ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார். பழங்களை எடை போட்டு வாங்கிப் பணம் கொடுத்தப் பின், அந்தப் பழங்களில் இருந்து ஒன்றை எடுத்துப் பிய்த்து வாயில் போட்டு விட்டு, இந்தப் பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்தப் பாட்டியிடம் கொடுத்துச் சாப்பிடச் சொல்லி புகார் செய்வார்.
''அன்பே கடவுள்..''
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார். பழங்களை எடை போட்டு வாங்கிப் பணம் கொடுத்தப் பின், அந்தப் பழங்களில் இருந்து ஒன்றை எடுத்துப் பிய்த்து வாயில் போட்டு விட்டு, இந்தப் பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்தப் பாட்டியிடம் கொடுத்துச் சாப்பிடச் சொல்லி புகார் செய்வார்.
உடனே
பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு , இல்லையேப்பா.
நல்லா
தானே இருக்கு” என்பார்.
உடனே
அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.
இதை
எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,
ஏங்க..''பழங்கள்
நல்லா இனிப்பாகத் தானே இருக்கு”ஏன் தினமும் இப்படி நல்லா இல்லைனு சொல்லி நாடகம்
போடறீங்க”
உடனே
அந்த இளைஞர் சிரித்துக கொண்டு மனைவியிடம்.,
அந்தப்
பாட்டி நல்ல இனிப்பான பழங்களைத் தான் விற்கிறாங்க, ஆனாலும்
தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க..
நான்
இப்படிக் குறை கூறிக் கொடுப்பதால் தினம் அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தைச்
சாப்பிடுறாங்க என்றார்”……
தினமும்
நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு..
அந்தப்
பாட்டியிடம், அந்த
ஆள் தினமும் உன் பழங்களைக் குறை கூறுகிறான்., இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை
அதிகமாகப் போட்டு பழங்களைக் கொடுக்கிறாய்”?
உடனே
அந்தப் பாட்டி புன்னகைத்து விட்டு….,
அவன்
என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படிக் குறை கூறுவது போலக்
கூறிக் கொடுத்து சாப்பிட வைக்கிறான் ”இது
எனக்குத் தெரியாது என்று நினைக்கிறான்…!
நான்
எடை அதிகமாக பழங்களைப் போடுவதில்லை”.
மாறாக
அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்து விடுகிறது” என்றார் அன்போடு….
ஆம்.,நண்பர்களே..,
இப்படிப்பட்ட
சின்னச் சின்ன அன்பில் தான் வாழ்க்கையின் தத்துவமே அடங்கி இருக்கின்றது.
அதையே
அறுவடை செய்வீர்கள்..🌷🙏🏻🌻
உங்களை
விட உங்கள் நண்பர் வசதியாக வாழ்கிறார் என்று நினைத்து பொறாமைப்படாதே.....
உங்களை
விட குறைவாகவே திறமை கொண்டவர்…அதிகம் எப்படி சம்பாதிக்கிறார் என்று நினைத்து
இருக்கிறீர்களா..??
எல்லாவற்றிற்கும்
நேரம் தான் காரணம்…அவனுக்கு நேரம் நன்றாக உள்ளது..குரு உச்சத்தில் இருக்கிறான்
என்று நாமும் சொல்லி இருப்போம்.. பலர் சொல்ல கேட்டும் இருப்போம்.
சரி
உங்கள் நேரம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்…
உங்கள்
நேரம் சரியாக தான் உள்ளது
ஆக, ஒவ்வொருவரின்
நேரமும் சரியாக தான் அமைந்துள்ளது.
எந்த
நேரத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை எல்லாம் கடவுள் சரியாக தான் நடத்தி
வருகின்றான்.
கடவுள்
அல்லது இயற்கையானது, எவர் ஒருவரின் உயிரையும் எந்த ஒரு காரணமும் இல்லாமல்
எடுப்பதில்லை.
ஒருவன்
விடாமல் புகைபிடிக்கிறான் என்றால், புகைபிடித்து தவறு செய்வதையே
காரணமாய் கொண்டு, அவன் செய்த செயலாலேயே இறக்கவும் செய்கிறான். அந்த செயலே
அவன் உயிர் பிரிய காரணமாகவும் உள்ளது.
இதில்
இறப்பு என்பது அனைவருக்கும் சமம் தான்…யாருக்கு பின் யார் என்பது தான் ஒரு புதிரான
விளையாட்டு.
ஆதலால், 25
வயதில் ஒருவன் பெரும் பணக்காரன் ஆகிறான் என்றால்…அவன் நேரம் நன்றாக உள்ளது என்று
அவனைக் கண்டு நாம் பொறாமை கொள்ளக்கூடாது.
