பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர
Category: அம்மன்: வரலாறு
சென்னை அரக்கோணம் ரயில் பாதையில் செவ்வாய்ப் பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள தொழுவூரில் அருளாட்சி புரிந்து வருகிறாள் ஸ்ரீ மாரியம்மன்
பூசணிக்கொடி மாரியம்மன்!
Category: அம்மன்: வரலாறு
புதுச்சேரி மாநிலம், முத்துப்பிள்ளைப் பாளையம் ராதா நகரில் அருள்புரியும் நாகமுத்து மாரியம்மன், பூசணிக்கொடி மாரியம்மன் என்று பக்தர்களால் செல்லமாக அழைக்கப்படும் மாரியம்மன் கோயில்கள் இருக்கின்றன.
காளி வேடம்!
Category: அம்மன்: வரலாறு
திருச்செந்தூரை அடுத்துள்ளது குலசேகரன் பட்டணம். முத்தாரம்மன் அருளாட்சி புரியும் இத்தலத்தில் நவராத்திரி விழா மிகவும்' பிரசித்தம்!
கோயில் ஒன்று; காளி இரண்டு!
Category: அம்மன்: வரலாறு
சிதம்பரத்தில் தில்லைக்காளி ஆலயத்தில் மூன்று முகங்களும், நான்கு கரங்களும் கொண்ட பிரம்ம சாமுண்டியாகவும், தில்லைக் காளியாகவும் இரண்டு அம்பிகைகளை நாம் தரிசிக்கலாம்!
நெற்றிக்கண்ணுடன் அம்பிகை!
Category: அம்மன்: வரலாறு
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், தொழுதூரில் உள்ளது மதுராந்தக சோளீசுவரர் ஆலயம். மூலவர் பெரிய திருமேனியுடன் கிழக்கு நோக்கி அருள்கிறார்.
மதுரை மீனாட்சியின் கையில் கிளி ஏன்?
Category: அம்மன்: வரலாறு
ஆய கலைகளின் முழுவடிவாகிய கிளியை ஏந்தியபடி மதுரை மீனாட்சி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவது சிறப்பு. ஏன் இப்படி கிளியுடன் மீனாட்சி காட்சி தர வேண்டும்?
தங்கத் தாமரை!
Category: அம்மன்: வரலாறு
நீங்கள் எந்தக் குளத்திற்குச் சென்றாலும் தங்கத் தாமரையைப் பார்க்க முடியாது. ஆனால் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால் நிச்சயம் தங்கத் தாமரையைக் காணலாம்!
கருவறை திறக்காத கோயில்!
Category: அம்மன்: வரலாறு
தேனிமாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டியில் புகழ்மிக்க மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
எலுமிச்சை மாலை!
Category: அம்மன்: வரலாறு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ளது வீரமாகாளி அம்மன் கோவில்.
தெய்வீகப் போட்டி!
Category: அம்மன்: வரலாறு
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோவில்.
தாலியை உண்டியலில் போட்டு...
Category: அம்மன்: வரலாறு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் தேக்கம்பட்டி செல்லும் சாலையில் ஸ்ரீ வன பத்ரகாளியம்மனின் திருக்கோயில் அமைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம்: வெட்டுடையார் காளி கோவில்!
Category: அம்மன்: வரலாறு
சிவகங்கை மாவட்டத்தில் மிகப் பிரசித்திப் பெற்ற ஆலயம். வெட்டுடையார் காளி கோயில்! இந்தக் காளீஸ்வரி மிகுந்த சக்தி படைத்தவள்.
பஞ்சமுக காளி!
Category: அம்மன்: வரலாறு
ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலிருந்து பவானி செல்லும் சாலையில் ஐந்து கி.மீ தொலைவில் இருக்கிறது வாவிக்கடை. இங்கே தான் பஞ்சமுக காளி கோயில் இருக்கிறது.
பவானி என்றாலே...
Category: அம்மன்: வரலாறு
கம்சனை அழிக்க கிருஷ்ணர் பிறக்கப் போகிறார் என்பதை கம்சனுக்கு உணர்த்திய மகா மாயையே, பெரிய பாளையத்தில் பவானியாய் அருள்கிறாள்.
சக்தி தரும் கருமாரி அம்மன்!
Category: அம்மன்: வரலாறு
சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து, காந்தி நிலை நோக்கி உள்ள செந்தூர் நகரில், பன்னீர் செல்வம் தெருவில் அமைந்திருக்கிறது சக்தி தரும் கருமாரி அம்மன் ஆலயம்.
அம்பாள் அனுக்கிரகம் பெற...
Category: அம்மன்: வரலாறு
அம்பாளை உபாசிப்பதே ஜன்மா எடுத்ததன் பெரிய பலன். அன்புமயமான அம்பிகையைத் தியானிப்பதை விடப் பேரானந்தம் எதுவும் இல்லை.
'ஸ்ரீ' என்கிற மஹாலட்சுமி துதி!
Category: அம்மன்: வரலாறு
இந்தத் துதி சகலவிதமான நற்பேறுகளையும், பாக்யங்களையும், எல்லாவிதமான இன்பங்களையும் தரவல்லது
வித்தியாசமான படையல்!
Category: அம்மன்: வரலாறு
அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவது தெரிந்த விஷயம். ஆனால், 17ஆம் நூற்றாண்டில் நேபாளத்தில் துர்க்கைக்கு நாக்கையறுத்துப் படையல் செய்யும் பழக்கம் இருந்தது.
வித்தியாச துர்க்கை!
Category: அம்மன்: வரலாறு
வழக்கமாக துர்க்கையம்மன், சிவன் சன்னிதி சுற்றுச்சுவரில் வடக்கு திசை நோக்கித்தான் இருப்பாள்.
நாமக்கல் மாவட்டம்: இலங்கை அம்மன் கோயில்!
