இயேசு கிறிஸ்து

அதிகாலை ஆண்டவரை நோக்கி செபிக்கும், மூன்று முக்கிய செபங்கள் ஒரே பதிவில்...

வீடு | அனைத்து வகைகள் | வகை: இயேசு கிறிஸ்து

நற்செய்தி சிந்தனை

Category: இயேசு கிறிஸ்து: வரலாறு

நண்பர்கள் இருவர் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றனர். அங்கே சென்றதும், தங்கள் கண்முன்பாக ஆர்ப்பரித்து ஓடிய அந்த நீர்வீழ்ச்சியை அதன் ஓரத்திலிருந்து பார்த்து, மெய்ம்மறந்து போனார்கள். தொடர்ந்து அவர்கள் நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர்களை அறியாமல் உள்ளே விழுந்தார்கள்.

இயேசு கிறிஸ்து | Jesus Christ

1. இயேசுவை நோக்கி அதிகாலை செபம். 2. இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் செபம். 3. நம் விசுவாச செபங்கள்.

: இயேசு கிறிஸ்து - அதிகாலை ஆண்டவரை நோக்கி செபிக்கும், மூன்று முக்கிய செபங்கள் ஒரே பதிவில்... [ இயேசு கிறிஸ்து: வரலாறு ] | : Jesus Christ - Praying to the Lord in the morning, three important prayers in one post... in Tamil [ Jesus Christ: A History ]

இயேசு கிறிஸ்து

அதிகாலை ஆண்டவரை நோக்கி செபிக்கும், மூன்று முக்கிய செபங்கள் ஒரே பதிவில்...

 

1. இயேசுவை நோக்கி அதிகாலை செபம்.

 

2. இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் செபம்.

 

3. நம் விசுவாச செபங்கள்.

 

1. ஆண்டவர் இயேசுவை நோக்கி.. அதிகாலை அர்ப்பண செபம்..!!

எனக்காக கல்வாரி மலை மேல் உடைக்கப்பட்ட   பாடுகளின் இயேசுவே...

 

எங்கள் மேல் இரக்கமாயிரும்.. எங்கள் இதய அன்பு தெய்வமே, இந்த காலை நேரம் எழுந்து உம் திருப்பாதம் அமர்கிறோம். அன்று கடலில்  தத்தளித்த  சீடர்களுக்காக கடலையும், காற்றையும்புயலையும், கடிந்து அடக்கி அமைதி தந்தவரே...

 

இதோ இன்று நாங்களும் சந்தோஷம்/ சமாதானம்/ மன்னிப்பு/ பொறுமை இவற்றில் நிலையற்ற தன்மையும் மற்றும் வெளியே யாரிடமும் சொல்ல முடியாத பிரச்சனைகள் போன்ற பல துன்ப புயலில் தவிக்கிறோம்...

 

அன்று பேதுரு மேல் இரக்கப்பட்டவரே, இன்று எங்கள் மீதும்  இரக்கம் காட்டியருலும்...

 

பல்வேறு துன்ப கடலில் சிக்கி தவிக்கும் எங்களுக்கும் உம் திருமுகத்தை மறைத்து விடாதையும். எங்களுக்காக காயப்பட்ட உமது  கரங்களால் எங்களை தாங்கும். அன்று உமது அன்பு சீடர்களை பார்த்து சரியான பக்கம் வலை போடுங்கள் என அறிவுரை சொன்ன தெய்வமே...

 

எங்களுக்கும் ஒவ்வொரு நாளும் உம் வார்த்தை வழியாக ஆலோசனை   கொடுக்கிறீர். அதை நாங்கள் கருத்தாய் பிடிக்க அருள் தாரும்.

 

இந்த  உலக வாழ்க்கையில் நாங்கள் உம்மோடு ஒன்றித்து வாழவும்... எங்கள் சோதனை போராட்டம் வெற்றி அடைய, உமது தந்தையாம் இறைவன், சாலமோன் அரசனுக்கு கொடுத்த ஞானம்..  இன்று எங்களுக்கும் பெற்றுத் தாரும். எங்கள் நடுவில்  வாசம் பண்ணும் உமது தூய ஆவியால் நிரப்பியருளும். மேலும்  உமது உயிர்ப்பு வழியாக நிலையான சமாதானத்தையும், அமைதியையும் கொடுத்தவரே...

 

உமக்கு நன்றி  செலுத்துகிறோம். எங்கள் துன்பங்கள்துயரங்கள், வேதனைகள், சோதனைகள் அனைத்தையும்  மாற்றும்...

 

உமது பாடுகளின் பாதை இறை திருத்துகில்  ஆண்டவராகிய இயேசுவே, அன்று நீர் சக்கேயுவை பார்த்து சொன்ன அதே வார்த்தை... எங்கள் குடும்பத்தை பார்த்து  "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயீற்று" என்று கூறுவீராக...

 

ஒவ்வொரு நாளும் நாங்கள்  பெற்றுக் கொண்ட உமது நித்திய மீட்பை பிறரோடு பகிர்ந்து வாழ வரமருளும். ஆமென்...!!

