சிலைகளில் முத்திரைகள் இருக்க காரணம் தெரியுமா?
Category: யோக முத்திரைகள்
சிவபெருமானின் குரு வடிவமே தட்சிணாமூர்த்தி ஆகும். ஆலயங்களில் கர்ப்பக்கிரகத்தின் தென் பாகத்தில், தென் திசை நோக்கி வீற்றிருப்பார்.
சூரிய முத்திரை எப்படி தெரியுமா?
Category: யோக முத்திரைகள்
முதலாவதாக வருவது சூரிய முத்திரை. கிரகங்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுவது நவக்கிரகங்கள். நவக் கிரகங்களில் முதலாவதாக வருவது சூரியன்.
வருண முத்திரை சக்தி தெரியுமா?
Category: யோக முத்திரைகள்
நிலம்,நீர்,காற்று,ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால்தான் இந்த உலகத்தின் இயக்கமே நிகழ்கிறது என்று நம்முடைய புராணங்கள் தெரிவிக்கின்றன.
வாயு முத்திரை சுவாசத்தை சரி செய்யுமா?
Category: யோக முத்திரைகள்
வாயு முத்திரையை நாம் தொடர்ச்சியாகச் செய்துவந்தால், நம் உடலில் உள்ள காற்று சமநிலையில் இருக்கும். இந்த முத்திரையை வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்வது அதிக பலனைத் தரும்.
ஆகாய முத்திரையில் பட்டற்ற நிலையை அடையலாமா?
Category: யோக முத்திரைகள்
ஆகாயத்துக்கு பிரபஞ்ச சக்தி, அண்டவெளி, சப்தம் என்று பல பெயர்கள் உண்டு. நமது உடலில், தொண்டைக்குழியை ஆகாயத் தோடு தொடர்புபடுத்திச் சொல்வாரர்கள்.
பிரிதிவி முத்திரையில் மனசு சுத்தமாகுமா?
Category: யோக முத்திரைகள்
பஞ்சபூதத்தில் நிலம் அல்லது மண் என்பதை பிரிதிவி என்று அழைக்கிறோம். நிலமானது சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், நாற்றம் என்ற ஐந்து குணங்களைக் கொண்டது.
அஞ்சலி முத்திரை பற்றி அருமையான விளக்கம்
Category: யோக முத்திரைகள்
தமிழில் யாரையாவது பார்க்கும்போது, இரு கரம் கூப்பி வணக்கம் என்கிறோம். இதையே, வடமொழியில் 'நமஸ்காரம் அல்லது 'நமஸ்தே' என்கிறோம்.
சுமண முத்திரை
Category: யோக முத்திரைகள்
அஞ்சலி முத்திரை என்பது இரு கரம் கூப்பி வணக்கம் கூறும் முறையில் அமைந்தது. அதற்கு நேர் எதிராக, புறங்கைகளை இணைத் துச் செய்வதுதான் சுமண முத்திரை. சுமணன் என்பது ஒரு முனிவரின் பெயர்.
ஞான முத்திரை அல்லது தியான முத்திரை
Category: யோக முத்திரைகள்
ஞான முத்திரையை தியான முத்திரை என்றும் சொல்வார்கள். ஞானம் என்றால் அறிவு. அறிவைக் கொடுப்பதால், அறிவு முத்திரை என்றும் சொல்லலாம்.
பிராண முத்திரை பவர் தெரியுமா?
Category: யோக முத்திரைகள்
ஆக்ஸிஜனை பிராண வாயு என்பார்கள். நாம் உயிர் வாழ இந்த ஆக்ஸிஜன் அவசியம். ஒருவர் இறந்து விட்டால் பிராணன் போய் விட்டது என்பார்கள்.
அபான வாயு முத்திரை அல்லது இதய முத்திரை பற்றி தெரியுமா?
Category: யோக முத்திரைகள்
இந்த முத்திரைக்கு இதய முத்திரை என்றும் பெயர் உண்டு. பிராண வாயுவைப்போல முக்கியத்துவம் வாய்ந்தது இந்த அபான வாயு. இதயத்துக்கும் அபான வாயுக்கும் முக்கியத் தொடர்பு உண்டு.
சமான வாயு முத்திரை தெரிந்தால் போதுமே...