Category: அம்மன்: வரலாறு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது கூனவேலம் பட்டி புதூர். இந்தப் பகுதியில் நெசவாளர்களும், விவசாயிகளும் அதிகம் வசிக்கிறார்கள்.
உலக்கை சத்தம் பிடிக்காத அம்மன்!
Category: அம்மன்: வரலாறு
ராமநாதபுரத்திலிருந்து தெற்கே திருப்புல்லாணி செல்லும் வழியில் தாதனேந்தல் கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது புல்லாணி அம்மன் கோவில்!.
ஆலங்காட்டுக் காளி கோயில்!
Category: அம்மன்: வரலாறு
இறைவனோடு தர்க்கம் செய்ததால் இவ்வன்னைக்குக் 'தர்க்கமாதா' என்று பெயரானது.
குறை தீர்க்கும் படவேட்டம்மன்!
Category: அம்மன்: வரலாறு
சென்னை -ஆலந்தூரில், பரங்கி மலை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது படவேட்டம்மன் திருக்கோயில்.
கூத்தனூர்: சரஸ்வதி கோயில்!
Category: அம்மன்: வரலாறு
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்தில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது.
அதிசயம் நிகழ்த்தும் ரேணுகாம்பாள் கோயில்!
Category: அம்மன்: வரலாறு
சென்னையிலிருந்து 150 கி.மீட்டர், திருவண்ணாமலையிலிருந்து 57 கி.மீட்டர், வேலூரிலிருந்து 38 கி.மீட்டர், ஆரணியிலிருந்து 23 கி.மீட்டர் தொலைவிலுள்ளது அன்னை ஸ்ரீ ரேணுகாம்பாள் அருட்கோயில்!.
சென்னை ரத்ன மங்கலம்: அரைக்காசு அம்மன் ஆலயம்!
Category: அம்மன்: வரலாறு
வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் கேளம்பாக்கம் செல்லும் வழியில், தாகூர் இன்ஜினியரிங் கல்லூரியின் பக்கத்தில் செல்லும் பாதையில் அரை கி.மீ. தூரத்தில் ரத்ன மங்கலத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கிறது.
ஆனந்தம் தரும் அம்மன் தரிசனம்
Category: அம்மன்: வரலாறு
அம்மனை வேண்டி பக்தர்கள் விரதம் இருப்பதுதான் நடைமுறை.
மண்டைக்காடு: பகவதி அம்மன் கோயில்!
Category: அம்மன்: வரலாறு
மண்டைக்காடு, தமிழ்நாட்டில் இருந்தாலும் கேரளப் பெண்களே அதிக அளவில் இருமுடி தாங்கி வருவது சிறப்பு மிக்கது!
திருமாந்துறை அரசி!
Category: அம்மன்: வரலாறு
கும்பகோணம்-மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் திருமாந்துறை திருத்தலம் அமைந்துள்ளது.
ஏன் தாமரை மலரில் மகாலட்சுமி காட்சி தருகிறார்?
Category: அம்மன்: வரலாறு
ஸ்ரீ மகாலட்சுமிக்கும் தாமரைக்கும் நெருக்கமான பிணைப்பு உண்டு – ஏன்? - இதோ விளக்கம்
பத்து தேவியர்
Category: அம்மன்: வரலாறு
அம்பாளின் பத்து விரல்களில் இருந்து அவதாரம் செய்த பத்து தேவியரும் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் பராக்ரமத்தை குறிக்கும் பத்து அம்சங்களாகும்.
கண்மலர் சாத்தினால் கண்பார்வை அருளும் சமயபுரம் மாரி, திருச்சி
Category: அம்மன்: வரலாறு
திருச்சி மாவட்டத்தில் சமயபுரத்தில் வீற்றிருக்கிறாள் மாரியம்மன். ஆதியில் இந்தப் பகுதி கண்ணனூர் அரண்மனை மேடு என்றழைக்கப்பட்டது. முதலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் தான் அம்மனின் திருவுரு இருந்தது. அது உக்கிரம் மிகுந்ததாக இருந்ததால் அங்கிருந்து சமயபுரத்திற்கு இடம் பெயர்ந்தது. அச்சிலையை எடுத்து வந்தபோது இனாம் சமயபுரம் என்ற இடத்தில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார்கள். சமயபுர கோயில் திருவிழாவின் எட்டாம் நாள் வைபவத்தில் இன்றும் அம்மன் இனாம் சமயபுரம் சென்று ஓய்வெடுக்கிறாள்.
மீனாட்சியம்மன் சிறப்பு
Category: அம்மன்: வரலாறு
"சக்தியில்லையேல் சிவமில்லை", என சிவனே உணர்ந்திருந்த போதும்,சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும்.ஆனால்,மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும்.
பணவரவு உண்டாக்கும் ஸ்ரீ பாலா திரிபுர தேவி மந்திரம்
Category: அம்மன்: வரலாறு
ஓம் ஐம் க்லீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ பாலா மாத்ரே சர்வ தனம் மம வசம் ஆகர்ஷனாய ஆகர்ஷனாய குரு குரு ஸ்வாஹா
காசி அன்னபூரணி அம்பாள்
Category: அம்மன்: வரலாறு
காசி அன்னபூரணி என்ன அழகு! அம்பாள் தங்க நிற ஆடையில் தங்க கிரீடத்தில் ஜொலிக்கிறாள். அப்படியே மெய்மறந்து போகும்.
