திருவைகுண்டம் (சூரியன்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
இத்தலம் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றின் வடகரையில் உள்ளது.
திருவரகுணமங்கை (நத்தம்) (சந்திரன்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
நத்தம் என்ற பெயரே வழக்கில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் கிழக்கே வந்தால் இத்திருதலத்திற்க வரலாம்.
திருப்புளிங்குடி (புதன்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
திருவரகுணமங்கையிலிருந்து அதே சாலையில் கிழக்கே அரை கி.மீ.யில் உள்ளது
பெருங்குளம் (சனி) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் கிழக்கே 5 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் உள்ளது.
திருத்தொலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
பெருங்குளத்திலிருந்து கிழக்கே 0.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மங்கலக்குறிச்சி வந்து வடகால் என்ற வாய்க்கால் கரை வரியாக மேற்கு நோக்கி 4 கி.மீ பாதையில் வந்தால் இத்திருத்தலத்தை அடையலாம்.
தென்திருப்பேரை (சுக்ரன்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
தாமிரபரணிக் கரையின் தென்கரையில் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ,ல் இத்தலம் உள்ளது.
திருக்கோளூர் (செவ்வாய்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
தென்திருப்பேரையிலிருந்து ஆழ்வார்திருநகரி வரும் வழியில் 3 கி.மீ வந்து தெற்கே போகும் ஒரு கிளைப் பாதையில் 2 கி.மீ சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம்.
ஆழ்வார்திருநகரி (வியாழன்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
ஆழ்வார்திருநகரி திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் உள்ளது. இத்திருத்தலம், புகைவண்டி நிலையம், பேரூந்து வசதி இருக்கிறது.
சோழநாட்டுத் திருப்பதிகள் - 40
Category: ஆன்மீக குறிப்புகள்
ஸ்ரீ ரங்கம் - ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களிலே முதன்மையானதாக "கோயில்"
நடுநாட்டுத் திருப்பதிகள் - 2
Category: ஆன்மீக குறிப்புகள்
சென்னை - திருச்சி மெயின் லைனில் திருப்பாதிரிபுலியூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மேற்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.
தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22
Category: ஆன்மீக குறிப்புகள்
செங்கற்பட்டு - அரக்கோணம் ரயில் பாதையிலுள்ள இந்த ஸ்டேஷனை சென்னை கடற்கரை - காஞ்சீபுரம் ரயிலில் சென்றும் அடையலாம்.
வடநாட்டுத் திருப்பதிகள் - 11
Category: ஆன்மீக குறிப்புகள்
மொகல்சராய் (காசி-வாராணஸி) லக்னௌ ரயில் மார்க்கத்தில் பைசாபாத் ஸ்டேஷனிலிருந்து வண்டியில் போக வேண்டும்.
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
Category: ஆன்மீக குறிப்புகள்
இத்தலங்கள் வைணவத் தலங்களாயினும் போத்திகளால் பூஜை செய்யப்படுகின்றன.
108 திவ்விய தேசம் ஆழ்வார்களின் விவரங்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்
108 திவ்விய தேச பரமாத்மனைப் பாடிய பன்னிரு ஆழ்வார்களின் ஸ்தலங்கள் மற்றும் பெயர்கள், அவதரித்த நட்சத்திரங்கள்
108 திவ்விய தேசம் பற்றிய முழு விவரங்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்
சோழநாட்டுத் திருப்பதிகள் - 40, நடுநாட்டுத் திருப்பதிகள் - 2, தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22, வடநாட்டுத் திருப்பதிகள் - 11, மலைநாட்டுத் திருப்பதிகள் - 13, நவதிருப்பதி
நவதிருப்பதி முழு விவரங்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும், சமூக வாழ்வையும் ஒழங்கு முறைக்குட்படுத்துவதே ஆன்மீகம்.
பூலோக சொர்க்கம்
Category: ஆன்மீக குறிப்புகள்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்தியாவின் பல இடங்களில் கோயில் இருந்தாலும், அவர் குழந்தையாக அருள்பாலிக்கும், கேரளாவில் உள்ள கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
பொன்னான வாழ்வு அருளும் பாடகச்சேரி பெருமாள்
Category: ஆன்மீக குறிப்புகள்
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடகச்சேரி ஒரு புனித தலமாகும். பாடகச்சேரி சுவாமிகள் என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீராமலிங்க சுவாமிகள் இவ்வூரில் நீண்ட நாட்களாக தங்கி இருந்து மக்களுக்கு நன்மை செய்தவர்.
சிலைகள் இல்லாத கோவில் - கதவுக்கே பூஜை
Category: ஆன்மீக குறிப்புகள்
அந்த கோவிலில் சிலைகளோ, உற்சவ விக்கிரகமோ இல்லை. கோவிலுக்கு முன்புள்ள கதவுக்குத் தான் பூஜை நடைபெற்று வருகிறது.
