நர்த்தகியும் வெள்ளை கோபுரமும் - ஸ்ரீரங்கம்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
பின்னர் அவள் குதித்தே விட்டாள்.! வருடம் 1323. ஸ்ரீரங்கம் சுல்தான்களால் தாக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோயிலில் தீவிலே வசித்தவர்கள் 12,000 பேர் கோயிலை காக்க உயிர் தியாகம் செய்கிறார்கள். சுல்தான் கோயில் நகை களையும் களஞ்சியம் எல்லாம் கொள்ளை அடித்து செல்கிறான்.
குகநாதீஸ்வரர் திருக்கோவில் - கன்னியாகுமரி
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் வடக்கிலும், விவேகானந்தபுரம் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலுக்கு தெற்கில் ஒரு கிலோமீட்டர் தூரத்திலும், கன்னியாகுமரி ரெயில் நிலையத்திற்கு மிக அருகிலும் குகநாதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயிலின் சிறப்புகள்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
இயற்கையாகவே பூமியிலிருந்து பொங்கி வரும் ஏழு தீர்த்தங்கள் தன்னைச் சூழ்ந்திருக்க, அவற்றுக்கு மத்தியில் கோயில்கொண்டு அருள்கிறார் அருள்மிகு ஜெயமங்கள ஆஞ்சநேயர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் தன்னகத்தே கொண்ட திருக்கோயில் இது. சுமார் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலை தரிசிக்கலாமே!
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 அருமையான தகவல்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது.
ஸ்ரீகாளத்தீஸ்வரர் திருக்கோவில்..!
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
கோவில் என்றாலே அதில் பழங்காலத்து பெருமைகளும், தனிச் சிறப்பும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் பெருமைமிக்க கோவில்களுள் ஒன்றான ஸ்ரீகாளத்தீஸ்வரர் கோவிலில் உள்ள அதிசயங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும் !!
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்) இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு கும்பகோணம் அருள்மிகு ராமசாமி ஆலயம்.
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
திருவிழா: ராமநவமியன்று இங்கு விசேஷ பூஜைகள் உண்டு. மாசிமகத்தன்று ராமனும், சீதையும் மகாமக குளத்தில் எழுந்தருளி தீர்த்தம் வழங்குவர். தல சிறப்பு: ராம சகோதரர்கள் நால்வரும் இங்கு அருள்பாலிக்கிறார்கள். மற்ற தலங்களில் கதாயுதத்துடன் காட்சிதரும் அனுமான் இங்கு வீணையுடன் காட்சி தருகிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு ராமசாமி திருக்கோயில்,கும்பகோணம்- 612001, தஞ்சாவூர் மாவட்டம். பொது தகவல்: ராமனுக்கு தனிக்கோயில் பல ஊர்களில் இருக்கிறது. பரதனுக்கு தனிக்கோயில் கேரள மாநிலம் இரிஞ்ஞாலக்குடாவில் உள்ளது. ஆனால், ராம சகோதரர்கள் நால்வரும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி, சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம், கும்பகோணம் ஆகிய இடங்களில் சேர்ந்து காட்சி தருகின்றனர். இதில் கும்பகோணம் ராமசுவாமி கோயிலும் ஒன்று.
சீலைக்காரி அம்மன் வரலாறு
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏழு அண்ணன்மார்களுடனும் ஒரு தங்கையுடனும் பிறந்தவர் பட்டியம்மா. பிறவியிலேயே வலது கால் ஊனம். எனவே, வீட்டில் உள்ளவர்கள் பிரியத்தையும் செல்லத்தையும் கொட்டி இவரை வளர்த்திருக்கிறார்கள். பட்டியம்மாளின் தங்கை பெயர் வீரம்மாள். அன்புக்குரிய அண்ணன்கள், பாசத்தைக் கொட்டும் தங்கை... எனப் பட்டியம்மாவின் வாழ்க்கை இனிமையாக நகர்ந்துகொண்டிருந்தது. அந்தச் சமயத்தில்தான் கிழக்கிலிருந்து வணிகம் செய்ய அண்ணன், தம்பி இருவர் வந்திருக்கிறார்கள்.
ராமேஸ்வரம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய 120 தகவல்கள்...
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
1. ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீபீணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே காணலாம்.
அருள்மிகு இலட்சுமி நாராயணர் திருக்கோயில்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
பாற்கடலில் மகாலட்சுமி தோன்றி, பகவான் விஷ்ணுவைக் கணவராக அடைய விரும்பி அவரையே அடைந்தாள். தேவாசுரர் கூட்டத்தில் மகாலட்சுமி தன்னை தேர்ந்தெடுத்ததை சிறப்பிக்கும் பொருட்டு, அப்பெண்மைக்கு மதிப்பளிக்கும் விதத்தில், விஷ்ணு அவளைத் தன் இடது தொடை மீது அமர்த்தி, தாமரை மலர் மேல் அமர்ந்து லட்சுமி நாராயணனாக காட்சி அளித்தார். இக்கோயில் 16ம் நூற்றாண்டில் மைசூர் கர்த்தார் இன மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள காளிங்கன் என்ற ஐந்து தலை பாம்பு சிலை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சி, பாம்பு மீது கிருஷ்ணன் நாட்டியம் ஆடுவது போல் சிலைவடிக்கப் பட்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த சிலை இன்னும் புதிதாக காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. எதிரிகளின் தொல்லைக்கு ஆளானவர்கள் இந்த காளிங்க நர்ந்தன சிலையை வழிபட்டால் தொல்லையிலிருந்து நீங்கலாம்.
அருள்மிகு வனவேங்கடப் பெருமாள் திருக்கோயில்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
400 ஆண்டுகளுக்கு முன்பே இக்கோயில் இங்கு அமைந்திருக்கிறது. இக்கோயில் குறித்த தெளிவான வரலாறு ஏதுமில்லாவிடினும், செவி வழிச் செய்திகள் இக்கோயிலின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. கோயிலின் பழமையைப் பறைசாற்றும் வகையில் சில கல்வெட்டுக்கள் தென்படுகின்றன. வேப்ப மரம் பொதுவாக அம்பாளுக்கு உகந்தது. ஆனால், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா துடுப்பதி அருகேயுள்ள ஸ்ரீரங்ககவுண்டன் பாளையம் கிராமத்தில் வேப்ப மரத்தடியில் வீற்றிருந்து பல நூறு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீவனவேங்கடப் பெருமாள். ஊருக்கு வெளியே, வயல்களுக்கு நடுவே பசுமை போர்த்திய பின்னணியில் அமைந்திருக்கிறது இக்கோயில். மிகப் பிரம்மாண்டமான வேப்பமரம் கோயிலின் பெரும் பகுதியை வியாபித்திருக்கிறது. மரத்தடியில் எவ்வித சிலைகளும் இல்லை. ஐந்து கற்கள் மட்டுமே அமைந்துள்ளன. இவற்றையே வன வேங்கடப் பெருமாளாகவும், தாயாராகவும் உருவகம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். ஸ்ரீரங்ககவுண்டன்பாளையத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் வனவேங்கடப் பெருமாளை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.