நாகப்பட்டினம் காயாரோகணர் கோவில் இரட்டை நோக்கு நந்தி
Category: அம்மன்: வரலாறு
இத்தல அம்பாள் நீலாயதாட்சியின் கண்கள் கருநீலத்தில் அழகானது. நான்கு திருக்கரங்களுடன் நின்றத் திருக்கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறார். 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமளா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோரின் கீர்த்தனைகளால் அலங்கரிக்கப்பட்டவள் இந்த அன்னை. இங்குள்ள நீலாயதாட்சி அம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மனைப் போலவே கன்னியாக காட்சித் தருகிறாள். இங்கு ஆடிப்பூர விழா சிறப்பானதாகும். ஆடிப்பூர விழாவில் கண்ணாடித் தேரில் அம்மன் வீதி உலா வருவாள். அம்பாள் சன்னிதி, தேர் போல அமைக்கப்பட்டுள்ளது. அம்பாள் இங்கு கன்னியாக இருப்பதால், ஈசன் நந்தியை அவளுக்குப் பாதுகாப்பாக அனுப்பினார். ஆனால் நந்தி, ‘தான் அனுதினமும் ஈசனையும் தரிசிக்க வேண்டும்’ எனக் கேட்டார்.
தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய வழிபட வேண்டிய சில குறிப்பிட்ட தெய்வங்கள்
Category: அம்மன்: வரலாறு
வியாபாரம் என்பது செல்வ விருத்தி என்னும் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதால் தன விருத்திக்கு சக்தி வழிபாடே அதாவது பெண் தேவதைகள்/ தெய்வங்களின் வழிபாடே உகந்ததாகும். அதிலும் குறிப்பாக துணி வியாபாரம் செய்பவர்களும், தறி உரிமையாளர்களும் ஐஸ்வர்ய லட்சுமியை உபாசனை செய்வது நலம். துணி நெய்யும் நூல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களும், கைத்தறி ஜவுளி தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களும் பேச்சியம்மன் என்னும் பத்தினி தெய்வத்தை வழிபடுதல் நலம். பேச்சியம்மன் என்பது வெறும் காவல் தெய்வம், எல்லை தெய்வம் என்னும் எண்ணத்தை விடுத்து பராசக்தியின் வாக்தத்துவமாக விளங்கும் தெய்வமே பேச்சியம்மன் என்பதை உணர்ந்தால்தான் வழிபாட்டின் பலன் பூர்ணத்துவம் பெறும்.
செல்வங்களை அள்ளித்தரும் லட்சுமி வழிபாடு
Category: அம்மன்: வரலாறு
லட்சுமி பொன் நிறத்தை உடையவள். தங்கம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள். சந்திரன் போன்று இருப்பவள். தாமரை மலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள். லட்சுமி தேவி கேட்டதை அருளும் பெண் தெய்வம். லட்சுமியை அனுதினமும் வழிபட்டால் பல வகையான நன்மைகள் கிடைக்கும்.பல வகையான நன்மைகள் :உடல் அழகு பெற்று ஒளிமயமாகும். பகை அழிந்து அமைதி உண்டாகும்.கல்வி ஞானம் பெருகும்.பலவிதமான ஐஸ்வரியங்கள் செழிக்கும். நிலைத்த செல்வம் அமையும்.வறுமை நிலை மாறும். மகான்களின் ஆசி கிடைக்கும்.தானிய விருத்தி ஏற்படும்.வாக்கு சாதுரியம் உண்டாகும். வம்ச விருத்தி ஏற்படும். உயர் பதவி கிடைக்கும். வாகன வசதிகள் அமையும்.
பதி பக்தியை சொல்லும் காசி அன்னபூரணியின் கதை பற்றி தெரிந்து கொள்வோமா
Category: அம்மன்: வரலாறு
முன்னொரு காலத்தில் காசியில் ஒரு தீவிர சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.அவருடைய மனைவியும் மஹா பதிவ்ரதை. கணவர் சொல் மீறாதவர். அந்த பக்தர் தினமும் கங்கையில் ஸ்நானம் செய்து விட்டு சிவத்யானம் செய்வார். அதே போல் ஒரு நாள் த்யானத்தில் அமர்ந்திருந்த போது பல மணிநேரம் நிஷ்ட்டை கலையாமல் சமாதி நிலையை அடைந்தார். அவர் மனைவி அவர் நேரத்தில் வராததால் வாசலுக்கும் உள்ளுக்குமாக நடந்துகொண்டு கவலையுடன் இருந்தாள். இது இப்படி இருக்க கயிலாயத்தில் பரமசிவன் பார்வதி தேவியிடம் "தேவி பார்த்தாயா என் பக்தன் என்னை குறித்து நிஷ்டைகலையாமல் த்யானம் செய்வதை" என்றார். அதற்கு பார்வதி தேவி "போதுமே உங்கள் பகத்தனின் பெருமை. அங்கே வீட்டில் அவன் மனைவி மஹா பதிவ்ரதை இவனை காணோமே எனறு தவியாய் தவித்து கொண்டிருக்கிறாள் அவளுடைய கவலைக்கு என்ன பதில்" என்றாள். இதை கேட்டவுடன் பரமசிவன் கயிலாத்திருந்து மறைந்து அந்த பக்தன் வீட்டுக்கு அவன் போலவே உருவமெடுத்து சென்றார். பக்தனின் மனைவி சிவபெருமானை தன் கணவன் என்று நினைத்து கால் அலம்ப தண்ணீர் கொடுத்து இலை போட்டு சாப்பிட அழைத்தார்.
தஞ்சை பெரியகோவிலில் வாராகி அம்மனை ராஜ ராஜ சோழன் வணங்கியது ஏன் தெரியுமா?
Category: அம்மன்: வரலாறு
தஞ்சை பெரிய கோவிலில் வாராகி அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜ ராஜசோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். மாமன்னர் ராஜாராஜசோழன் இந்த அன்னையின் அருள் பெற்றுதான் எந்த செயலையும் தொடங்குவார்.
