*ஓம் என்ற standing wave ஒலி* மந்திரத்தின் மகத்துவம்

ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீகம் ]

*The standing wave sound of Om* is the greatness of the mantra - Spiritual Notes in Tamil



எழுது: சாமி | தேதி : 30-10-2022 11:14 pm
*ஓம் என்ற standing wave ஒலி* மந்திரத்தின் மகத்துவம் | *The standing wave sound of Om* is the greatness of the mantra

ஓம் என்பது ஒரு பிரணவ மந்திரம் ஆகும்.

*ஓம் என்ற standing wave ஒலி* மந்திரத்தின் மகத்துவம்:

 

ஓம் என்பது ஒரு பிரணவ மந்திரம் ஆகும். இது அ+உ+ம் அதாவது ‘அ’ என்பது சிவன் ‘உ’ என்பது உமை ஆகும். பிரபஞ்சம் என்பது பஞ்ச பூதங்களால் ஆனது. ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்கும்போதே அதன் அதிர்வுகள் நம் உடலில் உள்ள அனைத்து சக்கரங்களையும் உத்வேகப்படுத்தி நேர்மறை ஆற்றலை ஏற்படுத்கிறது என்று ஆன்மீக வாதிகள் பலர் சொல்கிறார்கள். அம் என்ற சமஸ்கிருத ஒலி உலகின் முதல் ஒலி ஆகும். அம் என்று சொல்லும் போது அதன் அதிர்வெண்ணின் அளவு 432 ஹெர்ட்ஸ் ஆகும். ஓம் என்பதன் சுருக்கம் என்னவென்றால் உயிர்களுக்கும் இறைவனுக்குமான தொடர்பு ஏற்படுத்தும் ஒலி. அ+உ+ம். ‘அ’ என்னும் பரமாத்மா(படைத்தல்-பிரம்மா-இறந்தகாலம்) ‘ம்’ என்னும் ஜீவாத்மா (அழித்தல்-சிவன்-எதிர்காலம்) உடன் ‘உ’(காத்தல்-விஷ்ணு-நிகழ்காலம்) என்ற உறவாகிறது. உலகத்தில் இந்த படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற மூன்று தொழில்கள் பிரதானமானது. பிறந்தவர் இறந்து ஆக வேண்டும் என்பதும் உலக நியதி. இதை உணர்த்தவே ஓம் என்ற மந்திரம் சொல்கிறது. ஓம் எப்படி உச்சரிக்கவேண்டும்? ஓ – வின் உச்சரிப்பு குறைவாகவும் ம் – ன் உச்சரிப்பு நீண்டதாகவும் இருத்தல் வேண்டும். சபதமாக சொல்லாவிட்டாலும் மனதிலே உச்சரித்தல் சிறப்பு ஆகும். ‘ஒ’ என்று உச்சரிக்கும் போது உங்களுடைய இஷ்ட தெய்வங்களை நினையுங்கள். ‘ம்’ என்று உச்சரிக்கும் போது அந்த நினைப்பை நிறைவு செய்தல் வேண்டும். மறுபடியும் ஒ வரும் போது மீன்றும் மீண்டு கடவுளை நினைத்து பயிற்சி செய்து வர மனம் ஒரு நிலை பட்டு சக்தி உருவாகும். மனதானது தெளிவு நிலைக்கு வரும். நேர்மறை ஆற்றல் தானாகவே வரும். ஓம் என்ற வார்த்தையை முதலில் எழுதி விட்டு தான் கடிதம் எழுதுவாராம் நமக்கெல்லாம் தெரிந்த பாரதியார் அவர்கள். புயலில் நின்று உயரம் வளர்ந்த பனை மரங்கள் சாய்ந்து விடுகிறது. அதுவே நாணல் வளைந்து புயல் ஓய்ந்த பின் நிமிர்ந்து விடுகிறது. அதுபோலத் தான் ஓம் உச்சரிப்பவர்கள் தப்பித்து தீமையை கொல்கிறார்கள். எந்த மந்திரம் என்றாலும் குறைந்தது ஒரு லட்சம் தடவையாவது  உச்சரித்தல் பலன் மற்றும் சக்தி மின் மற்றும் காந்த சக்திகள் உருவாகும். இதை electronic எலெக்ட்ரோ மீட்டர் மூலம் உச்சரிக்கும் முன்பும், பின்பும் பார்த்தாலே தெரியும். கற்பமடைந்த தாய்மார்கள் உச்சரிக்க தெய்வக் குழந்தைகள் கிடைக்க வரும். ஒரு பூமியின் சுழற்சியின் காரணமாக "பூமியை சுற்றிலும் உருவாகும் ஒலி அதிர்வுதான் “ஓம்” என்ற ஒலியாக உள்ளது. இந்த ஓம் என்ற ஒலியே வானவீதி (Space), கோள்கள், பூமி மற்றும் ஜடப்பொருள்கள், உயிரினங்கள் அனைத்திலுமே "வெப்பத்தையும், ஒளியையும் உண்டாக்கி" அணு மாற்றங்களை செய்வதாக உள்ளது. இந்த ஓம் என்ற ஒலியானது standing wave என்ற ஒலியை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

