அமெரிக்க விஞ்ஞானி John Bardeen (ஜான் பார்ட்டீன்). டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மாமேதை.இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
"மன உறுதி"
அமெரிக்க விஞ்ஞானி John Bardeen (ஜான் பார்ட்டீன்).
டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மாமேதை.இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல்
பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
குடும்பத்துடன் விழாவில்
கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
தன்னுடைய மகன்கள் இருவர்
பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
படித்துக்
கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்ய இவர் விரும்பவில்லை.
அதனால் மூன்றாவது மகனை
மட்டும் நோபல் பரிசு பெற விழாவுக்கு அழைத்துச் சென்றார்.
விழாவிற்கு தன்னுடைய ஒரு
மகனை மட்டும் அழைத்து வந்ததால், "குடும்பத்துடன் வரவில்லையா?" என சுவீடன் நாட்டு
மன்னர் குவோஸ்டா ஜான்பார்டினை அன்பாகக் கடிந்து கொண்டார்.
"அடுத்த முறை
விழாவுக்கு வரும் போது நிச்சயம் அவர்களை அழைத்து வருகிறேன். இப்போது அவர்கள்
படித்துக் கொண்டு இருப்பதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என அழைத்து வரவில்லை"
என்றார் ஜான்பார்டீன்.
மன்னருக்கோ
ஆச்சர்யம்..ஒரு முறை நோபல் பரிசு பெறுவதே மிகப்பெரிய சாதனை.. கடினமாக உழைக்க
வேண்டும். இவர் மீண்டும் வருகிறேன் என்கிறாரே.. என்று ஆச்சர்யப்பட்டார்.
1972 ம் வருடம்.
மீண்டும் அதே நோபல் பரிசு கொடுக்கும் விழா.. ஜான்பார்டன் தனது மகன்களுடன் விழாவில்
கலந்து கொண்டார்.. நோபல் பரிசு வழங்கப்பட்டது..
யாருக்கு? நம் ஜான்பார்டன்
விஞ்ஞானிக்குத் தான். இரண்டாம் முறை மீண்டும் நோபல் பரிசு பெறுகிறார்.
எதற்கு? மின்சாரக் கடத்திகளைப்
பற்றிய உண்மைகளை இவர் கண்டுபிடித்திருந்தார்.
விழாவில் மன்னர்
திக்குமுக்காடிப் போனார்.
சொன்ன சொல்லை
நிறைவேற்றுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட காலம் பதினைந்து வருடங்கள்..எப்படி இது
இவருக்கு மட்டும் சாத்தியம் ஆகியது?
தளராத தன்னம்பிக்கை. மன
உறுதி.. எடுத்துக் கொண்ட செயலில் முழு கவனம். வெற்றிப் பெற்றே தீருவேன் என்ற உறுதி
தான்.....
கடினமான உழைப்புக்கு
என்றுமே தோல்வி (There is always not a
defeat for hard work ) கிடையாது.
இவ்வாறு நீங்கள்
விரும்பும் துறை எதுவாயினும் அதற்குத் தேவையான, முறையான பயிற்சி மற்றும் விடாமுயற்சி, எடுத்த செயலை
செயல்படுத்துதல் ஆகிய இம்மூன்றும் தேவை.
இவைகளை தொடர்ச்சியாகப்
பின்பற்றும் போது, நிச்சயம் உங்கள் குறிக்கோளில் வெற்றி பெறுவது திண்ணம்.
நீங்கள் நினைப்பது
எதுவாக இருப்பினும் உங்களை வெற்றி தேடி வரும்.
அடிக்கும்
காற்றால்...
மேகங்கள்
விலகி ஓடும்,
நட்சத்திரங்கள்
ஒருபோதும்
விலகுவதில்லை.
திருட தைரியம்
இல்லாதவர்கள் பிச்சை எடுக்கிறார்கள்...
பிச்சை எடுக்க
வெட்கப்படுபவர்கள் திருடி விடுகிறார்கள்...
மனசாட்சிக்கு
பயந்து மனிதனாக வாழ நினைப்பவர்கள் உழைத்து வாழ்கிறார்கள்...
உழைத்து வாழ்பவர்களே
சிறந்த மனிதர்கள்...
