயனை பெறுவீர்கள். சரி, அப்படி என்றால் நாம் செய்த பாவங்களில் பெரிய பாவம் எது? எந்த பாவத்திற்கு விமோசனமே கிடையாது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். 1. பெற்றோர்களை கைவிடுதல்: ‘பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு’ என்று கூறுவார்கள். பிள்ளைகளுடைய மனம் பெற்றோர்களை ஏற்காவிட்டாலும், பெற்றோர்களுடைய மனம் பிள்ளைகளை சுற்றி தான் இருக்கும். இது இயற்கையாக நடக்கக் கூடிய ஒரு விஷயம். பெற்றோர்கள் என்பவர்கள் தெய்வத்திற்கு நிகராக பார்க்கப்பட வேண்டியவர்கள். இப்படியான பெற்றோர்களை எந்த ஒரு மனிதன் மதிக்காமல், உதாசீனப் படுத்துகிறானோ? அவன் விமோசனமே இல்லாத பாவத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலை வரும். பிள்ளைகள் பெற்றோர்களுக்கு செய்யும் பாவங்களுக்கு எந்த பரிகாரம் செய்தாலும் விமோசனம் என்பது கிடையாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. உங்களை இந்த பூமிக்குக் கொண்டு வந்தவர்கள் உங்கள் பெற்றோர்கள் தான். அதை மறந்து சுயநலமாக செயல்பட்டால் அதற்கான தண்டனையும் உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நீங்கள் 1000 காரணங்கள் கூறினாலும் அதை இறைவன் ஏற்பதில்லை. எனவே தண்டனையை ஏற்க ஆயத்தமாகுங்கள்!
பெருமாள் ஒரு இந்து தெய்வம், அவர் இந்து மதத்தின் முக்கிய கடவுள்களில் ஒருவரான விஷ்ணு என்றும் அழைக்கப்படுகிறார்.
: கடவுள்: பெருமாள் - பெருமாள் சிறப்பம்சங்கள் [ பெருமாள் ] | : God: Perumal - Highlights of Perumal in Tamil [ Perumal ]
கடவுள்: பெருமாள்
பெருமாள் ஒரு இந்து தெய்வம், அவர் இந்து மதத்தின் முக்கிய கடவுள்களில்
ஒருவரான விஷ்ணு என்றும் அழைக்கப்படுகிறார். அவர் பெரும்பாலும் நான்கு கரங்களுடன், வட்டு, சங்கு, தாமரை மற்றும் தாமரை மலரை ஏந்தியபடி
அழகான மற்றும் அரச உருவமாக சித்தரிக்கப்படுகிறார்.
பெருமாள் தனது பக்தர்களைக் காத்து, அவர்களின் கஷ்டங்களைச் சமாளிக்க உதவும்
அன்பான மற்றும் இரக்கமுள்ள கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் பிரபஞ்சத்தின் பாதுகாவலராகவும், பிரபஞ்ச ஒழுங்கைப் பேணுபவர் என்றும்
நம்பப்படுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள பல கோவில்களில்
பெருமாள் வழிபடப்படுகிறார், குறிப்பாக
தென்னிந்தியாவில் அவர் மிகவும் போற்றப்படுகிறார். தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கத்தில் உள்ள
ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருமலா வெங்கடேஸ்வரா
கோயில் ஆகியவை மிகவும் பிரபலமான பெருமாள் கோயில்களில் சில.
முன்னுரை
A. பெருமாள் வரையறை
B. இந்து மதத்தில் பெருமாளின் முக்கியத்துவம்
II. பெருமாளின் சிறப்புகள்
A. பெருமாளின் தோற்றம்
B. இந்து மதத்தில் பெருமாளின் பங்கு
C. பெருமாளுடன் தொடர்புடைய குணங்கள்
III. பெருமாள் வழிபாடு
A. பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட
கோயில்கள்
B. பெருமாள் வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குகள்
மற்றும் பழக்கவழக்கங்கள்
C. பெருமாளின் நினைவாக கொண்டாடப்படும்
திருவிழாக்கள்
IV. பெருமாளின் முக்கியத்துவம்
A. பெருமாளுடன் தொடர்புடைய
நம்பிக்கைகள் மற்றும் போதனைகள்
B. இந்து புராணங்களில் பெருமாளின் முக்கியத்துவம்
C. பக்தர்களின் வாழ்வில்
பெருமாளின் பங்கு
D. பெருமாளின் பண்புகள் மற்றும் முக்கியத்துவத்தின்
சுருக்கம்
E. இந்து மதத்தில் பெருமாளின் இடம் பற்றிய
இறுதி எண்ணங்கள்.
இந்து மதத்தில், குறிப்பாக தென்னிந்தியாவில் பெருமாள்
ஒரு குறிப்பிடத்தக்க தெய்வம். விஷ்ணு என்றும் அழைக்கப்படும் பெருமாள் பிரபஞ்சத்தை காப்பவராகவும், பிரபஞ்ச ஒழுங்கை பராமரிப்பவராகவும்
போற்றப்படுகிறார். அவர் தனது பக்தர்களிடம் இரக்கம், பாதுகாப்பு மற்றும் அன்பு போன்ற குணங்களுக்காக மதிக்கப்படுகிறார்.
