கீரைகள் - பயன்கள்

அகம் + தீ + கீரை.. அகத்திக்கீரையில் அத்தனையும் நன்மை! இதற்கு என்ன காரணம் தெரியுமா

வீடு | அனைத்து வகைகள் | வகை: கீரைகள் - பயன்கள்
கீரைகள் - பயன்கள் | Greens - Uses

கீரைகள் என்றாலே அனைத்துமே சத்துக்கள் நிறைந்ததுதான் என்றாலும், அகத்திக்கீரைகள் சற்று அதிக நன்மைகளையே தருகிறது என்று சொல்லலாம். 50-க்கும் மேற்பட்ட உயிர்ச்சத்துகள் உள்ள கீரைதான் இந்த அகத்திக்கீரை.. 100 கிராம் கீரையில், 90000 உயிர்சத்தான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.. அதாவது, 10 டம்ளர் பாலிலும், 5 முட்டையிலும் உள்ள சுண்ணாம்புச்சத்து, இந்த ஒரே ஒரு கட்டு அகத்திக்கீரையில் உள்ளதே இதன் ஸ்பெஷாலிட்டியாகும். இரும்புச்சத்து: இரும்புச்சத்து நிறைந்த கீரைகளில் முருங்கைக்கீரை போலவே மிகவும் முக்கியமானது இந்த அகத்திக்கீரையாகும்.. எலும்புகளுக்கும் பற்களுக்கும் பலத்தை தரக்கூடியது.. அதனால்தான், குழந்தை பெற்ற பெண்களுக்குகூட இந்த அகத்திக்கீரையை அதிகமாக தருவார்கள்.. இதை குறிப்பிட்ட அளவு சாப்பிடும்போது, தாய்ப்பால் அதிகமாக பெருகும்.. பால் வளம் பெருக்கும் சக்தி உள்ளதால்தான், ஆடு, பசு போன்ற கால்நடைகளுக்கு இந்த அகத்திக்கீரையை தீவனமாக தருகிறார்கள். அகத்திக்கீரை: அகம் + தீ + கீரை என்பதே அகத்திக்கீரையாகும்.. அதாவது உடம்பிலுள்ள உஷ்ணத்த தணிக்கும் தன்மை இந்த கீரைக்கு இருப்பதால்தான், அகத்திக்கீரை என்று பெயராம்.. அந்தவகையில், குடல்புண்களை, வாய்ப்புண்களை ஆற்றும் சக்தி இந்த கீரைக்கு உண்டு.. அதேபோல உடல்சூடு உடையவர்கள், கண் நோய், கண் எரிச்சல் பாதிப்பு உடையவர்கள் 2 வாரத்திற்கு ஒருமுறை அகத்திக்கீரையை சமைத்து சாப்பிடலாம்.. இந்த கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்ணாடியே அணிய தேவையில்லை.. அத்தனை கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை இந்த கீரை தீர்க்கிறது.

: கீரைகள் - பயன்கள் - அகம் + தீ + கீரை.. அகத்திக்கீரையில் அத்தனையும் நன்மை! இதற்கு என்ன காரணம் தெரியுமா [ கீரைகள் - பயன்கள் ] | : Greens - Uses - Agam + Fire + Spinach.. Everything is good in agam! Do you know the reason for this in Tamil [ Greens - Uses ]

அகம் + தீ + கீரை.. அகத்திக்கீரையில் அத்தனையும் நன்மை! இதற்கு என்ன காரணம் தெரியுமா?

 

இரும்புச்சத்தை அள்ளி தரும் அகத்திக்கீரை

 

கீரைகள் என்றாலே அனைத்துமே சத்துக்கள் நிறைந்ததுதான் என்றாலும், அகத்திக்கீரைகள் சற்று அதிக நன்மைகளையே தருகிறது என்று சொல்லலாம்.

 

50-க்கும் மேற்பட்ட உயிர்ச்சத்துகள் உள்ள கீரைதான் இந்த அகத்திக்கீரை.. 100 கிராம் கீரையில், 90000 உயிர்சத்தான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.. அதாவது, 10 டம்ளர் பாலிலும், 5 முட்டையிலும் உள்ள சுண்ணாம்புச்சத்து, இந்த ஒரே ஒரு கட்டு அகத்திக்கீரையில் உள்ளதே இதன் ஸ்பெஷாலிட்டியாகும்.

 

இரும்புச்சத்து: இரும்புச்சத்து நிறைந்த கீரைகளில் முருங்கைக்கீரை போலவே மிகவும் முக்கியமானது இந்த அகத்திக்கீரையாகும்.. எலும்புகளுக்கும் பற்களுக்கும் பலத்தை தரக்கூடியது..