திருமணத் தடைகள் தவிடு பொடியாகும்:
Category: ஆன்மீக குறிப்புகள்
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு குப்பண்ணன் என்ற பிரம்மச்சாரி இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார்.
மணக்கும் வாழ்வு தரும் முதுகுன்றீஸ்வரர்
Category: ஆன்மீக குறிப்புகள்
பிரபஞ்சத்தை மீண்டும் படைக்கும் பணியை பிரம்மன் ஆரம்பித்தபோது, லேசாக அவனுள் செருக்கு எட்டிப் பார்த்தது.
அற்புத வரங்கள் தரும் அரைக்காசு அம்மன்
Category: ஆன்மீக குறிப்புகள்
அம்பிகையை சரணடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது நம்பிக்கை.
நேந்திரம் வாழைக்கு பெயர் தந்த பெருமாள்
Category: ஆன்மீக குறிப்புகள்
பெருமாளின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்று கேரளாவில் உள்ள திருக்காட்கரை.
உலகின் மிகப் பெரிய பிள்ளையார்
Category: ஆன்மீக குறிப்புகள்
பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பார்கள். மாட்டு சாணத்தைப் பிடித்து வைத்தாலும், சந்தனத்தைப் பிடித்து வைத்தாலும் பிள்ளையார்தான்.
குருபகவான் திருத்தலங்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்
நவகோள்களில் முழுமுதல் சுபக் கிரகம் - குரு. இவர் தேவர்களுக்கெல்லாம் குரு. இவர் இந்திரனின் அமைச்சர்.
பெண்ணுக்காக சாட்சி சொன்ன இறைவன்
Category: ஆன்மீக குறிப்புகள்
கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்த அவருக்கு வயதுக்கு வந்த 2 மகள்கள் இருந்தனர்.
அதிசயங்கள் நிறைந்த திருவனந்தபுரம் தங்க கோவில்
Category: ஆன்மீக குறிப்புகள்
உலகின் நம்பர் ஒன் பணக்கார கடவுள் என்ற பெயரை நிரந்தரமாக தக்கவைத்துக் கொண்டிருப்பவர் திருப்பதி ஏழுமலையான்.
திருப்பம் தரும் சதுரகிரி யாத்திரை
Category: ஆன்மீக குறிப்புகள்
இறைவனைத் தேடி பயணிக்கும் பக்தர்களின் ஆன்மீக தேடல் அவர்களுக்கு நிச்சயம் மன அமைதியை தந்தாக வேண்டும்.
மாங்கனி திருவிழா
Category: ஆன்மீக குறிப்புகள்
காரைக்காலில் அவதரித்த, இறைவனால் அம்மையே... அன்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்காக கொண்டாடப்படும் திருவிழாதான் மாங்கனி திருவிழா.
சுருட்டு நிவேதனம் பெறும் முருகப்பெருமான்!
Category: ஆன்மீக குறிப்புகள்
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்" என்பதற்கு இணங்க அமைந்துள்ளதுதான் விராலிமலை முருகன் கோவில்.
சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலன்
Category: ஆன்மீக குறிப்புகள்
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் சிவன், முருகன், திருமால் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியே கோவில்கள் இருந்தன என்பதை சிலப்பதிகாரத்தின் மூலம் அறிய முடிகிறது.
கதவு திறக்காத கோவில்! கண்ணாடி வழியே தரிசனம்
Category: ஆன்மீக குறிப்புகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்புனவாசல்.
ஆனந்தம் தரும் அம்மன் தரிசனம்
Category: ஆன்மீக குறிப்புகள்
அம்மனை வேண்டி பக்தர்கள் விரதம் இருப்பதுதான் நடைமுறை. ஆனால் இந்த அம்மன் பக்தர்களுக்காக விரதம் இருக்கிறாள்.
மனநோய் தீர்க்கும் மகாலிங்க பெருமான்
Category: ஆன்மீக குறிப்புகள்
காவிரிக் கரையில் காசிக்கு நிகராக 6 சிவத்தலங்கள் உள்ளன. அவை: திருவிடைமருதூர், திருவையாறு, திருசாய்க்காடு, திருவெண்காடு, திருவாஞ்சியம், மயிலாடுதுறை.
தெய்வீக மார்கழி
Category: ஆன்மீக குறிப்புகள்
விடாது பெய்த அடைமழைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் பளிச்சிடும் பனிப்பொழிவுக்கு சொந்தக்கார மாதம் மார்கழி.
நிறம் மாறும் விநாயகர்
Category: ஆன்மீக குறிப்புகள்
ஒரு ஆண்டில் 6 மாதம் வெள்ளையாகவும், அடுத்த 6 மாதம் கறுப்பாகவும் ஒரு பிள்ளையார் காட்சி தருகிறார்.