மூகாம்பிகை அம்மன் உருவானது எப்படி பற்றி தெரிந்து கொள்வோமா
Category: அம்மன்: வரலாறு
கேரளாவில் காலடியில் பிறந்த ஆதிசங்கரருக்கு எத்தனையோ பகவதி கோவில்கள் இருந்தும் கலைவாணிக்கு ஒரு கோவில் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அவர் மைசூர் சமுண்டீஸ்வரி தாயை நோக்கி தவம் இருந்தார். மகனின் தெய்வீக தாகத்தைத் தீர்க்க அன்னை ஆதிசங்கரருக்கு காட்சியளித்தாள். தேவியின் திவ்ய ரூபம் கண்டு ஆதிசங்கரருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனந்தக் கூத்தாடினார். தேவியோ, ''நீ எங்கு என்னை குடி வைக்க விரும்புகிறாயோ அங்கு கொண்டுபோ. ஆனால் ஒரு நிபந்தனை. நான் உன்னைப் பின் தொடர்வேன். நீ என்னை திரும்பி பார்க்கக் கூடாது. அப்படி திரும்பிப் பார்த்தால் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன்'' என்றாள். ஆதிசங்கரர் தேவியின் நிபந்தனையை ஒத்துக் கொண்டு தேவியின் கொலுசு ஒலியைக் கேட்டபடி நிம்மதியாக நடந்து சென்றார். எப்பொழுதுமே தேவி சித்தாடல் புரிவது தானே இயற்கை. போகும் வழியில் கோல மகரிஷி வழிபட்டு வந்த சுயம்பு லிங்கத்தைப் பார்த்து நின்றுவிட்டாள். கொலுசு ஒலி கேட்டுக் கொண்டே முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஆதிசங்கரர் கொலுசு ஒலி நின்றுவிட்டதே எனத் திரும்பிப் பார்க்கிறார். அன்னை அருள்வாக்குபடி நீ திரும்பி பார்த்தால் நான் அங்கேயே நின்றுவிடுவேன் என்ற வரிகள் நினைவுக்கு வந்தன. எனவே அங்கு ஜோதிர் லிங்கத்தில் தேவி அந்த இடத்திலேயே ஐக்கியமாகிவிட்டாள். அவள் குடியேறிய இடம்தான் கொல்லூர் என்ற சக்தியின் புண்ணியத்தலம் ஆகும். அடர்ந்த காடு, மலை, ஆறுகள் அமைந்த இடத்தில் சுயம்புவான ஜோதிர்லிங்கம் மட்டும் தான் இருந்தது. அதிலே அரூபமான முப்பெரும் தேவியரும் உடனுறைகிறார்கள். ஆதிசங்கரர் வந்தபோது கோல மகரிஷி பூஜித்து வந்த தங்க ரேகை மின்னும் சுயம்புலிங்கம் மட்டுமே இருந்தது. அம்பாள் சிலை ஏதும் இல்லை. எனினும் அரூபரூபமாய் அந்த லிங்கத்தில் இருப்பதாக எத்தனையோ காலமாய் நம்பப்பட்டு வந்த ஸ்ரீமூகாம்பிகை தேவி என்ற அம்பாளின் முகம் அப்போது எப்படி இருக்கும் என்று யாரும் கற்பனை செய்து கூட அறியமுடியவில்லை. மூகாம்பிகை தேவியின் புகழினையும், பெருமைகளையும், மகிமைகளையும் கூறும் பல நிகழ்ச்சிகளையும், கதைகளையும் பக்தியுடன் பேசிவந்த ஊர் மக்கள் மன்தில் இது ஒரு பெருங்குறையாக இருந்தது. இந்நிலையில் ஆதிசங்கரர் கொல்லூர் வந்திருப்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. சக்தியை வழிபடும் சாக்தமார்க்கத்தை வழிபட அருளிய மகான் ஆதிசங்கரர் அரூபரூபமாய் உள்ள ஸ்ரீமூகாம்பிகையின் திரு உருவத்தைக் காட்டுவார் என ஊர்மக்கள் பரவசமடைந்தார். கொல்லூரில் ஆதிசங்கரர் தங்கியிருந்து தினமும் தியானம் செய்தது மூலவரின் சன்னதிக்கு நேர் பின்புறம் அமைந்துள்ள ஒரு மேடை ஆகும். ஏகாந்த வெளியில் ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது. ஆதிசங்கரர் தரிசித்த அம்பிகையின் உருவத்தை மனதில் கண்டார். அவ்வுருவம் சங்கு சக்கரம் அபயக்கரம் ஏந்திய சாந்த சொரூபியாக பத்மாசனத்தில் அமர்ந்து அருட்கடாச்சம் தந்ததைக் கண்டார். அன்னை தானே இத்தனை காலமாக இந்த சொர்ணரேகை மின்னும் சுயம்பு லிங்கத்தில் அரூபரூபமாய் முப்பெருந்தேவி மூகாம்பிகா என அடையாளம் காட்டிக் கொண்டாள். ஆதிசங்கரர் மனம் மகிழ்ந்து அம்பாளை துதித்தார். அக்காட்சி அவர் இதயத்தில் தத்ரூபமாக பதிந்தது. உடனே இச்செய்தியை உரியவர்களிடம் கூறினார். விக்கிரகக் கலையில் விஸ்வகர்மா பரம்பரையில் கைதேர்ந்த ஸ்தபதி ஒருவரை அழைத்து விக்கிரகம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.
