உறவுகள்

ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து எது?

வீடு | அனைத்து வகைகள் | வகை: உறவுகள்
அப்பா | Dad

அப்பா

Category: இல்லறம்: உறவுகள்

ஒவ்வொரு அப்பாக்களும், ஏன் நாளை அந்தப் பொறுப்பை ஏற்கத் தயார் நிலையில் இருக்கும் மகன்களும் கண்டிப்பாய் ஒரு முறை கடைசி வரை படித்துப் பார்க்கக் கூடிய அவசியமான பதிவு. உணர்வுகள் பேசும் உரையாடல்கள் என்று கூடச் சொல்லலாம்.

மகள்களை பெற்ற அப்பாவா? | A father of daughters?

மகள்களை பெற்ற அப்பாவா?

Category: இல்லறம்: உறவுகள்

உங்களுக்கான பதிவு தான் இது. அப்பா என்று முதல் முறை என் அழைப்பை கேட்டு எப்படி ஆனந்தம் அடைந்திருப்பார் என்று...

கணவன் மனைவி எப்போதும் சந்தோசமாக இருப்பது எப்படி? | How can husband and wife always be happy?

கணவன் மனைவி எப்போதும் சந்தோசமாக இருப்பது எப்படி?

Category: இல்லறம்: உறவுகள்

கணவன் மனைவி சேர்ந்து செலவிட எப்படி டைம் கண்டு பிடிப்பது? அல்லது நேரத்தை எப்படி உருவாக்குவது? எப்படி மகிழ்ச்சியாக இருப்பது? அதற்கு சில வழி முறைகள் உண்டு.

ஒரு கணவனைப் பற்றி மனைவியின் எழுத்துக்கள் | A wife's writings about a husband

ஒரு கணவனைப் பற்றி மனைவியின் எழுத்துக்கள்

Category: இல்லறம்: உறவுகள்

ஆண் என்பவன்... கடவுளின் உன்னதமான படைப்பு. சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..

பெண்மையின் பெருமை | Pride of womanhood

பெண்மையின் பெருமை

Category: இல்லறம்: உறவுகள்

குடும்ப வாழ்வில் கணவன் மனைவி உறவு புனிதமானது தெய்வீகமானது.

திருமணத்தில் மூன்று முடிச்சு போடுவது ஏன்? | Why tie three knots in marriage?

திருமணத்தில் மூன்று முடிச்சு போடுவது ஏன்?

Category: இல்லறம்: உறவுகள்

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் ஆகும். ஒரு திருமணத்தில் ஆயிரம் ஆயிரம் சடங்குகள் இருந்தாலும் அதில் தாலி கட்டுவதற்கு தான் அதிக முக்கியத்துவம் உள்ளது.

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு நேர்ந்த அவமானம்... | Shame on childless couples...

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு நேர்ந்த அவமானம்...

Category: உறவுகள்

திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத காரணங்களால் மனமுடைய ஆரம்பித்த நேரம்.

விடுமுறை நாட்களில் எங்கே செல்ல வேண்டும்? | Where to go on holidays?

விடுமுறை நாட்களில் எங்கே செல்ல வேண்டும்?

Category: உறவுகள்

1. விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லுங்கள். 2. எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்காதீர்கள்.

இப்படி உறவு அமைந்தால் வரம் ... வாழ்க்கையின் பலம்... படிங்க.. | If the relationship is like this, it is a blessing... the strength of life... read..

இப்படி உறவு அமைந்தால் வரம் ... வாழ்க்கையின் பலம்... படிங்க..

Category: உறவுகள்

அவங்க நம்மல விட்டுப் போய் இருக்கலாம்.. எல்லாத்தையும் மறந்து இருக்கலாம்.. ஏன்.. அவசரப்பட்டு இன்னொரு Relationship-க்குள்ளக் கூட போய் இருக்கலாம்..🫡

மனைவி என்றொரு தெய்வம் பற்றி அறிய வேண்டுமா? | Do you want to know about a goddess called wife?

மனைவி என்றொரு தெய்வம் பற்றி அறிய வேண்டுமா?