ஆலயங்களுக்கு அர்ப்பணிக்க வேண்டிய பொருட்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்
இறைவனை வழிபடும்போது காணிக்கை செலுத்துவது என்பது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வளம் தரும் புரட்டாசி சனிக்கிழமை
Category: ஆன்மீக குறிப்புகள்
ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வருகிறது. அப்போதெல்லாம் நாம் சனீஸ்வரர் சன்னதிக்குச் சென்று வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்கிறோம்.
திருத்தலங்கள் பெயர்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் : திருத்தலங்கள் பெயர்கள்
திரு அகத்தியான்பள்ளி: (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
வேதாரணியத்துக்குத் தெற்கில் ஒரு மைல் தொலைவில் உள்ளது இத்தலம்.
திரு அச்சிறுபாக்கம் (தொண்டை நாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இரயில்வே நிலையம் உள்ள தலம்.
திரு அஞ்சைக்களம் (மலைநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
திருச்சூரிலிருந்து கொடுங்கோளூர் போகும் பஸ் ஏறிக் கொடுங்கோளுருக்கு எதிர்கரையில் இறங்கி உப்பங்கழி வழியே வஞ்சி (சிறுபடகு) அமர்த்தி நேரே (அம்பலம்) கோயிலுக்குப் போகலாம்.
திரு அண்ணாமலை: (நடுநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இரயில்வே நிலையம் உள்ள தலம். பஞ்சபூதத் தலங்களுள் தேயுதலம்.
திரு அதிகைவீரட்டம்: (நடுநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
சிவத்தலங்களுள் மேம்பட்டது. கோயிலும், சிவலிங்க மூர்த்தியும் பழைய பல்லவ சிற்ப முறையில் அமைந்துள்ளன.
திரு அம்பர்ப் பெருந்திருக்கோயில்: (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
பூந்தோட்டம் இரயில்வே நிலையத்திலிருந்து தென்கிழக்கே இரண்டு மைலில் உள்ளது.
திரு அம்பர் மாகாளம் : (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
பூந்தோட்டத்திலிருந்து ஒரு மைல். வைகாசி ஆயில்யம் சோமயாஜியாகம்.
அரசிலி (ஒழிந்தியாப்பட்டு) (தொண்டைநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் போகும் வழியில் வட மேற்கே ஐந்து மைல் சென்று இரும்பை மாகாளத்தையடைந்து அங்கிருந்து ஒட்டன்பாளையம் வழியாய் வடகிழக்கே மூன்று மைல் தொலைவு சென்றால் இத்தலத்தை அடையலாம்.
திரு அரதைப் பெரும்பாழி : (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
அரித்துவாரமங்கலத்தின் மரூஉப்போலும், இத்தலத்திற்குச் சமீவனம் என்ற பெயரும் உண்டு.
திரு அரிசிற்கரைப்புத்தூர்: (அழகார் புத்தூர்) (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
கும்பகோணத்திலிருந்து நான்கு மைலில் உள்ளது. புகழ்த்துணை நாயனாருக்குப் பொற்காசு கொடுத்த தலம்.
திரு அவளிவணல்லூர்: (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
கோயில் வெண்ணி என்ற ஊரிலிருந்து ஐந்து மைலில் உள்ளது.
திரு அவிநாசி: (கொங்குநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
திருப்பூர் இரயில்வே நிலையத்திற்கு வடக்கே எட்டுமைல் தொலைவில் உள்ளது.
திருஅழுந்தூர் : (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இப்போது தேரழுந்தூர் என்று வழங்குகின்ற தாயினும் திருவழுந்தூரென்பதே இதன் இயற்பெயராகும்.
திரு அறையணி நல்லூர் (நடுநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இவ்வூர் திருக்கோவலூர் இரயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலுள்ளது.
திரு அனேகதங்காவதம்: (கௌரிகுண்டம்) (வடநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
ரிஷிகேசத்திலிருந்து பஸ் மூலமாகவும், கால்நடையாகவும் செல்லலாம்.
திரு அன்பில் ஆலந்துறை (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
லால்குடி இரயில்வே நிலையத்திலிருந்து கிழக்கே மூன்று மைல். கொள்ளிடக்கரைத் தலம்.
திரு அன்னியூர் (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
நீடுருக்கு மேற்கே மூன்றுமைல் தொலைவில் உள்ளது.
திருஆக்கூர். (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இத்தலம் மயிலாடுதுறை இரயில்வே நிலையத்திலிருந்து கிழக்கே தரங்கம்பாடிக்குப் போகும் வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது.
திரு ஆடானை (பாண்டியநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
காரைக்குடியிலிருந்து முப்பத்திரண்டு மைல் தொலைவில் உள்ளது. பேருந்து செல்லுகின்றது. நல்ல வழி
திரு ஆப்பனூர் (பான்டிய நாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
மதுரையிலிருந்து வடக்கே ஒன்றரை கல் தொலைவில் உள்ளது.
