அம்மா

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை

மே 2-வது ஞாயிறு அன்னையர் தினம் | May 2nd Sunday is Mother's Day

மே 2-வது ஞாயிறு அன்னையர் தினம்

Category: அம்மா

தாய் புனிதமானவர் தாய் பொறுமையானவர் தாய் அரவணைத்துக் கொள்பவர் தாய் தன் பசி மறந்தவர்

அன்னையர் தின வரலாறு | History of Mother's Day

அன்னையர் தின வரலாறு

Category: அம்மா

1912 ஆம் ஆண்டில், அன்னா ஜார்விஸ் "மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை" மற்றும் "அன்னையர் தினம்" ஆகிய வாக்கியங்களைப் பதிவுசெய்து அன்னையர் தின சர்வதேச அமைப்பை உருவாக்கினார் உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை' அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றும், ‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை உணர்த்துகிறது.. குழந்தையுடன் இருக்கும் தாய்க்கு நிகரான அழகான காட்சி உலகில் ஏதும் இருக்கமுடியாது.. இறைவன் அனைத்து உயிர்களுக்கும் உடனிருக்க முடியாது என்ற காரணத்தால் தன் பிரதிநிதியாக தாயைப் படைத்தார்..

அம்மாவை பற்றி மகள் எழுதிய கடிதம் எப்படி இருக்கிறது பாருங்கள்? | See how the daughter's letter about her mother looks?

அம்மாவை பற்றி மகள் எழுதிய கடிதம் எப்படி இருக்கிறது பாருங்கள்?

Category: அம்மா

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது... ப்ளீஸ் என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..

தாயின் கருவறையிலே வேலை செய்யும் கிரகங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா? | Let us know about the planets working in the womb of the mother?

தாயின் கருவறையிலே வேலை செய்யும் கிரகங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?

Category: அம்மா

மனிதனின் உடலில் பஞ்சபூதம் இயங்கும் ஆனால் ஒரு தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைக்கு நான்கு பூதம் தான் வேலை செய்யும் தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளியே வந்த பின்பு தான் 5வது பூதம் தன் வேலையை செய்யும். இதைத் தான் ஜோதிடத்தில் குழந்தை பிறந்த நேரம் லக்கனம் எடுத்துக் கொண்டும் அன்றயை சோச்சாரப்படியும் ஜாதகம் கணிப்பார்கள்.குழந்தை பிறந்த பின்புதான் நவகிரகங்கள் வேலை செய்யும், என்றால் இந்த கிரகங்கள் தாயின் கருவறையில் இருந்தே வேலை செய்யும். இதைத்தான் கர்பகாலம் சென்ற இருப்பு என ஜாதகத்தில் எழுதுவார்கள்.நவகிரகங்கள் கர்ப்பகாலத்தில் எவ்வாறு தன் வேலையை செய்கிறது என்பதை பற்றி பார்ப்போம். கர்ப்பம் 1. முதல் மாதம் சுக்கிரனின் ஆளுகை விந்து இன்னும் திரவ நிலையிலேயே இருக்கும். 2. இரண்டாம் மாதம் அதிபர் செவ்வாய் உருவம் பெற ஆரம்பிக்கிறது. 3. மூன்றாம் மாதத்திற்கு குரு அதிபதி ஆகிறார். அங்கங்கள் உருவாகின்றன. 4. நான்காம் மாதம் சூரியன் எலும்புகள் உருவாகின்றன. 5. ஐந்தாம் மாதம் சந்திரன் தோல் தோன்றுகிறது. 6. ஆறாம் மாதம் சனி உரோமங்கள் உருவாகின்றன. 7. ஏழாம் மாதம் புதன் நரம்பு மண்டலங்கள் விருத்தி செய்கின்றன.

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு தாய் கூறும் அறிவுரைகள். | A mother's advice to her daughter about to get married.

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு தாய் கூறும் அறிவுரைகள்.