Category: உறவுகள்

திருமணமாகி, 35 ஆண்டுகளில் நினைக்காத மனைவியை, அவள் இறந்த இந்த மூன்று மாதங்களில் அதிகப்படியாக நினைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்கம். ஆரம்ப காலத்திலிருந்தே ராமலிங்கத்திற்கு, மனைவி லட்சுமி மீது எந்தவித ஈடுபாடும் இருந்ததில்லை. 'மனைவி என்பவள், தன் தேவைகளை நிறைவேற்றி, சேவகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட வேலையாள்...' என்ற நினைப்பில் தான், இத்தனை ஆண்டுகளும் வாழ்ந்திருந்தார். ஆனால், மனைவி இறந்த பின், இந்த மூன்று மாதங்களில், அவளைப் பற்றி நினைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அமைந்து, மனைவியின் செயல்கள் ஒவ்வொன்றிற்கும் அர்த்தங்கள் புரிய ஆரம்பித்தன. அதிலும், இன்று அவருடைய மருமகள் நடந்து கொண்ட விதத்தை நினைக்கையில், 'நாம் ஏன் இன்னும் உயிருடன் இருக்க வேண்டும்... நமக்கு சீக்கிரம் சாவு வந்து விடக் கூடாதா...' என்று எண்ணத் துவங்கி விட்டார் ராமலிங்கம். ராமலிங்கத்திற்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததால், உணவில் பாதி உப்பு தான் சேர்க்க வேண்டும் என கூறியிருந்தார் டாக்டர். அதனால், கடந்த 15 ஆண்டுகளாகவே சமையலில் உப்பின் அளவை குறைத்து, அப்பளம், ஊறுகாய், கருவாடு போன்ற உப்பு அதிகமான பொருட்களை தவிர்த்து, அவரது ரத்த அழுத்தம் சீராக இருக்கும்படி வைத்திருந்தாள் லட்சுமி. மதியம் மருமகள் சமைத்திருந்த மீன் குழம்பில் உப்பும், காரமும் சற்று தூக்கலாக இருந்தது. அதனால், பிரஷர் கூடிடுமோ என்ற பயத்தால், ''ஏம்மா... குழம்புல உப்பை கொஞ்சம் குறைச்சு போடக் கூடாதா...'' என்றார். ''குழம்பை சாதத்துல பிரட்டி சாப்பிட்டா சரியாத் தான் இருக்கும்; நீங்க ரசம் மாதிரி ஊத்தி சாப்பிட்டா, உப்பு தூக்கலாத் தான் தெரியும்,''என, வெடுக்கென கூறினாள் மருமகள். இதைக் கேட்டவுடன் ராமலிங்கத்திற்கு, மனைவியின் நினைப்பு வந்தது. பார்த்துப் பார்த்து சமைத்தாலும் என்றாவது ஒருநாள் சரியாக சமைக்கவில்லை என்றால், சாப்பாட்டு தட்டை தூக்கி எறிவார். அப்போது கூட எதுவும் பேசாமல், மவுனமாக கண்ணீர் விடுவாள் லட்சுமி.

உறவுகள் | Relationships

உறவுகளைப் பாதுகாத்து மேம்படுத்துவது தான் மிகக் கடுமையானது.... முறிப்பது மிகவும் சுலபமானது. கிடைக்கும் அன்பைப் பேணிக் காக்க வேண்டும்.......

: உறவுகள் - ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து எது? [ உறவுகள் ] | : Relationships - What is the greatest asset a parent can leave to their children? in Tamil [ Relationships ]

உறவுகள்

ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து எது?

பெரிய கல்லூரியில் இடம் கிடைத்துஅந்தகல்லூரியை அனுகிய மாணவிக்கு அவர்கள் உடனே கட்டச்சொன்ன அனுமதித் தொகையை கேட்டபோது மயக்கம் வராதகுறை. அவ்வளவு பணத்திற்கு எங்கே போவதுதந்தை அரசாங்கத்தில் உயர்ந்த அதிகாரத்தில் பணியாற்றியபோதும் மிக நேர்மையானவர். அவருக்குக்கீழ் உள்ளவர்கள்கூட பெரிய வீடு வாகணம் என்று ஆடம்பரமாய் வாழ இவர்கள் குடும்பம் மட்டும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

 

ஓய்வுபெறும்போது ஒரு சிறிய வீட்டை சொந்தமாக பெறுவதற்கே படாதபாடுபட்டார். குழந்தைகளுக்கு நல்ல பள்ளியில் கல்வி வழங்கியதை தவிர வேறெதுவும் அவர்கள் ஆசைப்பட்டபடி செய்துகொடுத்ததில்லை. மிக வேகமாக அவர் வானுலகம் போய்விட்டார்.