அருள்மிகு அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) திருக்கோயில்:
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
அருள்மிகு அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) திருக்கோயில், தொலைவிலிமங்கலம், தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இரட்டை திருப்பதி என்றழைக்கப்படும் திருத்தொலைவில்லிமங்கலம் 108 வைணவத்திருத்தலங்களிள் ஒன்று. இங்கு இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும் நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களுக்கும் தனித்தனியே பெயர் சூட்டியுள்ளதால் நவதிருப்பதிகளின் கணக்கில் இத்தலத்தை இரண்டு திருத்தலங்களாகக் கொள்வது மரபு. ஆத்ரேய சுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுத போது ஒளிரும் வில்லையும் தராசையும் கண்டு ஆச்சரியமடைந்து கையில் எடுக்க, அவை சாப விமோசனம் பெற்று ஆண், பெண்ணாக உருப்பெற்றன.
சர்ப்ப தோஷம் போக்கும் நவநீதகிருஷ்ணன்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
‘நவநீதம்’ என்றால் ‘வெண்ணெய்’. தண்ணீரில் பால் கலந்தால் அதோடு ஐக்கியமாகி விடும். உயிர்களான நாமும், கடவுளால் அருளப்பட்ட இந்த பூமியை நமக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். சிறப்பம்சம்: முன் மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணர் சன்னிதிகள் உள்ளன. இச்சன்னிதி எதிரே ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். கிருஷ்ண ஜெயந்தி இங்கு பாஞ்சராத்ர ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. மறுநாள் மாலையில் பகவத் கீதை பாராயணம், பிருந்தாவன தீபக்கேளிக்கை கோலாட்டம் ஆகியவை நடக்கின்றன. மூலஸ்தானத்தில் நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணெய்யுடன், சிரித்த முகத்துடன், குழந்தையாக நின்ற கோலத்தில் அருளுகிறார். இவரது வலது மார்பில் மகாலட்சுமியும், அருகில் உற்சவரும் இருக்கின்றனர். இவர் வீதியுலா செல்வது கிடையாது.
வெட்டவெளியில் அருள்பாலிக்கும் வெக்காளி அம்மன்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
தலைக்கு மேல் கூரை இல்லாமல் வெட்டவெளியில் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வெக்காளியம்மன் கோயில் திருச்சிக்கு அருகே உறையூரில் உள்ளது. இது திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது. உறையூர் முற்காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்தது. உறையூருக்கு வாகபுரி, கோழியூர் என்ற பெயர்களும் உண்டு. இந்தக் கோயிலின் தல புராணப்படி, ஒரு காலத்தில் உறையூரை சோழ மன்னன் ஆட்சி செய்த காலத்தில் சாரமா முனிவர் என்பவர் இங்கே ஒரு நந்தவனம் அமைத்து பல அரியவிதமான மலர்ச் செடிகளை வளர்த்தார். இவர் திருச்சி மலைக்கோட்டையிலுள்ள ஸ்ரீ தாயுமான சுவாமிகளின் பக்தர் ஆனதால், தினமும் இந்த மலர்களை கொய்து, மாலை கட்டி ஸ்ரீ தாயுமானவருக்கு அர்ப்பணித்து வந்தார்.
அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
காஞ்சி சங்கராச்சாரியார் கேரள சீடர்களோடு வந்து ஸ்ரீசக்கரம் வைத்து பூஜை செய்கின்றார். தினமும் தான் தங்கியிருந்த குடிலில் இருந்து ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் ஸ்ரீசக்கரம் திரும்ப வரவே இல்லை. எடுத்துப் பார்த்தும் திரும்ப வரவில்லை. அந்த ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தின் மேல் புற்று வளர்ந்து வருகிறது. அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடும்போது தடுக்கி ரத்தம் வருகிறது. இந்த விசயம் அப்பகுதியில் இருக்கும் கேரள மன்னர் மார்த்தாண்டவர்மாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் அந்த இடத்தில் சிறு குடில் கட்டி வழிபாடு நடத்தினார். பின்பு காலப்போக்கில் அம்மனின் மகிமை பரவ பரவ பக்தர்கள் பெரும் அளவில் வந்து வழிபடும் பெரிய கோயிலாக புகழடைந்ததாக கூறப்படுகிறது. ஆரஞ்சு கலரில் முகப்பு. ஓடு வேய்ந்த மேற்கூரையுடன் மலையாளச் சாயல் படிந்த எளிமையுடன் இருக்கும் கோயில். அதற்குள் மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்து நிற்கும் புற்று. அதன் தலைப் பகுதியில் பகவதி அம்மன். 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக் கொண்டிருக்கும் புற்றுதான் பகவதி அம்மன் என்பது சிறப்பு. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மிகப்பிரபலமான கோயில்.
கஞ்சனூர் சுக்கிர பகவானை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், கஞ்சனூர் அருள்மிகு கற்பகாம்பிகை சமேத அக்னீஸ்வரர் திருக்கோவில் நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிர ஸ்தலாகும். 2. இது மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானது. 3. காவிரியின் வடகரை ஸ்தலங்களில் இது 36வது ஸ்தலமாக விளங்கி வருகிறது. 4. கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள கஞ்சனூருக்கு அடிக்கடி பஸ் வசதிகள் உள்ளன. 5. பலாசவனம், பராசரபுரம், அக்னிபுரம், கம்சபுரம், முக்திபுரம், பிரம்மபுரி என்னும் பல பெயர்களால் கஞ்சனூர் அழைக்கப்படுகிறது. 6. 1,500 ஆண்டு காலத்திற்கு முன்னதாக, மதுரை ஆதீனத்தை நிறுவியருளிய சீர்காழியில் அவதரித்த சைவசமயக்குரவர் நால்வரில் முதல்வரும், சைவ சமயத்தின் தனிப்பெருந் தலைவருமான திருஞான சம்பந்தப்பெருமான் எழுந்தருளி தரிசித்த தலம் இது. 7. சோழர், விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுகளில் இத்தலம் “விருதராஜ பயங்கர வளநாட்டு நல்லாற்றார், நாட்டுக் கஞ்சனூர் என்றும், இறைவன் அக்னீஸ்வரம் உடையார் என்றும்” குறிக்கப்பெற்றுள்ளன. 8. இத்தலத்தின் மூர்த்தியின் நாமம் சுக்கிர பகவான் என்று அழைக்கக்கூடிய ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆகும். அக்னீஸ்வரப் பெருமானே, சுக்கிர பகவானாக விளங்கி வருகிறார். 9. ஹரதத்த சிவாச்சாரியார் அவதரித்து அற்புதங்கள் பல செய்த திருத்தலம் இது. இந்த ஸ்தலத்தில் பராசர முனிவருக்கு ஏற்பட்ட சித்தப்பிரமை நீங்கியது. 10. பிரமதேவருக்கு திருமணக்கோலக் காட்சி கிடைத்தது. அக்னிக்கு பாண்டுரோகம் தீர்ந்தது. கம்சனுக்கு மூத்திர நோய் தீர்ந்தது.