திருஆப்பாடி (சோழ நாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இத்தலம் ஆடுதுறை இரயில்வே நிலையத்திற்கு அருகில் இருக்கிறது.
திரு ஆமாத்தூர்: (நடுநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இத்தலம் விழுப்புரம் இரயில்வே நிலையத்திற்கு வடமேற்கில் நான்கு மைல் தொலைவில் உள்ளது.
திருஆரூர் (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இத்தலம் இரயில்வே நிலையத்தையுடையது. மூர்த்த தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறந்தது.
திரு ஆரூர் அரநெறி: (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இது ஆரூர்க் கோயிலின் தெற்குப் பிராகாரத்தில் மேற்குச் சந்நிதி.
ஆரூர்ப்பரவையுண்மண்டளி: (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
ஆரூரில் கிழக்கு ரத வீதியில் திருத்தேர் நிலையின் அருகில் உள்ளது.
திரு ஆலங்காடு: (தொண்டைநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
சென்னைக்கு மேற்கே 27 மைலிலுள்ள திருவாலங்காடு இரயில்வே ஸ்டேஷனுக்கு வடகிழக்கே 3 - மைலில் உள்ளது.
திரு ஆலம்பொழில்: (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
தஞ்சாவூருக்கு வடக்கே 5 மைல் தொலைவில் உள்ளது. அஷ்டவசுக்கள் பூசித்த தலம்.
திரு ஆலவாய் (பாண்டிய நாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
பாண்டியநாட்டின் தலைநகர். தமிழ்ச் சங்கங்கள் திகழ்ந்த தலம்.
திருஆவடுதுறை: (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
நாரசிங்கள்பேட்டை இரயில்வே நிலையத்திலிருந்து கிழக்கே 1 மைல் தொலைவில் உள்ளது இத்தலம்.
ஆவூர்ப்பசுபதீச்சுரம்: (சோழநாடு)
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
பட்டீச்சுரத்திற்குத் தென்மேற்கே 4% மைலில் உள்ளது. சுந்தரப்பெருமாள் கோயிலிலிருந்து 4 மைல்.
அனைத்து பாவ தோஷங்களை போக்கும் பிரதோஷ வழிபாடு
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பிரதோஷம் இந்தப் பெயரைச் சொன்னதுமே, உங்களில் பலர், "ஓ தெரியுமே!" என்று உரக்கச் சொல்வது கேட்கிறது.
பிரதோஷம் உருவான வரலாறு
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
அமரர்களும், அசுரர்களும் அடிக்கடி போரிட்டுக் கொண்டிருந்த காலம் அது!
திரயோதசி திருநடனம்
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
திரயோதசி தினமான அன்று மாலை, சூரியனின் வெம்மை தணிந்து, சந்திரனின் குளுமை எழ ஆரம்பிக்கும் சந்தியா காலத்தில் திருநடனத்தைத் தொடங்கினார் தியாகேசன்.
பிரதோஷ காலம்
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பிறகு பௌர்ணமிக்கு முன்பாக வரக்கூடிய திரயோதசி தினமே பட்சப் பிரதோஷ தினம் எனப்படுகிறது.
பிரதோஷ விரதம் என்றால் என்ன?
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பிரதோஷ தினத்தன்று அதாவது கிருஷ்ணபட்சம், சுக்ல பட்சத்தில் பிரதோஷம் வரும் நாட்களில், அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, அரனை மனதில் இருத்தி, பூஜையறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
நந்தி வழிபாடு
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
நலம் யாவும் அளிப்பதில், நடேசனின் வாகனமான நந்திக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பதால், பிரதோஷ வேளையில் நந்தி தேவருக்கும் பிரத்யேக வழிபாடு செய்வது சிறப்பு.
சனிதோஷம் நீக்கும் பிரதோஷம்
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பக்தர்களை கிரகங்களின் பார்வையிலிருந்து காத்து அனுகிரகம் புரியும் அரனை, பிரதோஷ தினத்தில் போற்றி வணங்குவது, புனிதம் மிக்கது.
பிரதோஷ விரத பலன்கள் தெரிய வேண்டுமா?
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
எல்லா உயிர்களையும் படைத்த இறைவன், அனைத்தும் தானாகவே ஆகி வியாபித்து நிற்கும் காலமே பிரதோஷம் என்பதால், பிரதோஷ விரதம் இருப்பதும், அன்று அரனை தரிசிப்பதும், அனைத்து வளமும் நலனும் கிட்டச் செய்யும்.
முதல் வழிபாடு நந்திதேவருக்கு ஏன்?
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
வேதகோஷங்கள் ஒலிக்க சிவபெருமான் பார்வதி தேவியுடன் கைலாயத்தில் வீற்றிருந்தார்.
பிரதோஷ பூஜையில் என்னென்ன செய்ய வேண்டும்?
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும் போது எண்ணெய் பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம்.