Category: யோக முத்திரைகள்
சரி சமானம் என்றால் சரிநிகர் என்று பொருள். சமானம் என்றால் சமமாக இருத்தல். அதாவது, சமன்படுத்துதல். நமது உடல் பஞ்சபூதங்களால் ஆனது. நமது விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை பூதத்துடன் தொடர்புடையவை.
ருத்ர முத்திரை சிவபெருமானுக்கு உகந்ததா?
Category: யோக முத்திரைகள்
சிவபெருமானுக்கு ருத்ரன் என்ற பெயருண்டு. சிவபெருமானின் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராக்ஷம்.
லிங்க முத்திரை உடல் எடையை குறைக்குமா?
Category: யோக முத்திரைகள்
சிவலிங்கத்தின் பெயரைக் கொண்டு இந்த முத்திரை அமைந்துள்ளது.
சங்கு முத்திரை செய்தால் குரல் வளமாகுமா?
Category: யோக முத்திரைகள்
சங்குகளில் பல வகை உண்டு. அவற்றில் வலம்புரி சங்கே சிறப்பானது. சங்கு என்றால் 'நன்மையைக் கொண்டு வருவது' என்று பொருள்.
ஹாக்கினி முத்திரை ஒன்று போதுமே கவனம் உருவாக
Category: யோக முத்திரைகள்
ஆக்ஞை என்றால் ஆணை என்று பொருள். ஆக்ஞா சக்கரத்தின் அதி தேவதை ஹாக்கினி என்பதாகும்.
அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும் முஷ்டி முத்திரை
Category: யோக முத்திரைகள்
நாம் சாதாரணமாகச் சண்டைக்கு வருபவரைப் பார்த்தால். கைவிரல்களை மடக்கியபடி முஷ்டி முத்திரையில்தான் வருவார். இவ்வாறு கைமுட்டி என்று அழைக்கப்படும் முறையில் கையை (படத்தில் உள்ளபடி) வைப்பதுதான் முஷ்டி முத்திரையாகும்.
நினைத்த காரியம் வெற்றி அடைய வைக்கும் குபேர முத்திரை பற்றி தெரியுமா?
Category: யோக முத்திரைகள்
குபேரன், இந்திரனுக்கு பொக்கிஷதாரி. செல்வத்துக்கு அதிபதி. நவநிதிகளின் தலைவர். சிவபெருமானின் தோழர்.
சுத்தப்படுத்தும் முத்திரை தெரியுமா?
Category: யோக முத்திரைகள்
நம் உடலைச் சுத்திகரிக்கும் முத்திரையாக இது விளங்குகிறது. சுத்தி என்றால், சுத்தப்படுத்துதல் உடலின் உட்புறத்தில் இருக்கும் உறுப்பு களில் தேங்கியிருக்கும் தேவையற்ற கழிவுப் பொருட்களை இந்த முத்திரை வெளியேற்றுகிறது. இந்த முத்திரையை இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும்.
சுஜி முத்திரை நீண்டகால மலச்சிக்கலுக்குத் தீர்வா?
Category: யோக முத்திரைகள்
மலம் என்ற கழிவு வெளியேறுதல் என்பது நமது உடலில் அன்றாட முக்கிய வேலையாக உள்ளது. உடல் நலமில்லாமல் மருத்துவரிடம் சென்றால், பசி எடுக்கிறதா? மலம் கழிக்க முடிகிறதா? என்று அவர் கேட்பார்.
மகா சிரசு முத்திரை தலை வலி போக்குமா?
Category: யோக முத்திரைகள்
'என் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்' என்பது பழமொழி.'சிரசு' என்றால் தலை. உடலில் உள்ள அத்தனை அவயவங்களும் தலையுடன் தொடர்பு கொண்டுள்ளன.
முகுள முத்திரை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்....
Category: யோக முத்திரைகள்
முகுளம் என்ற சொல்லுக்கு பறவையின் அலகு என்று பெயர். இது ஒரு எளிமையான முத்திரை. மற்ற முத்திரைகளை ஒப்பிடும்போது, இதைச் செய்வது எளிது. இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வரும்போது, ஒருவித புத்துணர்ச்சியை நாம் உணரலாம்.
கருட முத்திரை ரத்தம் சீராக தடையின்றிச் செல்ல வைக்குமா?
