
சில பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் பகுதி 1 [ 100 மூலிகைகள் ]
சில பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும்
பகுதி 1 [ 100 மூலிகைகள் ]
1. அருகம்புல்
சர்வரோக நிவாரணி, ரத்த விருத்தி செய்யும். தோல்நோய்கள், பாஷாண வேக்காடு நீங்கும்.
2. அகத்தி இலை
குடற்புண் குணமாகும். மூட்டுவாதம் எலும்பு நோய்கள்,ருசியின்மை தீரும். 
3. அக்கரகாரம்
சளி, இருமல், இரைப்பு, காசநோய், சைனஸ் போன்றவை குணமாகும். ஆண்மை எழுச்சி தரும். 
4. அதிமதுரம்
குரலுக்கு இனிமைதரும். டான்சில் தீரும். கல்லீரல் கோளாறுகள், சளி, சைனஸ், ஆஸ்துமா போன்றவை குணமாகும்.
5. அதிவிடயம்
மூத்திரக்கோளாறுகள், சர்க்கரை வியாதி, சளிக்கட்டு, உடல் உஷ்ணம் ஆகியன தீரும்.
 6. அத்திக்காய்
குடற்புண், மேக நோய்கள், மலக்கட்டு, உடல் உஷ்ணம், சரீர புண்கள் நீங்கும். உடல் வலிமை உண்டாகும்.
7. அமுக்கரா
நரம்புத்தளர்ச்சி, ஆண்மையின்மை , உடல் பலவீனம் போன்றவை குணமாகும். உடல் அழகு, முக தேஜஸ் தரும்.
8. அம்மான் பச்சரிசி
இளைத்த உடலை தேற்றும். சர்க்கரை நோய், குடற்புண் ஆகியன குணமாகும். எப்பேர் பட்ட புண்களையும் ஆற்றும்.
9. அரு நெல்லிக்காய்
பித்தத்தை உண்டாக்கும். தாகம், இருமல், உடல் உஷ்ணம் உண்டாகும்
10. அலரிப்பூ
 ருசியின்மை , உடல் வெப்பம், குஷ்டம், சொறி, சிரங்கு நீங்கும். புண்கள் ஆறும்.
11. அல்லிப்பூ
 மேக நோய்கள், நீரிழிவு, புண்கள், தாகம் போன்றவை நீங்கும்
12. அவரைக்காய்
மருந்தின் வீரியத்தைக் குறைக்கும். மந்தம் உண்டாகும். சளிக்கட்டு, வயிற்று நோய் ஆகியன உண்டாகும்
13. அவுரி இலை
நஞ்சுகளை முறிக்கும். 18 வித வாத நோய்களும் குணமாகும். மஞ்சள் காமாலை, ஜன்னி நோய்கள், விஷக்கடி ஆகியன நீங்கும்.
14. அழிஞ்சில் விதை
வாயுக்கோளாறுகள், விஷத்தன்மை ஆகியன நீங்கும்.
15. அறுகீரை
காமம் பெருக்கும். வாய்வு குணமாகும். சித்த ஆயுர்வேத மருந்துகளின் வீரியத்தை குறைக்கும் தன்மை உடையது.
16. ஆடாதொடை 
இதன் இலைச்சாற்றினால் கபம் கரையும். குரல் இனிமை பெறும். சர்க்கரை வியாதி குணமாகும். சைனஸ், ஆஸ்துமா, காசம் போன்றவை நீங்கும். 
17. ஆடு தீண்டாப்பாளை 
கருங்குஷ்டம் தீரும். படை, சொறி தீரும். ஆண்மை உண்டாகும். 
18. ஆதொண்டை இலை
ரத்த சூடு, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், வீக்கம் ஆகியன நீங்கும்.
19. ஆமணக்கு
உடல் சூடு நீங்கும். தேக நாற்றம் தீரும். விந்து பெருகும். வாய்வு, வயிற்றுவலி தீரும். குடலேற்றம், மலச்சிக்கல் ஆகியன குணமாகும்.
 20. ஆலமர சமூலம் 
இதன் பால், பழம், விழுது, பூ, இலை அனைத்தும் மருந்தாகும். மேக நோய்கள், உடல் உஷ்ணம், சர்க்கரை வியாதி, வாய்ப்புண் தீரும். இதன் விதை காமத்தைத் தூண்டும். வசீகரத் தன்மையுடையது.
21. ஆவாரம்பூ
 தங்கத்தையொத்த மேனியழகு உண்டாகும். உடலில் காணும் கற்றாழை நாற்றம் நீங்கும். சர்க்கரை வியாதி, சிறுநீரக வியாதி ஆகியன நீங்கும். 