பிரதோஷ வழிபாடு எப்படி இருக்க வேண்டும்?
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் ஆகும்.
மஹா பிரதோஷம்
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
மது, மங்கை, கொள்ளை, பொய் கூறுதல் இவற்றினால் பல்வேறான பாவங்கள், மஹா பாதகம் ஏற்படும்.
பிரதோஷம் விரதம் அனுஷ்டிக்கும் முறை
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.
பிரதோஷ பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
குறைகள் பல உடைய இந்த மனித வாழ்வை நிறைவுடையதாக்கிக் கொள்ளவே நாம் கடவுளை வழிபடுகிறோம்.
கோவில் பிரதோஷ பூஜையில் செய்ய வேண்டியவை
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
நந்திதேவருக்கு அபிஷேகம் செய்யும்போது எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம்.
பிரதோஷம் பிறந்த கதை
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பிரதோஷம் என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருபவர் சிவபெருமான். அவருக்கு உரிய விரத நாள் தான் பிரதோஷம்.
பிரதோஷ வழிபாடு பிரகாசத்தை கொடுக்கும்
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பிரதோஷம் என்பது வடச் சொல் 'ப்ர' என்றால் மிகவும் அதிகமான, 'தோஷம்' என்றால் தீமை என்றும் பொருள். அதாவது மிகவும் அதிகமான தீமை தரும் வேளை என்று பொருள்.
பிரதோஷத்தின் மகிமை தெரியுமா?
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
ஒரு பெண்மணி தன் இளம் பாலகனுடன் ஆலயத்திற்கு வந்து காளேசுவரை வணங்கி விட்டு தன் இல்லம் திரும்பினாள்.
பிரதோஷ காலத்தில் செய்ய வேண்டிய அபிஷேகங்களும் நற்பலன்களும்
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
அபிஷேகப் பொருட்கள் – நற்பலன்கள்
பிரதோஷத்தின் பலன்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பிரதோஷ பூஜை செய்பவர்கள் அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சகல சௌபாக்கியங்களையும் பெறுவார்கள்.
சனிப்பிரதோஷத்தில் சொல்லகூடிய ஒரு சிவன் துதி
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
உலகத்துக்கெல்லாம் தலைவன் பரமேஸ்வரன்.
பைரவர்
Category: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பைரவர் வழிபாடு கை மேல் பலன். சிவபெருமானின் வேக வடிவமே பைரவர் ஆவார்.
பைரவர் தோற்றத்திற்கான புராண வரலாறு
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
தான் என்ற ஆவணமும், கர்வமும் அழிவைத் தரும். இதற்கு எடுத்துக்காட்டாக, படைப்புக் கடவுளாகிய பிரம்மன் ஒரு சமயம் தன் ஆற்றிலின் பேரில் அளவற்ற கர்வம் கொண்டு தாமே சிவனை விடப் பெரியவர் என்று கூறி வந்தார்.
பைரவ தத்துவம்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
அகந்தை கொண்டு தவறு செய்பவர்கள் தேவர்களாகவே இருப்பினும் இறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளில் இருந்தும் நல்லவர்கள் போற்றி காப்பாற்றப்படுவார்கள் என்பதே பைரவர் உணர்த்தும் தத்துவம் ஆகும்.
12 ராசிகளுக்கான பைரவர்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
காலமே உருவமான கடவுள் கால பைரவ காலமே இவர் திருவடிவம், 12 ராசிகளும் அவரின் உடல் உருவப் பகுதிகளாக அமைந்துள்ளது.
பைரவர் மகிமை
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
பைரவர் தன்னை வழிபடும் அடியவர்களின் பயத்தைப் போக்குவார்.
அஷ்ட பைரவர்களின் தரிசனம் சீர்காழியில்!
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
பைரவர் சன்னதி பல ஆலயங்களில் இருந்தாலும் அஷ்ட பைரவர்கள் ஒரே இடத்தில் இருப்பதுதான் சீர்காழி ஸ்ரீசட்டநாத சுவாமி ஆலயத்தின் சிறப்பு.
64 பைரவர்கள் யார்?
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
சிவபெருமானைப் போலவே அவரின் அம்சமான பைரவரும் 64 அம்சங்கள் கொண்ட திருவுருவங்கள் உடையவர் என நூல்களில் உள்ளன.
கடன் தொல்லை நீக்கும் கால பைரவர்
Category: ஆன்மீக குறிப்புகள்: பைரவர்
பஞ்சபாண்டவர்கள் ஈசனை வழிபட்டு பேறு பெற்ற தலம், மூக்கனூர்.
