தோல்வியை தாங்குவது எப்படி?
Category: தன்னம்பிக்கை
வெற்றியெனும் ஆல மரத்துக்கு விதையாவது தோல்வியின் அனுபவங்களே.
தன்னம்பிக்கை வரிகள்
Category: தன்னம்பிக்கை
☘ கடந்த காலம் கனவோடு போய்விட்டது..! ☘ நிகழ் காலம் நிழல் போல தொடர்கின்றது..! ☘ எதிர் காலமோ கற்பனையில் மிதக்கின்றது..!
விட்டதை விடு
Category: தன்னம்பிக்கை
ஒரு முறை ஒரு ஆசிரியர் தனது மாணவர்களிடம் பின்வருமாறு ஒரு கேள்வி கேட்டார்:
அனுபவமே ஆசான்
Category: தன்னம்பிக்கை
அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வது என்றால் எப்படி?.அதற்கு கோனார் நோட்ஸ் ஏதும் இருக்கா, யாராவது டியூஷன் எடுப்பாங்களா என்றெல்லாம் கேட்கப்படாது. நீங்களே தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
அவமானம்
Category: தன்னம்பிக்கை
நீ எங்கே அசிங்கப்படுகிறாயோ அந்த இடம் தான் வாழ்க்கையின் பாடத்தைக் கற்றுக் கொள்ள சிறந்த இடம் அதனால் அமைதியாக இருந்து கற்றுக் கொள்
எதிலும் வெற்றி பெற வேண்டுமா
Category: தன்னம்பிக்கை
எது வெற்றி என்பதில் பலருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கின்றன. ஆசைப்பட்டதை அடைவது, கனவுகளை நனவாக்குது, போட்டிகளில் ஜெயிப்பது, எதிலும் முன்னணியில் நிற்பது, தேர்வில் வெற்றிபெறுவது, நல்ல வேலையில் சேருவது, பதக்கங்களை வெல்வது, பிசினஸ், அன்பான குடும்பம், நிறைய பணம், சொந்த வீடு, கார், பங்களா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
வாழ்வின் நிலை அறிய வேண்டுமா?
Category: தன்னம்பிக்கை
சிரிப்பதற்கு வாய்ப்பு வரும்போதெல்லாம், வாய்ப்பை தவறவிடாமல் சிரித்து விட வேண்டும். சந்தோஷமாக இருந்தால் வாய் விட்டு சிரித்து விடுங்கள்..... சிரிப்பை அடகு வைத்தால் சீக்கிரம் நோயாளி ஆகி விடுவீர்கள்..!!
உத்வேக வார்த்தைகள்
Category: தன்னம்பிக்கை
ஒருவன் நம்மை மதிக்கவில்லையென்று நினைப்பதை விட மதிக்கிற அளவிற்கு அவன் இன்னும் வளரவில்லையென கடந்துசெல்..
தன்னம்பிக்கை கதை படிங்க ... நம்பிக்கை அதிகரிக்கும்...
Category: தன்னம்பிக்கை
ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம். அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.. அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ இவ்வளவு வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கே? கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது .
வாழ்க்கை பயணத்தில் உயர்வதற்கான வழிகள் தெரியுமா?
Category: தன்னம்பிக்கை
பந்தயக் குதிரை ஓடும் போது அருகிலுள்ள புல்லையோ, கொள்ளையோ பார்ப்பதில்லை.. ஏனெனில் அது தன் வெற்றி இலக்கை மட்டுமே மனதில் கொண்டு ஓடுகிறது..
மனதை சரியாய் வைக்க வேண்டிய வழிகள்
Category: தன்னம்பிக்கை
மனதுக்கு ஓய்வு கொடுங்கள் அது தரும் சுகம்! ''சும்மா கிடப்பதே சுகம்’ என்றார்கள் வாழ்வியல் ஞானிகள்.
மனதை தைரிய படுத்தும் கட்டுரை .. இதை பொறுமையாய் படிங்க...
Category: தன்னம்பிக்கை
சில மனிதர்கள், உங்கள் வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்லத்தான் செய்வார்கள் ....! அதனாலேயே உங்கள் வாழ்க்கை முடிந்தது என்று சொல்லிவிட முடியாது .....!! உண்மையில், அப்படி போனவர்களின் பங்குதான் உங்கள் வாழ்க்கையில் முடிந்து போகிறது ...!!!
முன்னேறிச் செல்ல வேண்டும் ஏன்?
Category: தன்னம்பிக்கை
ஒருமுறை கோயிலுக்குச் சென்ற ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை. பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை என்று முறையிட்டனர் கோயில் பணியாளர்கள்.
மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? விடுபடுவது எப்படி?
Category: தன்னம்பிக்கை
🌺 மன அழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் விளைவாக ஏற்படுவதில்லை🍂 🌺 உங்களை நீங்களே நிர்வகிக்க முடியாததன் விளைவாக ஏற்படுகிறது🍂
ஏன் பயம்? எதற்கு பயம் ஏற்படுகிறது?
Category: தன்னம்பிக்கை
நம்மை கோழையாக்குவதும் பயம்தான். நம்மை குற்றச் செயல்களில் இருந்து தற்காப்பதும் பயம்தான்...! இரண்டு விதத்தில் பயம் ஏற்படும். ஒன்று ஆழ்மனதில் பதிந்துவிட்ட நிரந்தர பயம். மற்றொன்று, அவ்வப்போது ஏற்படும் மறைந்து விடும் தற்காலிக பயம்...
வாழ்க்கையில் வெற்றியுடன் கூடிய அமைதி வேண்டுமா?
Category: தன்னம்பிக்கை
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் மனசுக்குள் நிறைந்துள்ளன. நீங்கள் மனதில் உள்ள சிந்தனைகளை வெளிக் கொண்டு வந்து, முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்... அமைதி கிடைக்கும்.
தகுதி
Category: தன்னம்பிக்கை
உயர்வு மனப்பான்மை நம்மைப் பற்றி மிகையாகக் கணிப்பீடு செய்கிறது.. தாழ்வு மனப்பான்மை நம்மை குறைத்து மதிப்பிட்டு போட்டியிலிருந்தே ஒதுங்க வைக்கிறது.. சமநிலை மனப்பான்மை அனைத்தையும் உள்ளது உள்ளப்படி துல்லியமாக கணிக்க உதவுகிறது!