சுயம்புவாக உருவான 'வாராகி அம்மன்' எங்கிருக்கிறார் தெரியுமா
Category: அம்மன்: வரலாறு
உலகின் பழமையான சிவன் கோவிலான உத்திரகோசமங்கை கோவில் அருகிலே அமைந்துள்ள ஆதி சுயம்பு வாராகி அம்மனை பற்றி தான் இந்த பதிவில் காண உள்ளோம். இந்தியாவிலே வாராகி அம்மனுக்கென்று தனி கோவில்கள் சில இடங்களில் மட்டுமே உள்ளன. காசியிலும், தஞ்சாவூரிலும், உத்திரகோசமங்கையிலும் அமைந்துள்ளன. அதிலும் இந்த உத்திரகோசமங்கை வாராகியே மிகவும் பழமையானது என்று கூறுகிறார்கள். இவரையே ஆதிவாராகியம்மன் என்றழைக்கப்படுகிறார். மாணிக்கவாசகர் தன் திருவெண்பாவையில் இந்த வாராகி அம்மனை பற்றி பதிவு செய்துள்ளார். இங்கிருக்கும் வாராகியை ‘மங்கல மஹாகாளியம்மன்’ என்றும் ஆதிவாராகி என்றும் அழைக்கிறார்கள். பன்றி முகத்துடன் சிங்க வாகனத்தில் காட்சித்தருபவர் வாராகி அம்மன். இவர் சப்தகன்னிகளுள் ஒருவர். இவர் திருமாலின் வராக அம்சமாக பார்க்கப்படும் அம்மன் ஆவார். இந்த கோவில் வளாகத்தில் நிறைய அம்மிக்கல் இருக்கிறது. அங்கிருக்கும் குளத்தில் நீர் எடுத்து வந்து அம்மிக்கல்லை சுத்தம் செய்துவிட்டு மஞ்சள் அரைத்து அம்மனுக்கு பூசிவிட்டு அவரிடம் இருக்கும் மஞ்சளை வாங்கி சாப்பிட்டு தங்கள் வேண்டுதலை வாராகி அம்மனிடம் வைக்கிறார்கள். நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் வாராகி அதை நிறைவேற்றுகிறார். இங்கிருக்கும் குளத்திற்கு மருத்துவ குணம் உள்ளதாக சொல்லப்படுகிறது. ராமநாதபுரம் வறட்சியாக இருந்தாலும் இந்த குளம் மட்டும் வற்றாமல் காணப்படுகிறது. எல்லா நட்களிலும் வாராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அம்மன் கருப்பு ஆடை உடுத்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். ஸ்ரீ வாராகி அம்மன் ஆதிபராசக்தியின் படைத்தலைவி. வாராகி அம்மன் துர்கை அல்லது ராஜராஜேஸ்வரியிடமிருந்து தோன்றியவர். இவர் போர்க்கடவுள் என்பதால், வராகி வழிபாடு வெற்றியை தருவதாக ஐதீகம். தோல்விகள்,அவமானம் போன்றவற்றிலிருந்து வராகி வழிப்பாடு காப்பாற்றும் என்பது ஐதீகம். சிலர் தாந்திரீக முறைப்படி வழிப்படுவதால் இவரை இரவு நேரங்களில் தான் வழிப்படுவர் என்கின்றனர். பல வாராகி கோவில்களில் அமாவாசை, பௌர்ணமியன்று தான் பூஜைகள் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. கண் திருஷ்டி, பயம் போன்றவற்றை போக்கக்கூடியவர். ராஜராஜ சோழன் வாராகி அம்மனை வழிப்பட்ட பிறகே அனைத்து காரியமும் செய்வார். குறிப்பாக போருக்கு செல்லும் முன் வாராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்த பிறகே போருக்கு செல்வார்.
தன வசியம், தொழில்விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்க வராஹி அம்மன் வழிபாடு
Category: அம்மன்: வரலாறு
வராஹி அம்மன் என்பது மஹாகாளியின் அம்சமாகும். வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்றுலோகத்திலும் எதிரிகள் இல்லை. தன்பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூலமந்திரத்தை 1008 உரு வீதம் 26நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹாவராஹி அருள்கிட்டும். மந்திரத்துடன் கீழ்க்கண்ட பூஜைமுறைகளையும் செய்ய வேண்டும். மூல மந்திரம் 'ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம்வர்ஷய ஸ்வாகா'
கவலைகள் போக்கும் காந்திமதி அம்பாள் – திருநெல்வேலி பற்றி தெரிந்து கொள்வோமா
Category: அம்மன்: வரலாறு
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் உள்ளன. இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் நெல்லையப்பர், சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள அம்பாள் காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். காந்திமதியம்மனுக்கு வெள்ளிக் கிழமைகளில் “தங்கப் பாவாடை” அலங்காரம் செய்யப்படுகிறது. சக்தி பீடங்களுள் இத்தலம் காந்தி பீடமாகத் திகழ்கிறது. நெல்லையப்பர் லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடம் ஆகும். காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள். இக்கோயிலில் காந்திமதி அம்பாள், தன் கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்பாள் சந்நதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் வகைவகையான நைவேத்யங்களை சிவன் சந்நதிக்குக் கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது. கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் உறவில் எந்த பிரச்னையும் வராது என்பது திண்ணம். இக்கோயிலில் உள்ள சுரதேவர் சந்நதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை.
அம்பாளும் அற்புதங்களும் பற்றி அறிந்து கொள்வோமா
Category: அம்மன்: வரலாறு
அம்பாள், முப்பெரும் தேவியராகக் காட்சி கொடுக்கும் தலம் திருவானைக்காவல். அகிலாண்டேஸ்வரி ஒரு நாளில் காலையில் லட்சுமி தேவியாகவும், உச்சிக் காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் திருக்காட்சியளிக்கிறாள். மூன்று வேளையிலும் அம்மனை தரிசித்து வழிபட கல்வி,செல்வம்,வீரம் ஆகிய மூன்றும் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் இங்கு அம்பாளுக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன. திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் அமர்ந்து அருள்கிறாள் காந்திமதி அம்மன். காந்திமதி அம்மனுக்குத் தினமும் அர்த்த ஜாம பூஜையின் போது வெண்ணிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலை விளா பூஜை நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிறப் புடவையோடே காட்சி கொடுக்கிறாள். உலகின் ஊழிகாலத்தில் அனைத்தும் அன்னைக்குள்ளாகவே அடங்கும் என்பதை உணர்த்துவதாகவே இது அமைகிறது என்கின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோமா
Category: அம்மன்: வரலாறு
1. மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம். 2. அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக. 3. அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும். 4. அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள். இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும். 5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள். 6. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும். 7. அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும். 8. அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும். மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும். 9. மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை. 10. அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில். 11. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி 12. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.
ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் இத்தனை பலன்களா
Category: அம்மன்: வரலாறு
பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாட்களாகும். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். இதில் தஷ்ணாயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் தனிச்சிறப்பு உடையவையாக கருதப்படுகின்றன. ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி வரவும் விரதம் இருக்கலாம். அன்று சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளித்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும், மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம். பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நிறைவேறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும். நீண்ட ஆயுள் கிடைக்கும். ஆடி மாத வளர்பிறை வெள்ளியில் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்து 10 வயதிற்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல், கொடுத்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். ஆடி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து அம்மனை ஆவாகனம் செய்து பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு வழிபட வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. அம்மனை வழிபடும்போது 'லலிதாசகஸ்ர நாமம்' பாராயணம் செய்ய வேண்டும் அல்லது ஒலிக்க செய்ய வேண்டும். ஆடி மாதம் அம்மனுக்கு வளையல்சாற்றி அந்த வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, அருகம்புல்லால் பூஜிக்க வேண்டும். கொழுக்கட்டை படைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும். காரியத் தடை விலகும்.
பண்ணாரி அம்மனின் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா
Category: அம்மன்: வரலாறு
* பண்ணாரி அம்மனுக்கு தங்கத்தேர் ஒன்று உள்ளது. தங்கத்தேர் புறப்பாடு சாயரட்சை பூஜை நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட தங்கத்தேர் புறப்பாட்டில் கலந்துகொள்வார்கள். * இக்கோவிலில் நடைபெறும் பங்குனி குண்டம் பெருவிழா அறிவிக்கப்பட்ட திருவிழாவாகும். * குண்டத்தில் பக்தர்கள் இறங்கிய பிறகு கால்நடைகள் இறங்குவது இங்கு காணப்படும் தனிச்சிறப்பாகும். * இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள்தோறும் அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ராகிலட்டு, வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், ரவா கேசரி மற்றும் சர்க்கரைப்பொங்கல் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் அடுத்தடுத்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் குண்டத்திற்கு கிழக்குப்புறம் உள்ள மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது. * தெப்பக் கிணற்றுக்கு வடக்குப் பக்கத்தில் ஆண்கள் குளிக்கும் வரிசைக் குழாய்களுக்கு அருகில் ஒரு தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். பகல் காலங்களில் மேய்ச்சலுக்கு வனத்திற்கு வரும் மாடுகள் தண்ணீர் குடிக்க அத்தொட்டிக்கு வருவது வழக்கம். இங்கே இரவுக் காலங்களில் குறிப்பாக கோடை காலங்களில் யானைகள் தண்ணீர் குடிக்கத் தொட்டிகளுக்கு வரும். இரவுக் காலங்களில் தனித்தோ, வெளிச்சமின்றியோ தெப்பக் கிணற்றுப் பக்கமாகச் செல்வது விரும்பத்தக்கதல்ல. * மாடு தானாக பால் சொரிந்த இடத்தில் புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்க உருவமாக வேங்கை மரத்தின் அடியில் பண்ணாரி அம்மனும் தோன்றியதால் பண்ணாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். * இக்கோவிலுக்கு கிழக்குபுறம் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது, நாளிதழ்கள் மற்றும் ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் பக்தர்கள் படிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது. * முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சாமி சன்னதி சென்றடைய ஆறு இருக்கைகள் கொண்ட மின் ஊர்தி ஒன்று பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது. * இக்கோவிலுக்கு கைகுழந்தைகளோடு வருகைதரும் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் அறை இருக்கை வசதிகளுடன் மேற்கு நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது.
பண்ணாரி அம்மனின் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா
Category: அம்மன்: வரலாறு
* பண்ணாரி அம்மனுக்கு தங்கத்தேர் ஒன்று உள்ளது. தங்கத்தேர் புறப்பாடு சாயரட்சை பூஜை நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட தங்கத்தேர் புறப்பாட்டில் கலந்துகொள்வார்கள். * இக்கோவிலில் நடைபெறும் பங்குனி குண்டம் பெருவிழா அறிவிக்கப்பட்ட திருவிழாவாகும். * குண்டத்தில் பக்தர்கள் இறங்கிய பிறகு கால்நடைகள் இறங்குவது இங்கு காணப்படும் தனிச்சிறப்பாகும். * இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள்தோறும் அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ராகிலட்டு, வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், ரவா கேசரி மற்றும் சர்க்கரைப்பொங்கல் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் அடுத்தடுத்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் குண்டத்திற்கு கிழக்குப்புறம் உள்ள மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது. * தெப்பக் கிணற்றுக்கு வடக்குப் பக்கத்தில் ஆண்கள் குளிக்கும் வரிசைக் குழாய்களுக்கு அருகில் ஒரு தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். பகல் காலங்களில் மேய்ச்சலுக்கு வனத்திற்கு வரும் மாடுகள் தண்ணீர் குடிக்க அத்தொட்டிக்கு வருவது வழக்கம். இங்கே இரவுக் காலங்களில் குறிப்பாக கோடை காலங்களில் யானைகள் தண்ணீர் குடிக்கத் தொட்டிகளுக்கு வரும். இரவுக் காலங்களில் தனித்தோ, வெளிச்சமின்றியோ தெப்பக் கிணற்றுப் பக்கமாகச் செல்வது விரும்பத்தக்கதல்ல. * மாடு தானாக பால் சொரிந்த இடத்தில் புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்க உருவமாக வேங்கை மரத்தின் அடியில் பண்ணாரி அம்மனும் தோன்றியதால் பண்ணாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். * இக்கோவிலுக்கு கிழக்குபுறம் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது, நாளிதழ்கள் மற்றும் ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் பக்தர்கள் படிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது. * முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சாமி சன்னதி சென்றடைய ஆறு இருக்கைகள் கொண்ட மின் ஊர்தி ஒன்று பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது. * இக்கோவிலுக்கு கைகுழந்தைகளோடு வருகைதரும் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் அறை இருக்கை வசதிகளுடன் மேற்கு நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது.