 

அவரது குடும்பமோ ஒவ்வொரு ரூபாயையும் யோசித்து செலவு செய்யவேண்டிய நிலை. அதனால் அவளுக்கு சிறுபிள்ளையாய் இருக்கும்போதே அப்பாவின்மீது ஒருவித கோபம் மட்டுமே இருந்தது. இன்றும் தனது இயலாமையை நினைத்து அப்பாவின் மேல் வந்த கோபத்தை சகித்துக்கொண்டுசரி இந்த பெரிய கல்லூரியில் நம்மால பணம் கட்டி சேரமுடியாதுவேறு ஏதேனும் சிறிய கல்லூரியில் சேரவேண்டியதுதான்என்று மதிப்பெண் எடுத்தும் சேரமுடியாத துக்கத்துடனேயேதுணைக்கு வந்த அம்மாவையும் கூப்பிட்டுகொண்டு கல்லூரி வாசல் வராண்டவை அடைந்தவள்ஏக்கமாய் அந்தக் கல்லூரியை திரும்பிப் பார்த்துக்கொண்டு ஒருநிமிடம் நின்றாள்.

 

யாரோ தனது தந்தையின் பெயரைச்சொல்லி "நீ அவரது மகள் தானேயம்மா" என்று கேட்டது காதில் விழவேதிரும்பி அவரை கவணிக்க நல்ல உயர்தர ஆடையணிந்து பார்வையிலேயே பெரிய செல்வந்தர் என்பது தெரியும்படியான கம்பீர உருவத்துடன் ஒரு பெரியமனிதர். அவர் வந்த உயர் ரக வாகணம் வாசல்வரை அனுமதிக்கப்பட்டு அவர் இறங்கியதும்அப்பொழுதுதான் திரும்பி ஒரு ஓரத்தில் சென்று நின்றது. அந்த மாணவி சுதாரித்து ஆமாம் சார் என்று சொல்லும் முன்னேஎனக்கு உன் தந்தையை நண்கு தெரியுமம்மா. இந்த ஊருக்கு வந்து கையிலிருந்த பணத்தையெல்லாம் போட்டு முதன்முதலில் ஒரு சிறு தொழிலை துவங்கவிருந்தபோதுஅரசு அனுமதிபெறுவதற்காய் மிகவும் சிரமப்பட்டேன். அதிகாரிகளால் பணத்திற்காய் அலைக்கழிக்கப்பட்டேன். உனது தந்தை தான் அதற்கான அனுமதியை ஒரு பைசா கூட எனக்கு செலவு வைக்காமல் வழங்கினார். அதன்பின் மெல்ல வளர்ந்து பலநிறுவனங்களை துவங்கி இன்று நகரின் ஒரு முக்கியமான ஆளாகிவிட்டேன். அதற்கிடையிலும் சில முறை அலுவல் காரணமாக உன் தந்தையை பார்த்ததுண்டுஅவரது உதவிக்காகநான் நன்றாக இருக்கிறேன் எனது மனத்திருப்திக்காக இதை வைத்துக்கொள்ளுங்கள் என்று எது கொடுத்தாலும் கூட சிரித்தபடியே ஒதுக்கி விடுவார்எவ்வளவு நேர்மையான மனிதர்உன்னையும் தாயாரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியம்மா என்று கூறியவர். "கல்லூரியில் சேர வந்தீர்களாஎந்த பிரிவில் சேர்ந்தீர்கள் எனக்கேட்டார்.

 