மிகப்பெரிதாக ஆசைபடுங்கள் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம் உறவுகளே
Category: தன்னம்பிக்கை
இமயமலையின் அடிவாரம். நீண்ட பயணத்திற்கப்புறம் பஸ்ஸிலிருந்து அந்த இளைஞன் இறங்கினான். அவனுடைய இரண்டு துணி மூட்டைகளைச் சுமந்துகொண்டு மலையேற, காத்திருந்த கழுதைகளில் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டான். "எங்கே போக வேண்டும் சாஹேப்?”- கழுதையை வழி நடத்துபவன் கேட்டா ன். "ஏதாவதொரு நல்ல சாமியார் ஆசிரமத்திற்குப் போ." "எத்தனை நாட்கள் தங்கப் போகிறீர்கள்? "நாட்களா? இனி என் வாழ்க்கையே இங்கேதான். என் மனைவி, குழந்தைகள், அம்மா, அப்பா, பிஸினஸ் எல்லாவற்றையும் உதறிவிட்டு வந்துவிட்டேன். இதோ என் கழுத்தில் இருக்கிறதே தங்கச் சங்கிலி... இதைக்கூட உனக்குக் கொடுத்து விடப் போகிறேன்.' கழுதைக்காரன் வியந்து நின்றான். "இந்தச் சின்ன வயதில் உங்களுக்கு எப்படி இதெல்லாம் சாத்தியமாயிற்று?" இளைஞன் முகத்தில் பெருமிதம் வழிந்தது. "எங்கள் ஊருக்கு வந்திருந்த குரு ஒருவர் சொன்னது என்னை ஆழமாகத் தொட்டுவிட்டது. ஆசைகள் தான் துன்பத்துக்கெல்லாம் காரணமாம். அதுதான் எல்லா ஆசைகளையும் உதறிவிட் டு வந்துவிட்டேன்." "எல்லாவற்றையும் உதறிவிட்டுஇந்த மூட்டைகளில் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள், சாஹேப்?" "இங்கே குளிர் அதிகம் என்று சொன்னார்கள். அவசரத்துக்குப் பக்கத்தில் கடைகளும் கிடையாதாமே. அதனால், இந்த மூட்டைகளில் எனக்கு வேண்டிய கம்பளிகளை எடுத்து வந்திருக்கிறேன்." கம்பளியைக்கூட உதற முடியாமல் வாழ்க்கையையே உதறியதாகச் சொல்லும் அந்த இளைஞனைப் போல, ஆசையைத் துறந்ததாகப் பலர் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். ஆசை இல்லாமல் இந்தப் பிரபஞ்சம் இல்லை. ஆசை இல்லாமல் இந்த உடல் இருக்காது. உயிர் இருக்காது. ஆசைப்படக்கூடாது என்று இந்தப் பிரபஞ்சம் ஒருநாளும் உங்களுக்குச் சொல்லித்தரவில்லை. ஆசையைத் துறக்கத் தீர்மானித்து விட்டேன் என்று உங்கள் மனம் போலித்தனமாக துறவு பேசும். மனம் தந்திரசாலி. எதையோ சொல்லி உங்களை நம்பவைத்து ஏமாற்றும். அந்த சூட்சுமம் அதற்குத் தெரியும். ஆனால் உடம்பு? காற்றுப் புகமுடியாதபடி உங்கள் வாயையும், மூக்கையும் இறுகப் பொத்திக் கொண்டு வேடிக்கை பாருங்கள். ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் வேண் டுமானால் உடம்பு பொறுத்துக்கொள்ளும். அப்புறம், உயிர் வாழவேண்டும் என்று உங்கள் உடம்புக்குள் பீறிட்டு எழும் ஆசை உங்கள் கையைப் பி டுங்கிப்போடும். விட்டுப் போனதற்கும் சேர்த்து அள்ளி அள்ளி ஆக்ஸிஜனைக் குடிக்கும்.
நன்றே..!! நன்றே..!! நன்றே..!! நடப்பது யாவும் நன்றே...!!
Category: தன்னம்பிக்கை
விஸ்வாமித்திரர் ஒரு யாகம் செய்யத் தீர்மானித்தார். அந்த யாகத்தின் முடிவில், இருப்பதையெல்லாம் தானம் கொடுத்து விடவேண்டும் என்பது முறை. அதை அனுசரித்து விஸ்வாமித்திரர், தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் கொடுத்துக்கொண்டிருந்தார். அதை அறிந்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் கொடுக்கும் தானத்தைத் தானும் பெறுவதற்காக வந்தார். வசிஷ்டரின் வருகையை அறிந்த விஸ்வாமித்திரர், மனம் மகிழ்ந்து வசிஷ்டருக்குத் தானம் கொடுத்தார். தானம் பெற்ற வசிஷ்டரும் அமைதியாகத் திரும்பினார். சில நாட்கள் ஆகின. விஸ்வாமித்திரர் செய்ததைப் போலவே தானும் ஒரு யாகம் செய்ய எண்ணினார் வசிஷ்டர். நல்லவர்களின் நல்ல தீர்மானம் அல்லவா? உடனடியாகச் செயல் பாட்டிற்கு வந்தது. ஆம்! வசிஷ்டர் யாகம் செய்தார், யாகத்தின் முடிவில் தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் செய்யத் தொடங்கினார். தகவல் அறிந்த விஸ்வாமித்திரர், ‘‘வசிஷ்டர் தானம் கொடுக்கிறார் என்றால், அது விசேஷம்தான். நாமும் போய் அதைப்பெற வேண்டும்” என்று புறப்பட்டு வந்தார். ஆனால், விஸ்வாமித்திரர் வருவதற்குள்ளாக வசிஷ்டர், தன்னிடம் இருந்த அனைத்தையும் தானம் கொடுத்து முடித்து விட்டார். அதை அறிந்ததும் விஸ்வாமித்திரர் கொதித்தார். “ஆ! வசிஷ்டரே! நீர் என்னை அவமானப்படுத்திவிட்டீர். தானம் வாங்கவந்த என்னை வெறுங்கையுடன் அனுப்ப எண்ணிவிட்டீர் போலிருக்கிறது” என்றார். அவரை அமைதிப்படுத்திய வசிஷ்டர், “விஸ்வாமித்திரரே! கோபம் வேண்டாம்! பொருட்கள் இல்லாவிட்டால் என்ன? நல்லவர்களுடன் சேர்ந்திருந்த சத்சங்க சாவகாசப்பலன், ஒரு நாழிகை (24 - நிமிடங்கள்) என்னிடம் உள்ளது. அதில் கால் பங்கை உங்களுக்குத் தருகிறேன்” என்றார். அதைக்கேட்டதும் விஸ்வாமித்திரர் மேலும் கோபப்பட்டார். அப்போதும் வசிஷ்டர் கோபப்படவில்லை. “சரி! விஸ்வாமித்திரரே! நீங்கள் போய், உலகுக்கெல்லாம் ஔி கொடுக்கும் சூரியனையும், பூமியைத் தாங்கும் ஆதிசேஷனையும் நான் அழைப்பதாகச் சொல்லி அழைத்து வாருங்கள்!” என்றார். சற்று யோசித்த விஸ்வாமித்திரர், “சரி! போய்த்தான் பார்ப்போமே!” என்று எண்ணிப் புறப்பட்டார். போனவர், ஆதிசேஷனிடம் தகவலைச்சொல்லி அழைத்தார். ஆதிசேஷன், “சுவாமி! நான் வந்துவிட்டால், என் வேலையை யார் செய்வது?’’ எனக்கேட்க, விஸ்வாமித்திரர் சூரியனிடம் போய்த் தகவலைச் சொல்லி அழைத்தார். சூரியபகவானோ, “சுவாமி! உங்களுடன் நான் வந்தால், என் வேலையை யார் செய்வார்கள்? உலகம் இருண்டுபோய்விடாதா?” எனச் சொல்லி மறுத்தார்.
மனதை பண்படுத்தும் பொன்மொழிகள்! பற்றி தெரிந்து கொள்வோமா
Category: தன்னம்பிக்கை
1. அன்பு நிறைந்த இன்சொல் இரும்பு கதவைக் கூட திறக்கும் வல்லமை உடையது. 2. அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதருடன் நம்மால் அன்பு செலுத்த முடியாது. 3. அனுபவம் ஓர் உயர்ந்த நகை ஏனென்றால் அது மிகவும் கூடுதலான விலை கொடுத்தே வாங்க பட்டிருக்கிறது. 4. சமுதாயம் காலச் சூழ்நிலைகளுக்கு தக்கபடி தன்னை மாற்றி கொண்டால் அங்கே சமூக புரட்சி ஏற்படாது. மாறாக தொடர்ந்து சமூக வளர்ச்சி ஏற்படும். 5. லட்சியம், அடைய வேண்டிய குறிகோள், ஆகியவற்றை மறக்கக் கூடாது. 6. செய்யும் வேலையே உடலாகிய இறைவனுக்கு செலுத்தும் ஒப்பற்ற பிரார்த்தனை. 7. நல்ல எண்ணமும், நல்ல செயலும் ஒவ்வொருவருக்கும் முகத்தில் ஓர் அழகிய ஒளியை கொடுக்கிறது. 8. நட்பு நம் இன்பத்தைப் பெருக்கி துன்பத்தை குறைக்கின்றது. அது இன்பத்தை இரட்டிப்பாக்குகிறது. 9. ஒருவர் பார்க்கும் அழகின் ஒரு பகுதி அவரது பார்வையிலேயே இருக்கிறது. 10. நட்பும் உடைய கூடிய பொருளே அரிய பொருளை எப்படி கையாளுவோமோ அத்தகைய கவனத்துடன் நட்பையும் கையாள வேண்டும்.
மன உளைச்சல் வந்து விட்டால் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்
Category: தன்னம்பிக்கை
"முதலில் நன்கு தூங்கவேண்டும். நமக்கு பிடித்த வேலை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு சினிமா பார்த்தல். புக் படித்தல். தையல் தெரிந்தால் அந்த வேலை செய்தல். அதன்பின் எதனால் மன உளச்சல் ஏற்பட்டதோ அதை விட்டு முதலில் விலகி கொஞ்சம் தூரமாக இருக்க வேண்டும். மன உளச்சலுக்கு காரணமானவர்களை கூடிய மட்டும் நினைக்காமல் இருக்கவேண்டும். அவர்கள் செய்த நல்ல காரியங்களை திரும்ப திரும்ப ஞாபகத்தில் கொண்டு வந்து மன அழுத்தத்தை குறைக்கவும்
மன உறுதியை அதிகரித்து வெற்றி பெற 4 எளிய வழிகள்! பற்றி தெரிந்து கொள்வோமா
Category: தன்னம்பிக்கை
வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான தேவையாக இருப்பது மனஉறுதி. தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஏதாவது பின்னடைவுகள் ஏற்பட்டால் மனஉறுதி இல்லாதவர்கள் அதை அப்படியே கைவிட்டு விடுவார்கள். ஆனால் மனஉறுதி உள்ள நபர்கள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தங்களுடைய முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். மனஉறுதியை அதிகரித்துக் கொள்ளும் நான்கு எளிய வழிமுறைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 1. வீண் உரையாடலை தவிர்க்கவும் வெற்று அரட்டை மற்றும் வாழ்க்கைக்கு தேவையே இல்லாத உரையாடல்களில் நேரத்தை வீணடிப்பதை முதலில் தவிர்க்க வேண்டும். வீண் அரட்டை பெரும்பாலும் தேவையில்லாத வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களை கொண்டு வந்து சேர்க்கிறது. பிறரை பற்றிய செய்திகள் எந்த விதத்திலும் ஒருவருக்கு நன்மை சேர்த்து விட முடியாது. பிறரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழும் விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதால் ஒரு பயனும் இல்லை. தேவையற்ற தகவல்களை மனதில் சேமித்தால் மனதின் ஆற்றல் குறைந்து போகும். பிறரை பற்றிய வதந்திகளை கேட்கும்போது அது நமது மனத்தையும் பாதிக்கும். நாம் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதிவாகிவிடும். தேவையற்ற தகவல்கள் நமது மூளையில் பதிவாகி எண்ணங்களைச் சீர்குலைத்து கவனத்தையும் அமைதியையும் பாதிக்கிறது. அர்த்தமுள்ள விவாதங்கள் மற்றும் தீர்வுகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது.