ஆன்மீகம் என்றால் ஒருவகை ஆழமான கடல் போன்றது. ஆன்மீகம் என்பது ஒரு அறிவியல்,
: ஆன்மீகம் - குறிப்புகள் [ ஆன்மீக குறிப்புகள் ] | : spirituality - Tips in Tamil [ Spiritual Notes ]
ஆன்மீகம்
ஆன்மீகம் என்றால் ஒருவகை ஆழமான கடல் போன்றது. ஆன்மீகம்
என்பது ஒரு அறிவியல், இறைவனை தேடி ஆராயும் ஒரு கலை, பேரின்பத்தை அடையக் கூடிய நிலை
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள்
இந்த ஆன்மீக பயணத்தில் சிலர் கரையிலேயே நின்றுக் கொண்டு கால்களை மட்டும் நனைத்து
சுகம் காண்பவர்களும் உண்டு. இன்னும் சிலர் வசதி, வாய்ப்புகளை பயன்படுத்தி படகிலோ,
கப்பலிலோ அதிகத் தூரம் சென்று திரும்பி
வந்தவர்களும் உண்டு. இன்னும் சிலர் கரை அருகே உள்ள அலைகளில் ஊஞ்சலாடி மகிழ்ச்சி
அடைந்தவர்களும் உண்டு. இன்னும் சொற்பச் சிலரே எதுவும் இல்லாமலே கடலில் நீந்தி,
அதுவும் ஆழ்கடலில் சென்று ஆன்மீகம் என்னும் முத்து எடுத்து முக்தி அடைகிறார்கள். அதாவது
முத்து எடுக்கச் சென்றவன் மூழ்கி சாவதும், மூழ்கி சாவ வேண்டும் என்று சென்றவன்
முத்து எடுத்து வருவதும் கேள்விபட்டு இருப்போம். உண்மை என்னவெனில் நம் ஆன்மீகப்
பூமியில் அனைவருமே இதை நோக்கி தான் பயணம் செய்கிறோம். முத்து எடுக்கிறோமா, மூழ்கி போகிறோமா
என்பதே கேள்வி. ஆன்மீகத்தில் மூழ்குதல் என்பதே ஒரு அளவு கடந்த அலாதியான மகிழ்ச்சி.
ஆன்மீகத்தில் இருக்கின்ற தத்துவங்கள், பயன்கள், மகிழ்ச்சிகள், நிம்மதிகள் ஏராளமாக
குவிந்துக் கிடைக்கக் கூடிய ஒரு பொக்கிச குவியல். நமக்கான வாழ்வில் சீரும்
சிறப்பாக இன்புற்று வாழ ஆன்மீகம் சார்ந்த பல சின்ன சின்ன செயல்களை செய்து வந்தாலே
போதுமான செயலாகும். நிச்சயம் நமக்கான வாழ்வில் பல மாற்றங்களை நாம் காணலாம். அனைத்தையும்
பெறலாம். ஆன்மீகம் என்பது காவி நிறத்தை அணிவது மட்டும் கிடையாது. இந்த உடையை ஏன்
அணிந்து இருக்குறீர்கள் என்று சுவாமிஜியிடம் கேட்கும் போது அவர் சொன்ன பதில் காவி
நிறம் முற்றும் திறந்த நிலைக்கானது. ஆசைகள் அனைத்தும் அடக்கி, ஆசை என்றால் என்ன
என்று கேட்கும் நிலைக்கு வருவதே ஆகும். ஆனால் நவீன உலகத்தில் காவி நிறம் ஆசைகள்
அனைத்தையும் அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பது ஒரு வித மோசமான நிலை. இந்த
நிலையும் மாறக் கூடிய நிலையாகும். ஆன்மீகம் என்பது ரோஜா மலர் போன்றது. அதை
ரசிக்கலாம். அழகாக காட்சி தரும். நிறத்தோற்றம் தெரியும். ஆனால் அதன் நறுமணத்தை
முகர்ந்தால் மட்டுமே உணர முடியும். அதுபோலத் தான் ஆன்மீக உணர்வு உணர்வதிலே
இருக்கிறது. அந்த வகையில் உணர்வதற்கும் தெரிவதற்கும் எண்ணிலடங்கா பல ஆன்மீக
குறிப்புக்கள் இந்த வலை தலத்தில் பதிவு செய்யப் பட உள்ளது. இங்குள்ள ஆன்மீகத்
தகவல்கள், குறிப்புகள், சிந்தனைகள், வழிபாடு முறைகள், கதைகள் அனைத்துமே நிச்சயம்
உங்களை ஆன்மீக ரீதியாக மேம்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.