22. ஆளிவிதை
கட்டிகளைக் கரைக்கும். வாந்தியை நிறுத்தும். நரம்பு வலி, விரைவாதம், உடல் பருமன் போன்றவை குணமாகும். 
23. ஆற்றுத்தும்மட்டிக்காய் 
வாதநோய், மலக்கட்டு, கருப்பை நோய், சூதக வலி ஆக்கியன தீரும். 
24. இஞ்சி
சளி, இருமல், ஜன்னி, காய்ச்சல், வாதநோய் போன்றவற்றைத் தீர்க்கும். நல்ல செரிமானம் உண்டாகும்.
 25. இந்துப்பு
எட்டுவித வயிற்றுநோய்கள், பித்தம், கபம், மலச்சிக்கல், தலைநோய், கண்ணோய், ருசி யின்மை, பல்நோய், காதுநோய்கள், காசநோய், இரைப்பு நோய், ரத்த மூலம், எலிவிஷம் ஆகியன நீங்கும். 
26. இருவாட்சி சமூலம் 
கண்பார்வை கூர்மையாகும்.தேகம் மணக்கும். உடல்வலி, மயக்கம் போன்றவை நீங்கும்.
27. இலந்தை சமூலம் 
ருசியின்மை , பித்த மயக்கம் ,வாதநோய் தீரும். வாந்தியை உடனடியாக நிறுத்தும். 
28. இலவ மரம்
நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியன நீங்கும். விந்து விளையும். கபம் உண்டாகும்.
 29. இலுப்பைப்பூ
 பித்த சுரம் நீங்கும். தாகம் தீரும்.பைத்தியம் - மயக்கம் உண்டாகும்.
 30. இளநீர்
வாதநோய்கள், உஷ்ணநோய்கள் தீரும். வாந்தி பேதியை நிறுத்தும். நீரடைப்பு, நீர்ச்சுருக்கு நீங்கும். மனம் தெளியும். கண்பார்வை கூர்மையாகும்.
31. ஈஸ்வர மூலி
பலவகை விஷங்கள் தீரும். வீக்கங்களை கரைக்கும். ஜன்னி வலிப்பு நோய்கள் நீங்கும். 
32. உப்பு 
முத்தோஷம் நீங்கும். உடலை போஷிக்கும். எட்டுவித குன்ம நோய்களும் தீரும். 
33. உருத்திராட்சை விதை
முத்தோஷம், தாகம், பித்தம், விக்கல், கபம் ஆகியன நீங்கும்.
34. உருளைக்கிழங்கு
தேகபுஷ்டி உண்டாகும். தும்மலை நிறுத்தும். இரைப்பைக்கு ஆகாது. வாயுவை உண்டாக்கும். 
35. எருக்கிலை
 விஷக்கடிகள் நீங்கும். குஷ்டம் குணமாகும். கிருமி, வலி, சூதக வாயு நீங்கும்.
36. எலுமிச்சம் பழம்
 அஜீரணம் நீங்கும். தாகம் தணியும். வாந்தியை நிறுத்தும். கண், காது நோய்கள் தீரும். வயிற்று வலியை குணப்படுத்தும்.
 37. எழுத்தாணிப் பூண்டு
 கரப்பான், படை, சொறி, சிரங்கு உள்பட பிற தோல் நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும். 
38. எள்
உடலுக்குச் சூட்டையும், வலி மையையும் உண்டாக்கும். கண்பார்வை கூர்மையாகும்.
 39. ஓரிதழ் தாமரை
 விந்துவை அதிக அளவில் உற்பத்தி செய்யும். மேகநோய்கள் தீரும். மேனி அழகு பெறும். விந்துவில் உயிரணுக்களை மேம்படுத்தும். உடம்பை இரும்பைப்போல் உறுதியாக்கும்.
40. கத்தரிக்காய்
பித்தம், கபம் நீங்கும். கத்தரிப் பிஞ்சு உடம்புக்கு நல்லது. சொறி, சிரங்கு, கரப்பான் போன்றவை உண்டாக்கும். 
41. கசகசா
வயிற்றுப் புழு நீங்கும். தோல் நோய் தீரும். தலைபாரம் நீங்கும். நல்ல தூக்கம் உண்டாகும். தேக அழகு, தேஜஸும் உண்டாகும். விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
42. கஞ்சாங்கோரை 
அஜீரண பேதி நீங்கும். காய்ச்சல் தணியும். மூலத்தினவு, மேக நோய்கள், இருமல் போன்றவை தீரும்.
