மஹா பெரியவா

பட்டாரிகா

வீடு | அனைத்து வகைகள் | வகை: மஹா பெரியவா
மஹா பெரியவா | Maha Periyava

பட்டாரிகா என்று அம்பிகையைச் சொல்வது வழக்கம். தமிழில் பட்டாரிகை என்று ஆகும். பட்டாரகர் என்றால் பூஜிக்கத் தக்கவர். அதற்குப் பெண்பால் பட்டாரிகா.

: மஹா பெரியவா - பட்டாரிகா [ மஹா பெரியவா ] | : Maha Periyava - Patarika in Tamil [ Maha Periyava ]

மஹா பெரியவா

பட்டாரிகா

பட்டாரிகா என்று அம்பிகையைச் சொல்வது வழக்கம். தமிழில் பட்டாரிகை என்று ஆகும். பட்டாரகர் என்றால் பூஜிக்கத் தக்கவர். அதற்குப் பெண்பால் பட்டாரிகா. 

பட்டாரர்பட்டாரி என்றே சொன்னாலும் போதும். பழைய காலத்தில் இந்தத் தமிழ் தேசத்தில் பிடாரி கோவில்களுக்குச் செய்யப்பட்ட ‘என்டோமென்ட்’களை ‘பட்டாரிகா மான்யம்’ என்றே சாஸனங்களில் குறித்திருக்கிறது. இதிலிருந்து பட்டாரிதான் பிடாரி ஆகியிருக்கிறதென்று தெரிகிறது….

 

அம்பாள் பட்டாரிகா. அதனால் ஒரு தனி அர்த்தத்தில் அவளுடைய தலை சிறந்த மூன்று உபாஸகர்களுக்கு ‘பட்டாரகர்’ என்று பட்டம் கொடுத்திருக்கிறது. யார் யாரென்றால் ஒன்று ஸாக்ஷாத் ஈச்வரனே. அவரைப் ‘பரமசிவ பட்டாரகர்’ என்று சொல்லியிருக்கிறது. இன்னொருவர் மஹாகவி காளிதாஸர். உஜ்ஜயினி மஹாகாளியின் அநுக்ரஹத்தாலேயே வாக் ஸித்திகவிதா சக்தி பெற்றவர். அம்பாள் ஸ்தோத்ரம் என்று எடுத்தவுடன் எல்லாரும் படிக்கும் ‘ச்யாமளா தண்டக’மும் ‘நவரத்ன மாலா’1வும் பண்ணியவர். அவரை ‘ச்ருங்கார பட்டாரகர்’ என்று சொல்லியிருக்கிறது. ஒரு பட்டாரகர் தெய்வமாக இருக்கப்பட்டவர். இன்னொரு பட்டாரகர் மநுஷ்யர்களில் கவியாக இருந்தவர்… கனம்லகு என்று இரண்டு. கனமாயில்லாமல் லேசாக இருப்பது லகு. தெய்வம் கனம்மநுஷ்யன் லகு. லகு பட்டாரகர் என்ற ஒருத்தர் ‘பஞ்ச ஸ்தவி’ என்று அம்பாள் பேரில் செய்துள்ள ஐந்து ஸ்தோத்ரங்கள் இருக்கின்றன. காளிதாஸரான மநுஷ்ய பட்டாரகருக்கே லகு பட்டாரகர் என்றும் பெயராக இருக்கலாம் என்று ஒரு அபிப்ராயமுண்டு. தெய்வம்மநுஷ்யர் இரண்டோடும் சேர்க்காமல் ரிஷி என்ற வர்க்கத்தைத் தனியாகச் சொல்வது வழக்கம். தேவரிஷிகள் என்ற நாரதர் போன்றவர்கள் தேவ ஜாதியில் பிறந்தவர்களாக இருக்கிறார்கள். மநுஷ்ய ஜாதியில் பிறந்து பூலோகத்திலேயே அநேகம் ரிஷிகள் இருந்திருக்கிறார்கள். பிறந்தது எந்த ஜாதியிலானாலும் எவரொருவர் ஆகாசத்தில் அநாதியாக ஸூக்ஷ்ம ரூபத்தில் பரவியிருக்கும் மந்த்ரங்களை நாம் கேட்கக்கூடிய சப்த ரூபத்தில் பிடித்துக் கொடுக்கிறாரோ அவர் ரிஷி என்ற தனி ஜாதியாகிவிடுகிறார். தர்ப்பணம் முதலான வைதிக கார்யங்களில் தேவர்களுக்குச் செய்வதுரிஷிகளுக்குச் செய்வதுமநுஷ்யர்களான பித்ருகளுக்குச் செய்வது என்று இப்படி மூன்று வர்க்கமாகவே சொல்லியிருக்கிறது. மூன்று பட்டாரகர்களில் ஈச்வரன் தேவர்காளிதாஸர் மநுஷ்யர் என்பதால் மற்றவர் ரிஷியாயிருந்தால்தானே பொருத்தமாயிருக்கும்அப்படிப்பட்ட மூன்றாவது பட்டாரகர் யாரென்றால் ரிஷி வர்க்கத்தைச் சேர்ந்த துர்வாஸர்தான். ரிஷிகளுக்குள் அம்பிகையின் ப்ரஸாதத்தைப் பரிபூர்ணமாக அடைந்தவர் அவர். அவருடைய கோபம் ப்ரஸித்தமானதல்லவாஅதனால் அவரை ‘க்ரோத பட்டாரகர்’ என்றே சொல்வது. பரமசிவ பட்டாரகர்ச்ருங்கார பட்டாரகர்க்ரோத பட்டாரகர் என்றிப்படி மூன்று பேர்.

