''அன்பே கடவுள்..''
Category: காதல்
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார். பழங்களை எடை போட்டு வாங்கிப் பணம் கொடுத்தப் பின், அந்தப் பழங்களில் இருந்து ஒன்றை எடுத்துப் பிய்த்து வாயில் போட்டு விட்டு, இந்தப் பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்தப் பாட்டியிடம் கொடுத்துச் சாப்பிடச் சொல்லி புகார் செய்வார்.
ஒரு பையன லவ் பண்ண முன்னாடி அவன் என்ன Bike வச்சி இருக்கான்..? என்ன Mobile use பண்றான்..? எவ்வளவு சம்பாரிக்கிறான்னு தெரிஞ்சிட்டு லவ் பண்ணுற பொண்ணுங்களுக்கு மத்திலயில,
: காதல் - காவிய காதல்னா எப்படி இருக்கும் தெரியுமா? [ காதல் ] | : love - Do you know what an epic romance looks like? in Tamil [ love ]
காவிய காதல்னா எப்படி இருக்கும் தெரியுமா?
ஒரு பையன லவ் பண்ண முன்னாடி
அவன் என்ன Bike வச்சி இருக்கான்..?
என்ன Mobile use பண்றான்..?
எவ்வளவு சம்பாரிக்கிறான்னு தெரிஞ்சிட்டு
லவ் பண்ணுற பொண்ணுங்களுக்கு மத்திலயில,
காதல மட்டும் எதிர் பாத்துட்டு வேற
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம
அவனோட கஷ்டங்களக் கூடவே இருந்து Face பண்ணிட்டு இருக்க
சில பொண்ணுங்களையும் நான் பாத்து இருக்கேன்..
அவன் கைல காசு இல்லனாலும்
தன் கைல இருக்க காசுல Bus ticket எடுத்து கூட்டிட்டுப் போற பொண்ணுங்களையும்
நான் பாத்து இருக்கேன்..
தனக்காக எதும் பண்ணிக்கலனாலும்
சின்னதா சேத்து வச்சக் காசுல
தனக்கு புடிச்சவனுக்காக சின்ன விலைல
ஆசையா ஒரு Shirt வாங்கிக் கொடுக்குற பொண்ணுங்களையும் நான் பாத்து இருக்கேன்..
சாப்புடக்கூட்டிட்டுப் போய் Hotel bill pay பண்ணுற பொண்ணுங்களையும் நான் பாத்து இருக்கேன்..
அவன்கிட்ட ஒரு Bike இல்லனாக்கூட
ஆரம்பரமா கையப்புடிச்சிட்டு சந்தோசமா Road-ல நடந்து போன பொண்ணுங்களையும் பாத்து இருக்கேன்..
என்ன தான் வாழ்க்கை பொறட்டிப் போட்டு அடிச்சாலும் கீழ விழுந்து விழுந்து எழும்பினாலும்
கைய கெட்டியாப் புடிச்சிட்டு கூடவே பயணிக்கிற,
மனசளவுல வலிமையான பொண்ணுங்க இன்னமும் இருக்கத்தான் செய்றாங்க..
வாழ்க்கையக் கொண்டுப்போக காதல் மட்டும் போதாது கூடவே பணமும் வேணும்னு எனக்கு தெரியும்..
ஆனா எல்லாம் ஆடி ஓயிற காலத்துல உக்காந்து கதை பேசுற ஒரு காதல கண்டிப்பா பணத்தால கொடுக்க முடியாது..
அந்தப் பூ நம்ம கஷ்ட, நஷ்டங்கள்ல பூக்கனும்..
நம்ம கைக்குள்ளையே இருக்கனும்..
வாடினாலும் பத்திரப்படுத்தி புத்தங்களுக்கு நடுவுல மயிலிறகோட சேர்த்து பாதுகாத்து முதுமைல அதோட வாசம் இல்லனாலும்
கையில ஏத்திப்பாக்கக்குள்ள
அத்தனை காதல், ஏக்கம், கண்ணீர், சிரிப்புனு சேர்ந்து நினைவுகள மீட்டிக் கொடுக்குற மாதிரி இருக்கனும்...
அதுக்கு நம்மக்கூட நம்ம கனவுகளுக்கு வலிமை சேர்க்குற ஒரு பெண்ணோட
காதலும் இருக்கனும்..🤍🌻🪄
எல்லாரோட life-லையும் வெளிப்படையா காட்டிக்கிட்ட இல்லனா மனசுலையே போட்டு புதைச்சிக்கிட்ட ஒரு காதல் இருக்கும்..😌
கண்டிப்பா அந்த Love something special aah இருந்து இருக்கும்
காலைல இருந்து இரவு வரைக்கும் நம்ம நாட்கள அழகா கொண்டு போய் இருக்கும்
எவ்வளவு கஷ்டங்கள கொடுத்து இருந்தாலும்
அதோட நினைவுகள் அழகா தான் இருந்து இருக்கும்
அவங்கள First time meet பண்ண Place
போட்டு இருந்த Dress
பேசுன வார்த்தைகள் பார்த்த பார்வைகள்னு
இப்போ வரை மனசுக்குள்ள ஆணி அடிச்ச மாதிரி நிக்கும்
அப்பிடியே அந்த நினைவுகள மீட்டிட்டு வரக்குள்ள
அவங்க நமக்கானவங்க இல்லன்றத ஒரு Second Realize பண்ணுவோம்
அப்போ மனசு ரொம்ப பாரமாகிரும்..🥺
ஆரம்பத்துல அத நினைக்கக்குள்ள மனசு வலிக்கும் கண் கலங்கும்
போகப் போக ஒரு காவியம் மாதிரி மனசுல பதிஞ்சிரும்.. ✨
எல்லா காதல்களும் துரோகத்தால் மட்டுமே பிரிஞ்சதுனு இல்ல
சில காதல்கள் சந்தர்ப்ப சூழ்நிலையாலக் கூட பிரிஞ்சி இருக்கும்
ஆனா எப்பவும் அது ஒரு காவியம் தான்..❤
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
: காதல் - காவிய காதல்னா எப்படி இருக்கும் தெரியுமா? [ காதல் ] | : love - Do you know what an epic romance looks like? in Tamil [ love ]