 43. கடலழிஞ்சில்
 சர்க்கரைவியாதி, மேகநோய்கள், வாத, பித்த, கப நீர் ஆதிக்கம், பேதி, சீதள நோய்கள் போன்ற வற்றை உடனடியாகக் குணப்படுத்தும்.
 44. கடார நார்த்தங்காய்
 வாய் நீருரல், வாத நோய்கள், வயிற்று நோய்கள் ஆகியன தீரும். குடற்கிருமிகளை கொல் லும். தேகம் சுத்தமடையும். நல்ல பசி உண்டாகும். 
45. கடுகு
ஈளை, கபம், பித்தம், முடக்கு வாதம், மயக்கம், குன்மம் ஆகியன தீரும். கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவத்தை உண்டாக்கும்.
46. கடுக்காய்
கண், காது, மூக்கு, தொண்டை நோய்களை குணப்படுத்தும். உடல்பருமன், யானைக்கால் நோயை தணிக்கும். ஆண்குறி நோய்கள் அனைத்துக்கும்
உடனடி நிவாரணம் கிடைக்கும். 
47. கருகுரோகிணி
 காய்ச்சலைத் தணிக்கும்.வாயுவைக் குணப்படுத்தும். சளி, மலச்சிக்கல், வயிற்று நோய் ஆகியன தீரும். . பேதியை உண்டாக்கும். 
48. கண்டங்கத்தரி
சளி, இருமல், சைனஸ், ஆஸ்துமா, காசநோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும். பல்வலி, பல் அரணை ஆகியன நீங்கும்.
 49. கஸ்தூரி மஞ்சள்
 புண், கரப்பான், கிருமி நோய்கள்போன்றவை தீரும். விந்து வளமையும் வியக்கத்தக்க அறிவும் உண்டாகும். 
50. கரியபோளம்
மார்புநோய், வயிற்று நோய், பக்க வாதம், மேகக்கட்டி, சுளுக்கு, இரத்தக்கட்டு ஆகியன நீங்கும்.
 51. கருக்காலிப்பிசின்
 சர்க்கரை நோய், தோல் நோய்கள், அதிக உதிரப்போக்கு ஆகியன நீங்கும். விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
 52. கருஞ்சிவதை வேர்
 எலி விஷம், பித்தநோய்கள் குணமாகும். பேதியை உண்டாக்கும்.
 53. கருஞ்சீரகம்
தோல்நோய்கள், சருமத்தில் உண்டாகும் புண்கள், தலை நோய்கள், தலைவலி, கண்வலி போன்றவைத் தீரும். 
54. கருடன் கிழங்கு
 சகல விஷக்கடிகளும் தீரும். தோல்நோய்கள் அனைத்தும் தீரும். பால்வினை நோய்கள் எய்ட்ஸ் ஆகியவற்றைக் கட்டுப் படுத்தும். இதன் கிழங்கினை வீட்டில் கட்டிவிட எந்த விஷ ஜந்துகளும் வராது.
 55. கரும்புச்சாறு
 மிதமாய் உண்ண, நீரடைப்பு நீங்கும். மேகநோய் விலகும். பித்தம் தணியும். 
56. கருந்துளசி
இருமல், இரைப்பு, கிருமிக் கோளாறு, மார்புச்சளி, விஷக்கடிகள், ஜன்னி நோய் ஆகியன தீரும். 
57. கருவேப்பிலை 
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். ஜீரணத்தை உண்டுபண்ணும். வாயுவை பிரிக்கும். தலைமுடி தாரளமாய் வளரும். பித்தத்தைத் தணிக்கும். 
58. கருவேலம்பட்டை 
 பல் நோய்கள், பல் ஈறுகளில்இரத்தம், அதிக இரத்தப்போக்கு ஆகியன தீரும். உடல் உறுதி உண்டாகும். 
59. கல்யாண பூசணிக்காய் 
 பித்தம், உள்காய்ச்சல், நீர்க்கட்டு, பித்த சுரம், வறட்சி, மேக நோய்கள் ஆகியன தீரும். வாய்வினை உண்டாக்கும்.
 60. கழற்சி இலை
 விரைவாதம், வயிற்றுவலி, வெட்டைச் சூடு, ஒவ்வாமை ஆகியன தீரும். 