 

க்ரோத பட்டாரகரான துர்வாஸர்தான் முதன் முதலில் அம்பாளை ஸ்துதித்த பூலோகவாஸி. அவர் ‘த்விசதி’ பாடினதோடு ‘சக்தி மஹிம்ந ஸ்தோத்ரம்’ என்றும் அம்பாள் மஹிமை பற்றி ஒரு உத்தமமான ஸ்துதி செய்திருக்கிறார். இவற்றுக்கு அப்புறந்தான் மற்றக் கவிகளின் வாக்குகள் உண்டாயின. அவர் வாக்கிலேயே அம்பிகை ஆவிர்பவித்திருப்பது ‘த்விசதி’யை அநுபவித்துப் படிப்பவர்களுக்குத் தெரியும்.

 

ஒரு மையப் புள்ளியைச் சுற்றி அடுக்கடுக்காக நாற்பத்து மூன்று கோணங்கள் கூம்பாக — cone shapeல் — எழும்பி அமைந்த ஸ்ரீசக்ரம் என்ற யந்த்ரத்தில், ‘ஆவரண’ங்கள் என்னும் சுற்றுக்களில் (மூல ஸ்தானத்தைச் சுற்றி பஞ்ச ப்ராகாரம்ஸப்த ப்ராகாரம் என்றெல்லாம் இருப்பதுபோல ஸ்ரீசக்ரத்தில் உள்ள சுற்றுகளில்) அநேக தேவதைகள் சூழ்ந்திருக்கஅதன் உச்சியாக உள்ள மையப் புள்ளியான பிந்து ஸ்தானத்தில் காமேச்வரனுடைய வாம பாகத்தில் எழுந்தருளியிருக்கிற காமேச்வரியான ராஜராஜேச்வரியை அந்த எல்லா முக்கோணங்களையும்ஆவரண தேவதைகளையும் விவரமாகச் சொல்லி துர்வாஸர் ஸ்தோத்திரித்திருக்கிறார். இந்த உத்கிருஷ்டமான கிரந்தத்தைப் பாராயணம் பண்ணினால் நல்ல அநுக்ரஹம் உண்டாகும்குறிப்பாக நல்ல வாக்குகவித்வ சக்தி உண்டாகும்.

 

அம்பிகை பண்ணுகிற பெரிய அநுக்ரஹம் அவளை வர்ணித்து வர்ணித்து துதிக்கிற ஆனந்தத்தைத் தரும் உயர்ந்த வாக்கு விசேஷம்தான். இந்த வாக்குதானே ஒரு பக்தர் பெற்ற அநுபவத்தை மற்றவர்களுக்கும் தெரிவித்துஅவர்களும் அதைப் பகிர்ந்து கொள்ளும்படிச் செய்கிறதுஅதுதான் வாங் சக்தி அருள்வதன் விசேஷம்.

 

ஒரு ஊமைக்கு இப்படிப்பட்ட அபார வாக்குச் சக்தியை அவள் அநுக்ரஹம் பண்ணினாள். காஞ்சீபுரத்தில் காமாக்ஷி கோயிலில் இருந்த அவருக்கு [இயற்]பெயர் என்னவென்றே தெரியவில்லை. ‘மூகர்’ என்று சொல்கிறோம். ‘மூகர்’ என்றால் ஊமை என்று அர்த்தம். அந்த ஊமைக்கு அம்பாளின் அநுக்ரஹம் கிடைத்ததுதான் தாமதம்த்வி-சதி இல்லைபஞ்ச-சதியாகவே ஐநூறு ச்லோகங்களை வர்ஷித்துவிட்டார்! துர்வாஸர் பண்ணினது ‘ஆர்யா த்விசதி’ என்றால்மூகர் பண்ணின ‘பஞ்ச-சதி’யில் முதலாவதாக ‘ஆர்யா சதகம்’ என்ற நூறு ச்லோகங்கள் இருக்கின்றன. இதுவும்ஆர்யா வ்ருத்தத்தில் [மீட்டரில்] தான் அமைந்தது. அடுத்து அவளுடைய திருவடிகளின் அழகை மட்டுமே நூறு ச்லோகங்களில் சொல்கிற ‘பாதார விந்த சதகம்’மூன்றாவதாக அவளுடைய பலவித மஹிமைகளைத் துதிக்கும் ‘ஸ்துதி சதகம்’அதற்கப்புறம் அம்பாளின் கடாக்ஷ வீக்ஷண்யத்தைப் பற்றி மாத்திரம் ‘கடாக்ஷ சதகம்’ என்று நூறு ச்லோகங்கள்கடைசியில் அவளுடைய மந்தஹாஸத்தைப் பற்றியே ‘மந்தஸ்மித சதகம்’ என்று நூறு — இப்படிப் ‘பஞ்ச சதி’யை மூகர் பண்ணியிருக்கிறார்.

 

‘ஆர்யா த்விசதி’யும் ‘மூக பஞ்சசதி’யும் ஒரு நல்ல சைத்ரிகன் அம்பிகையின் ஸ்வரூபத்தை எழுதிகாட்டுகிற மாதிரி அவளை மனகண்ணுக்கு முன் தோன்றும்படிச் செய்கின்றன. கண்ணுக்கும் மனஸுக்கும் எட்டாதவளைக் கிட்டத்தில் காட்டிக் கொடுக்கின்றன.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

: மஹா பெரியவா - பட்டாரிகா [ மஹா பெரியவா ] | : Maha Periyava - Patarika in Tamil [ Maha Periyava ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: மஹா பெரியவா