சில பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 2 [ 100 மூலிகைகள் ]
101. சந்தனம்
வாத பித்தம், கபம், மனநோய் கள், காய்ச்சல், மேகநோய்கள், தாகம், உடல் வெடிப்புகள், சொறி, சிரங்கு, சிறுநீரகக் கோளாறுகள் ஆகியன தீரும்.உடலுக்கு வலிமை தரும்.
102. சரக்கொன்றை மரம்
வயிற்று கிருமிகள், குஷ்டம், வலி, வாதம், கபம், மலச்சிக்கல், ருசியின்மை ஆகியன தீரும்.
103. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
ஒரு பயனும் இல்லாத கிழங்கு. உண்ட மருந்தின் பலனை அழிக்கும். மந்தம், முளைமூலம், வயிற்றிரைச்சல், வயிற்றுக் கடுப்பும் உண்டாகும்.
104. சர்க்கரை வேம்பு
காயசித்தி உண்டாகும். நாத விந்து சுத்தி உண்டாகும். சிலேத்துமம் தணியும்.
105. சவுக்காரம்
கரப்பான், சீதளம், வாய்வு, உஷ்ணம், வயிற்றுவலி ஆகியன குணமாகும்.
106. சவுரிப்பழம்
கூந்தலை வளர்க்கும். பொடுகு நீங்கும். இளநரை மறையும்.
107. ஜாதிக்காய்
ஆண்மையை எழுப்பும். ஆழ்ந்த நித்திரையை உண்டாக்கும். மிகுதியாய்ச் சாப்பிட மயக்கமும், ரத்தக் கொதிப்பும் உண்டாகும்.
108. ஜாதிப்பத்திரி
வாத நோய்கள், மூட்டுவலி ஆகியன நீங்கும். சிற்றின்ப இச்சையைத் தூண்டும். ஆண் மையை எழுப்பி போகத்தை நீட்டிக்கும்.
109. சாம்பிராணி
வாதநோய், கண்ணோய், தலை நோய்கள் ஆகியன தீரும். இதன் புகை பிடிக்க தலைபாரமும் தீரும்.
110. சாரப்பருப்பு
உடலுறவு வேட்கையை உண்டாக்கும். விந்திலுள்ள உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். உடல் வலிவு பெறும்
111. சிலாசத்து
எலும்புகளுக்கு வலிமை தரும். வாய்ப்புண், தலைபாரம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு ஆகியன நீங்கும்.
112. சிவக்கரந்தை
வாந்தியை நிறுத்தும். தோல் நோய்கள், இருமல் நீங்கும். நல்ல பசி, விந்து கட்டு உண்டாகும்.உடலுக்கு அழகினைத் தரும்.
113. சிவதைவேர்
எப்பேர்ப்பட்ட மலச்சிக்கலும் மறையும். வாதநோய்கள் நீங்கும்.
114. சிவனார் வேம்பு
வண்டுகடி, தேள்கடி, பிற தோல்நோய்கள், அனைத்தும் நீங்கும். ரத்த சுத்தி செய்து, ரத்தத்தைப் பெருக்கும்.
115. சிறியாநங்கை
வண்டுகடி, விஷகடி மறையும். இரத்த சுத்திக்கு ஏற்றது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
116. சிறுகீரை
சிறுநீர்ப் பெருக்கும். கால்வீக்கம், உடல் உஷ்ணம் தணியும். விஷத்தை முறிக்கும். பாஷாண மருந்தினால் உண்டாகும் வேக்காடு மறையும்.
117. சிறுகுறிஞ்சான்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் சூதக நோய்களை ஒழுங்குபடுத்தும்.வயிற்றுக்கிருமிகள் தீரும்.
118. சிறுசின்னி இலை
விஷக்கடிகள், இடுமருந்தின் விஷம், காய்ச்சல், மாந்தம் ஆகியன நீங்கும்
119. சிறுதேள்கொடுக்கு
சொறி, சிறங்கு, படை, தோல் நோய்கள், மேக நோய்கள், காசநோய்கள் போன்றவை தீரும்.
120. சிறுநாகப் பூ
சளி, இருமல், தலைவலி ஆகியன நீங்கும். ஆண்-பெண் இருவருக்கும் உடலுறவு வேட்கையை உண்டாக்கி திருப்தி தரும்.