61. கழுதை தும்பை
 கட்டிகளுக்கு அரைத்துப்போட பழுத்து உடையும். ரத்தப்போக்கினை நிறுத்தும். சீதக்கடுப்பு மறையும்
62. கற்றாழை
மேக நோய்கள், கப நோய், வலி, குஷ்டம், மூலம், பெண்குறிநோய், அரிப்பு, எரிச்சல், சிறுநீரகக்கோளாறுகளுக்கும் உகந்தது.
 63. காசினி விதை
ருசியின்மை, வாந்தி ஆகியன நீங்கும். சிறுநீரகக் கோளாறுகளுக்கும் உகந்தது.
 64. கார்போக அரிசி
 படை, சொறி, புண், வாதகபம்,வெண்குஷ்டம் போன்றவை நீங்கும்.
 65. காவிக்கல்
 கண்ணோய்கள், மேகநோய்கள், பல்நோய்கள், பித்தம் ஆகியன தீரும். அதிக ரத்தப் போக்கினை நிறுத்தும்.
 66. காறாக்கருணைக்கிழங்கு
கபநோய், வாதநோய், முளை மூலம், ரத்த மூலம், மேகநோய்கள் ஆகியன தீரும். பசி தீபனம் உண்டாகும்.
 67. கானாம் வாழை
 குளிர் சுரம் நீங்கும். குடற்புண்ணினை குணப்படுத்தும். மேகநோய், வெள்ளை விழுதல், உடல் மெலிவு ஆகியன தீரும்.
 68. கிரந்தி நாயகம்
 கண்ணோய்கள், விஷக்கடி, புண்,
கிரந்தி, மேகவெட்டைபோன்றவைத் தீரும்.
 69. கீழா நெல்லி
பித்தம், விஷம், கண்ணோய்கள், சர்க்கரை நோய், புண்கள், மஞ்சள் காமாலை ஆகியன தீரும்.
70. குங்கிலியம்
அதிக ரத்தப்போக்கு, மேகநோய், காசநோய், சீழ்பிடித்த புண், மூலநோய்கள், மூட்டுவாத நோய்கள் ஆகியன நீங்கும்.
 71. குங்குமப்பூ
விந்து நஷ்டம், காசநோய், விரைவாதம், கபநோய், காய்ச்சல், பித்தம், கால்வலி, தலைவலி, கண்ணோய்கள், வாந்தி, சைனஸ், காதுநோய்கள், சர்க்கரை வியாதி, மாதவிடாய்க் கோளாறுகள் ஆகியன தீரும். 
72. குடசப்பாலை 
வாதம், மேக நோய்கள், தோல் வியாதிகள், சர்க்கரை நோய் நீங்கும்.
 73. குடியோட்டுப் பூண்டு 
 புண், கரப்பான், சிரங்கு,விஷக்கடி, மேக வாய்வு, பல்நோய்கள் போன்றவைத் தீரும். வீட்டில் வளர்க்கக் கூடாத மூலிகை. வீட்டில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கும் தன்மை கொண்டது. 
74. குந்திரிக்கம்
காசநோய், மேகக்கட்டி, விஷக் கடி, குஷ்டம், படர்தாமரை, சிறங்கு, புண்கள் ஆகியன நீங்கும். 
75. குப்பைமேனி இலை
 மேனி சாப்பிட மேனி நுடங்காது' என பேருடையது. சகல விஷங்களும் நீங்கும். கபம் கரையும் அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தும்.
 76. குரோசானி ஓமம்
 அடிக்கடி மூத்திரம் கழிதல், வாதநோய்கள், விந்து நஷ்டம், புண், பேதி, உள்கடுப்பு, கபநோய் போன்றவை நீங்கும்.
77. குன்றி விதை
 கண்ணோய், பித்தம், காமாலை, உஷ்ணம் போன்றவை நீங்கும்.
 78. கூகைக் கிழங்கு
 இருமல், உஷ்ணம், தாகம் ஆகியன நீங்கும். மேனியழகு உண்டாகும்.
 79. கேழ்வரகு
வாய்வு, பித்தம் உண்டாகும்.
 80. கையாந்தகரை 
 இதுவே கரிசலாங்கண்ணி. குரல் கம்மல், காமாலை, குஷ்டம், இரத்தசோகை, பல்நோய் தீரும்.
 81. கொடிவேலிவேர்
 கட்டி கரையும். புண்கள், கிரந்தி, அரையாப்பு, வீக்கம் நீங்கும். மூலநோய்கள், இரத்தக்கட்டு, நீரேற்றம், பெருவயிறு ஆகியன நீங்கும்.