ஈரோடு பெரிய மாரியம்மன் பற்றி தெரிந்து கொள்வோமா
Category: அம்மன்: வரலாறு
ஈரோடு நகரின் மையப்பகுதியில், மீனாட்சி சுந்தரனார் சாலையில், மாநகராட்சி அலுவலகத்தின் எதிர்புறத்தில் பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஈரோட்டின் காவல் தெய்வமாக போற்றப்படும் பெரிய மாரியம்மன் கோயிலின் கிழக்கு பிரகாரத்தில் நாச்சியார் சிலையும், மேற்கு பிரகாரத்தில் பரசுராமரும், பட்டாலம்மனும் எழுந்தருளியுள்ளனர். கருவறையில், கரங்களில் நாக பந்தத்துடன் உடுக்கை, பாசம், கபாலம், கத்தி ஆகியவற்றுடன் அமர்ந்த கோலத்தோடு இருக்கும் அன்னையை கண் குளிர வழிபடலாம். இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பின் கீழ் உள்ள இக்கோயிலில், காலை 6 மணிக்கு காலை சந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 6 மணிக்குச் சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. ஆடி மாதம் முழுவதும் பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. குறிப்பாக ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் பக்தர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
சிறுமி வடிவத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பற்றி தெரிந்து கொள்வோமா
Category: அம்மன்: வரலாறு
காஞ்சி மகா பெரியவர் சென்னை பரங்கிமலையில் இருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்கும் பொருட்டு, தனது பக்தர்களுடன் பாத யாத்திரையாக வந்து கொண்டிருந்தார். வரும் வழியில், திரிசூலம் சென்று அங்கு திரிசூலநாதரையும் திரிபுரசுந்தரியையும் தரிசித்தார். பின்பு பழவந்தாங்கலில் ஓரிடத்தில் சற்று ஓய்வு கொள்ள எண்ணம் கொண்டவராக, அங்கிருந்த அரச மரத்தடியில் அமர்ந்தார்.
ஆடி மாதத்தில் முளைப்பாரி எடுப்பது ஏன்
Category: அம்மன்: வரலாறு
🌱 பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், கர்கடக மாதம் என்றும் சொல்வார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.
உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் புராணங்களில் பல தெய்வங்கள் உள்ளன. சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
: அம்மன் - சக்தி தேவி, பார்வதி தேவி [ அம்மன்: வரலாறு ] | : Goddess - Goddess Shakti, Goddess Parvati in Tamil [ Amman: History ]
அம்மன்
வரலாறு:
உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரங்கள்
மற்றும் புராணங்களில் பல தெய்வங்கள் உள்ளன. சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
இந்து மதத்தில், துர்கா, காளி, லக்ஷ்மி, சரஸ்வதி உட்பட பல தெய்வங்கள் உள்ளன.
கிரேக்க புராணங்களில், அதீனா, அப்ரோடைட், டிமீட்டர் மற்றும் ஹீரா போன்ற தெய்வங்கள்
உள்ளன.
எகிப்திய புராணங்களில், ஐசிஸ், பாஸ்டெட் மற்றும் செக்மெட் போன்ற தெய்வங்கள்
உள்ளன.
நார்ஸ் புராணங்களில், ஃப்ரேயா மற்றும் ஹெல் போன்ற தெய்வங்கள்
உள்ளன.
செல்டிக் புராணங்களில், பிரிஜிட், மோரிகன் மற்றும் டானு போன்ற தெய்வங்கள்
உள்ளன.
தெய்வங்கள் பெரும்பாலும் கருவுறுதல், ஞானம், அழகு, போர் மற்றும் இறப்பு போன்ற வாழ்க்கையின்
பல்வேறு அம்சங்களுடன் தொடர்புடையவை. மரியாதை மற்றும் வழிபாட்டிற்கு தகுதியான சக்தி
வாய்ந்த மற்றும் தெய்வீக மனிதர்களாகவும் அவர்கள் அடிக்கடி சித்தரிக்கப்படுகிறார்கள்.
சக்தி தேவி ஒரு இந்து தெய்வம், தெய்வீக பெண் ஆற்றல் மற்றும் ஆதிகால
பிரபஞ்ச சக்தியாக கருதப்படுகிறது. அவர் பெரும்பாலும் ஒரு போர்வீரர் தெய்வமாக சித்தரிக்கப்படுகிறார், அவர் கடுமையான சுதந்திரமான, சக்திவாய்ந்த மற்றும் கருணை கொண்டவர்.
சக்தி அனைத்து படைப்புகளுக்கும் ஆதாரமாகவும், அனைத்து உயிரினங்களையும் உயிர்ப்பிக்கும் சக்தியாகவும் நம்பப்படுகிறது.
சக்தியின் பல்வேறு அம்சங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் அவற்றின் தனித்துவமான குணங்கள்
மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. சக்தியின் மிகவும் நன்கு அறியப்பட்ட வடிவங்களில் சில:
துர்கா: போர்
மற்றும் வெற்றியின் தெய்வம்
காளி: அழிவு
மற்றும் மாற்றத்தின் தெய்வம்
பார்வதி: அன்பு, கருவுறுதல் மற்றும் பக்தியின் தெய்வம்
சரஸ்வதி: அறிவு, இசை மற்றும் கலைகளின் தெய்வம்
லட்சுமி: செல்வம்
மற்றும் செழிப்பின் தெய்வம்
சக்தி பெரும்பாலும் பல கைகளுடன் சித்தரிக்கப்படுகிறார், இது பல பணிகளைச் செய்வதற்கும் ஒரே நேரத்தில்
பல பணிகளைச் செய்வதற்கும் அவரது திறனைக் குறிக்கிறது. அவள் சில சமயங்களில் புலி அல்லது
சிங்கத்தின் மீது சவாரி செய்வதாகவும் காட்டப்படுகிறாள், இது அவளுடைய சக்தி மற்றும் வலிமையைக்
குறிக்கிறது.