எந்தந்த கோவிலுக்கு சென்றால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா...?
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
பொதுவாக கோவிலுக்கு பலரும் எதையாவது வேண்டியே செல்கின்றோம். அவ்வாறு செல்லும், இடத்திலுள்ள கடவுள்கள், தங்களுடைய கடமையை மட்டுமே செய்வர். அதை நாம் தெரிந்து கொள்ளாமல், கோவிலுக்குச் சென்று வேண்டுகின்றோம். பின்னர், கடவுள் நமக்குத் தரவில்லை. அதனால், அவர் கடவுள் இல்லை என்று குறை கூறுகின்றோம்.
திருநெல்வேலி நகரில் ஶ்ரீ பிரகலாத வரதன் திருக்கோயில்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
மிகவும் பழமை வாய்ந்த கோயில் எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின் திருமேனி வடிவமைக்கப்பட்டதாக தகவல் உள்ளது. இந்தசன்னதியும், நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரேமட்டத்தில் இருந்துள்ளன. இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது. ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது. பின்னாளில் வைணவ பக்தரான கூரத்தாழ்வார் கோன் என்பவர் இதை மீண்டும் கண்டுபிடித்தார். அப்போது நரசிம்மர் அளவற்ற சக்தியுடன் ஆர்ப்பரித்து தனது சக்தியை வெளிப்படுத்தினாராம். மேலும் வைணவ பக்தர்களான பேரருளாளர் கோன், திருமங்கையர் கோன் ஆகியோர் பல திருப்பணிகள் செய்து நிர்வாகத்தையும் கவனித்து வந்தனர்.
மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
நம் வாழ்வின் துக்கங்கள், வேதனைகளுக்குக் காரணம் நம் கர்மவினையே. எத்தனையோ ஜென்மங்களில் செய்த பாவங்கள், புண்ணியங்களே நிழலாக நம்மைத் தொடர்கிறது. இதிலிருந்து நாம் விடுபட ஒரே வழி அம்பிகையைத் தியானம் செய்வதுதான். அவளையே தியானித்து அவள் நினைவிலேயே அமிழ்ந்து விட்டால் நமக்குத் தேவையானதை எல்லாம் அவளே கவனித்துக் கொள்வாள். அன்னையின் தவக் கோலம் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது. தவத்தின் மூலம் அவள் உணர்த்துவது நிலைத்த சிந்தனை. அலைபாயாத மனம். மனதைக் குவித்து ஒரே சிந்தனையுடன் நாம் இருந்தால் பிரபஞ்சம் அதை நமக்கு நிறைவேற்றிக் கொடுக்கும். ஒவ்வொரு தலங்களிலும் அம்பிகை தன் தவத்தின் மூலம் அதைத்தான் உணர்த்துகிறாள். அப்படிப்பட்ட ஒப்பற்ற தலங்களில் மிக மேன்மையானது சென்னை அருகே உள்ள மாங்காடு திருத்தலம். ஒரு சமயம் கைலாயத்தில் அன்னை பார்வதிதேவி ஈசனின் கண்களை விளையாட்டாகப் பொத்திவிட உலகம் இருண்டு விட்டது. அதன் இயக்கமே நின்று விட்டது. ஈசனுக்கு ஒரு நிமிஷம் என்பது மனிதர்களுக்கு ஒரு யுகம் அல்லவா.? ஈசனின் கண்களே சூரிய சந்திரர்கள். தேவியின் செயலால் கோபமுற்ற ஈசன் அம்பிகையை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்து விடுகிறார். தன் தவறை உணர்ந்து அன்னை இப்பகுதியைத் தேர்ந்தெடுத்து ஐந்துவித அக்னியை வளர்த்து அதன் நடுவில் ஒற்றைக் காலில் கட்டைவிரலை ஊன்றி நின்று கடுந்தவம் இருந்தாள். உலக மக்கள் மேன்மையுற முப்பத்தி இரண்டு அறங்களையும் பூவுலகில் வளர்க்க அன்னையே உதாரணமாகத் தவம் இருக்கிறாள். நெருப்பின் நடுவே, இடதுகாலின் நுனி நடு அக்னியில் பட, வலதுகாலை இடது தொடைக்கு சற்றுமேலேயும், இடது கரத்தை நாபிக் கமலத்திற்கு சற்று மேலேயும், வலது கரத்தில் ஜப மாலையும், தனது திருக்கண்களை மூடியபடி உக்கிர தவம் செய்கிறாள் அம்பிகை. அதன் பின்னர் ஈசனின் அருள் வாக்குப் படி காஞ்சி சென்று தவம் இருந்து பங்குனி உத்திர நன்னாளில் இறைவனை மணந்து கொண்டாள். முதலில் அம்பிகை தவம் இருந்த இடம் என்பதால் மாங்காடு }ஆதி காமாட்சி தலம்} என்று அழைக்கப்படுகிறது.
வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய சிவன் கோயில் பற்றி அறிந்து கொள்வோமா
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
சிவன்’ என்றாலே அதிசயம்தான். சிவனையும், சிவன் கோயில்களையும் சுற்றி அதிசயமும், மர்மமும் எப்போதும் நிறைந்தே இருக்கும். அத்தகைய அதிசயம் நிறைந்த சிவன் கோயில் ஒன்றைக் குறித்து இனி காண்போம். திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் என்னும் திருத்தலத்தில் 500 அடி மலைக்கு மேல் அமைந்துள்ளது பொன்மலைநாதர் திருக்கோயில். இது 1000 வருடங்கள் பழைமையான கோயிலாகும். இக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின் 15ம் நூற்றாண்டில் விஜயநகர காலத்தில் விரிவுப்படுத்தப்பட்டது இருளன்’ என்னும் ஒருவர் காடுகளைத் தோண்டி வேர்களை பறிப்பதை தொழிலாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம், அவர் காட்டில் மண்ணைத் தோண்டிக்கொண்டிருக்கும்போது அவருடைய கோடரி பூமிக்குள்ளிருந்த சிவலிங்கம் மீது பட்டதால் மயங்கிப் போனார். பிறகு அவரது கனவில் சிவபெருமான் தோன்றி, தான் அந்தக் குழியிலே இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதையடுத்து, இருளன் அந்தக் குழியைத் தோண்டி சிவலிங்கத்தை வெளியே எடுத்து மலையிலே வைத்து பூஜிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வழியாகச் சென்ற பல்லவ மன்னன் தான் போரில் வெற்றி பெற்றால், நிச்சயமாக சிவபெருமானுக்கு ஒரு கோயில் கட்டுவதாக வேண்டிக்கொண்டார். இக்கோயில் கருவறையில் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. அவற்றில் 2 அடி உயரமுள்ள சுயம்பு லிங்கம் பொன்மலைநாதர் ஆவார்.