பெருமாள் பெரும்பாலும் நான்கு கரங்களுடன், வட்டு, சங்கு, தாமரை மற்றும் தாமரை மலரை ஏந்தியவாறு
அழகான மற்றும் அரச உருவமாக சித்தரிக்கப்படுகிறார். அவரது உடல் தோற்றம் அவரது வலிமை, சக்தி மற்றும் கருணை போன்ற தெய்வீக
குணங்களை குறிக்கிறது.
இந்து மதத்தில் பெருமாளின் முக்கிய
பாத்திரங்களில் ஒன்று பிரபஞ்சத்தின் பாதுகாவலராகும். இந்து புராணங்களின்படி, பெருமாள் உலகத்தை தீமையிலிருந்து பாதுகாக்கவும், தர்மத்தை (நீதியை) மீட்டெடுக்கவும்
பல்வேறு வடிவங்கள் அல்லது அவதாரங்களை எடுக்கிறார். பெருமாளின் மிகவும் பிரபலமான அவதாரங்களில்
ராமர், கிருஷ்ணர் மற்றும் நரசிம்மர் ஆகியோர்
அடங்குவர்.
பெருமாள் பிரபஞ்சத்தைப் பாதுகாப்பவர்
என்றும் நம்பப்படுகிறது. இந்து மதத்தில், பிரபஞ்சம் உருவாக்கம், பாதுகாத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றின் சுழற்சிகளைக் கடந்து
செல்கிறது, மேலும் பாதுகாக்கும் கட்டத்தில் ஒழுங்கையும்
சமநிலையையும் பராமரிக்க பெருமாள் பொறுப்பு.
பெருமாளின் கருணை மற்றும் அவரது பக்தர்களிடம்
பாதுகாப்பு ஆகியவை இந்து மதத்தின் முக்கிய கருப்பொருள்களாகும். பெருமாள் தம் பக்தர்களின்
வேண்டுதல்களைக் கேட்டு அவர்களைத் துன்பங்களில் இருந்து காப்பார் என்பது நம்பிக்கை.
உடல் நலம், செல்வம், வெற்றி எனப் பல்வேறு காரணங்களுக்காகப்
பெருமாளின் அருளைப் பெற பக்தர்கள் அடிக்கடி வழிபடுகின்றனர்.
இந்தியா முழுவதும், குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள பல
கோவில்களில் பெருமாள் வழிபடப்படுகிறார். இந்தக் கோயில்கள் பெரும்பாலும் பெரியதாகவும், விரிவானதாகவும், சிக்கலான சிற்ப வேலைப்பாடுகள் மற்றும்
வண்ணமயமான அலங்காரங்களைக் கொண்டுள்ளது.
பெருமாள் வழிபாட்டின் ஒரு பகுதியாக
பக்தர்கள் பல்வேறு சடங்குகள் மற்றும் சடங்குகளை செய்கின்றனர். தெய்வத்திற்கு பூக்கள், பழங்கள் மற்றும் பிற பிரசாதங்களை வழங்குதல், மந்திரங்கள் மற்றும் துதிகளை ஓதுதல்
மற்றும் ஆரத்தி (ஒளியுடன் கூடிய சடங்கு பிரார்த்தனை) ஆகியவை சில பொதுவான நடைமுறைகளில்
அடங்கும். பெருமாள் அசுரர்களை வென்றதைக் கொண்டாடும் வைகுண்ட ஏகாதசி போன்ற ஆண்டு முழுவதும்
பல்வேறு திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
இந்து மதத்தில் பெருமாளின் முக்கியத்துவம்
அவரது உடல் தோற்றம் மற்றும் புராணங்களில் உள்ள பாத்திரத்திற்கு அப்பாற்பட்டது. பெருமாளுடன்
தொடர்புடைய நம்பிக்கைகள் மற்றும் போதனைகள் அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம், பாதுகாப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின்
முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. பெருமாளின் குணங்களும் செயல்களும் பக்தர்களுக்கு
நல்லொழுக்கம் மற்றும் நேர்மையான வாழ்க்கையை நடத்துவதற்கு உத்வேகம் தருகின்றன.
பெருமாள் இந்து மதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க
தெய்வம், அவரது இரக்கம், பாதுகாப்பு மற்றும் பிரபஞ்சத்தைப் பாதுகாப்பதில்
உள்ள பங்கிற்காக மதிக்கப்படுகிறார். அவரது உடல் தோற்றம், புராணங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள்
அனைத்தும் இந்து மதத்தில் அவரது முக்கியத்துவத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
இருப்பினும், பக்தர்களின் வாழ்வில் பெருமாளின் முக்கியத்துவத்தை
உண்மையாக எடுத்துக்காட்டுவது அவரது போதனைகள் மற்றும் கருணை மற்றும் அன்பின் மீதான தூண்டுதலாகும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
: கடவுள்: பெருமாள் - பெருமாள் சிறப்பம்சங்கள் [ பெருமாள் ] | : God: Perumal - Highlights of Perumal in Tamil [ Perumal ]