 

[1] மனித உடலினுள் உள்ள இருதயமும் மூளையும் மட்டுமே மின்சாரம் மற்றும் மின்காந்த ஈர்ப்புவிசையை (electromagnetic force) உற்பத்தி செய்பவை ஆகும். நமது மூளையின் அதிர்வு அலையானதும், இருதய துடிப்பின் அதிர்வு அலைகளும் “இணைந்து உண்டாகும் அதிர்வு அலையானது" வானவீதி (Space), கோள்கள், பூமி மற்றும் ஜடப் பொருள்கள், உயிரினங்கள் அனைத்திலும் ஊடுருவிச் செல்லும் தன்மையுடையதாக உள்ளது.

 

[2] மனித உடல் என்பது 70% அளவு தண்ணீரினாலும், 30% அளவு வரையில் பல்வேறு தனிமங்களானது [கொழுப்பு மற்றும் புரதப் பொருள், கார்போஹைட்ரேட்டுடன்] இணைந்து உருவாகியதாகும். மனித உடல் தண்ணீரில் ஈர்ப்புவிசையை நிலை நிறுத்தவும், நமது மூலையின் மின்சாரம் மற்றும் மின்காந்த ஈர்ப்புவிசையை அதிகப்படுத்தவும் முடியும்.

 

[3] Nikola Tesla என்ற விஞ்ஞானி (1856-1943) வரை வாழ்ந்தவர். இவர் universal laws வை பயன்படுத்தி ஒலியை உருவாக்கி, அந்த ஒலியை பயன்படுத்தி United States Navy in 1943 ல் "Philadelphia Experiment" யை செய்தார். ரேடார் மற்றும் மனிதர்களின் கண்களிலிருந்து 640 கிலோ மீட்டர் நிலத்தின் பகுதிகளை கண்ணிலிருந்து மறையச் செய்துக் காட்டினார்.

 

[4] இதே standing wave என்ற ஒலியை பயன்படுத்தி Alexander R.Putney என்பவர் {தற்போது 2014 ல் Geyser Reactor machine இயந்திரம் மூலமாக} மூன்று மணி நேரத்தில் Isotope of Silver 47Ag107 வெள்ளியானது 12% தங்கமாகவும், இரண்டு வாரங்களுக்கு பிறகு 90% க்கும் அதிகமான 79 Au197 தங்கமாக மாறும் “உலோக மாற்று முறை இயந்திரமாக” உருவாக்கியுள்ளார். இதை சித்தர்களும் ஓம் மந்திரத்தை உரு ஏற்றி கை தொட்டு பொன்னான கதைகள் கேட்டு இருப்போம்.

 

Geyser Reactor Machine இயங்கும் முறை:

தண்ணிரின் வெப்பநிலை 43.4°C ஆக இருக்கும்படி அமைப்பை உருவாக்கியுள்ளார். காற்றில்லாத நிலையில் உருவாக்கிய [60% கார்பனுடன் 40% களிமண் கலந்து 1000°C வெப்ப நிலைக்கும் அதிக சூடான முறையில் "காற்றை வெளியேற்றும் கார்பனை" carbon nozzle உருவாக்கி] சூடான நீரீல் காற்றுக் குமிழ்களை bubbles உருவாக செய்துள்ளார்.

இந்த சூடான நீரீல் தூளாக்கப்பட்ட வெள்ளியை கலக்கவும். இந்த இயந்திரம் மூலமாக மூன்று மணி நேரத்தில் 10 கிராம் வெள்ளியானது 12% {sshangaano powder 47Ag107 into pure gold 79 Au197} தங்கமாகவும், இரண்டு வாரங்களுக்கு பிறகு 90% க்கும் அதிகமான 79 Au197 தங்கமாக மாறுகின்றது.

 

[5] கார்பன் carbon nozzle வெளியேற்றும் காற்றில் Alpha Hydrogen உள்ளது. மனித உடலும் 70% அளவு தண்ணீரினால் உருவானது. எனவே பைகார்பனேட் என்ற கார்பனை பயன்படுத்தி உடல் தண்ணீரில் வாயுக்களை கரைக்கலாம்.

standing wave என்ற ஒலியானது மனித உடல் மற்றும் இரத்தத்தில் கலந்துள்ள (கால்சியத்தை பொட்டாசியமாகவும், மெக்னீசியத்தை கால்சியமாகவும்பொட்டாசியமாகவும், இரும்பை மாங்கனீசாகவும், காப்பரை துத்தநாகமாகவும், துத்தநாகத்தை காப்பராகவும்) மாற்றத்தை ஏற்படச் செய்கின்றது.