நம் தலையெழுத்தையே மாற்றக்கூடிய கோவில் எங்கிருக்கிறது தெரியுமா
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தலையெழுத்தே காரணம் என்று சொல்லி புலம்புவோரை கண்டிருப்போம். ‘தலையில் எழுதியது தான் நடக்கும்’ என்று சொல்வதுண்டு. ஆனால் அத்தகைய தலையில் எழுதப்பட்ட விதியையே மாற்றக்கூடிய கோவில் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலை பற்றி தான் இந்த பதிவில் காண உள்ளோம். சென்னையிலிருந்து திருச்சி போகும் போது திருச்சியிலிருந்து 25 கிலோ மீட்டர் முன்பாகவே திருப்பட்டூர் என்ற கிராமம் உள்ளது. அங்கேதான் இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு செல்வதற்கு விதியிருந்தால் மட்டுமே போக முடியுமாம். ஒருமுறை சென்றுவிட்டால் மறுபடி மறுபடி செல்ல வாய்ப்பு கிட்டுமாம். படைப்பு தொழிலை செய்து வந்த பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தது. மும்மூர்த்திகளில் ஒருவராக இருந்தவருக்கு கர்வம் வந்தது. பிரம்மனின் இந்த கர்வத்தை போக்க நினைத்த சிவபெருமான் அவரின் ஐந்தாவது தலையை வெட்டி எடுத்தது மட்டுமில்லாமல் ‘படைக்கும் தொழிலையும் இழக்க கடவாய்’ என்று சபித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரம்மன் சிவனிடமே சாபவிமோஷனம் வேண்டினார். அதற்கு சிவனும் தேசம் முழுவதும் இருக்கும் சிவன் கோவில்களுக்கு சென்று வழிப்பட்டு வரவும். தக்க நேரம் வரும்போது நானே சாப விமோஷனம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். அப்படி தேசம் முழுவதும் சுற்றி வந்த பிரம்மன் கடைசியாக திருப்பட்டூர் வந்து சிவனை தரிசிக்க அவருக்கு சாபவிமோஷனம் கொடுத்து படைக்கும் தொழிலையும் திரும்ப வழங்கினார். இதனால் பிரம்மனால் வழிப்பட்டு சாப விமோர்ஷனம் பெற்றதால் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் பெற்றது. படைக்கும் தொழில் மட்டுமில்லாமல் இங்கு வந்து வணங்கினால், அவரின் தகுதிக்கு ஏற்ப தலையெழுத்தையே மாற்றி எழுதலாம் என்று சிவபெருமான் வரமளித்தார்.
ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோவில்கள்.., பற்றி தெரிந்து கொள்வோமா
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
1.அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர், 2.அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி 3.அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம், 4.அருள்மிகு சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,
காலசர்ப்ப தோஷம் என்றால் என்ன? விளக்கம் மற்றும் ஓரு மாறுபட்ட பரிகார ஸ்தலம்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
காலசர்ப்பதோஷ ஜாதகமாக இருந்தால் முப்பது வயதிற்குள் எந்த லாபகரமான அதிர்ஷ்டத்தையும் பெற முடியாது. திருமணம் தடை கூட ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். காலசர்ப்ப தோஷத்தை காலசர்ப்ப யோகமாக மாற்ற வேண்டும் என்றால் இறைவனிடமே தஞ்சம் அடைய வேண்டும். நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், இறைவன் என் அருகில் இருக்கும் வரை என்ற முழு நம்பிக்கையுடன் தெய்வத்தை வணங்குங்கள். ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்பார்கள். பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகாரம் திருக்காளஹஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம். வாயு பகவானுக்கும், ஆதிசேடனுக்கும் சண்டை ஏற்பட்டது. அதிக சக்தியுடையவர்கள் யார்? என்று வாயு பகவானுக்கும் ஆதிசேடனுக்கும் பிரச்னை. அதனால் அதிக கணமுள்ள மலையை யார் அசைக்கிறார்களோ அவர்கள்தான் பலவான்கள் என்று அவர்களுக்குள்ளேயே போட்டி வைத்து கொண்டார்கள். மலையை அசைத்தார்கள். மலை அசைந்து அசைந்து வானத்தில் இருந்து பூமியில் விழுந்து அந்த மலை மூன்றாக பிளந்தது. அதில் இருந்து ஒரு பகுதிக்குதான் திருகாளஹஸ்தி என்ற நாமம் சூட்டப்பட்டது.
பண்ணாரி மாரியம்மன் உருவான ஸ்தல வரலாறு
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக இருப்பது பராசக்தியாகும். அப்பராசக்தியே பல்வேறு பெயர்களுடன் பல்வேறு தலங்களிலும் குடிகொண்டுள்ளாள். அச்சக்தியே கொங்கு நாட்டின் வடமேற்கு எல்லை அருகில் மைசூர் செல்லும் பாதையில் பிரதானமாக வீற்றிருக்கும் பண்ணாரி மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும். இத்தலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனத்தினிடையே அமைந்துள்ளது. நான்கு பக்கங்களாலும் இத்தலம் வனத்தால் சூழப்பட்டுள்ளது.அடர்ந்த காட்டுப் பகுதியில் யானைகளும், காட்டுப்பன்றிகளும், மான்களும், நரிகளும், வண்ண மயில்களும், குரங்குகளும், முயல்களும், கரடிகளும் மற்றும் மிகக் கொடிய விஷ ஜந்துகளும் சர்வ சாதாரணமாக உலாவும். இத்தலத்தில் தெற்குப் பார்த்த வண்ணமாக எழுந்தருளியுள்ள பண்ணாரி மாரியம்மன் சுயம்பு லிங்க வடிவமாக உள்ளாள்.சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இவ்விடத்தில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும். காட்டாற்றின் பெயரோ தோரணப்பள்ளம் என்பதாகும். இக்காட்டாறு இத்தலத்தின் மேற்குப்புறத்தில் உள்ளது. திம்பம் மலையின் அடிவாரம் அன்னை பண்ணாரி அம்மனின் அவதாரம் இவ்விடத்தில் நிகழப்போகிறது என்பதை உலகிற்கு அறிவிக்கவோ என்னவோ இக்காட்டாற்றின் துறையில் பசுவும், புலியும் ஒரே இடத்தில் நீர் குடிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இச்சுற்று வட்டார கிராம மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு இவ்வனப்பகுதிக்குச் செல்வது வழக்கம். இம்மக்கள் மாடுகளுக்குப் பட்டிகள் அமைத்து வனப் பகுதியிலேயே தங்கிக் கொள்வார்கள். தினசரி காலையில் மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்வார்கள். பின்னர் மாலையில் மாடுகளை ஓட்டி வந்து பட்டியில் அடைப்பார்கள்.