 

இந்த மன்றாட்டுக்களை எம் ஆண்டவர் இயேசுவின் வழியாக உண்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம், ஜீவனுள்ள எங்கள் நல்ல தந்தையே...

 

ஆமென்/ ஆமென் /ஆமென்..!!

2. இயேசுவின் திரு இருதயத்துக்கு.. குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் வேண்டுதல்..!!

இயேசுவின் திரு இருதயமே..!!

 

குடும்பங்களுக்கு நீர் செய்து வரும் எல்லா நன்மைகளையும் நினைத்து நன்றியுடனும், அன்புடனும் உம் திருப்பாதத்தில் பணிந்து வீழ்கிறோம்.

 

அன்புள்ள இயேசுவே, எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். நீர் எங்களை ஆசிர்வதித்து இப்போதும் எப்போதும், உமது திருஇதய நிழலில் நாங்கள் இளைப்பாரச் செய்தருளும்.

 

தவறி எங்களின் யாராவது உமது திரு இதயத்தை நோகச் செய்திருந்தால் அவர் குற்றத்துக்கு நாங்கள் நிந்தைக் கழுவாய் செய்கிறோம். உமது திரு இதயத்தை பார்த்து எங்கள் வேண்டுதலை ஏற்றுக் கொண்டு அவரை மன்னித்தருளும்.

 

மேலும், உலகின் உள்ள எல்லாக் குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்குப்  பலமும், வயோதிகர்களுக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்குத் தஞ்சமுமாய் இருக்கத் தயைபுரிந்தருளும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், சாகும்  வேளையில் இருப்போரின் தலைமாட்டில் நீர்தாமே விழித்துக் காத்திருப்பீராக!

 

இயேசுவின் இரக்கமுள்ள திரு இதயமே! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ அன்போடு அணைத்தீரே!  எங்கள் பங்கில் உள்ள பிள்ளைகள் அனைவரையும்  உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம் அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இதயத்தில் பற்றுறுதியையும், இறையச்சத்தையும் வளரச் செய்யும். வாழ்நாளில் அவர்களுக்கு அடைக்கலமாகவும், இறுதி வேளையில் ஆறுதலாகவும் இருக்கும்படி, உம்மை மன்றாடுகிறோம்.

 

திவ்விய இயேசுவே, வாழ்நாளெல்லாம் உமது திரு அன்பிலே வாழ்ந்து இறந்து முடிவில்லாக் காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற அருள்வீராக - ஆமென்.

3. நம் விசுவாச செபங்கள்..!!

(A) பாவமன்னிப்பு செபம்..!!

என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர். என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்து விட்டேன். ஆகவே, நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும், மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும், உறுதி கொடுக்கிறேன். எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும். ஆமென்.

(B) உத்தம மனஸ்தாப செபம்..!!

என் இறைவா, தேவரீர் அளவில்லாத நன்மையும், அன்பும் நிறைந்தவராய் இருப்பதனால்.. எல்லாவற்றையும் பார்க்க உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களை செய்தேன் என்று மிகவும் மனம் நொந்து, மெத்த மனஸ்தாபப் படுகிறேன். எனக்கு இதுவே மனஸ்தாபம் இல்லாமல், வேறு மனஸ்தாபம் இல்லை. எனக்கு இதுவே துக்கம் இல்லாமல், வேறு துக்கம் இல்லை. இனிமேல், ஒரு பொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கனை செய்கிறேன். மேலும், எனக்கு பலம் போதாமையால் இயேசுகிறிஸ்து பாடுப்பட்டுச் சிந்தின திருஇரத்தப் பலன்களைப் பார்த்து, என் பாவங்களை எல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரபிரசாதங்களையும், மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன். திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதினால், நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். ஆமென்.

 (C) விசுவாச பிரமாணம்..!!

ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர், இயேசுக் கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார். கடவுளில் நின்று கடவுளாக, ஒளியினில் நின்று ஒளியாக, மெய்யங் கடவுளில் நின்று மெய்யங் கடவுளாக செனித்தவர். உண்டாக்கப்பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.

 

மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும், வானகம் இருந்து இறங்கினார். பரிசுத்த ஆவியினால் கன்னி மரியிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும், நமக்காக போஞ்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, அடக்கம் செய்யப்பட்டார். வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க, மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கிறார். அவரது அரசுக்கு முடிவிராது. பிதாவினில் நின்றும், சுதனில் நின்றும் புறப்படும் ஆண்டவரும், உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதனையும், மகிமையும் பெறுகிறார். தீர்க்கதரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையையும் விசுவசிக்கிறேன். பாவமன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும், எதிர் பார்க்கிறேன். ஆமென்.

 

இயேசுவுக்கே புகழ்.!

மரியே வாழ்க..!!✍🏼🌹


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

: இயேசு கிறிஸ்து - அதிகாலை ஆண்டவரை நோக்கி செபிக்கும், மூன்று முக்கிய செபங்கள் ஒரே பதிவில்... [ இயேசு கிறிஸ்து: வரலாறு ] | : Jesus Christ - Praying to the Lord in the morning, three important prayers in one post... in Tamil [ Jesus Christ: A History ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: இயேசு கிறிஸ்து