எதிர்மறை எண்ணத்தை மனதிற்கு எடுத்துச் செல்வதை தடுக்கும் வழிமுறைகள்
Category: தன்னம்பிக்கை
* நம்மைப் பற்றி எதுவுமே தெரியாமல் சிலர் பேசுவதை கேட்கும்போது மனதிற்கும், உடலுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மற்றவர்களின் பேச்சு, செயல் நம்மை பாதிப்பதற்கு நாம் அனுமதித்தால், ஸ்ட்ரெஸ், நம்முடைய மதிப்பை நாமே குறைத்து எடைப்போடுவது, வேலையில் தோய்வு போன்றவை ஏற்படும். இதை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம். * மற்றவர்கள் நம்மை இகழ்ந்தோ அல்லது அலட்சியப் படுத்தி பேசுவதோ நம்முடைய குணத்தை காட்டவில்லை. அது அவ்வாறு பேசுபவர்களின் குணத்தையே பிரதிபலிக்கிறது என்பதை உணர வேண்டும். * ஒருவரின் பேச்சு அல்லது செயல் எது உங்களை வருத்தப்பட செய்தது. உதாரணத்திற்கு சிலர் நாம் புன்னகைத்தால் கூட திரும்பி புன்னகைக்காமல் செல்வதுண்டு. அதற்கு காரணம் அவர் இன்ட்ராவெர்ட்டாகக் கூட இருக்கலாம். எனவே சின்ன விஷயங்கள் கூட நம்மை பாதிக்கும் அளவிற்கு நம் மனதை பலவீனமாக வைத்துக்கொள்வதை நிறுத்துங்கள். * நம்மைப் பற்றி மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு வருத்தப்படுவதை விட்டுவிட்டு அதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? என்று ஆராய்ந்து பார்த்து திருத்தி கொள்வது நம்முடைய வளர்ச்சிக்கு வழிவகுக்கும். * எல்லோரையும் நம்மால் சந்தோஷப்படுத்த முடியாது. நம்முடைய செயல் சிலருக்கு பிடிக்கலாம், சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதற்காக நாம் ஒன்றும் செய்ய முடியாது. அது அவர்களுடைய பிரச்சனை. * நாம் செய்யும் தவறுகளை வைத்து நம்மை முழுமையாக வறையறுக்க முடியாது என்பது புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதனை மேன்மைப்படுத்துவது எது தெரியுமா
Category: தன்னம்பிக்கை
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" என்கிறார் திருவள்ளுவர். ஒரு மனிதன் பிறரிடம் இருந்து ஒரு உதவியைப் பெற்றால் அதை தக்க தருணம் பார்த்து அவர்களே கேட்காத பொழுது நாமே நேரிடையாகச் சென்று உதவி, அவர்களின் துன்பங்களை போக்குவதுதான் சிறந்த அறம். ஒரு மாணவன் மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் ஏழ்மையான நிலைதான் அப்பொழுது. இருந்தாலும் எல்லாவற்றையும் நன்றாகப் படித்து விட்டான். பாடங்களில் எந்தவித குழப்பமும் இல்லை. பரீட்சைக்கு பணம் கட்ட வேண்டும். ஆனால் வசதி இல்லை. என்ன செய்வது என்று யோசித்த பொழுது தான் படித்த புத்தகங்கள் அனைத்தையும் விற்று அதில் வரும் தொகையை கட்டுவதற்கு முடிவு செய்தான். ஆதலால் அந்த புத்தகங்களை எல்லாம் விற்றுவிட்டு ஒத்தையடி பாதை வழியாக வந்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில் தாகம் அவனை வாட்டியது. எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தான். அங்கு ஒரு ஒத்தை வீடு தெரிந்தது. அந்த வீட்டை நெருங்கி அவர்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டான். ஆனால் அவர்களோ இரண்டு குவளை நிறைய நன்றாக கடைந்த மோரை கொண்டு வந்து கொடுத்தார்கள். நீர் கேட்டவனுக்கு மோர் கொடுத்தால் எப்படி இருக்கும். அந்த தாகத்தில் அது அவனுக்கு அமிர்தம்போல் இருந்தது. அவன் மிகவும் மகிழ்ந்து அந்த மோரைப் பருகிவிட்டு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்து ஊர் வந்து சேர்ந்தான். பிறகு சில வருடங்கள் கழித்து மருத்துவராகப் பணி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அந்த ஆஸ்பத்திரிக்கு ஒரு முதியவர் வந்திருந்தார். அவரைப் பார்த்து மருத்துவமெல்லாம் செய்து, அவ்வப்பொழுது தன் தந்தையை கவனிப்பதுபோல் கவனித்துக் கொண்டார். பிறகு உடல் நலம் தேறி அந்த முதியவர் ஊர் திரும்பும் பொழுது, எவ்வளவு பணம் கட்ட வேண்டும். பில் கொடுங்கள். நான் கட்டுகிறேன் என்று கூறினார். அதற்கு அந்த மருத்துவர் நீங்கள் பணம் எதுவும் கட்ட வேண்டாம். உங்கள் மருத்துவ செலவுகளை நானே கவனித்துக் கொள்கிறேன் என்று அன்புடன் கூறினார். அந்த முதியவருக்கு சந்தேகம் மேலிட எதற்கு டாக்டர் என்னுடைய செலவை நீங்கள் கட்ட வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்த மருத்துவர் நான் மிகவும் தாகத்தில் தவித்த பொழுது, எனக்கு மோர் கொடுத்து என் தாகத்தை தீர்த்தீர்கள். அதற்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ஆதலால் அந்த நன்றிக் கடனை அடைக்க எனக்கு இது ஒரு வாய்ப்பு. ஆதலால் நீங்கள் வீட்டுக்கு கிளம்புகள் என்று கூறினார். அந்த மருத்துவரின் நன்றி மறவாத தன்மையை நினைத்து முதியவரும் கையெடுத்து வணங்கி அவருக்கு நன்றியையும் தன் அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டு விடை பெற்றார். இன்றும் கிராமத்தில் இருக்கும் பழக்கம் இதுதான். வீட்டிற்கு தெரிந்தவர் தெரியாதவர் என்று யாராவது வந்துவிட்டால் முதலில் அவர்கள் கொண்டு வந்து கொடுப்பது மோரைத்தான்.