9 படித்துறைகள் 9 நெய்தீபம் 9 வார தரிசனம்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
திருவாரூருக்கு அருகில் உள்ள அற்புதமான திருத்தலம், திருக்கண்ணபுரம். இந்தத் தலத்து நாயகனின் திருநாமம்- ஸ்ரீசௌரிராஜப் பெருமாள். மூலவர்- ஸ்ரீநீலமேகப் பெருமாள். ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீகண்ணபுரநாயகி மற்றும் ஸ்ரீஆண்டாள் என நான்கு தாயார்களுடன் திருமால் அருள் பாலிக்கும் ஒப்பற்ற க்ஷேத்திரம் இது! கோயிலுக்குத் தென்புறம் உள்ள தடாகத் தீர்த்தக் குளத்தை பூதம் ஒன்று காத்து வருவதாகவும், அங்கிருந்தபடி ஸ்ரீசௌரிராஜப் பெருமாளை நினைத்து தவமிருந்து வருவதா கவும் ஐதீகம். இந்தத் தடாகத்தை பூதாவட தீர்த்தக் குளம் என்பார்கள். இந்தக் குளத்தில் நீராடிவிட்டு, பெருமாளை அர்ச்சித்து ஸேவித்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்; நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது நம்பிக்கை. மிகப் பிரமாண்டமான, புராதனமான இந்த ஆலயம், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்விய தேசம். ராஜகோபுர நுழைவாயிலைக் கடந்து செல்லும்போது, பெருமாள் சந்நிதியை நோக்கி ஒரே வட்டத்தில் ராசி மண்டலம் அமைந்துள்ளது. நவக்கிரகங்களும் ஐக்கியமாகி இருக்கிற ராசி மண்டலக் கட்டத்தின் நடுவில், ஸ்ரீதேவி- பூதேவியுடன் பெருமாள் தரிசனம் தருகிறார். வேறெங்கும் காண்பதற்கு அரிதானது இந்த நவக்கிரகக் கட்டங்கள் எனச் சிலாகிக்கின்றனர், பக்தர்கள்! இந்த நவக்கிரகக் கட்டங்களுக்குக் கீழே நின்றபடி, பெருமாளை மனதாரப் பிரார்த்தித்தால், நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!
கடவுள் இல்லை என்று சொல்பவர்களே இந்த கோவிலுக்குள் வந்தால் கதி கலங்கி போவார்கள் - தமிழகத்தில் ஒரு ஆன்மீக மர்மம்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ளது அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர். மிக மிக பழமையான கோவில். இந்த கோவில் வரலாறை படித்தால் ஆச்சர்யம் காத்திருக்கிறது. இக்கோவில் ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாம். தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி,திருமணம் முடிக்க எண்ணி சிவபெருமானை வேண்டி தவம் செய்த இடமே இக்கோவில். தன் காதலியே நான் வந்துவிட்டேன் என சிவன் கூறியதால் இக்கோவிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப்படுகிறார். மேலும் வெங்கடாஜலபதி குபேரனிடம் கடனை தீர்க்க இக்கோவிலில் வந்து 11 கணபதிக்கு 11 தேங்காய் மாலை,11 வாழைப்பழ மாலையை அணிவிக்க உன் கடன் தீரும் என சிவபெருமான் கூறியதால் இக்கோவிலில் வந்து வெங்கடாஜலபதி கணபதியை வணங்க அவர் கடன் தீர்ந்தது. இக்கோவில் 5000 வருட பழமையான மூங்கில் உள்ளது. மூங்கிலின் உள்ளே தான் சிவன் சுயம்புவாக உருவானார்.மேலும் இக்கோவில் சிவ பெருமான் வாசி என்ற கோடாரியால் மூங்கிலுக்கு கீழே எடுக்கும் போது அவர் மீது இரத்தம் வந்துவிட்டது. ஆதலால் இக்கோவில் சிவலிங்கை தொடாமல் தான் பூஜை செய்கிறார்கள்.பசு ஒன்று யாருக்கும் தெரியாமல் சிவனுக்கு பால் சுரந்து கொடுக்குமாம், அப்போது மூங்கில் தானாக விலகி சிவலிங்கத்தை பசுவுக்கு காட்டுமாம். இந்த ஊரில் சிறு மன்னன் ஒழுங்காக வரி கட்ட தவறியதால் கரிகால அரசன் பெரும் படையெடுத்தான். ஆனால் போரில் வெற்றி பெறுவதற்காக காளி உருவில் வானில் இருந்து அம்புமலை பொழிந்ததால் அவனுடைய பெரும்படைகள் அழிந்தது, மீண்டும் கரிகாலன் சிவனை வேண்டி போரில் வெற்றி பெற்றான். போரில் வெற்றி பெறுவதற்காக காளியை தனியே விநாயகர் மூலம் கட்டிவைத்தார் சிவபெருமான். அந்த காளியின் பெயர் சொர்ண காளி,தனி சந்நதி உள்ளது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்,தமிழக சிற்பக் கலைத்திறனுக்கும் சிறந்த சான்றாக உள்ளது. என்பதை பற்றி விளக்கும் எளிய கதை
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
🌺 கொங்கு மண்டலத்தின் தொன்மை மிகு,சிவத்தலங்களுள் ஒன்றாக திகழ்வது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில். 🌺 திருஞான சம்பந்தரால் தேவாரப் பதிகங்களில் ‘கொடிமாடச் செங்குன்றூர்’ என்று பாடப் பெற்ற பெருமைக்குரிய தலமே,தற்போது ‘திருச்செங்கோடு’என்று கூறப்படுகிறது. 🌺 இறைவன் #அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரிலும்,அம்பாள் #பாகம்பிரியாள் என்ற பெயரிலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 🌺 செங்கோட்டு வேலவர் எனப்படும் முருகனுக்கு இங்கு தனி சன்னதி அமைந்துள்ளது.செங்கோட்டு வேலவர்,அர்த்தநாரீஸ்வரர்,ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னதி அமைந்துள்ளது சிறப்பு. 🌺இறைவன் அர்த்தநாரீஸ்வரரை திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107வது திருப்பதிகத்திலும்,திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார். 🌺 இக் கோவிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டு வேலவரை அருணகிரிநாதர் திருப்புகழ்,கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனு பூதியில் பாடியுள்ளார். 🌺 அர்த்தநாரீஸ்வரர், மாதொருபாகர் என்று அழைக்கப்படும் இத்தல மூலவர்,சுமார் 6 அடி உயரத்தில்,உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும்,பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். 🌺 தலையில் ஜடா மகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார்.அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது.