 82. கொட்டிக்கிழங்கு
 தேமல், மேக நோய்கள், வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும். குளிர்ச்சி தரும். 
83. கொட்டைக்கரந்தை
 வெட்டைநோய், மேக நோய், சொறி, சிறங்கு, மலக்கட்டு ஆகியன நீங்கும். தலைமுடியை வளர்க்கும்.
 84. கொட்டைப்பாக்கு
 கபம் கரைக்கும். மூலக்கிருமி நீங்கும். போகத்தில் இன்பம் தரும். மெத்த உண்டால் இரத்த சோகை உண்டாகும்.
 85. கொத்தமல்லி கீரை
 பித்த நோய்கள் அனைத்தும் தீரும். காய்ச்சல் தணியும். மெத்த .உண்டால் ஆண்மை உண்டாகும்.
 86. கொம்புத்தேன்
 வாத, பித்த, கபநோய்கள், ருசியின்மை ஆகியன தீரும். உடலை போஷிக்கும்.
87. கொய்யாப்பழம்
 சிற்றின்ப இச்சை உண்டாகும்.மலக்கட்டு உடையும். வாந்தி, வயிற்றுப்பொருமல், தலை சுற்றல் ஆகியன உண்டாகும்
88. கொள்ளு
பசி உண்டாகும். கொழுப்பினை கரைக்கும். உடல் பருமனை குறைக்கும். விந்து உண்டாகும்.
 89. கொன்றைப் பூ
 நீரிழிவு தீரும். குடல் நோய், மலக்கிருமி, மலச்சிக்கல் போன்றவை குணமாகும்.
 90. கோதுமை
கஞ்சி செய்து சாப்பிட சுரம் தணியும். தலைபாரம் தீரும். உடல் பலமடையும்.
 91. கோரைக் கிழங்கு
 சீதள சுரம், ரத்த பித்தம், வாத சுரம், அதிசாரம், பித்தம், உஷ்ண ம், தாகம், கபம், குதிகால் வாதம், வாந்தி ஆகியன குணமடையும்.
 92. கோரோசனை
 நீரிழிவு, மேகசுரம், குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, காய்ச்சல் ஆகியவற்றை நீக்கும் அருமருந்தாகும்.
 93. கோமேதகம்
இதில் மருந்து செய்து சாப்பிட வாத பித்தம், மலக்கட்டு ஆகியன தீரும் தேகம் பொன்னென ஜொலிக்கும். 
94. கோவைக்காய் 
உடல் உஷ்ணம் தணிக்கும். கபம் விலகும். ருசியின்மை , தோல் நோய்கள் ஆகியன தீரும்.
 95. கோழிமுட்டை 
புண், கபம் தணியும். தாது புஷ்டி உண்டாகும். பித்தம், வாதம் அதிகரிக்கும்
96. சங்குஞ்செடி சமூலம்
 இதன் வேர் மற்றும் இலையினால் வீக்கம், கரப்பான், கிரந்தி, குன்மம், சூலைவாய்வு, பித்தம், விஷக்கடிகள் நீங்கும். நல்ல பசியும் ரத்த உற்பத்தியும் உண்டாகும்.
 97. சடாமாஞ்சில்
கட்டிகள் கரையும். விஷக்கடி நீங்கும். குஷ்டம், வாய்வு, இருமல், பித்தம், இரைப்பு ஆகியன நீங்கும். 
98. சண்பகப்பூ
வாத பித்தம், எலும்பு சுரம், மேகநோய்கள், தாது நஷ்டம், கண்ணோய்கள் போன்றவைத் தீரும். இதன் மணத்தினால் மனக்களிப்பு உண்டாகும். 
99. சதகுப்பை
தலைவலி, குதிகால்வலி, காதுநோய், கபநோய், காய்ச்சல், மூலக்கடுப்பு சைனஸ் ஆகியன நீங்கும்.
 100. சதுரக்கள்ளி
கரப்பான், சொறி, வயிற்று வலி, சீதளம் ஆகியன தீரும். பேதியை உண்டாக்கும்.
குறிப்பு: இங்கு கூறப்பட்டுள்ள மூலிகைகள் மற்றும் பதார்த்தங்களின் அடிப்படையில் சுயசிகிச்சை மேற்கொள்ள விரும்பினால் சித்த மருத்துவரின் தகுந்த ஆலோசனையுடன் மேற்கொள்ள வேண்டுகிறேன்.
மருத்துவ குறிப்புகள் : 100 பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 1 - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : 100 Medicinal Herbs and their Uses - Part 1 - Medicine Tips in Tamil [ Medicine ]