திறமைக்கு தனி மதிப்பு உண்டு! வெளிப்படுத்தினால் தானே தெரியும்
Category: தன்னம்பிக்கை
குஜராத் கடற்கரை பகுதி. ஒரு கப்பல் பழுது அடைந்து நின்று விட்டது. அது ஒரு அயல் நாட்டு கப்பல். அந்த கப்பலில் பயணம் செய்த ஊழியர்களால், கப்பலை சரி செய்து மேலும் செலுத்த முடியவில்லை. அந்த சரக்கு கப்பலில், பல முக்கிய பொருட்கள் இருந்தன, டெலிவர் செய்ய. நாட்கள் நகர நகர கப்பல் நிறுவனத்திற்கு பல லட்சங்கள் இழப்பு. வியாபார ரீதியாகவும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த நிலையில் ஒரு குஜராத்தி தொழிலதிபரை அணுகினார். அவர் விவரம் கேட்டு அறிந்தார். தன்னிடம் வேலை செய்தவர்களில் திறமைசாலி மற்றும் அனுபவம் மிக்க நம்பிக்கையான தொழிலாளியை அனுப்பி வைத்தார். சென்ற அந்த நபர் இன்ஜின் ரூமிற்கு சென்றார். செக் செய்தார். குஜராத்தி மொழியில், அடுத்த சுமார் ஒரு மணி நேரத்திற்கு யாரும் அவரை தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறிவிட்டு கதவை மூடிக் கொண்டார். சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்து சரியாகி விட்டது என்றார் அவர் மொழியில். அதை மொழி பெயர்த்து கேப்டனிடம் கூற, அவரும் கப்பலை செலுத்தி பார்த்து மகிழ்ந்தார். நேர்த்தியான, திறமை மிக்க வேலை செய்யப்பட்டது குறித்து பாராட்டினார். இந்த குறிப்பிட்ட தொழிலாளி சென்று அவருடைய முதலாளியிடம் கூறிவிட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டார்.
முன்னேற்றம் பெறுவதற்கு அவசியம் குறிக்கோள் தேவை
Category: தன்னம்பிக்கை
வ்வொருவரும் அவரவர் திறமைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற வகையில் ஒவ்வொரு குறிக்கோளுடன் வாழ் கிறார்கள். அதை அவர்கள் சரியாக நிறைவேற்றும்போது அவர்கள் வாழ்க்கை நிறைவடைகிறது. சமுதாயமும் அவர்களால் பயன்பெறுகிறது. நாமும் நம்முடைய வாழ்க்கை என்ற புத்தகத்தை நமக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அதில் உள்ள உண்மையான கருத்தை உணர்ந்து செயல்படுத்த வேண்டும். அதை உருவாக்க ஒரு குறிக்கோளை அமைத்துக் கொள்ள வேண்டும். சரியான குறிக்கோளும் அமைப்பும் இல்லாத இயற்கை சக்திகள் கூட மனிதனுக்கு பயன்படாமல் போய் விடுகின்றன .அதனால்தான் மனிதன் இயற்கை தரும் ஆற்றல்களை கூட ஒரு குறிக்கோளுடன் ஒரு அமைப்புக்குள் கட்டுப்படுத்தி வைத்து பயன்படுத்துகிறான். மழை வெள்ளமாக பெருகி, தனக்கென பாதை அமைத்துக் கொண்டு பள்ளம் நோக்கி பாய்கிறது. அதையே நாம் நதி என்கிறோம். இதை இயற்கையின் போக்கிலேயே மனிதன் விட்டு விட்டால் மழை பெய்து முடிந்த பத்து நாட்களுக்குள் கடலுக்குள் சென்று வீணாகி கலந்து விடுகிறது. பிறகு விவசாயம் செய்வது எப்படி? அதனால்தான் மன்னர்கள் காலத்திலேயே மலைப் பிரதேசங்களில் மழை அதிகமாக பொழியும் இடங்களில் காட்டாறாக பெருகிவரும் நீரை அணைக் கட்டி தடுத்து தேக்கி வைத்தார்கள். பிறகு விவசாயம் செய்ய வேண்டிய பருவ காலம் வரும்போது அணையிலிருந்து நீரை திறந்து விட்டு ஆற்றுப் பாசனம் மூலம் நீரை விவசாய நிலங்களுக்கு அனுப்பினார்கள். விவசாயி ஆற்று நீரை வாய்க்கால்கள் மூலம் தன் வயலுக்கு நீர் பாய்ச்சி, பயிர் விளைவித்து, தனக்கும் நாட்டுக்கும் பயன்படுமாறு செய்தான். ஆக இயற்கை பொழியும் மழை நீரைக் கூட, ஒரு குறிக்கோளோடு, ஒரு நோக்கத்தோடு, தேக்கி வைத்து பயன்படுத்தினால்தான் உலகம் பயன்பட முடியும். ஏரி குளங்கள் நிரம்பி ஊரும் உலகம் பெற முடியும்.
