ஆன்மிக பக்தி கதைகள்

சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது

வீடு | அனைத்து வகைகள் | வகை: ஆன்மிக பக்தி கதைகள்
நன்னெறிக் கதைகள் | Moral stories

நன்னெறிக் கதைகள்

Category: ஆன்மிக பக்தி கதைகள்

க்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம் தேங்காய் கற்பூரம் இருந்தது. தேங்காய் பேச ஆரம்பித்தது. நம் மூவரில் நானே கெட்டியானவன் பெரியவனும் கூட என்றது. அடுத்து வாழைப்பழம் நமது மூவரில் நானே இளமையானவன் இனிமையானவன் என்று பெருமைப்பட்டுக் கொண்டது. கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது. பக்தன் சந்நிதியை அடைந்தான்.

கடவுளை அறிவது எப்படி | How to Know God

கடவுளை அறிவது எப்படி

Category: ஆன்மிக பக்தி கதைகள்

ஒரு சமயம், ஆர்வமுள்ள பக்தர் ஒருவர், மகான் ஒருவரிடம், “கடவுள் எப்படி இருப்பார்? எங்கு இருக்கிறார்? அவரை எப்படி உணர முடியும்?” என்று விவேகமுள்ள கேள்விகள் கேட்டார். அதற்கு மகான், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற, அழியாத, பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள், நீயும் கடவுள் தான்” என்றார். அதற்கு பக்தர், “அப்படியானால் என்னால் ஏன் கடவுளை உணர முடியவில்லை?” என்று வினவினார். அதற்கு அந்த மகான் மிக அழகாக, “உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார், ஆனால் உன் எண்ணம் உலகத்தில் நடக்கும் விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை” என்று பதிலளித்தார். வெவ்வேறு வழிகளில், மகான் கடவுள் தொடர்பான உண்மையை அந்த பக்தருக்கு புரிய வைக்க முயற்சித்தார். ஆனால் அந்த பக்தர் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தார். பிறகு அந்த மகான் அவரிடம், ” ஹரித்வாருக்கு செல்லும்படியும், அங்கு ஓடும் கங்கை நதியில் ஒரு அபூர்வமான வண்ணத்தைக் கொண்ட ஒரு மீன் இருக்கின்றது எனவும்” அந்த அபூர்வமான மீனுக்கு மனிதர்கள் போலவே பேசும் குரல் இருப்பதால் அந்த மீன் உன் கேள்விகளுக்குப் பதில் கொடுக்கும் என்றும் சொன்னார்.

கும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா | Do you know why Kumbakarna sleeps for 6 months?

கும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா

Category: ஆன்மிக பக்தி கதைகள்

இராமாயணத்தில் கும்பகர்ணனின் காத பாத்திரமும் ஒரு அங்கமாகும். கும்பகர்ணன் இராவணனின் இளைய சகோதரர் ஆவார். நல்ல புத்தி கூர்மையும், நெறி தவறா வாழ்க்கை முறையையும், இரக்க குணத்தையும் ஒருங்கே கொண்டவனாக திகழ்ந்தான். இந்திரன் தேவர்களின் தலைவனாவான். இவனுக்கு கும்பகர்ணனின் புத்திக்கூர்மையையும் அசாத்திய வீரத்தையும் பார்த்து பொறாமை எனும் தீயை நெஞ்சத்தில் வைத்து, கும்பகர்ணனை பழி தீர்க்க தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான். கும்பகர்ணன் தனது அண்ணன்கள் இராவணன் மற்றும் விபீஷணனுடன் பிரம்ம தேவரிடம் வரம் வேண்டி தீவிர யாகம் செய்தான். இந்த யாகத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன், கும்பகர்ணனைப் பார்த்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் இருந்த நேரத்தில் அவர்கள் இந்திரனின் ஆசனமான இந்திராசனா என்ற வரத்தை எதிர்பார்த்தனர். ஆனால் கும்பகர்ணன் நித்ராசனா என்ற வரத்தைக் கேட்டார்.

சிவ பக்தனின் பாவத்தை போக்க புல் சாப்பிட்ட கல் நந்தி கதை | The story of Kal Nandi who ate grass to get rid of the sins of a Shiva devotee