ஒருவருடைய கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் அதிசய கோவில் பற்றி தெரியுமா
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் அமைந்துள்ள காலதேவி அம்மன் சிலை. இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது. அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுவும் நம்மூரில்! அதுதான் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி எனும் கிராமத்தில் உள்ள காலதேவி கோவில். கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் நேரமே உலகம் புராணங்களில்வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. - காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு. நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட் டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது. இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான். பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது. கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால்போதும். கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பது தான் இக்கோயிலின் நம்பிக்கை. காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல்,“எனக்கு எது நல்லதோ அதைக் கொடு’ என வேண்டினால் போதும். மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, அல்லது ஆட்டோவிலோ செல்லமுடியும்.
சகல தோஷம் தீர்க்கும் கதலி லட்சுமி நரசிம்மப் பெருமாள்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
பெருமாள் நிகழ்த்திய திருவிளையாடல்களை நிறைய கேள்விப்பட்டிருப்போம். அதில் சுயம்புவாகத் தாம் எழுந்தருளியுள்ளதை மக்களுக்கு உணர்த்த, வாழை பழங்களை மழைத்து திருவிளையாடல் புரிந்த திருத்தலம் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி திருத்தல செங்கமல வள்ளி தாயார் சமேத உக்ர கதலி லட்சுமி நரசிம்மர் கோயிலாகும். ஆயிரம் வருடங்கள் பழைமையான இத்தலம், அக்காலத்தில் மலைவாழ் மக்களின் வியாபார ஸ்தலமாக விளங்கியது. இந்த ஊரில் பக்தர்கள் தங்களின் விளைபொருட்களான காய், கனிகள் மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். அவர்களில் லட்சுமி என்ற பெண்மணி கொண்டு வரும் வாழைப்பழங்கள் தொடர்ந்து காணாமல் போக, அப்பெண் லட்சுமி அந்த ஊர்த் தலைவரிடம் இதை முறையிட்டார். அதைக்கேட்டு தலைவர் அது குறித்து விசாரிக்கிறார். ஆனால், 3 நாட்களாகியும் உண்மையான காரணத்தை அறிய முடியாமல் தொடர்ந்து பழங்களும் காணாமல் போகவே, பெருமாளிடம் முறையிட்டு வேண்டுகிறார். அன்று இரவு அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘காணாமல் போன வாழைப்பழத்திற்கு தானே காரணம் என்றும், அவர்கள் தங்குமிடத்தில் கதலி வடிவத்தில் சுயம்பு மூர்த்தியாக தாம் எழுந்தருளி உள்ளதாகக்’ கூறினார். நான்காம் நாள் காலை தலைவர் மக்களோடு பெருமாள் கனவில் கூறிய இடத்தை தேடிப் பார்க்கையில் சுயம்பு வடிவாக ஸ்ரீமன் நாராயணன் அங்கு காட்சி கொடுத்தார். நான்காவது நாள் சுயம்பு மூர்த்தி கிடைத்ததால் தசாவதாரத்தின் நான்காவது அவதாரமான நரசிம்ம மூர்த்தி அம்சமாக அவ்விடத்தில் அந்த சுயம்பு மூர்த்தியை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட ஆரம்பித்தனர். பிறகு அதே இடத்தில் தற்போதைய மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் ரூபத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். (கதலி என்றால் வாழைப்பழம் என்று ஒரு பொருள் உண்டு.) துவார பாலகர்களை வணங்கி ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் கருவறைக்கு எதிரே பெருமாளை வணங்கிய கோலத்தில் மேற்கு நோக்கி கருட சன்னிதி அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில் உத்ஸவமூர்த்தியாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாளும் அருள்பாலிக்கின்றனர். உள் பிராகாரத்தில் குழந்தை பாக்கியம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர், பிணிகளைப் போக்கும் தன்வந்திரி மற்றும் திருமண பாக்கியம் அருளும் ஆண்டாள், யோக நரசிம்மர் உள்ளிட்ட சன்னிதிகளும் அமைந்துள்ளன. ஞானத்துக்கு அதிபதியான ஸ்ரீஹயக்ரீவரும் இங்கு உறைகிறார்.
பூரி ஜெகன்னாதர் திருக்கோவிலின் எட்டு ( 8 ) அதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
1.♥♥கோவிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும். 2.♥♥கோவில் இருக்கும் பூரி என்ற ஊரில் எந்த இடத்தில் , எந்த பக்கத் தில் இருந்து பார்த்தாலும் , கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும். 3.♥♥.பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் , காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் , மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும். 4.♥♥இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத் திலும் கண்களுக்கு தெரிவதில்லை. 5.♥♥இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை. 6.♥♥இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி , இருபது லட்சமானாலும் சரி , சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதுமில்லை. மீந்து போய் வீணானதுமில்லை.
அதிசியமாக அமர்ந்த (உட்கார்ந்த நிலையில்) கோலத்தில் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் பற்றி தெரியுமா!