வாழ்க்கையில் எந்த மாதிரியான பழக்கங்களை குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்
Category: தன்னம்பிக்கை
பிடிவாதம் பிடிக்காமல் இருப்பது, பெரியவர்களிடம் பணிவோடு நடந்து கொள்வது, உணவுப் பொருளோ, விளையாட்டுப் பொருளோ பகிரும் பழக்கம், பொருட்களை அதனதன் இடத்தில் வைப்பது, வயதிற்கேற்ப பெற்றோருக்கு உதவி செய்வது, தவறு செய்தால் யாராயிருந்தாலும் மன்னிப்பு கேட்பது, மற்றவர் பொருளுக்கு ஆசைப் படாதது, வேண்டிய இடத்தில் தயவுசெய்து, மன்னியுங்கள், நன்றி ஆகிய சொற்களைப் பயன்படுத்துவது,
தயக்கமே தோல்விக்குக் காரணம்
Category: தன்னம்பிக்கை
""தயக்கமே தோல்விக்குக் காரணம்; துணிவு இருந்தால் வெற்றி வசமாகும்.. முடியாது என்பது மூடத்தனம்; முடியும் என்பது தன்னம்பிக்கை; என்னால் மட்டுமே முடியும் என்பது கர்வம். கடின உழைப்பால் வருவது வெற்றி. மனத்துணிவும், தன்னம்பிக்கையும் இருந்தால், ஒவ்வொருவரும் சாதிக்கலாம் ஒரு கிராமத்தில் பெரிய, சிறிய வயதுடைய பல சிறுவர்கள் ஒன்று கூடி விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அதில் பெரிய பையன்கள், சிறிய பையன்கள் எல்லோரும் இணைந்து பல விதமான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டு இருந்தனர். கிராமத்தில் உள்ள மரங்களில் ஏறுவது, குதிப்பது என்றும் ஆடிப் பாடிக் கொண்டு இருந்தார்கள் ,சிலர் பயத்தில் மரத்தில் ஏற மறுத்து விட்டனர்.பிறகு சிறுவர்கள் வீடு திரும்பினார்கள்.. அப்போது ஓரிடத்தில் ஒரு ஓடையைக் கடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது ஓடையின் அகலம் நான்கு அல்லது ஐந்து அடி இருக்கும் ஓடையில் தண்ணீர் நிறைந்து ஓடிக் கொண்டு இருந்தது. ஓடையை சில சிறுவர்கள் அனாவசியமாக தாண்டிக் குதித்துச் சென்றனர்.
தடை அதை உடை புது சரித்திரம் படை
Category: தன்னம்பிக்கை
தடை அதை உடை. தட்டிப்பார் முட்டிப்பார் மோதிப்பார் முயன்று பார் திறக்கவில்லை எனில் உடைத்து விடு தடைகளை. கட்டி இழுத்து வந்து விடு வெற்றியை என்பதுதான் நம் வாழ்வில் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். தடைகள் இல்லாத பாதை இந்த மண்ணில் இல்லை. தடைகளால் பிறக்கும் தைரியம் தவத்தால் கூட பிறப்பதில்லை என்று சொல்வார்கள். எனவே தடைகளைக் கண்டு முடங்கி விடாமல், துவண்டு விடாமல் துணிவுடன் தகர்த்தெறிந்து முன்னேறி செல்ல வாழ்வில் வெற்றி நிச்சயம். தடைகளைக் கண்டு தயங்காமல் முன்னேற முயன்றால் யாராலும் நம் வளர்ச்சியை தடுக்க முடியாது. நாம் பெறும் வெற்றி என்பது உலகமே நமக்கு ஆதரவாக இருக்கும்போது சுலபமாக பெறுவது அல்ல. அனைத்துமே நமக்கு எதிராக செயல்படும்பொழுது தனித்து நின்று போராடி தடைகளை உடைத்தெறிந்து வெற்றி பெறுவதுதான். தடைக் கற்களை படிக்கற்களாக எண்ணி முன்னேறி மாபெரும் சக்தியாக நம்மை யாராலும் நிகராகரிக்க முடியாத இடத்தில் வளர்ந்து நிற்பதுதான் வெற்றி. வாழ்வில் எதிர்ப்படும் சோதனைகளைக் கடந்தால் தான் சாதனைகள் பிறக்கும். சாதிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதற்கு நிறைய தடை கற்களை உடைத்து வெளியே வரவேண்டும். தடைகளை உடைத்து வெளியே வரும்பொழுது நம்மை காயப்படுத்தியவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. சுதந்திரமாக சிறகை விரித்து பறக்க வாய்ப்பு கிடைத்ததே என்றெண்ணி மகிழ்ச்சியுடன் முன்னேற பார்க்க வேண்டும். தடைகளை எதிர்த்து வெளிவரும் சமயம் காதுகளை கெட்டியாக மூடிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நம் காதில் விழும் வார்த்தைகளால் பலவீனப்பட்டு துவண்டுபோய் முன்னேறாமல் போய்விட வாய்ப்புகள் அதிகம். தடைகளை எதிர்த்து நிற்க இமயமலையும் வழி கொடுக்கும். உறங்கிக் கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறைபிடிக்கும் என்பார்கள். எனவே தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறிச் செல்ல தயக்கம் வேண்டாம். தடைகளை உடைத்தெறிய ஓயாது முயற்சி செய்து லட்சியத்தை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தால் நம் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. சோம்பலை விடுத்து, அறியாமையை போக்கி, தடைகளை எதிர்த்து முன்னேற்ற பாதையில் செல்ல செல்ல நம்மால் சரித்திரம் படைக்க முடியும். அப்படி மோதி போராடி, வரும் தோல்வியைக் கண்டு துவளாமல் முன்னேறி சரித்திரம் படைப்பதற்கு வயது ஒரு தடையே அல்ல.