அந்தமாணவி தடுமாறியபடி ஆமாம்சார் இந்தப்பிரிவில் சேர வந்தேன் என்று கூறியவள்பணம் இல்லாததை கூற மனதின்றிஎல்லாம் சரியாகிவிட்டது இன்னொரு நாள் வந்து தான் பணம் கட்டி சேரவேண்டும் என்று கூறினாள். அவரோ எனக்காக கொஞ்சநேரம் இங்கே பொறுத்திருங்களம்மா நான் உள்ளே போய் முதல்வரை பார்த்துவிட்டு உடனே வருகிறேன் என்று கூறியபடியே பதிலுக்கு காத்திருக்காமல் உள்ளே போய்விட்டார். சில நிமிடங்களிலேயே கல்லூரி பணியாளர் வந்து அவர்களை மீண்டும் முதல்வர் அறைக்கு அழைத்துக் கொண்டுபோகஅங்கே அமர்ந்திருந்த அந்த பெரிய மனிதரிடம் மிகுந்த மரியாதையுடன் எதையோ பேசிக்கொண்டிருந்த கல்லூரி முதல்வர்மாணவியைப் பார்த்ததும் அவளிடம்இந்த சேர்க்கை புத்தகத்தில் கையெழுத்துப்போடம்மாஉன்னை சாருக்காக ஒதுக்கியிருந்த இட ஒதுக்கீட்டில் சேர்த்தாகிவிட்டதுஇனி உன் படிப்பு முடியும் வரை இங்கே எந்தப் பணமும் கட்டவேண்டியதில்லை என்று கூறவேஅவள் அந்தப் பெரிய மனிதரைப் பார்த்து சார் என்று ஏதோகூற வாயெடுக்கஅவர் அவளை மேலே பேசவிடாமல் கையமர்த்திவிட்டு"உன்தந்தை எனக்கு செய்த உதவிக்கும் அவரது நேர்மைக்கும் முன் இது ஒன்றுமே இல்லையம்மா" என்று கூறிவிட்டுமுதல்வரைப் பார்த்து "அப்ப நான் வருகிறேன்" எனக்கூறியபடி வேகமாக வெளியேறிப் போய்விட்டார்.

 

அந்த மாணவி படித்துமுடித்து ஒரு பொறுப்பான அரசு உத்தியோகத்தில் இருந்தபோதுஅவரே ஒரு பொதுவிடத்தில் கூறியது இது. அன்றுமுதல் தனது தந்தையின்மீது அபரிமிதமான மரியாதை வந்ததுடன்தினம் காலையில் அவரது படத்தின்முன் தொழுதுவிட்டு அவர் காட்டிய வழியிலேயே பணிபுரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டு நெறியோடு வாழவேண்டும் என்பதை தங்களைப்பார்த்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும்படி செய்தால்அதுதான் பெற்றோர்கள் அவர்களுக்கு விட்டுச்செல்லும் பெரியசொத்து.

இரு வழிப்போக்கர்கள் பேசிக்கொண்டே சென்ற போது வழியில் ஒரு நதி குறுக்கிட்டது.

அந்த நதியில் பாலம் எதுவும் கட்டப்படவில்லை.

நீந்திக் கடப்பதைத் தவிர வேறு வழியில்லை. நதியும் குறுகலாகத்தான் இருந்தது. எனவே இருவரும் தைரியமாக நீந்திக் கடக்க முடிவு செய்தனர்.

 

இருவரில் ஒருவருக்குத் தான் நீச்சல் நன்றாக வரும். அடுத்தவர் அரைகுறை தான். இருவரும் நீந்த ஆரம்பித்தார்கள்.

 

.சிறிது நேரம் கழித்துப் பார்த்தால்நன்றாக நீந்தக் கூடியவன் ஒரு சுழலில் மாட்டிக் கொண்டு திணறினான்.

 

அனுபவம் அதிகம் இல்லாதவனோ விறுவிறுவென்று நீந்தி சென்று மறு கரையை அடைந்தான்.

 

.திரும்பிப் பார்த்தபோது தன உடன் வந்தவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.

 

உடனே மீண்டும் நீரில் குதித்து நீந்தி, அவனைக் காப்பாற்றி கரை கொண்டு வந்து சேர்த்தான்.

 

.மெதுவாக தன்னிலை அடைந்த முதல்வன்தன்னைக் காப்பாற்றியதற்கு அடுத்தவனுக்கு நன்றி சொன்னான்.

 

பின் ஆச்சரியத்துடன் அவனிடம் கேட்டான்,'

 

'உனக்கு நீச்சலில் அதிக அனுபவம் இல்லை என்று சொன்னாயே! பின் எப்படி சிரமம் எதுவும் இல்லாமல் தைரியமாக நதியைக் கடந்தாய்?''

 

.இரண்டாமவன் தனது இடுப்பிலிருந்த ஒரு பையைத் தொட்டுக் காண்பித்தவாறு சொன்னான்,

 

''இந்தப் பையில் நான் உழைத்து சம்பாதித்த தங்கக் காசுகள் உள்ளன. என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் ஒரு வருடமாகப் போராடி உழைத்து சேர்த்த சேமிப்பு இது. இதன் கனம் தான் என்னை நதியை கடந்து வர உதவியது.