Category: யோக முத்திரைகள்
இது எளிமையாகச் செய்யக்கூடிய முத்திரை. ஆனால், அதிக பலனைத் தரக்கூடியது.
அனுசாசன முத்திரை அவசியம் செய்யுங்கள்....
Category: யோக முத்திரைகள்
இந்த முத்திரைக்கு, கட்டுப்பாட்டு முத்திரை என்ற பெயரும் உண்டு. நமது வாழ்க்கையில் எதற்கும் ஒரு கட்டுப்பாடு உண்டு. உணவு, உடை, கல்வி, வேலை ஆகிய எல்லாவற்றுக்கும் ஒரு குறிப்பிட்ட வரையறை உள்ளது.
குண்டலினி முத்திரை தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக்குமா?
Category: யோக முத்திரைகள்
இறைவனின் அருளைப் பெற பல வழிகள் உள்ளன. அதில், குண்டலி யோகமும் ஒன்று. தனக்குள் இருக்கும் இறைவனை, அந்தப் பரம்பொருளை அடைய உதவுவது குண்டலி யோகமாகும்.
பங்கஜ முத்திரை அறிவு மேம்படுமா?
Category: யோக முத்திரைகள்
'பங்கஜம்' என்றால் சேற்றில் மலர்ந்த செந்தாமரை மலரைக் குறிக்கும். மகாலெட்சுமி வாசம் செய்யும் இடமாகத் தாமரை கூறப்படுகிறது.
சூன்ய முத்திரை செய்தால் காது நன்றாக கேட்குமா?
Category: யோக முத்திரைகள்
சூன்யம் என்றால் ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்ட நிலையைக் குறிப்பது. சிலர், தங்களுடைய வாழ்க்கை சூன்யமாகிவிட்டதாகக் குறிப்பிடுவதுண்டு. வாயு மண்டலத்துக்கு மேலே உள்ள வெற்றிடம் தான் சூன்ய பகுதி. அதையே ஆகாயம் என்று அழைக்கிறோம்.
சுரபி முத்திரை மன அமைதியை கொடுக்குமா?
Category: யோக முத்திரைகள்
சுரபி முத்திரையே காமதேனு முத்திரை என்றும் கூறுவர். காமதேனு கேட்டவற்றைத் தரக்கூடியது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. கை விரல்களில் சுரபி முத்திரையைச் செய்யும்போது, பசுவின் பால் சுரக்கும் காம்புகளைப்போல் தோன்றும்.
மகர முத்திரை கண்களுக்கு கீழே உண்டாகும் கருவளையங்கள் போக்குமா?
Category: யோக முத்திரைகள்
மகர முத்திரை என்றால் முதலை முத்திரை என்று பெயர். 'மகர என்ற வடமொழிச் சொல்லுக்கு முதலை என்று பெயர்.
அபய முத்திரை பயத்தைப் போக்கும்
Category: யோக முத்திரைகள்
ஆபத்துக் காலத்தில் காப்பாற்றுவரே அபயம் அளிப்பவர் ஆவார். அதேபோல், பயத்தைப் போக்கும் முத்திரை என்றால், அது அபய முத்திரைதான்.
வரத முத்திரை செய்தால் என்ன கிடைக்கும்?
Category: யோக முத்திரைகள்
வரத முத்திரை, கருணையையும் விருப்பத்தையும் வழங்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது. இந்த முத்திரை, பொருத்தருளும் ஒரு நல்ல குணத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. தாராள குணத்துக்கும் இந்த முத்திரையை ஒரு சின்னமாகக் கூறலாம்.
வஜ்ர முத்திரை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது தெரியுமா?
Category: யோக முத்திரைகள்
இந்திரனின் கையில் உள்ள ஆயுதத்தின் பெயர் வஜ்ராயுதம் ஆகும். வைரத்துக்கும் வஜ்ரம் என்று பெயர்.
தடைகள் வருகிறதா இந்த கணேஷ் முத்திரை செய்தால் போதுமே!
Category: யோக முத்திரைகள்
விநாயகரின் பெயரைக் கொண்ட முத்திரை இது. யானை முகம் கொண்ட முழுமுதற் கடவுள் விநாயகர். எல்லாவிதத் தடைகளை, இடையூறுகளை நீக்குபவர்.