முயற்சி செய்து பாருங்கள் முத்தான பலன் உங்களை வந்து சேரும்
Category: தன்னம்பிக்கை
உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்னை வந்துவிட்டால், கடவுள் ஏன் நமக்கு உதவுவதில்லை? என்று கடவுளை குறை கூறிக்கொண்டு அவரை திட்டித்தீர்ப்பவரா நீங்கள்? அப்போ இந்த கதையை கண்டிப்பாக படியுங்கள். ஒரு ஆட்டோ ஓட்டுனர் தன்னுடைய வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும்போது அவருடைய ஆட்டோ ஒரு பெரிய பள்ளத்தில் மாட்டிக்கொள்கிறது. ஆட்டோ ஓட்டுனர் வெளியிலே வந்து பார்க்கும்போது, ‘நம் ஒருவரால் மட்டுமே இந்த ஆட்டோவை வெளியிலே தூக்கிவிட முடியாது. யாராவது கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்’ என்று நினைக்கிறார். யாராவது அந்த வழியாக வந்து தனக்கு உதவ மாட்டார்களா? என்று நினைத்து ரொம்ப நேரம் அதே இடத்தில் நிற்கிறார். ஆனால், அந்த பக்கம் ஆள் நடமாட்டமேயில்லை. கடவுளிடம், 'எனக்கு எப்படியாவது உதவி செய்யுங்கள்’ என்று வேண்டுகிறார். அப்போதும் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. கடைசியாக, வேறு வழியேயில்லை. நாம்தான் இறங்கி நேரடியாக முயற்சி செய்யவேண்டும். யாரை நம்பியும் பிரயோஜனம் இல்லை என்று நம்பிக்கையுடன் ஆட்டோவை கயிறுக்கட்டி வெளியே இழுக்க ஆரம்பிக்கிறார். சில நிமிடங்கள் கடுமையாக முயற்சி செய்கிறார். திடீரென்று அந்த ஆட்டோ பள்ளத்திலிருந்து மேலே வருகிறது. பின்னாடி பார்த்தால், ஒரு வயதானவர் இவருக்கு உதவி செய்திருக்கிறார். இதை பார்த்த அந்த ஆட்டோக்காரர் அந்த கடவுளே எனக்கு உதவி செய்யவில்லை. ஆனால், யாரென்று தெரியாத நீங்கள் எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி என்று கூறுகிறார்.
யார் இந்த தத்துவஞானி பிளேட்டோ உலகிற்கு அவர் கூறியதென்ன
Category: தன்னம்பிக்கை
கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகர உயர் குடியில் பிறந்த பிளேட்டோ தன்னுடைய இருபதாவது வயதில் சாக்ரடீசைக் கண்டு அவரது சீடராக மாறியவர். உலகின் தலை சிறந்த தத்துவ ஞானிகளில் ஒருவரும், கணிதவியல் வல்லுனரும், அரிஸ்டாட்டிலின் குருவும்தான் பிளேட்டோ (Plato). கிரேக்கத்தில் பல தத்துவஞானிகள் தோன்றியிருந்தாலும் அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராகவும் மிகவும் புகழ்மிக்க அறிஞராகவும் திகழ்கிறார் பிளேட்டோ. இவர் எழுதிய "குடியரசு" எனும் நூல் உலகப்புகழ்பெற்றது. இதை பல அரசியல்வாதிகள், மற்றும் ஆட்சியாளர்கள் பின்பற்றி பலவற்றை சாதித்துள்ளனர். ஒரு நாட்டை ஆள்கிறவருக்கு நல்ல திறமையும், பயிற்சியும் வேண்டும். அதேபோல ஒரு நாட்டை ஆள்வதற்கு ஆட்சியாளர்கள், அவர்களின் உதவியாளர்கள், ராணுவம், தொழிலாளர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஆட்கள் இருக்க வேண்டும் என்று முதன்முதலாக கூறியவர் பிளேட்டோதான். அரசின் ஒவ்வொரு பிரிவிலும் தணிக்கை முறை வேண்டும் என்று கூறியவரும் அவர்தான். தத்துவ அறிஞரான பிளேட்டோவின் புகழ் பெற்ற கருத்துகள்... "நமது கண்களால் நாம் பார்க்கும் அனைத்துப் பொருள்களும் நிழல்களைப் போன்ற வெறும் தோற்றங்களே. அவைகள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு அடிப்படையாகக் கருத்து உள்ளது" பிளேட்டோவின் எழுத்துக்கள் அனைத்தும் உரையாடல் வடிவிலானது. அதில் அவர் தனி மனித முன்னேற்றம் மற்றும் மனத்தின் செல்வாக்கு ஆகிய இரண்டிற்கும் முக்கியமான இடங்களைக் கொடுத்துள்ளார். அவற்றின் தொகுப்பில் சில இங்கே… காணப்படும் உலகம் வேறு. அறியப்படும் உலகம் வேறு. கற்காமல் இருப்பதைவிட ஒருவன் பிறக்காமல் இருப்பதே மேல், ஏனெனில் ஒருவனின் அறியாமையேதான் சகலவிதமான துன்பத்திற்கும் அடிப்படையாக உள்ளது. உலகத்தில் நல்லவர்கள் வெகு சிலரே. தீயவர்களும் அப்படியே உலகத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் இரண்டிற்கும் மத்தியில் ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இலக்கை அடைவதற்கு நமக்கு என்ன தேவை தெரியுமா
Category: தன்னம்பிக்கை
நம் எல்லோருக்குமே வாழ்வில் ஒரு லட்சியம் இருக்கும். அதை அடைவதற்காக கடினமாக உழைக்கவும் செய்வோம். இருப்பினும், அந்த இலக்கை அடைய தாமதம் ஏற்படக்கூடும். அது ஏன் என்று புரியாமல் இருக்கிறீர்களா? நம்முடைய லட்சியத்தை அடைய உழைப்பு மட்டுமே போதுமானாதா? அதையும் தாண்டி எது தேவை என்பது புரிந்துக்கொள்ள இந்த கதையை முழுமையாக படியுங்கள்.
வெட்க உணர்ச்சி வெற்றிக்குத் தடை
Category: தன்னம்பிக்கை
"வெட்கப்படுபவன் உலகப் பார்வைக்கு ஒரு வகையில் கோமாளியே," என்றான் ஒரு அறிஞன். வாழ்வில் வெற்றி பெற்று புகழுடன் வாழ விரும்புகிறவன் எவனும் வெட்கப்படும் குணம் உள்ளவனாக இருக்கக் கூடாது. இருந்தால், அவன் அனைவரும் ஏளனமாக பார்க்கும் ஒரு காட்சி பொருளாகி விடுவான். எனவே வெற்றியை நோக்கமாக கொண்டவராக நீங்கள் இருந்தால், கண்டிப்பாக வெட்கப்படும் குணத்தை புறக்கணியுங்கள்!.