ஆன்மீகத்தை மதம் சாயம் பூசி மற்ற மதத்தினரின் மனக் காயங்களை
ஏற்படுத்துவது ஆன்மீகமல்ல. மேலும் ஆன்மீகம் என்பது நெற்றியில் திருநீறு அணிந்து, சதா இறைவனுடைய நாமத்தையே உச்சரித்துக் கொண்டு, பலர் பார்க்குமாறு
கோவிலுக்கு உதவிகள், நன்கொடைகள் செய்வது, அடுத்தவருக்கு அனைவரின் முன்னிலையிலும் உதவி செய்வது இது
போன்ற செயல்களில் ஈடுபடுவது மட்டும் கிடையாது. மனதிலே கேட்ட, கெட்ட எண்ணங்கள்
இல்லாமலும், அடுத்தவருக்கு
நன்மை செய்யாவிட்டாலும், தீமை
செய்யாமல் தன்னுடைய மனசாட்சிக்கு பயந்து வாழ்வது
என்பதும் ஒருவகை ஆன்மீகமே. மேலும் நமக்கு ஏற்படும் நல்லது கெட்டதுகளுக்கு
நாமே பொறுப்பு ஆகும். அனைவரிடமும் அன்பாக பேசுவதும், அனைவருக்கும் நல்லது செய்வதும், அனைவரையும் மரியாதையாக நடத்துவதும், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தலும், இன்னும் ஏன் சுருக்கமாக சொன்னால், நமது வலது கையிலே செயலுக்கான
திறமை உள்ளது, அதை மிகவும் சரியாக செய்துவந்தால், உண்மையாக வாழ்ந்தால், இடது கையிலே வெற்றி கனி தானாகவே வந்து சேரும். இதுவும் ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை ஆகும். ஆண்டவனுக்கு பிரசாதம்
செய்து,
படையல் செய்து, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பது எல்லாம் இங்கே
ஆன்மீகம் கிடையாது. அதை அந்த ஆண்டவனே விரும்புவதும் கிடையாது. இறைவன் விரும்புவதெல்லாம்
ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி ஆகும். இறைவனுக்கு என்று நம் மனதின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தி
கொண்டு,
சதா சர்வ காலமும் இறைவனை நினைத்து கொண்டு,
எந்த செயல் செய்து வந்தாலும், அது அந்த ஆண்டவனால் தான் செய்யப்படுகிறது
என்கின்ற நினைப்புடனே செய்து வந்தாலே, அந்த செயல்களின் பலன்களை கூட அந்த ஆண்டவனுக்கு சமர்ப்பணம்
செய்துகொண்டு வாழ்ந்து வந்தாலே அதுதான்
உச்சகட்ட ஆன்மீகம். கடவுள் என்பவர் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுள் தான்.
இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள்
என்று அர்த்தம். நல்வாழ்வு வாழ இவை அனைத்தும் ஒரு ஐதீகம்.
நம் வீடுகளிலே அமைதி, மகிழ்ச்சி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல விஷயங்கள் நிலைக்க, நடக்க நாம் ஆன்மீக
குறிப்புகளை பின்பற்றுவது என்பது மிகவும் சாலச்சிறந்த செயல் ஆகும். நாம் பூஜை செய்கின்ற
போதும், ஆன்மீக விஷயங்களை பின்பற்றும் போதும் என்ன செய்ய வேண்டும்? அல்லது எப்படி செய்ய வேண்டும்? என்கிற குழப்பங்கள் ஏற்படுவது உண்டு. எவ்வளவோ விஷயங்கள்
நமக்குத் தெரியாமல் ஆன்மீகத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அப்படியான பல
விஷயங்களைத் தான் இந்த ஆன்மீகப் பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.
பணம் சேர்ப்பது எப்படி?
இந்த நவீன உலகத்தில் பணம் ஒருவனிடம் இல்லை என்றால் இந்த
உலகமே அவனை தாழ்த்தி பேசும். அதே மாதிரி, கையிலே பணம் இருந்தாலும் பையில் தங்கவில்லையே என்று
புலம்புகிறவர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எவ்வளவு தான்
சம்பாதித்தாலும் போதவில்லையே என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். பணம் எப்படி வந்ததோ
அப்படியே போனால் நம்மால் வருமானத்தில் ஒத்த ரூபாய் கூட சேமிக்க முடியாமல் போக வாய்ப்பு
அதிகம் இருக்கிறது. பணக்காரனாக இருப்பவன் எப்போதும் பணக்காரனாகவே இருக்கின்றான்.
ஏழையாக இருப்பவன் எப்போதுமே ஏழை தான். இந்த நிலை மாற வேண்டுமா? நீங்களும் பணக்காரர் ஆக வேண்டுமா? அந்தக் கலை தெரிய வேண்டுமா? நன்றாக சிந்தித்து உங்களிடமே
கேட்டுப் பாருங்கள். நம்மில் பாதி பேர் நாம் செலவழிக்கும் செலவுகளை கணக்கு எழுதுபவர்கள்
கிடையாது. நம்மிடம் இருக்கும் ஒத்த ரூபாய்க்கும் செலவு கணக்கு தெரிய வேண்டும்.