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
கோடக நல்லூர் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயம், திருநெல்வேலி மாவட்டம்! கோடக நல்லூர் என்னும் அழகிய கிராமம், திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி என்னும் நநிக்கரையில் அமைந்துள்ளது. நெல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோடக நல்லூர் என்னும் இந்த ஊர். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி - முக்கூடல் செல்லும் ரோட்டில் நடுக்கல்லூர் என்ற ஊரில் இருந்து, தெற்கே ஒரு கிலோமீட்டர் சென்றால் கோடகநல்லூர் கிராமத்தை அடையலாம். இந்த ஊர் பழங்காலத்தில் ‘கார்கோடக ஷேத்திரம்’ என்றும், ‘கோடகனூர்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு சிவன் கோவில்களும், ஒரு பெருமாள் கோவிலும் மேலும் நங்கையார் அம்மன் என்னும் காவல் தெய்வமும் உள்ளது. இதில் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயம் சுமார் 2000 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட ஆலயம். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவாலயம். வயல் வெளிகள் சூழ்ந்த தாமிரபரணி நதிக்கரையோரம் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள திருக்கோயிலாகும். இந்தக் கோவிலின் சிறப்பு அம்சம் அமர்ந்தநிலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் . பல இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் கோடகநல்லூர் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில், அமர்ந்த(உட்கார்ந்த நிலையில்) கோலத்தில் காட்சி தருவது ஒரு விசேஷமாகும். இப்படி உட்கார்ந்த அர்த்தநாரீஸ்வரரின் நிலையானது ஸ்ரீ தட்சிணாமூர்த்தி திருக்கோலமாக காட்சியளிக்கிறது.
சதுரகிரி மலையில் இருக்கும் கோவில்களும் அதிசயங்களும்
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
சதுரகிரி – இம்மலையில் எல்லாவித மூலிகைகளும், மரங்களும், விலங்கினங் களும், பறக்கும் பாம்பு முதல் அனைத்துப் பறவையினங்களும் வாழ்கின்றன. சுந்தரமூர்த்தி: கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும்.
கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
1. கும்பகோணத்திற்கு அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.
சித்திர குப்தருக்கு ஒரு சிங்காரக் கோவில் - எங்கே உள்ளது தெரியுமா
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
‘‘யார் அவர், சித்திர குப்தர்?'' ‘‘அவரை சித்திர புத்திரன்னும் சொல்வாங்க. நம்மளோட பாவ புண்ணியக் கணக்குகளைக் குறிச்சு வெச்சுக்கிட்டு, அதுக்கேத்தா மாதிரி நமக்கு நல்ல பலன்களையும் கெட்ட பலன்களையும் தருவதற்கு யமனுக்கு சிபாரிசு பண்ற அவரோட அஸிஸ்டென்ட்.''
காசியை விட பல மடங்கு புண்ணியம் தரும் திருத்தலம் எங்குள்ளது தெரியுமா
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
ஒரு சமயம் சிவபெருமான் உமையவளுடன் ரிஷப வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன். காசி, காஞ்சிபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை உமையவளுக்கு காட்டிய ஈசன், ஸ்ரீவாஞ்சியத்தின் மகிமையை கூறும்போது, ‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது. இங்குள்ள தீர்த்தமான குப்த கங்கை கங்கையை விடவும் புனிதமானது.
ராகு - கேது தோஷமா வக்கிரமடைந்து வில்லங்கம் செய்யும் கிரகங்களால் தொல்லையா கவலைய விடுங்க இந்த கோவிலுக்கு போங்க
Category: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
பொதுவாக, சிவாலயங்களில் ராஜ கோபுரம், கொடி மரம், நந்தி, மூலவ லிங்கம் அனைத்தும் நேர்கோட்டில் அமைக்கப்பட்டிருக்கும். அவ்வாறில்லாத ஓர் சிறப்புமிக்க சிவாலயம் இருக்கிறது அறிவீர்களா? இக்கட்டுரையில் அந்த சிவாலயத்தைப் பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
கோவில் என்பது மத அல்லது ஆன்மீக நடவடிக்கைகள், வழிபாடுகள் மற்றும் சடங்குகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கட்டிடம் அல்லது அமைப்பு.
: திருத்தலங்கள் - கோவில்கள், கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? [ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ] | : Temples - Temples, Why go to temples? in Tamil [ Spiritual Notes: Temples ]
திருத்தலங்கள்
கோவில் என்பது மத அல்லது ஆன்மீக நடவடிக்கைகள், வழிபாடுகள்
மற்றும் சடங்குகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கட்டிடம் அல்லது அமைப்பு. கோயில்கள் பெரும்பாலும் புனித இடங்களாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை
இந்து மதம், புத்த மதம், கிறிஸ்தவம் மற்றும் கிரேக்கர்கள் மற்றும் எகிப்தியர்கள் போன்ற
பண்டைய நாகரிகங்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களில்
காணப்படுகின்றன. கோயில்களின் வடிவமைப்பு மற்றும்
கட்டிடக்கலை பரவலாக வேறுபடுகின்றன மற்றும் எளிமையான கட்டமைப்புகள் முதல் மிகவும் அலங்கரிக்கப்பட்ட
கட்டிடங்கள் வரை இருக்கலாம்.
தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் கலாச்சார விழுமியங்களை அடிப்படையாகக்
கொண்ட அகநிலை விஷயம் என்பதால், கோவில்கள் ஏன் இருக்க வேண்டும் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. இருப்பினும், சிலர் வாதிடலாம்.
வழிபாட்டிற்கான இடத்தை வழங்குதல்:
கோயில்கள் தனி நபர்கள் ஒன்று கூடி தங்கள் மதத்தை கடைப்பிடிக்க
ஒரு பிரத்யேக இடத்தை வழங்குகின்றன, இது சமூக உணர்வையும் ஆன்மீக நிறைவையும் அளிக்கும்.
கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல்:
ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சமூகத்தின் பாரம்பரியங்கள் மற்றும்
கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க கோயில்கள் உதவுகின்றன, எதிர்கால சந்ததியினர்
தங்கள் ஆன்மீக வேர்களை புரிந்து கொள்ளவும் இணைக்கவும் அனுமதிக்கிறது.
வழிகாட்டுதல் மற்றும் ஆதரவின்
ஆதாரத்தை வழங்குதல்:
வாழ்க்கையின் பெரிய கேள்விகளுக்கு அல்லது ஆறுதல் மற்றும் ஆறுதல்
தேவைப்படுபவர்களுக்கு கோயில்கள் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்க முடியும்.
அமைதி மற்றும் நல்லிணக்கத்தை
ஊக்குவித்தல்:
பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கான புரிதல் மற்றும்
மரியாதையை வளர்ப்பதன் மூலம் மக்களை ஒன்றிணைத்து அமைதி மற்றும் நல்லிணக்க உணர்வை கோவில்கள்
மேம்படுத்தலாம்.
கோயில்கள் இருக்க வேண்டும் என்பதற்கு உலகளாவிய காரணம் எதுவும்
இல்லை என்றாலும், பலருக்கு, அவை அவர்களின் ஆன்மீக மற்றும் மத வாழ்வின் முக்கிய அம்சமாகச்
செயல்படுகின்றன, சமூக உணர்வையும் உயர் சக்தியுடன் தொடர்பையும் வழங்குகின்றன.