சிவ பக்தனின் பாவத்தை போக்க புல் சாப்பிட்ட கல் நந்தி கதை

Category: ஆன்மிக பக்தி கதைகள்

ஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் ஒருவர் இருந்தார். அவர் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும், தெரியாமலும் ஒரு பசுங்கன்றின் மீது போட்டு விட, அந்த கன்று துடி துடித்து இறந்து போனது. அந்தக் கன்று, ஹரதத்தரருக்கு சொந்தமானது. பசுங்கன்றைக் கொன்றதால், அவனை மகா பாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவ சர்மா. அங்கு வீட்டுக்குள் நுழைந்த போது, வாசல்படி தலையில் இடித்து 'சிவ, சிவா' என்று கத்தினான். குரல் கேட்டு வெளியே வந்த ஹரதத்தர், தேவசர்மா பற்றியும், அவன் வந்த நோக்கம் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர், 'நீ சிவ என்று சொன்னதுமே, பசுவைக் கொன்ற உன்னுடைய பாவம் எல்லாம் நீங்கிவிட்டது. இரண்டாவதாக சிவா என்று கூறியதற்காக, உனக்கு கயிலாய பதவியும் கிடைக்கப்போகிறது' என்று தேவ சர்மாவுக்கு ஆறுதல் கூறினார். ஆனாலும் கூட ஊர் மக்கள் பலரும் தேவசர்மாவை மனதார மன்னிக்கவில்லை. ஊரை விட்டு விலக்கியே வைத்திருந்தார்கள். ஒரு நாள் ஹரதத்தர், கஞ்சனூரில் உள்ள அந்தணர்கள் அனைவரையும், அங்குள்ள ஈசன் எழுதருளியுள்ள அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு வரு மாறு அழைப்பு விடுத்தார். அதன்படியே ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தில் கூடியிருந்தனர். அப்போது ஹரதத்தர், தேவசர்மாவிடம் ஒரு புல் கட்டைக் கொடுத்து, 'நீ சிவ... சிவா என்று சொன்னதுமே உன்னுடைய பசுவைக் கொன்ற பாவம் நீங்கி விட்டதாக நான் கூறினேன்.

காவல் தெய்வம் கருப்பசாமியின் வரலாறு! பற்றி தெரிந்து கொள்வோமா | The history of guardian deity Karuppasamy! Let's find out about

காவல் தெய்வம் கருப்பசாமியின் வரலாறு! பற்றி தெரிந்து கொள்வோமா

Category: ஆன்மிக பக்தி கதைகள்

மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. அவரின் தோற்றம் பற்றிக் கூறுவது இதுவரை கேள்விப்பட்டிராத தகவலாக இருக்கக்கூடும்! வால்மீகி, தர்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, ராமாயணத் தகவல், தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி குறித்த பாடல் வரி, இதற்குச் சான்று பகரும். ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள். கருப்பன், கருப்பசாமி எனும் பெயர் கொண்ட மனிதர்களின் தலை வெட்டப்பட்ட புதைக்கப்பட்ட இடத்தில் கருப்பசாமி கோயில் ஏற்பட்டது என்றொரு ஆய்வுத் தகவலும் உண்டு. நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம்.... இப்படி பல்வேறு நிலைகளில் பல கோயில்களில் காட்சி தருகிறார் கருப்பசாமி. கம்பீர உருவம் தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் கோயில் கொண்டிருப்பார். பெரும்பாலும் கையில் சுக்குமாந்தடியுடன் அவர் அருள்வதை தரிசிக்கலாம். கருப்பசாமியின் மனைவி கருப்பழகி(கருப்பாயி); மகன்- கண்டன்; அண்ணன்-முத்தண்ண கருப்பசாமி; தம்பி- இளைய கருப்பு; தங்கை- ராக்காயி. ஐயன் ஐயப்பனும் கருப்பரும்: ஸ்ரீஐயப்பனுக்கும் கருப்பசாமிக்குமான தொடர்பை, ராங்கியம் கருப்பர் திருத்தாண்டகத் தின் முதல் பாடல் சொல்கிறது. மலையாளத் துரையானை என்னுள்ளத்தில் வந்தானைக் கண்டடியேன் வணங்கி வேண்டினேனே! என்கிறது அந்தப் பாடல் வரி. கத்தப்பட்டு அருள்மிகு சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் தொட்டியத்து கருப்பையா போற்றிப் பாடலின் இரு வரிகள்.... மலையாள நாட்டில் மலர்ந்தாய் போற்றி மக்கள் போற்றிடும் மன்னவா போற்றி.. எனப் போற்றுகின்றன! பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் மெய்சிலிர்த்துப் பாடும் பாடல்களிலும் கருப்பசாமி வருவார்! பிறந்தாய் மலையாளம் கருப்பன் பேருகொண்டாய் கீழ்நாடு வளர்ந்தாய் மலையாளம் கருப்பன் வந்துதித்தாய் கீழ்நாடு எனத் துவங்கி கருப்பரைப் போற்றுகிறது, மொட்டையக்கோனார் என்பவர் எழுதிய... பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு பாடல்! மகா காளன் என்ற கருப்பண்ண சுவாமி, பூதநாதனாகிய மகா சாஸ்தாவின் அன்புக்குரிய கணநாதன். சாஸ்தாவின் ஆணையை சிரமேற்கொண்டு, அவரது எண்ணங்களைப் பூர்த்தி செய்பவர் என்கிறார்.