 

.நான் நீந்தும்போது என் மனைவியும் என் குழந்தைகளும் என் தோளில் அமர்ந்தவாறு எனக்கு வழி காட்டினார்கள்.'' என்றான்.

எதற்க்கும் கவலை படாதே....

உனக்கான நேரம் வரும் வரை காத்திரு.....

இரண்டு கொய்யாக்களும் ஒரே மரத்தின் ஒரே கிளையில் ஒன்றாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று ஏற்கனவே பழுத்துவிட்டதுமற்றொன்று பழுக்க அதிக நேரம் தேவைப்படலாம்.

 

இந்த கொய்யாப்பழங்கள் மூலம் இயற்கை நமக்கு ஒரு முக்கியமான பாடம் கற்பிக்கிறது.

 

நம்மைச் சுற்றியிருக்கும் மற்றவர்கள் வெற்றியை அடையாதபோது​​நாம் வெற்றி பெறவில்லை என்று அர்த்தம் இல்லை. நமக்கு சரியான நேரம் இன்னும் வரவில்லை என்றுதான் அர்த்தம்.

 

எனவேநாம் பொறுமையாக இருக்க வேண்டும்விரக்தியால் கைவிடக்கூடாது. நாம் பழுத்த நிலையை அடைய இன்னும் சில நாட்களே இருக்கலாம்.

 

நினைவில் கொள்ளுங்கள்நம்முடைய நேரம் வரும்ஆனால் அதற்கு பொறுமையும் விடாமுயற்சியும் தேவை.

 

கொய்யா பழுக்கக் கிளையில் தொங்குவதைப் போல் அல்லாமல்சரியான திசையில் சரியான அளவு முயற்சி எடுத்தால்தான் நம் பொறுமைக்குப் பலன் கிடைக்கும்.

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

உறவுகளைப் பாதுகாத்து மேம்படுத்துவது தான் மிகக் கடுமையானது....

 

முறிப்பது மிகவும் சுலபமானது. கிடைக்கும் அன்பைப் பேணிக் காக்க வேண்டும்........

 

ஏற்றம் இறக்கம் இருந்தாலும்விட்டுக் கொடுக்கும் பண்பை வளர்த்துஉண்மையான உறவுகளைப் பொக்கிஷமாகக் கருத வேண்டும்.......

 

 அஹங்காரமும்வெறுப்பும் இருப்பதால் கண்மூடித்தனமாக முடிவுகளை எடுக்கின்றோம்.....

 

 ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்துப் புரிந்துக் கொண்டுமற்றவர்களையும் சந்தோஷப் படுத்திநாமும் சந்தோஷமாக இருந்து வேலிக்குப் பதிலாகப் பாலங்களை அமைக்க வேண்டும்.....

 

எந்த வாகனம் ஓட்டுகின்றீர்கள் என்பது முக்கியமில்லைஎவ்வளவு மக்களை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தீர்கள் என்பது தான் முக்கியம்.

 

வீட்டின் சதுரடி எவ்வளவு என்பது முக்கியமில்லைஎவ்வளவு மனிதர்களை ஆசையாக வரவேற்றீர்கள் என்பது தான் முக்கியம்.

 

அலமாரியில் எவ்வளவு ஆடைகள் இருக்கின்றது என்பது முக்கியமில்லைஎவ்வளவு பேருக்குத் துணிகள் கொடுத்து உதவி செய்தீர்கள் என்பது தான் முக்கியம்.

 

எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லைநண்பனாக யாருக்கு இருந்திருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

 

எங்கு வசித்து வருகிறீர்கள் என்பது முக்கியமில்லை. அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் எவ்வளவு அக்கறை காண்பித்தீர்கள் என்பது தான் முக்கியம்.

 

தோலின் நிறம் முக்கியமில்லை. பண்பும் குணமும் தான் முக்கியம்.


எதற்காக வாழ்கிறோம் என்று நினைக்காதே....

 

எப்படி வாழ்கிறோம் என்று நினைத்து வாழுங்கள்...


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

: உறவுகள் - ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து எது? [ உறவுகள் ] | : Relationships - What is the greatest asset a parent can leave to their children? in Tamil [ Relationships ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: உறவுகள்