ஆனால் அப்படியா நாம் கணக்கு வைக்குறோம். போன வாரம் செலவு செய்தது இன்னும் சொல்லப்
போனால் இன்று செலவு செய்தத்தற்காவது கணக்கு வைக்குறோமா என்று மனம் பதித்து
சொல்லுங்கள். நம்மிடம் இருக்கும் இன்றைய கடைசி 1௦௦ரூபாய்க்கு கூட செலவுக்
கணக்குகள் சரியாகச் சொல்ல முடியாத நிஓலை தான் என்பது உண்மையே. இதையே பணக்காரனிடம்
கேட்டுப் பாருங்கள். அவர்கள் கணக்கே பார்க்க வேண்டாம். அந்த அளவுக்கு பணம்
குவிந்துக் கிடக்கும். அவர்கள் ஒத்த ரூபாய்க்கு கூட கணக்கு பார்ப்பார்கள். அதனால்
தான் அவர்கள் மென்மேலும் பணம் சேர்க்கிறார்கள். கணக்குப் பார்க்கும் போது தானே தேவை
அற்ற செலவுகள் தெரிய வரும். வரவுக்குள் செலவு கட்டுப்படும். மேலும் நம்முடைய
ஆன்மீக நடைமுறையும் பணத்தை சேர்க்க பலன் கொடுக்கும்.
● நம்முடைய
கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உள்ளது. அன்னதானம் என்பது பசியோடு
வந்தவருக்கு கேட்காமல் நம்மிடம் இருக்கும் உணவுகளை கொடுப்பது. மேலும் வீடு, வாசல், சொந்தம், பந்தம், தொழில்
இவைகளை இழந்தவருக்கும் அன்னதானம் அளிப்பது ஆகச் சிறந்தது ஆகும்.
● உலகில் மிகப் பெரிய மகிழ்ச்சி என்பது நமக்குத் தெரியாத
நபர்களுக்கு தெரிந்தும், தெரியாமலும் உதவியை சரியான நேரத்தில் செய்வது ஆகும்.
● உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து மற்றவர்கள் விடும்
பெருமூச்சு நீங்க வேண்டும் என்றால் உங்களுக்கும், உங்களது வீட்டிற்கும் சாம்பிராணி புகை போடுவது நல்லது.
● பொதுவாகவே ஒரு நாளை நாம் தொடங்குவதற்கு முன்பாகவே, இறைவனின் ஏதாவது ஒரு மந்திரத்தை ஜெபிப்பது நாம் ஜெயிப்பதுர்க்கு
நல்லது என்பது சாஸ்திரம் சொல்கிறது. இப்படி மந்திரத்தை உச்சரித்த உடன், ஒரு டம்ளர் இளநீர் குடித்தால், ஜெபித்த மந்திரத்தின் பலனை உடனடியாக பெற்றுவிடலாம் என்றும்
சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
● ஆன்மீகத்தை பொருத்தவரை சில பரிகாரங்களை முறையாகச் செய்து வந்தால்
நல்ல பலன் கிடைக்கும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. நாம் பரிகாரங்களை
செய்யும்போது அவை பலன் அளிக்க வேண்டுமென்றால், சில வழிமுறைகளையும் நாம் நினைவில் வைத்துக் கொள்வது
அவசியமாகிறது. ‘கோவில் சேவைகள் வணிக
நோக்கில் இருக்க கூடாது’
● பிரச்சினைகள் தீராமல் அவதிப்படுபவர்களுக்கு ஆன்மீக ரீதியாக சக்திவாய்ந்த ஒரு வழிபாடு முறை உள்ளது. இந்த வழிபாடு பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வந்தால் உங்களுடைய வேண்டுதல் உடனே நிறைவேறும். நிம்மதியாக சந்தோசமாக வாழ வேண்டும் எனில் தேவையற்ற செயல்களும் செய்யாமல் குடும்பத்தோடு இறை வழிபாடு தளங்கள் சென்று வருவதோடு, இறை நாமங்களையும் சதா உச்சரித்து வருவதே மிகப் பெரிய பலன்களைத் தரும். வேதங்கள், பாசுரங்கள், அருட்பாக்கள் பாடியவர்கள் இறைவனின் அருளை பெற்றுள்ளார்கள். நம்மில் எத்தனை பேர் இவற்றை படிக்கிறோம்? அவர்களுடைய ஆசிர்வாதம் பெற்று, அருள் பெற்ற தலங்களுக்கு சென்று நம்முடைய கால் பதித்தாலே போதும். நமக்கு மோட்சம் கிட்டும். நம்முடைய தமிழர் நல வலைத்தளத்தில் ஆன்மீகப் பதிவுகள் பதிவிடப்படுகிறது.
● இதில் வரும் பதிவுகளின் மூலம் ஆன்மீகத்துவத்தின் மகத்துவங்களை, அற்புதங்களை அறிந்துகொள்வோம். வாருங்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
: ஆன்மீகம் - குறிப்புகள் [ ஆன்மீக குறிப்புகள் ] | : spirituality - Tips in Tamil [ Spiritual Notes ]