Category: அம்மா

உன் விருப்பம் போலவே உனக்கொரு வரன் வந்திருக்கிறதை கண்டு அப்பாவும் நானும் மிகவும் மகிழ்ச்சியுற்றோம். வெகுவிரைவில் உன் திருமணத்தை காண ஆவலாக உள்ளோம். நீ பக்குவப்பட்டிருப்பாய் என தெரிந்தும் சில குறிப்புகளை சொல்கிறேன். மனதில் வைத்துக்கொள். • வருடம் முழுவதும் மீனை எதிர் பார்க்காதே. சோற்றில் சாமபாரை பார்த்ததும் என்னிடம் சண்டையிடுவது போல் சண்டையிடாதே. இனியாவது தட்டில் வைக்கும் அத்தனையையும் சாப்பிட கற்றுக்கொள். • 25 வருட உணவு சுவையில் பெரும் மாற்றம் வரும். அது சரி, நீ காபியே அடுத்தவர் வீட்டில் குடிக்க மாட்டாய் சுவை மாறும் என்று. என் அன்பு மகளே, எல்லா சுவையும் சுவையே என்று ஏற்றுக்கொள். • இது வரை நீ ஓடி ஆடிய வீதி போன்று இருக்குமா? இதுவரை நீ பழகிய மனிதர்கள் போன்று இருப்பார்களா? புது மனிதர்கள் என்று அச்சம் கொள்ளாதே. அன்பு அகில உலகத்திற்கும் பொதுவானது தானே? அவர்களும் மனிதர்கள் தானே? அன்புடன் எவரையும் எதிர்கொள்.அன்பினால் உலகையே ஆளலாம் ஒரு குடும்பத்தை ஆண்டுவிட முடியாதா உன்னால் ? • அடிக்கடி எனக்கு போன் செய்து உன் புகுந்தகத்தில் நடப்பதை என்னுடன் பகிர்ந்துகொள்ளாதே. அது உன் கணவனுக்கு சலிப்பை தரும். புகுந்தகத்தில் நடப்பதை பிறந்தகத்திற்குள் கொண்டு வராதே. • உனக்காக ஒட்டு மொத்த குடும்பமும் அனுசரிக்க வேண்டும் என்பதை விட அவர்களுக்காக நீ ஒருத்தி அனுசரித்து செல்லலாம். தவறில்லை.

அம்மா | Mother

ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார்.

: அம்மா - தாயிற் சிறந்த கோவிலும் இல்லை [ அம்மா ] | : Mother - There is no better temple for Mother in Tamil [ Mother ]

அம்மா

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை

ஒரு பெண்

தனது ஒரேயொரு மகனுடன்

வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண்

இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார். கணவரின்

இறப்பிற்கு பின்பு அவளது வாழ்வின்

ஒவ்வொரு நொடியும் தன் மகனின் எதிர்கால

வாழ்வை குறித்த சிந்தனையாகவே இருந்தது.

தன்னிடம் இருந்த சொத்துக்களில்

ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல

பள்ளியில் சேர்த்தாள்.

மீதி சொத்தை தனது மகனின்

கல்வி தொடர்பான செலவுகளுக்கு தயார்

செய்திருந்தாள்.

 

நல்ல ஒழுக்கமிக்க மகன் இரக்கமானவன்

புத்திசாலி ஊரில் எல்லோரும் புகழும்

வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன

பரிட்சையில் முதல் தரத்தில்

தேறினான்

இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த

தாய் ஆவலுடன்

பாடசாலை நோக்கி ஓடினாள் மகனின்

வகுப்பறை எது என

அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்

இறைவனை புகழ்ந்தாள் சந்தோஷத்துடன்

வீடு வந்து அவனுக்கு பிடித்தமான

உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.

மகனின் வருகையை எதிர்பார்த்து வழி மேல்

விழி வைத்து காத்திருந்தாள் மகன்

வந்தவுடன் வாஞ்சையுடன் அருகில்

சென்றாள். ஆனால் மகன்

முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன்

பேசவில்லை. நேராக அறைக்குள்

சென்று படுத்து விட்டான்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

பதற்றத்துடன்

ஓடிச்சென்று என்னவென்றாள்

கவலையுடன். மகன் சொன்னான், " நீ ஏன்

என் பள்ளிக்கு வந்தாய்?.

அங்கு அழகான பணக்காரர்கள்

மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என்

நண்பர்கள் என்னை குருடியின் மகன் என

கூப்பிடுகின்றனர். இது பெரிய

அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என்

பள்ளிகூடம் பக்கமே வராதே" என கத்தினான்

கோபமாக. அதிர்ந்து போனாள் தாய்.

ஆனாலும் மகனின் சந்தோஷம்

கருதி இனி அவ்வாறு நடக்காது என

சத்தியம் செய்தாள்.

 

இப்போது அவனது சுபாவம் மேலும்

மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும்

நண்பர்கள் முன் வர வேண்டாம் என

தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க

சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற

பின், தனக்கு குருடியுடன்

இருப்பது வெட்கம் என்றும், தான்

ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான்.

ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான்.

அவள் கதறி துடித்தாள், தினமும் தன்

மகனை நினைத்து.

இறுதி பரீட்சையில் தேர்ச்சி பெற்று மருத்துவ

கல்லூரிக்கு மகன்

தேர்வானது அவளுக்கு தெரியவந்தது.

தலை நகர் சென்று படிக்க வேண்டும்.

நிறைய செலவாகும். தனது மீதமிருந்த

அனைத்து சொத்துக்களையும்

விற்று மகனுக்கு கொடுத்து அனுப்பினாள். 5

வருடம் பறந்து சென்றன.