டைம் மேனேஜ்மென்ட் இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம்
Category: தன்னம்பிக்கை
பெற்றோர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான வர்கள் நம்மிடம் கூறும் ஒரு ஆலோசனை நேர மேலாண்மையை கடைபிடிப்பது பற்றியது. இது நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
வெற்றிடத்தை வெற்றியாக்கும் யுக்தி என்ன தெரியுமா
Category: தன்னம்பிக்கை
நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அடிக்கடி எதிலாவது வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பதை கவனிப்போம். அவர்கள் வெற்றி பெறுவதைத் தான் கவனிப்போமே தவிர, எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை கவனிக்கத் தவறி விடுவோம். அதுதான் வெற்றி அடையாமல் போவதற்கான நாம் செய்யும் சிறு தவறு. அவர்களின் ஒவ்வொரு அசைவையும் நாம் கவனித்தால் வெற்றி இலக்கை எப்படி அடைகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
வெற்றிக்காக நாம் மாற்றிக்கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்
Category: தன்னம்பிக்கை
என்ன செய்தாலும் சரி வெற்றி கிடைப்பதில்லை என்று சிலர் புலம்புவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஒரு சின்ன சின்ன மாற்றங்களை செய்து கொண்டால் போதும் நிச்சயம் வெற்றி நம்மை தேடி வரும். அப்படி என்னென்ன மாற்றங்கள் இதோ இப்பதிவில் பாருங்கள்.
சில அருமையான, சிந்திக்க வேண்டிய விஷயங்கள்
Category: தன்னம்பிக்கை
🌝 முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.. 🌝 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்...." வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்.
"எதுவும் தாமதமாகி விடவில்லை.. இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும் "
: தன்னம்பிக்கை - மாற்றத்திற்கான செயல்கள்: [ தன்னம்பிக்கை ] | : self confidence - Actions for change: in Tamil [ self confidence ]
தன்னம்பிக்கை
"...கனவுகளுடன்
முடிந்துவிட்டது நேற்றைய நாள். சாதனைகளுக்காக பிறக்கிறது இன்றைய நாள். நாட்கள் பெருமைமிக்கது. அதிலும்,
இந்த நாள் தமிழருக்கு மிகவும் பெருமைமிக்கது.
விடியல் காணப் போகும் விழிகளுக்கு, தமிழ் தோழமைகளுக்கு இதோ தமிழர் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்..."
💐💐💐💐💐💐💐💐
நீங்கள் எவ்வளவு
நல்லவராக இருந்தாலும், வாழ்க்கையில்
யாரோ சிலருக்கு உங்களை பற்றி தவறான அபிப்ராயம் இருக்கத்தான் செய்யும்...... ஆனால் அவர்களுக்காக உங்கள் தன்மையிலிருந்து மாறி
விடாதீர்கள்.....
உங்கள் தன்மையை
இழந்து விடுவீர்கள்....
இந்தநாள் இனிய
நாளாக அமைய இறைவனை பிரார்த்திப்போம்.
தன்னம்பிக்கைக்கு தமிழர் நலம் உங்களுக்காக.....
🥰💝தமிழர் நலம்😍💝
நாம எப்போதும் Busy aa வே இருக்கும்..
ஆனா உண்மையில அப்படி கிடையாது..
நமக்கு போர்
அடிக்கிறதே இல்லை..Instagram Reels பாக்க
ஆரம்பிச்சா நம்ம மொபைல் கீழே வைக்காத அளவுக்கு அவ்வளவு relatable a reels வரும்..
YouTube, Facebook feed எல்லாமே அப்படி
தான்..இந்த Social Media நம்மள அப்டி
மாத்தி வச்சிருக்கு..
நமக்கு என்ன
தெரியும் என்ன சரியா வரும் அப்படின்னு யோசிக்கவே நமக்கு நேரம் கிடைக்கிறது இல்ல..
ஒரு அஞ்சு
நிமிஷம் கிடைச்சாலும் எதையாச்சும் யோசிச்சிட்டே இருக்கும்..
இல்ல Social Media க்குள்ள
Drown ஆகிடறோம்..
தினமும் ஒரு 15
நிமிஷமாவது
எதையும்
யோசிக்காம Mobile Books Cinema Music ன்னு எதுவும்
இல்லாம
நமக்கு என்ன
நல்லா வரும்
யோசிச்சு
பாருங்க..
School இல்லனா College times la
நாம எல்லோரும்
கத சொல்றது,
கவித எழுதறது, வரையறது, விளையாடுறது,Studies ன்னு ஏதோ
ஒண்ணு மேல
நமக்கு தீரா காதல்
இருந்து
இருக்கும்..
அது இப்ப
நிறைவேத்த ஏன் நினைக்க கூட நேரமில்லாமல் மூளைல ஒரு ஓரமா கிடக்கும்.. அத கொஞ்சம்
கிளறி விடுங்க.. தூசி தட்டி விடுங்க..
"எதுவும்
தாமதமாகி விடவில்லை..
இந்த இடத்தில்
ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும் "
என்ற கவிதையை
போல
மறுபடி விட்ட
எடத்துல Restart பண்ணுங்க...
ஏன் Scratch la இருந்து கூட
Restart பண்ணுங்க..
அது இப்ப Financial a Help பண்ணுமா
ன்றதெல்லாம் Secondary. ஆனா,நம்ம Mental Health a Stable a வெச்சிக்க கண்டிப்பா Help பண்ணும்..
சும்மா Try பண்ணி பாருங்க..✨
Restart......
தினமும் ஒரு 5 நிமிடம் உங்களை பற்றி சிந்தனை
செய்யுங்க....
இதுவரை செய்யாவிட்டாலும் இந்த நாள் முதல்
செய்து வாருங்கள்.
மாற்றம் எப்படி இருக்கும் என்று நீங்களே
உணர்வீர்கள்....
அந்த 5 நிமிடம் தான் தியானம்....
படுப்பதற்க்கு முன் அன்றைய நாளில் நடந்த,
மற்றும் நாளைய திட்டம் பற்றி யோசித்து தூங்க செல்லுங்கள்...
தமிழர் நலத்தின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
: தன்னம்பிக்கை - மாற்றத்திற்கான செயல்கள்: [ தன்னம்பிக்கை ] | : self confidence - Actions for change: in Tamil [ self confidence ]