ஆன்மிக பக்தி கதைகள் | Spiritual devotional stories

சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது ஆணவம் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவன் பாடம் புகட்டத் தவறுவதில்லை

: ஆன்மிக பக்தி கதைகள் - சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது [ ஆன்மிக பக்தி கதைகள் ] | : Spiritual devotional stories - Not an atom can move without Shiva in Tamil [ Spiritual devotional stories ]

ஆன்மிக பக்தி கதை

சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது

 

ஆணவம் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவன்

பாடம் புகட்டத் தவறுவதில்லை

 

அப்படி ஒரு பாடத்தை நந்தியம்பெருமான் பெற்ற கதையை இங்கே பார்ப்போம்.

 

ஆணவம் என்பது மனிதன் கடக்க வேண்டிய முதல் கடினமான பாதையாகும்.

 

ஆணவம் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவன் பாடம் புகட்டத் தவறுவதில்லை.

 

அது மனிதர்களின்றி, தேவர்களாக இருந்தாலும் சரி, சிவனின் உடலில் பாதியைப் பெற்ற சக்தியாக இருந்தாலும் சரி.. பாடம் புகட்டப்பட்டே தீரும்.

 

அப்படி ஒரு பாடத்தை நந்தியம்பெருமான் பெற்ற கதையை இங்கே பார்ப்போம்.

 

கயிலாயத்தின் வாசல் காப்போனாக இருந்தாலும், சிவபெருமானை சுமக்கும் பெரும் பேறு பெற்றவர், நந்தியம்பெருமான்.

 

சிவபெருமான் தான் இந்த உலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

 

அப்படி ஒரு முறை உலக உயிர் களுக்கு படியளப்பதற்காக சிவபெருமான் புறப்பட்டார்.

 

நந்தி அவரை சுமந்து சென்றார்.

 

செல்லும் வழியில் நந்திக்கு ஒரு சிந்தனை உருவானது.

 

'உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் சிவபெருமானையே நாம் சுமக்கிறோம் என்றால், நம்முடைய சக்தி எப்படிப்பட்டதாக இருக்கும்' என்று அவர் நினைத்தார்.

 

சிவனே ஜீவனாக இருக்கிறார் என்பது சிவனடியார்களின் கூற்று.

 

அனைத்து உயிர்களின் ஆன்மாவாக, சிவபெருமானே இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

அப்படி இருக்கையில் நந்தியம்பெருமான் நினைத்த அந்த ஆணவமான சிந்தனை, சிவபெருமானுக்கு தெரியாமல் போய்விடுமா என்ன?

 

நந்திக்கு தகுந்த பாடம் கற்பிக்க நினைத்தார் சிவபெருமான்.

 

உலகை வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில், தன்னுடைய சடைமுடியில் இருந்து ஒரே ஒரு முடியை மட்டும் எடுத்து, நந்தியின்

மீது வைத்து விட்டு கீழே இறங்கிக்கொண்டார், ஈசன்.

 

அதுவரை உலகத்தின் பரம்பொருளான சிவபெருமானையே சுமந்து கொண்டிருந்த நந்திக்கு, தன் மேல் இருந்த ஒரே ஒரு முடியை சுமக்க முடியவில்லை.

 

பாரம் தாங்காமல் தள்ளாடினார்.

 

ஒரு அடி கூட அவரால் முன் எடுத்து வைக்க முடியவில்லை.

 

தன்னுடைய இந்த இயலாமை அவரை கலங்கடித்தது.

 

இதுவரை அவர் நெஞ்சில் குடிகொண்டிருந்த ஆணவம் எங்கு சென்றதென்றே தெரியவில்லை.

 

அவர் தன் அருகில் நின்று கொண்டிருந்த சிவபெருமானை கலங்கும் கண்களோடு பார்த்தார்.

 

அவரது அந்தப் பார்வை, 'எனக்கு ஏன் இந்த நிலை?' என்பது போல் இருந்தது.

 

இப்போது சிவபெருமான் கூறினார். "நந்தியே.. உன்னுடைய மனதில் இருந்த ஆணவத்தை அழிக்கவும், நானே உலக உயிர்களின் ஆன்மாவாக, உலக உயிர்களின் இயக்கமாக இருக்கிறேன் என்பதை நீ உணர்ந்து கொள்ளவும்தான் இப்படிச் செய்தேன்.

 

நான் உன் மேல் இருக்கும் வரைதான், உன்னால் என்னை சுமக்க முடிந்தது.

 

உன்னில் ஆணவம் குடிவந்ததும், நான் உன்னை விட்டு விலகியதும் ஒரு முடியை கூட உன்னால் சுமக்க முடியவில்லை.

 

நான் விலகியதால், உன்னுடைய இயக்கமும் நின்றுபோனது" என்றார்.

 

உண்மையைப் புரிந்துகொண்ட நந்தியம்பெருமான், எல்லாம் இறைவனின் செயலால் நடப்பவை என்ற எண்ணத்தை தன் மனதில் ஆழ வேரூன்றிக் கொண்டார்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

: ஆன்மிக பக்தி கதைகள் - சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது [ ஆன்மிக பக்தி கதைகள் ] | : Spiritual devotional stories - Not an atom can move without Shiva in Tamil [ Spiritual devotional stories ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: ஆன்மிக பக்தி கதைகள்