புஷ்ப புட முத்திரை செய்தால் தீய சக்திகள் நம்மை அண்டாது.
Category: யோக முத்திரைகள்
பூஜையின்போது இரண்டு கைகளில் நிறைய பூக்களை அள்ளி இறைவனுக்கு அர்ப்பணிக்கும்போது கைகளின் அமைப்பு எப்படி இருக்குமோ அந்த அமைப்புதான் புஷ்ப புட முத்திரை.
மனச் சோர்வை நீக்கும் சி முத்திரை
Category: யோக முத்திரைகள்
சி முத்திரை மனச் சோர்வை நீக்கவல்ல ஒரு சிறந்த முத்திரையாகும். இந்த முத்திரைப் பயிற்சி, மூன்றுவித ரகசியங்களை உள்ளடக்கியது.
சபான முத்திரை செய்தால் மன அழுத்தம் போய் விடும்...
Category: யோக முத்திரைகள்
சபான முத்திரை, பெருங்குடல், நுரையீரல் மற்றும் தோல் ஆகிய வற்றை நன்கு செயல்படத் தூண்டி அசுத்தங்களை வெளியேற்றுகிறது.
பேரின்ப நிலை கொடுக்கும் தர்மச் சக்கர முத்திரை
Category: யோக முத்திரைகள்
தர்மச் சக்கரம் என்பது வடமொழிச் சொல். இதன் பொருள், தர்மத்தின் சக்கரம் அல்லது தர்மத்தின் சுழற்சி என்பதாகும். இந்த முத்திரை, புத்தரின் வாழ்க்கையில் முக்கியமான தருணத்தில் ஏற்பட்ட ஒன்றாகும்.
மாதங்கி முத்திரை செய்தால் படபடப்பு குறையும்
Category: யோக முத்திரைகள்
மாதங்கி என்பது ஒரு பெண் தெய்வத்தின் பெயர். அதாவது, நமது மனத்தில் இருந்து நம்மை ஆண்டுகொண்டு இருப்பவளே மாதங்கி. இந்த முத்திரை, மரம் என்ற பஞ்சபூதத்தைத் தூண்டுகிறது.
பிரம்மர முத்திரை செய்தால் குடலில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்றப்படும்.
Category: யோக முத்திரைகள்
பிரம்மர என்பது ஒரு வடமொழிச் சொல். பிரம்மன் என்பவர் படைப்புக் கடவுள். அவரது பெயரிலேயே இந்த முத்திரை அமைந்துள்ளது.
புஷன் முத்திரை செய்தால் நரம்பு மண்டலம் நன்கு செயல்படும்...
Category: யோக முத்திரைகள்
சூரியனுக்கு அர்ப்பணிக்கும் ஒரு முத்திரையாக இந்த முத்திரை உள்ளது. ஊட்டச்சத்தை அளிக்கும் தெய்வத்துக்கு அர்ப்பணிக்கும் விதமாகவும் இந்த முத்திரை அமைந்துள்ளது.
காளீஸ்வர முத்திரை என்றால் என்ன?
Category: யோக முத்திரைகள்
காளீஸ்வர என்றால் சிவபெருமான். இறைவனுக்கு, காலனுக்கு அர்ப்பணமாகச் செய்யப்படும் முத்திரை இது. நம்மை தனித்தன்மையுடன் விளங்க வைக்கக்கூடிய, கெட்ட பழக்கங்களை அகற்றக்கூடிய முத்திரை இது.
சக்தி முத்திரை செய்தால் தூக்கம் நன்றாக வரும்?
Category: யோக முத்திரைகள்
தூக்கமின்மை என்ற நோயைக் குணப்படுத்தும் முத்திரையாக இந்தச் சக்தி முத்திரை விளங்குகிறது. தூக்கமின்மை பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. அந்தப் பிரச்னைகளில் இருந்து நம்மை விடுவித்து நமக்கு நல்ல தூக்கத்தைத் தருகிறது.
பின் முத்திரை (Back Mudra) முதுகு வலி, தண்டுவட வலிகள் குணமாகும்?