பைகார்பனேட் என்ற கார்பனானது உடல் நீரில்  கரைந்திருக்கும்போது, ஓம் என்ற Standing wave அதிர்வு ஒலியை உருவாக்கினால் (வெள்ளி, காப்பர், துத்தநாகம் ஆகிய தனிம அணுக்கள் தங்கமாக) மாறும் நிலைக்கு செல்கின்றது. மனித உடலில் தங்க அணுக்கள் அதிகமாகும்போது (உடல் சக்கரங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் உடலினை சுற்றியுள்ள ஆராவில் உள்ள குறைபாடுகளையும் சரி செய்து) சிகப்பு செல்களினை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. நமது தலைக்குள் உள்ள "இரண்டு மூளையையும் ஒரே சமயத்தில் இயங்கச் செய்து" தெளிவான சிந்தனையுள்ள அறிவினை உருவாக்குகின்றது. இது போன்ற மாற்றத்தினால் உடலானது ஒளி உடலாக மாறுகின்றது என்பதை நாம் அனைவரும் அறிவது அவசியமாகும்.

12.06.2010-ம் தேதியில் NASA வின்வெளி ஆய்வுக் கழகமானது சூரியனின் மேல்பகுதிகளில் ஓம் என்ற ஒலி அதிர்வும், Standing wave என்ற ஒலி அதிர்வும் உற்பத்தியாக்குகின்றது என்பதை நிரூபித்துள்ளது. உடலினுள் சூரியஒளியை பெற்று செல்களின் அடர்த்தியை 10 மடங்கு அதிகமாக செய்தால் 10,000 ஆண்டுகளுக்கும் அதிகமாக உயிர் வாழலாம் என்ற அறிவியல் ஆராய்ச்சிகளை இனைய தளத்தில் அறியலாம்.

 

[6] பாடல் எனும் இசை ஒலியின் அதிர்வை கேட்பதன் மூலமாக செல்களின் DNA வில் உள்ள பழைய குறைபாடுகளையும் சரி செய்து கொள்ளலாம். Geyser Reactor Machine இயங்கும் முறையை அறிந்து இன்றைய மனிதர்கள் உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாகும். 2020 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆக வேண்டுமென்றால், இன்றைய இளைய சமுதாயத்தின் அறிவுபூர்வமான கூட்டு முயற்சியில்தான் அது அடங்கியுள்ளது.

அகரம், மகரம், உகரம், என்பதே ஓங்காரம் என்கிற ஓம் ஒலியாக இருக்கிறது. வானவீதி, பூமி மற்றும் கோள்கள், உயிரினங்கள், ஜடப்பொருள்கள், இவைகள் அனைத்திலுமே மின்சாரம் என்பதே மின்காந்த விசையாக இருக்கிறது. இந்த மின்காந்த ஈர்ப்புவிசையே அனைத்து இயக்கங்களுக்கும் காரணமாக உள்ள "ஓம் என்ற மின்காந்த ஈர்ப்புவிசையாக" இருக்கின்றது.

சூரியனின் மேற்பகுதியில் இருந்து வெளிவருகின்ற மின்காந்த கதிர்கள் ஓம் என்ற ஒலியை உருவாக்குகின்றது. பூமியின் சுழற்சியில்  பூமியை சுற்றிலும் ஓம் என்ற ஒலியே ஏற்படுகின்றது என ஆராய்ச்சி தகவல்கள் மூலமாக அறிய முடிகிறது. மனித உடல் செல்களினுள் உள்ள மின்காந்த ஈர்ப்புவிசையை "ஓம் என்று மனதில் நினைத்து" உடலை அதிரச் செய்ய வேண்டும். இந்தஒலி அதிர்வு நிலையினை நாம் உணர்ந்தும் மனதில் நினைத்து கொண்டு உடலை அதிரச் செய்து வருவதன் மூலமும் பயிற்சி செய்ய வேண்டும். இதனால் மனித உடல் செல்களினுள் உள்ள மின்காந்த ஈர்ப்பு விசையானது "தங்கத்திற்கான ஒலி அதிர்வு நிலையினை செல்களினுள் உண்டாக்கும்" நிலையை அடையும் என அறியலாம்.

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்


ஆன்மீகம் : *ஓம் என்ற standing wave ஒலி* மந்திரத்தின் மகத்துவம் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | spirituality : *The standing wave sound of Om* is the greatness of the mantra - Spiritual Notes in Tamil [ spirituality ]



எழுது: சாமி | தேதி : 10-30-2022 11:14 pm

தொடர்புடைய வகை



தொடர்புடைய தலைப்புகள்