புகழ்வதை காட்டிலும்
ஊக்கப்படுத்துவது சிறந்தது..!!
வாழ்த்துவதைக்
காட்டிலும் வாழவைப்பது சிறந்தது.!!
இந்த நாளில் யாரேனும்
ஒருவரை ஊக்கப் படுத்தி வாழ வைப்போம்..!
ஒவ்வொரு தடைகளும் உன்னை
வைரமாக மாற்றும் அதேபோல் ஒவ்வொரு வீழ்ச்சியும் உன்னை செதுக்கி அழகாக்கும் அதுவே
வாழ்க்கை இதை
புரிந்து கொண்டால்
வாழ்க்கை சிறக்கும்
நேற்று நடந்ததை மறந்தால்
தான்,
இன்று உன்னால் சிரிக்க
முடியும்...
பிறரை நம்புங்கள்
உயர்வு வரும்
வாய்ப்புகளை
நம்புங்கள் முயற்சி
வரும்
சவால்களை நம்புங்கள்
வளர்ச்சி வரும்
உங்களை நம்புங்கள்
வாழ்வு வரும்
வாழ்க்கை வாழ்வதற்கே
அங்காளி
பார்த்துக்கொள்வாள்
பார்த்துக்கொண்டே
உள்ளாள்
உண்மையாக இருப்பவர்கள்
தான் வாழ்க்கையில் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள்...
என் வாழ்க்கையில்,
வெற்றி அடைய,
இன்றும் கூட,
ஒடுகின்றேன்,
என்பதற்காக,
வருத்தமில்லை,
இன்னும் கூட,
நிற்காமல் ஒடுகின்றேன்,
என்பதே எனக்கான,
இவ்வாழ்க்கையின்,
பெருமை என்பேன்..
கடின உழைப்பும்
எவ்வித முயற்சியுமின்றி
எளிதாக எல்லாம்
கிடைக்க வேண்டும்
என நினைப்பவர்கள்
ஒரு போதும் வாழ்வில்
வெற்றி பெற இயலாது
என்னிலே இருந்தஒன்றை
யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை
யான்அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை
யாவர்காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து
யான்உணர்ந்து கொண்டனே.
- சிவவாக்கியர்
புரிதலும் நிதானமும் ஒரு
மனிதனுக்கு தவறும் பட்சத்தில்
அவனுடன் சேர்ந்து
பயணிக்கும் அத்தணை பேருக்கும் நிம்மதி இருக்காது....
சிவாயநம......
எது வந்த போதிலும் எதிர் கொள்ளுவேன் பைரவன்
துணையோடு அதை வெல்லுவேன்
ஆதியும், அந்தமும் நீ இன்றி வேறு இல்லை
என்பதை யான் உணர்ந்தேன் என்றும் உன் பாதம் பற்றுகின்றேன்
எவரைப் பற்றிச் நாம்
அதிகம் சிந்திக்கின்றோமோ, அவரால்தான் நம் பாதி வாழ்க்கை பாழடைகிறது.,
இந்த உண்மையை
அறிந்திருந்தும் நாம் அதை ஏற்பதே இல்லை!
இலட்சிய வேட்கை
குறைவதில்லை! சத்திய முயற்சிகள் தோற்பதில்லை.! விரைந்து முன்னேறு வெற்றி
நிச்சயம்..
நல்ல எண்ணங்களுடன்
தொடங்கும் ஒவ்வொரு நாளும் நல்ல நாளாகவே இருக்கும். ஒவ்வொரு நாளையும் நல்ல
எண்ணங்களுடன் தொடங்குங்கள்.
மற்றவர்களுடன் நாம் என்ன
பேசுகிறோம் என்பதை விட நம்முடன் நாம் என்ன பேசுகிறோம் என்பது மிகவும் முக்கியம்.
உங்களுடன் நீங்களே நல்ல வார்த்தைகளையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த பிரபஞ்சம் ஒரு நாள்
உங்கள் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும்.
உங்கள் கனவுகள் அனைத்தும் நிச்சயம் ஒரு நாள் உண்மையாகும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
: "மன உறுதி" - [ ] | : "willpower" - in Tamil [ ]