இப்போது அவளது மகன் ஒரு டாக்டர்.

அவனை பார்க்க ஆசையாய் இருந்தால் பல முறை

முயற்ச்சி செய்தும் அவனனை பார்க்க முடியவில்லை அவன் அனுமதிக்கவும் இல்லை. ஒரு கடிதம் மகனிடம்

இருந்து வந்தது.

 

அதில், அம்மா நான்

இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த

டாக்டர்களில் ஒருவன். எனக்கும் ஒரு செல்வந்தரின் மகளுக்கும் திருமணம் நடக்க உள்ளது. அவளும் ஒரு டாக்டர். உன்னை போல் குருடியின்

மகன் டாக்டர் என தெரிந்தால்

என் திருமனமும்,கௌரவம் பாதிப்படையும். ஆதலால்

நான் இந்த நாட்டை விட்டும் உன்

பார்வையை விட்டும் கண் காணாத தேசம்

செல்கிறேன். இனி என்னை தேடாதே இது தான் அந்த கடிதத்தின்

வரிகள். துடித்து போனாள் தாய்.

சில வருடங்கள் கடந்தன. முதுமையும்,

வறுமையும்,

அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம்

எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக

ஒரு பணக்கார வீட்டில் உணவுக்காக

வேலை செய்து வந்தாள் அந்த தாய். அந்த

வீட்டின் எஜமானி இளம்வயது பெண். நல்ல

இளகிய குணம் படைத்தவள்.

இரட்சிக்கபட்டவள். அவளும்

ஒரு டாக்டராகவே இருந்தாள். இந்த

தாயை தனது தாயாக

நேசித்து போஷித்து வந்தாள். எல்லாம்

நன்றாகவே நடந்தன. அந்த எஜமானியின்

கணவன் அமெரிக்காவில்

இருந்து திரும்பி வந்தான்.

தனது எஜமானியின் கணவர் வருகிறார்

என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல

உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள்

அந்த வேலைகாரியான குருட்டு தாய்.

வீடு வந்த அவளது கணவன், சாப்பிட

அமர்ந்தான். உணவை இளம் மனைவி பரிமாற ஆசையாக சாப்பிட்டான். திடீரென அவன்

முகம் மாறியது. டக்கென்று திரும்பி

தன் மனைவியின்

முகத்தை பார்த்து கேட்டான், "இதனை நீ

சமைத்தாயா?" என்று.

மனைவி குழப்பத்துடன்

இல்லையே என்றாள். " அப்படியானால் யார்

சமைத்தது? என்றான். வீட்டு வேலைக்காரி சமைத்தாள்

என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன்

அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான்.

உள்ளே அவனது குருட்டு தாய்.

அதிர்ந்து போனான். இவள்

இன்னும் உயிரோடு இருக்கிறாளா என்று ஆத்திரமும்,

வெறுப்பும் அவன்

மூளையை ஆட்டுவித்தது. அந்த தாய்க்கோ என்

மருமகளா என் எஜமானி என்றும் தன் மகனை கண்ட சந்தோஷமும்,

மகிழ்ச்சியும் அந்த தாயின்

இதயத்தை நிரப்பின. உணர்ச்சிகளால்

இருவருமே பேசவில்லை.

மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த

கணவன் சொன்னான் தன்

மனைவியை பார்த்து, "இந்த

குருடியை உடனடியாக

அனுப்பி விடு என்று கத்தினான் அவன் சத்தம். அடுப்படியில் நின்ற அந்த

அபலை தாயின் இதயத்தில்

முட்டி மோதி நின்றது.

துவண்டு போனாள்.

வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ

வேண்டுமா என எண்ணி அழுதாள்.

அந்த இளம் மனைவியோ அது தனது கணவனின் தாய் என்று தெரிந்ததும் இங்கேயே இருக்கட்டும் என்று எவ்வளவோ சொல்லியும்

தனது கணவனின் பிடிவாதமும், கோபமும்,

ஆவேசமும் எல்லை மீறி செல்லவே

வேறு வழியின்றி அந்த தாய்க்கு போதுமான

பணம் கொடுத்து முன்பு அவள் வாழ்ந்து வந்த

ஊருக்கே மீண்டும் அனுப்பி வைத்தாள் வேதனையுடன்...

காலம் கடந்தது

இப்போது அந்த டாக்டரின்

தலை மயிர்கள் பழுக்க

ஆரம்பித்து விட்டன. உடல் பலம்

சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின்

சுயநலன், நன்றி மறத்தல் போன்ற

காரணங்களினால் கருத்து மோதல்

ஏற்பட்டு அவன் மனைவியும்

விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம்

புரிந்து கொண்டாள்

 

இப்போது டாக்டரிடம் பணத்தை தவிர

வேறு எதுவும் இருக்கவில்லை.