 

அதனால்தான், குழந்தை பெற்ற பெண்களுக்குகூட இந்த அகத்திக்கீரையை அதிகமாக தருவார்கள்.. இதை குறிப்பிட்ட அளவு சாப்பிடும்போது, தாய்ப்பால் அதிகமாக பெருகும்.. பால் வளம் பெருக்கும் சக்தி உள்ளதால்தான், ஆடு, பசு போன்ற கால்நடைகளுக்கு இந்த அகத்திக்கீரையை தீவனமாக தருகிறார்கள்.

 

அகத்திக்கீரை:

 

அகம் + தீ + கீரை என்பதே அகத்திக்கீரையாகும்.. அதாவது உடம்பிலுள்ள உஷ்ணத்த தணிக்கும் தன்மை இந்த கீரைக்கு இருப்பதால்தான், அகத்திக்கீரை என்று பெயராம்..

 

அந்தவகையில், குடல்புண்களை, வாய்ப்புண்களை ஆற்றும் சக்தி இந்த கீரைக்கு உண்டு.. அதேபோல உடல்சூடு உடையவர்கள், கண் நோய், கண் எரிச்சல் பாதிப்பு உடையவர்கள் 2 வாரத்திற்கு ஒருமுறை அகத்திக்கீரையை சமைத்து சாப்பிடலாம்.. இந்த கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்ணாடியே அணிய தேவையில்லை.. அத்தனை கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை இந்த கீரை தீர்க்கிறது.

 

ரத்தக்கொதிப்பு:

 

ரத்த கொதிப்பு அதிகமாக இருப்பவர்கள் இந்த கீரையை வாரம் ஒருமுறையாவது சேர்த்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு இந்த கீரையை சமைத்து தர சொல்லக் காரணமே, நல்ல மூளை வளர்ச்சியை தரக்கூடியதாம்.. உடலுக்கும் உறுதியையும், ஆற்றலையும் தரக்கூடியது. எனவே, இந்த கீரையில் சூப் வைத்து பிள்ளைகளுக்கு தரலாம். மேலும் வயிற்றில் பூச்சிகள் இருந்தாலும் இந்த கீரை வெளியேற்றிவிடும்..


சரும ஆரோக்கியத்தை இந்த கீரைகள் காக்கின்றன.. அந்தவகையில், தோலில் அரிப்பு, தோல் நோய்கள் சிரங்குகளை விரட்டிக்கூடியது.. இந்த கீரையை வேக வைத்து, பேஸ்ட்போல அரைத்து, உடலில் ஏற்படும் காயங்களின் மீது கட்டினால், விரைவில் காயங்கள் ஆறிவிடும்.

 

நிவாரணம்:

 

இந்த கீரையை, தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, தேமல்கள் மீது பூசினால், தேமல்கள் மறையும்.. சேற்று புண்களிலும் இந்த சாறு தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

 

ஆனால், மற்ற கீரைகள் அளவுக்கு அகத்திக்கீரையை பலரும் விரும்புவதில்லை.. இதற்கு காரணம், இந்த கீரை லேசாக கசப்பு, துவர்ப்புடன் இருக்கும் என்பதால்தான்.. முற்றின கீரையை சமைக்காமல், இளசான கீரையை தேர்ந்தெடுத்து, தேங்காய்ப்பால் ஊற்றி சமைத்தால், கசப்பு தெரியாதாம். இந்த கீரையில் வாயுத்தன்மை உள்ளதால், பெருங்காயத்தையும் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். மதிய நேரத்தில் மட்டுமே இந்த கீரையை சாப்பிட வேண்டும்.

 

கவனம் தேவை: 

 

ஆனால், மருந்துகளை முறிக்கும் தன்மை கொண்ட கீரை என்பதால், சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதை சாப்பிடக் கூடாது.. சிக்கனுடனும் சேர்த்து சாப்பிடக்கூடாது.. மது அருந்திவிட்டு கீரையை சாப்பிட்டால் மாரடைப்பு வந்துவிடுமாம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

: கீரைகள் - பயன்கள் - அகம் + தீ + கீரை.. அகத்திக்கீரையில் அத்தனையும் நன்மை! இதற்கு என்ன காரணம் தெரியுமா [ கீரைகள் - பயன்கள் ] | : Greens - Uses - Agam + Fire + Spinach.. Everything is good in agam! Do you know the reason for this in Tamil [ Greens - Uses ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: கீரைகள் - பயன்கள்