Category: யோக முத்திரைகள்
இந்த பின் முத்திரை, ஒரு முதுகு வலியை நீங்கப் பயன்படும் சிறந்த முத்திரையாகும். இது இரண்டு கைகளிலும் செய்ய வேண்டிய முத்திரை. மிகக் கடுமையான முதுகு வலியையும் குணப்படுத்தக் கூடியது. முதுகுப்புறம் பலமில்லாமல் பலஹீனமாக இருப்பவர் களுக்கு இந்த முத்திரை நல்ல பலனைத் தரும்.
உயர்ந்த தெளிவை உண்டாக்கும் உத்தரபோதி முத்திரை தெரியுமா?
Category: யோக முத்திரைகள்
உத்தரபோதி முத்திரை என்றால் உயர்ந்த தெளிவை உண்டாக்கும் முத்திரை என்று பெயர். இந்த முத்திரை முழு நிறைவைத் தருவதற்கான ஒரு அடையாள முத்திரையாகவும், சிறந்த முத்திரையாகவும் விளங்குகிறது.
பூதி முத்திரை உடலில் நீர்ச்சத்தை கொடுக்குமா?
Category: யோக முத்திரைகள்
பூதி முத்திரையை 'திரவ முத்திரை' என்றும் சொல்லலாம். நமது உடல் எடையில் பாதி அளவு நீரால் ஆனது. உடலில் உள்ள நீர் அதிகரிக்காமலும், குறைந்துவிடாமலும் சமநிலையில் வைக்க இந்த முத்திரை உதவுகிறது.
நாக முத்திரை ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்குமா?
Category: யோக முத்திரைகள்
நாக முத்திரை, ஆழ்ந்த நுண்ணறிவுக்கு அடையாளமாக உள்ளது. இந்து மத வழிபாடுகளில் நாக வழிபாடு முக்கிய இடம் பெற்றுள்ளது. அறிவு, புத்திக்கூர்மை, பலம் ஆகியவற்றின் அடையாளமாகவும் தெய்வீகமான ஒரு முத்திரையாகவும் நாக முத்திரை அமைந்துள்ளது.
சிரிப்பு புத்த முத்திரை (Smiling Buddha Mudra) கண்டிப்பாக மனிதன் செய்ய வேண்டும்...
Category: யோக முத்திரைகள்
இந்த சிரிப்பு புத்த முத்திரை, ஓவியங்களிலும், சிலைகளிலும் அதிகம் காணப்படுகின்றன. மகிழ்ச்சியின் அடையாளமாக இந்த முத்திரை இருக்கிறது. இதயத்துக்கு சக்தியைக் கொண்டுசெல்ல உதவுகிறது.
சளி முத்திரை (Bronchial Mudra) செய்தால் மூச்சுத் திணறல் நீங்குமா?
Category: யோக முத்திரைகள்
இந்த சளி முத்திரை மற்றும் ஆஸ்துமா முத்திரை இரண்டும் சுவாசக் கோளாறுகளை நீக்குகின்றன. இந்த இரண்டு முத்திரைகளையும், ஒன்றன்பின் ஒன்றாக சிறிது நேர இடைவெளியில் செய்ய வேண்டும். இவற்றை இரு கைகளிலும் செய்ய வேண்டும்.
ஆஸ்துமா முத்திரை மூச்சிரைப்பு, சளி, ஆஸ்துமா, மூக்கடைப்பு நீங்கும்.
Category: யோக முத்திரைகள்
சளி முத்திரையைத் தொடர்ந்து கட்டாயம் செய்ய வேண்டிய முத்திரை, ஆஸ்துமா முத்திரை. இதை காச முத்திரை என்றும் சொல்வார்கள். இந்த முத்திரைகள், சுவாசக் கோளாறுகளை நீக்கும் சக்தி படைத்தவை.

நாம் பல நோய்களுக்கு மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறோம். இதனால் பக்க விளைவுகள் உண்டாகின்றன.
: யோக முத்திரைகள் - விளக்கம் [ யோக முத்திரைகள் ] | : Yoga Mudras - Explanation in Tamil [ Yoga Mudras ]
யோகம் தரும் யோக முத்திரைகளின் பயன்கள்
இந்த கட்டுரையில் முத்திரைகள், படங்களுடன் அவற்றைச் செய்யும் விதம், முத்திரைகளால் கிடைக்கும் பலன்கள் பற்றிய முழு விவரங்களும் தரப்பட்டுள்ளன. நாம் பல நோய்களுக்கு மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறோம். இதனால் பக்க விளைவுகள் உண்டாகின்றன.