சக்தி வழிபாடு இந்து மதத்தின் ஒரு முக்கிய
பகுதியாகும், குறிப்பாக சாக்த பாரம்பரியத்தில். சக்தியின்
பக்தர்கள் அவளை வழிபடுவதன் மூலம், அவளது
ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் பெறலாம், மேலும் அவளுடைய தெய்வீக ஆற்றல் மற்றும் ஞானத்தை அணுகலாம் என்று
நம்புகிறார்கள்.
பெண்பால் சக்தி மற்றும் ஆற்றலின் உருவகமாக
கருதப்படும் ஒரு இந்து தெய்வம் பார்வதி தேவி. அவள் உமா, கௌரி, துர்கா மற்றும் காளி உட்பட பல பெயர்களாலும்
அழைக்கப்படுகிறாள். அவர் இந்து மதத்தின் மிகவும் சக்திவாய்ந்த கடவுள்களில் ஒருவரான
சிவபெருமானின் மனைவி. ஒன்றாக, அவர்கள்
சரியான ஜோடி மற்றும் தெய்வீக அன்பின் உருவகமாக கருதப்படுகிறார்கள்.
இந்து புராணங்களின்படி, பார்வதி இமயமலைக்கும் அவரது மனைவி மைனாவுக்கும்
பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்ட அழகான மற்றும் புத்திசாலிப்
பெண். சிவபெருமானின் இதயத்தை வெல்ல அவள் பல சோதனைகள் மற்றும் இன்னல்களை அனுபவித்தாள், அவர் ஆரம்பத்தில் தனது முன்னேற்றங்களை
நிராகரித்தார். ஆனால் அவளுடைய பக்தியும் உறுதியும் இறுதியில் அவனை வென்றன, அவர்கள் ஒரு பெரிய விழாவில் திருமணம்
செய்து கொண்டனர்.
பார்வதி அடிக்கடி அன்பு, பக்தி மற்றும் கருவுறுதலைக் குறிக்கும்
ஒரு அழகான மற்றும் மென்மையான தெய்வமாக சித்தரிக்கப்படுகிறார். அவள் அடிக்கடி முகத்தில்
அமைதியான வெளிப்பாட்டுடன் சித்தரிக்கப்படுகிறாள், மேலும் நகைகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்படுகிறாள். அவள்
சில சமயங்களில் தூய்மை மற்றும் அறிவொளியின் அடையாளமான தாமரையை வைத்திருப்பதாகவும் காட்டப்படுகிறாள்.
ஆனால் பார்வதி ஒரு சக்திவாய்ந்த தெய்வம், அவள் நம்பியவற்றுக்காக போராட பயப்படுவதில்லை.
சில சமயங்களில் அவள் ஒரு போர் தெய்வமாக சித்தரிக்கப்படுகிறாள், பல ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்களுடன், தீமையை எதிர்த்துப் போராடவும், அப்பாவிகளைப் பாதுகாக்கவும் தயாராக
இருக்கிறாள். இந்த அம்சத்தில், அவள்
துர்கா அல்லது காளி என்று அழைக்கப்படுகிறாள்.
ஒரு தாயாக, பார்வதி தனது குழந்தைகளை ஆழமாக கவனித்துக்
கொள்ளும் ஒரு வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு உருவம். அவர் இந்து மதத்தில் முக்கியமான
தெய்வங்களாகப் போற்றப்படும் விநாயகர் மற்றும் கார்த்திகேயா என்ற இரண்டு மகன்களின் தாய்
ஆவார். விநாயகர் ஞானத்தின் கடவுள் மற்றும் தடைகளை நீக்குபவர், அதே நேரத்தில் கார்த்திகேயன் போர் மற்றும்
வெற்றியின் கடவுள்.
கருவுறுதல், காதல், திருமணம் மற்றும் பக்தி உட்பட வாழ்க்கையின்
பல்வேறு அம்சங்களுடன் பார்வதியும் தொடர்புடையவர். அன்பான மற்றும் அர்ப்பணிப்புள்ள துணையை
தேடும் அல்லது ஒரு குழந்தையை கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களால் அவள் அடிக்கடி வணங்கப்படுகிறாள்.
அவளை வழிபடுவதன் மூலம், அவளது
ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் பெற முடியும் என்றும், அவளுடைய தெய்வீக ஆற்றலையும் ஞானத்தையும்
அணுக முடியும் என்று அவளுடைய பக்தர்கள் நம்புகிறார்கள்.
பார்வதி தேவி, தெய்வீக பெண்மையின் மென்மையான மற்றும்
சக்திவாய்ந்த அம்சங்களை உள்ளடக்கிய ஒரு பன்முக தெய்வம். சிவபெருமான் மீது அவளது பக்தியும்
அன்பும், ஒரு தாயாக அவள் வளர்க்கும் மற்றும்
பாதுகாக்கும் இயல்பு, பலருக்கு
உத்வேகம். அவளுடைய கடுமையான போர்வீரன் வடிவம் தீமைக்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தை
நினைவூட்டுகிறது மற்றும் அப்பாவிகளைப் பாதுகாக்கிறது. அவர் பெண் சக்தி மற்றும் ஆற்றலின்
சின்னமாகவும், இந்து மதத்தில் ஒரு பிரியமான தெய்வமாகவும்
இருக்கிறார்.
இந்த தலைப்புகளில் அம்மன் தெய்வம் அனைத்தையும் பற்றி விவரமாக பதிவிடப்படுகிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
: அம்மன் - சக்தி தேவி, பார்வதி தேவி [ அம்மன்: வரலாறு ] | : Goddess - Goddess Shakti, Goddess Parvati in Tamil [ Amman: History ]