 
		
		          பில்கேட்சிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய 5 வாழ்க்கை பாடங்கள்
Category: வாழ்க்கை வரலாறு
பில்கேட்ஸ் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்டின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி. அவரது வாழ்க்கை பயணம் நம் அனைவரும் கற்றுக் கொள்ளக்கூடிய பல பாடங்களைக் கொண்டுள்ளது.
 
		
		          ராபின் ஹுட் (ROBIN HOOD) பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா
Category: வாழ்க்கை வரலாறு
பணக்காரர்களிடம் இருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் இவனை பற்றி ஏராளமான நாவல்களும் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. ராபின் ஹுட் யார்? நிஜமாகவே இப்படி ஒருவன் இருந்தானா? அல்லது கற்பனைக் கதாபாத்திரமா? இலக்கியவாதிகளைக் குழப்பும் விஷயம் இதுதான்.

உலகில் பௌத்த சமயத்தை உருவாக காரணமாக இருந்தவர் புத்தர். இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார். புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள். சீட பரம்பரையூடாக வாய்மொழிமூலம்கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர்திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது. சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினிஎன்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார். சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர். அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார். ஒருமுறை வட வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார்.துறவறம் பூண்ட சித்தார்த்தர், யோக நெறியில் கடுந்தவம் புரிந்தார். தன் தவங்களின் மூலம் உயர்ந்த யோக நிலைகளை அடைந்தாலும், உலக வாழ்க்கையின் துன்பங்களின் ஆதாரத்தை அறிய முடியாததால் அதிருப்தி அடைந்தார். எனினும் தவ வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தார்.
: வாழ்க்கை வரலாறு - கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு அறிவோமா [ வாழ்க்கை வரலாறு ] | : Life history - Do we know the biography of Gautama Buddha in Tamil [ Life history ]
கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு அறிவோமா?
உலகில் பௌத்த சமயத்தை உருவாக காரணமாக இருந்தவர் புத்தர்.
 இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட
பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும்.  பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும்
அழைக்கப்பட்டார்.
புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள்.
சீட பரம்பரையூடாக வாய்மொழிமூலம்கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர்திரிபிடகம் என்று வழங்கப்படும்
நூலாக எழுத்துவடிவம் பெற்றது.
சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினிஎன்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது
தாயார். 
இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த
ஞானியொருவர், சித்தார்த்தர்
ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு
முன்னரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.
சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும்
ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான
அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல்
அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.
அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார்.
ஒருமுறை வட வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற
மனிதன், ஒரு
நோயாளி, அழுகிக்
கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின்
துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார்.துறவறம் பூண்ட
சித்தார்த்தர், யோக
நெறியில் கடுந்தவம் புரிந்தார். தன் தவங்களின் மூலம் உயர்ந்த யோக நிலைகளை அடைந்தாலும், உலக வாழ்க்கையின் துன்பங்களின் ஆதாரத்தை அறிய
முடியாததால் அதிருப்தி அடைந்தார். எனினும் தவ வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தார்.
தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள
கயைஎனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில்
அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம்
புரிவது என தீர்மானித்தார். ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின் பெருஞ்ஞான நிலையை அடைந்து
புத்தரானார். இவர் தன்னை தத்தாகதர் என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலை எய்திவர்') என்று அறிவித்துக் கொண்டார். புத்தர் ஞானம் பெற்ற
அவ்விடம் இன்று புத்த கயை என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.
வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன்
முறையாக ஐவரை சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு  புத்தி புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப்
பிரவாத்தனம் அல்லது அறவாழி உருட்டுதல் என புத்த சமய நூல்களில் அழைக்கப்படும். அவரது
வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர். தனது 80ஆம் வயதில் புத்தர் குசினாரா என்ற இடத்தில் காலமானார்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
: வாழ்க்கை வரலாறு - கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு அறிவோமா [ வாழ்க்கை வரலாறு ] | : Life history - Do we know the biography of Gautama Buddha in Tamil [ Life history ]