கோயில்கள் பல்வேறு நோக்கங்களுக்காக சேவை செய்கின்றன மற்றும்
பல்வேறு காரணங்களுக்காக பலருக்கு குறிப்பிடத்தக்கவை. கோயில்களைக் கட்டுவதற்கும் தரிசிப்பதற்கும் சில
பொதுவான காரணங்கள் இருக்கிறது.
வழிபாடு:
கோயில்கள் தனிநபர்கள் ஒன்று கூடி, மத வழிபாடு, பிரார்த்தனை
மற்றும் பிற ஆன்மீக நடைமுறைகளில் ஈடுபடுவதற்கு ஒரு இடத்தை வழங்குகிறது.
சமூகம்:
கோயில்கள் பெரும்பாலும் ஒரு மத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடும்
இடமாகச் செயல்படுகின்றன, மேலும் மக்களை ஒன்றிணைக்க உதவுகின்றன.
கல்வி:
வகுப்புகள், பட்டறைகள் மற்றும் பிற கல்வித் திட்டங்கள் மூலம் தனிநபர்கள்
தங்கள் மதம் மற்றும் ஆன்மீகத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான இடத்தை கோயில்கள் வழங்க
முடியும்.
கலாச்சார மற்றும் மத பாரம்பரியத்தை
பாதுகாத்தல்:
ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சமூகத்தின் பாரம்பரியங்கள் மற்றும்
கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க கோவில்கள் உதவும்.
தனிப்பட்ட வளர்ச்சி:
கோயில்கள் அமைதியான, அமைதியான சூழலை
வழங்க முடியும், இது தனிநபர்கள் தங்கள் ஆன்மீகத்தை பிரதிபலிக்கவும் இணைக்கவும்
அனுமதிக்கிறது, இது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சுய-கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கும்.
பொதுவாக, கோயில்கள் பலருக்கு உத்வேகம், ஆறுதல் மற்றும்
வழிகாட்டுதலின் ஆதாரமாக செயல்படுகின்றன மற்றும் அவர்களின் ஆன்மீக மற்றும் மத வாழ்க்கையில்
முக்கிய பங்கு வகிக்கின்றன.
மக்கள் பல்வேறு காரணங்களுக்காக கோயில்களுக்குச் செல்கிறார்கள், ஆனால் அவை
மட்டும் அல்ல:
வழிபாடு: பிரார்த்தனை மற்றும் மத சடங்குகள் மற்றும் விழாக்களில் பங்கேற்க.
சமூகம்: ஒரே மாதிரியான நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும் மற்றவர்களுடன்
இணைவதற்கும் வகுப்புவாத நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும்.
ஆன்மீக வளர்ச்சி: அவர்களின் புரிதல் மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்பைப் பிரதிபலிக்கவும், தியானிக்கவும்
மற்றும் ஆழப்படுத்தவும்.
மரபுகள்: கலாச்சார மற்றும் மதக் கடமைகளை நிறைவேற்றவும், பாரம்பரியங்களை
எதிர்கால சந்ததியினருக்குக் கடத்தவும்.
ஆறுதல்: மன அழுத்தம் நிறைந்த உலகில் அமைதியையும் ஆறுதலையும் காண.
திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்: கோவிலின் மத மரபுகளுக்கு மையமான சிறப்பு நிகழ்வுகள், திருவிழாக்கள்
மற்றும் கொண்டாட்டங்களில் பங்கேற்பது.
வரலாறு மற்றும் கலாச்சாரம்: ஒரு குறிப்பிட்ட மதத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி
அறியவும், கோயில் கட்டிடத்தின் கலை மற்றும் கட்டிடக்கலையைப் பாராட்டவும்.
ஒரு கோவிலுக்குச் செல்வதற்கான ஒவ்வொருவரின் காரணங்கள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் பலருக்கு, இது ஒரு உயர்ந்த
சக்தியுடன் இணைவதற்கும், வழிகாட்டுதலைத் தேடுவதற்கும், சமூகம் மற்றும்
சொந்தம் என்ற உணர்வைக் கண்டறிவதற்கும் ஒரு வழியாகும்.
கோயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறிப்பிட்ட
சமூகம் மற்றும் மதக் குழுவைப் பொறுத்தது. சில
பொதுவான பரிந்துரைகள் பின்வருமாறு:
சமூக ஈடுபாடு:
திட்டமிடல் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட உள்ளூர் சமூகத்தை
ஊக்குவிப்பது ஆதரவைக் கட்டியெழுப்பவும், அது சேவை செய்பவர்களின் தேவைகளைப்
பூர்த்தி செய்வதை உறுதி செய்யவும் உதவும்.
நிதி திரட்டுதல்:
சமூக நிகழ்வுகள், நன்கொடைகள் மற்றும் மானியங்கள்
மூலம் நிதி திரட்டுவது புதிய கோவில்கள் கட்டுவதற்கு நிதியளிக்க உதவும்.
கூட்டாண்மை:
பிற நிறுவனங்கள், வணிகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன்
கூட்டுறவை உருவாக்குவது, புதிய கோயில்களைக் கட்டுவதற்குத் தேவையான நிதி மற்றும் வளங்களைப்
பெற உதவும்.
வெளி மற்றும் கல்வி:
கோயில்களின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்தில் அவை வகிக்கும்
பங்கு குறித்து பொதுமக்களுக்குக் கற்பிப்பது புதிய கோயில்களைக் கட்டுவதற்கான ஆதரவையும்
ஆர்வத்தையும் உருவாக்க உதவும்.
பயனுள்ள திட்டமிடல் மற்றும்
வடிவமைப்பு:
புதிய கோயில்கள் நன்கு வடிவமைக்கப்பட்டு, அணுகக்கூடியவை
மற்றும் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வது, பயன்பாடு மற்றும்
ஆதரவை அதிகரிக்க உதவும்.
இறுதியில், கோயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான எந்தவொரு முயற்சியின்
வெற்றியும் உள்ளூர் சமூகத்தின் ஆதரவின் நிலை மற்றும் கட்டுமானத்திற்குத் தேவையான நிதி
மற்றும் வளங்களைப் பெறுவதற்கான திறனைப் பொறுத்தது. இதற்கு உள்ளூர் அரசு மற்றும் பிற அமைப்புகளுடன்
ஒத்துழைப்பும் தேவைப்படலாம்.
திருத்தலங்கள் தலைப்புகளில் கோவில்கள் மற்றும் அதன் தலவரலாறு,
சிறப்புகள், பலன்கள் மற்றும் விசேஷங்கள் அனைத்தும் பதிவிடப்படுகிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
: திருத்தலங்கள் - கோவில்கள், கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? [ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ] | : Temples - Temples, Why go to temples? in Tamil [ Spiritual Notes: Temples ]