ஆசனங்கள், பளு தூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சிகளை எல்லோரும் எக்காலமும் செய்ய முடியாது. ஆனால், யோக முத்திரைகள் என்பவை விரல்களால் எளிமையாகச் செய்யக்கூடியவை. இவற்றுக்குப் பலன் அதிகம். ஆன்மிகம், அறிவியல், மருத்துவம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதாக முத்திரைகள் உள்ளன.
உலகம் பஞ்ச பூதங்களால் இயங்குகிறது. நம் உடலும் அதுபோலத் தான். நம் விரல்களிலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவற்றை தேவைக்கேற்ற அளவில் பயன்படுத்தி, முத்திரைகளைப் பயிற்சி செய்தால், பெரும்பாலான வியாதிகள் குணமாகும். மன அமைதி உண்டாகும். ஆன்மிகச் சிந்தனை அதிகரிக்கும். முத்திரைகள் பற்றிய இந்த கட்டுரை மக்களுக்கு ஒரு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
'முத்திரை' என்ற சொல் பழங்காலத்தில் இருந்தே வழக்கில் உள்ளது. அக்கால மன்னர்கள் தங்கள் தூதுவர்கள் மூலம் செய்தி அனுப்பும்போது, தங்கள் நாட்டுச் சின்னம் பொறித்த அடையாள வில்லையை ஆதாரமாகக் கொடுத்து அனுப்புவது வழக்கம். எனவே, 'முத்திரை' என்பதற்கு அடையாளம்' என்றும் பொருள் கொள்ளலாம்.
நாம் அன்றாடம் கைகளால் பலவித சைகைகளைக் காட்டுகிறோம். மற்றவர்கள் அந்தச் சைகையின் பொருளை உணர்ந்து கொள்கிறார்கள். கைகளை இணைத்து மேலே தூக்கி உடலை வளைத்தால், சோம்பல் முறிப்பதாகக் கொள்கிறோம். கன்னத்தில் கையை வைத்தால், ஏதோ கவலை போலிருக்கிறது என்று நினைக்கிறோம். அதிசயமான நிகழ்வுகளைக் கண்டால், மூக்கின் மீது விரலை வைக்கிறோம். சண்டைக்குத் தயாராகும்போது முஷ்டியை மடக்குகிறோம். இப்படி நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஏதாவது ஒரு முத்திரை நம்மை அறியாமலேயே வந்துவிடுகிறது. எனவே, முத்திரை என்பது நமது கைகளால் செய்யப்படும் சில அடையாளக் குறிப்புகள் என்றும் கொள்ளலாம்.
தேவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவும், அசுரர்களைத் துரத்தவும் உண்டான காரணப் பெயரே முத்திரை என்றும் கூறுவர். தேவி பாகவதத்தில், முத்திரை என்று கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடப்படுகிறது.
சம்முகம், சம்புடம், வித்தம், விஸ்த்ருதம், த்விமுகம், திரிமுகம், சதுர்முகம், பஞ்சமுகம், ஷண்முகம், அடகாமுகம், வியாயாகாஞ்சலி, சகடம், யமபாசம், கிரதிதம், சம்முகோன்முகம், பிரலம்பம், முஷ்டிகம், மச்சம், கூர்மம், வராகம், சிம்மாக்ராந்தம், மகாகிராந்தம், முத்சரம், பல்லவம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
யோகாசனப் பயிற்சி செய்ய முடியாதவர்கள், உடல் வலிமை அற்றவர்கள், உடல்நலம் இல்லாதவர்கள், யோகாசனப் பயிற்சி செய்யாமலேயே பலன் அடையச் சில யோக முத்திரைகள் பயன்படுகின்றன.
நமது கைகளில் உள்ள சில நரம்புகளின் வழியாக மூளை, பிராணன் (சுவாசக்காற்று) ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முத்திரைகள் பயன்படுகின்றன. முத்திரைகளை எளிதாகச் செய்ய முடியும். பலன்கள் அதிகம். மருந்து, மாத்திரைகளுக்கு வேலை இல்லை.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
: யோக முத்திரைகள் - விளக்கம் [ யோக முத்திரைகள் ] | : Yoga Mudras - Explanation in Tamil [ Yoga Mudras ]