எதிர்காலங்கள் சூனியமான

நிலையில், ஆறுதலுற்கு கூட

யாரும் இன்றி தனி மரமாக நின்றான்.

மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த

துரோகங்கள், அநியாயங்கள்,

நோகடிப்பு அவன்

உள்ளத்ததை வந்து தொட ஆரம்பித்தன.

ஒரு முறை ராத்திரியில்

எழுந்து அம்மா என கதறி அழும்

அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின் புரிந்தது.

தாயை பார்க்கவேண்டும் என நினைத்தான். ஆனால் போக வில்லை.

 

ஒரு நாள் காலையில் அவன்

தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது.

அவனது தூரத்து உறவினர் ஒருவர்

பேசினார். "உன் தாய் மரண தறுவாயில் இருக்கிறாள் நீ உடனே வா என்பதே அந்த

செய்தி. உடனடியாகவே அவன்

தனது காரில் கிளம்பி தன் தாய் இருக்கும்

இடத்திற்கு சென்றான்.

அவன் சென்ற போது,

அவளது உயிர் பிரிந்து விட்டது.

உயிர் போன நிலையில் அவளை கட்டிலில்

படுக்க வைத்திருந்தனர். இப்போது அம்மா

என கண்ணீர் விட்டு

கதறினான்... அழுதான்..

தன் தாயை நல்ல முறையில் அடக்கம்

செய்ய உதவினான். எல்லாம் முடிந்தது

அப்போது ஒரு கடிதத்தை அவனது உறவினர்

கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன்

வருவானாக இருந்தால் மட்டும்

கொடுக்குமாறும், இல்லையெனில்

எரித்து விடுமாறும் தயார்

கடைசி தருவாயில் வேண்டிக் கொண்டதாகவும்

அவர் சொன்னார். பிரித்து வாசித்தான்.

அவன் கண்களில் இருந்த கண்ணீர் வழிந்தது.

 

அதில் இருந்த வரிகள் இதுதான்....

 

என் அன்பு மகனே , எனக்கு தெரியும், என்

உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும்

பிடிக்காது என்று அதனாலேயே,

எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால்

மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்

மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது.

அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த

விஷயம்

மகனே நான் குருடி தான்.

உன் தாய் குருடியாக இருந்திருக்க

கூடாது தான். எனக்கு உன் உள்ளம்

புரிகிறது.

உன் உணர்வுகளை நான்

பெரிதும் மதிக்கின்றேன். நான் ஒரு நாளும்

உன்னை சபித்ததோ, கோபப்பட்டதோ கிடையாது. உன் அப்பா இறந்தவுடன்

எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும்

என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம்

முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன் ஆனால் நான்

உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ

புரிந்து கொள்ளாமல் போய் விட்டாயே??*

 

மகனே உனக்கு தெரியுமா நான் ஏன்

குருடியானேன் என்று

அப்போது உனக்கு சின்ன வயது.

சாலையில் ஓரத்தில நீ விளையாடிக்கொண்டிருந்தாய்.

ஏதோ ஒரு வித பொருள் உன் கண்ணில்

பட்டு உனக்கு ஒரு கண் குருடாகி விட்டது.

டாக்டர்கள் இன்னொரு வெண்படலம்

இருந்தால் மட்டுமே உனக்கு

பார்வையை கிடைக்க வைக்கலாம்

என்றனர். என்ன

செய்வதென்று தெரியவில்லை. நேரமும்

போதாது.

அதனால்....

எனது ஒரு கண்ணை உடனடியகாவே தானம்

செய்து உனக்கு பார்வை கிடைக்க

செய்தேன்

எனது கண்தான் இன்று உன்

கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தையும்

ஏன் இந்த கடிதத்தையும் கூட அந்த கண்களாளேயே

பார்க்கிறாய்..

 

உனக்கு இதுவும் அவமானம் என்று

உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடாதே

அதை

அப்படியே விட்டு விடு. ஏனென்றால்

அந்த கண்களால் தான்

நான் உன்னை பார்த்துக் கொண்டிருப்பேன் என் அன்பு மகனே

இப்படிக்கு,

என்றுமே அன்புள்ள,

உன் அம்மா....

 

இதை படித்த அந்த டாக்டர் மகன் உருன்டு புரண்டு அழுதானாம்..

 

இதை படித்த எனக்கு கண்கள் கலங்கின😥😥😥😥😥😥😥

உண்மை .

தயதுசெய்து பிறருக்கு பகிரவும்....     

 

Mother is  God👏👏👏♦♦     ...


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

: அம்மா - தாயிற் சிறந்த கோவிலும் இல்லை [ அம்மா ] | : Mother - There is no better temple for Mother in Tamil [ Mother ]