25
வயதில் பணக்காரனாக உள்ளவன்..40 வயதிலேயே இறக்க வேண்டும் என்று கூட கடவுள்
தீர்மானித்து இருக்கலாம்...
அத்தகைய
குறைந்த வாழ்நாட்களே கொண்ட ஒருவன் நிறைவாக வாழ்ந்து செல்வதற்கும் கடவுள் , அவனுக்கு
தேவையானதை சீக்கிரமே கிடைக்கும் வகையில் வழி செய்கிறார்.
அதே
90
வயது வரை வாழ்ந்து தான் இறப்பான் என்பவனுக்கு…கடவுள் இவன் தான் நிறைய ஆண்டுகள்
இருக்கப்போகிறானே என்று ஆரம்ப காலத்தில் பல பாடங்களை கற்றுக்கொடுத்து , 90
வயது வாழ்பவனுக்கு, அரை ஆயுள் கொண்டவன் 30
வயதில் அனுபவித்த சந்தோஷத்தை இவனுக்கு 60 வயதிலேயே கொடுக்கிறான்.
வாழ்க்கையில்
நமக்கு எது எப்பொழுது கிடைக்க வேண்டும்…நாம் எப்போது இறக்க வேண்டும் என்பது
எதுவும் நம் கையில் இல்லை என்பதை புரிந்து கொள்ளும் தருணமே'
வாழ்வு
நிச்சயமற்றது என உணரும் தருணம்.
அதனால்,
இனிமேல்
அடுத்தவரைப் பார்த்து நாம் பொறாமைப் படவேண்டியது இல்லை…
அடுத்தவரின்
மேல் நாம் கோபம் கொள்ள வேண்டியதில்லை.
அவர்களுக்கு
நடக்க வேண்டியது சரியாக நடக்கிறது.
இதில்..
நாம்
எவருக்கு முன்னாடியும் இல்லை…
நாம்
எவருக்கு பின்னாடியும் இல்லை…
அதனால், உங்கள்
நேரமும் சரியாகத்தான் உள்ளது என்பதை புரிந்துகொண்டு…உங்களுக்கு கொடுக்கப்பட்ட
நேரத்தை திறம்படவே பயன்படுத்திக் கொள்ளுங்கள்...!!!
அழிவு
என்பது அவர் அவர்களை நோக்கி பயணிக்கிறார்
இதை யாரும் எதுவும் தடுக்க வேண்டியது இல்லை கடவுளின் அனுகிரக்த்தில் மிகவும்
சிறப்பாக நடைபெற்றது
சுடுகாடுதான்
இங்கு
நல்லவன்
கெட்டவன் என்ற
கணக்கெல்லாம்
அன்பு ,
பாசம்
போன்ற
குணத்தை
வைத்து
இல்லை
தேவைப்படும்
வரை நீ
நல்லவன்
தேவை
முடிந்தால் நீ
கெட்டவன்
..,
துணைக்கு
வரவா
என்பவர்களை
காட்டிலும்
உன்னால்
முடியும்
"செய்
போ" என்பவரை
நம்புங்க
நம்பிக்கை வளரும் ....
எதுவரை
வாழ்க்கை அழைக்கிறதோ
அதுவரை
வாழ்ந்திடுவோம்
விடைபெறும்
நேரம் வருகையில் சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
எந்த
இடத்திலும் சரி உன் மதிப்பு என்னவென்று தெரிய வேண்டாமா...?
பெரிதாக
நீ ஒன்றும் செய்ய வேண்டாம் நீ அங்கிருந்து கொஞ்சம் நேரம் விலகி இருந்து பார்...
நீ
திரும்ப அந்த இடத்திற்கு வரும் போது உணர்ந்துக் கொள்வாய் உன் மதிப்பு
என்னவென்று...!✍
எல்லோரும்
புலம்பும் போது நீங்களும் புலம்பாதீர்கள்...
அவர்கள்
புலம்பி முடித்ததும் நீங்கள் புலம்புங்கள் அப்போது தான் உங்கள் புலம்பல் சப்தம்
அவர்கள் காதில் விழும்...!✍
ஆச்சரிய
படுத்தி
விடாதே
எதையுமே...
ஆச்சரியங்கள்
யாவும்
ஆராய்ச்சிக்கு
உட்பட்டவை...
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
காதல் : ''அன்பே கடவுள்..'' - அன்பை விதையுங்கள் [ ] | love : "Let's sow love." - Sow love in Tamil [ ]