121. சிறுபீளை
உஷ்ணம் தணிக்கும். சிறுநீரகக் கற்களை கரைக்கும். விஷக்கடி களை குணப்படுத்தும். சிறுநீரகத்தைப் பாதுகாக்கும்.
122. சித்தரத்தை
சளி, இருமல், தலைவலி, ஆஸ்துமா, காசநோய் ஆகியன நீங்கும். நல்ல பசியினை உண்டாக்கும்.
123. சிற்றாமுட்டி வேர்
எலும்பு சுரம், பிற காய்ச்சல்கள், மேக நோய்கள் ஆகியன தீரும். கண்பார்வையைக் கூராக்கும்.
124. சின்னிக்கிழங்கு
சீழ்மூலம், ரத்தமூலம் மறையும். சிரங்கு, புண் போன்றவை உண்டாகும்.
125. சீத்தாப்பழம்
உடல் குளிர்ச்சி பெறும். கபம் உண்டாகும். சோம்பலைத் தரும்.
126. சீந்தில் கிழங்கு
விஷக்கடிகள் மறையும். நல்ல பசி உண்டாகும். பித்தம் தணியும். மேக நோய்கள் தீரும்.
127. சீர்கம்
பித்தம் தணியும். உடலை செழுமையாக்கும். ரத்த அழுத்தம் சீராகும். ஜீரண சக்தியை உண்டாக்கும். மன அமைதி தரும்.
128. சீனக்காரம்
பல்வலி, கண்ணோய், வாய்வு, வயிற்றுவலி ஆகியன தீரும்.
129. சுக்கு
சளி, இருமல் தீரும். பித்தம் நீங்கும். ஜீரண சக்தி உண்டாகும். வாத நோய்கள் மறையும்.
130. சுண்டைக்காய்
வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். குடல்நோய்கள் தீரும்.
131. சுரைக்காய்
உஷ்ணம் தணியும். உடம்பில் நீர்சுரப்பு, இதயநோய், ருசியின்மை ஆகியன உண்டாகும்.
132. சுளுக்கு நாயகம்
காய்ச்சல் நீங்கும். கை, கால்களில் உண்டாகும் சுளுக்கு, ரத்தக்கட்டு ஆகியன மறையும்.
133. சூரியகாந்தி
உஷ்ணம் தணிக்கும். உடல் வலிவு தரும். கபம் மறையும் கண்ணொளி உண்டாகும்.
134. செம்பருத்திப்பூ
இதய நோய், ரத்த அழுத்தம், நுரையீரல் நோய்கள், அதிக கொழுப்பு ஆகியன நீங்கும்.குடற்புண் ஆறும்.
135. செருப்படை
மேக நோய்கள், படை, சோரியாஸிஸ், காசநோய்கள், எலும்பு சுரம் ஆகியன நீங்கும்.
136. செவ்விளநீர்
பித்தம், உடல் தளர்வு, தாகம், காசநோய் ஆகியன தீரும்.
137. தகரைவித்து
வண்டுகடி, படை, சொறி, நமைச்சல் போன்றவை நீங்கும்.
138. தக்கோலம்
ரத்த சோகை, காய்ச்சல் நீங்கும். உடல் வலிமை, தாதுபுஷ்டி உண்டாகும்
139. தண்ணீர்விட்டான் கிழங்கு
விந்து கட்டும். ஆண்மை பெருகும். உடலுறவு இன்பம் உண்டாகும். பெண்களுக்கு இச்சையை உண்டாக்கும்.
140. தரா இலை
புண், படை, கட்டிகள், கண் புகைச்சல், மாதவிடாய்க் கோளாறுகள் மறையும். பெண்களுக்குப் பாலும் உண்டாகும்.
141. தருப்பைப் புல்
சகல தோஷங்களும் போகும். அரிப்பு, விஷக்கடி, காய்ச்சல் ஆகியன நீங்கும். வேள்விக்காகும்.
142. தலைச்சுருளிப் பூண்டு
பெருவயிறு, குஷ்டம், இதயநோய் மறையும்.
143. தழுதாழை
வாத நோய்கள், பித்த நோய்கள், உடல் மெலிவு ஆகியன தீரும்.
144. தாமரைப் பூ
இதயநோய் நீங்கும். மன அமைதி உண்டாகும். நல்ல தூக்கம் தரும். ரத்த அழுத்தம், குடற்புண் ஆகியன குணமாகும்.
145. தாளிசபத்திரி
சளி, இருமல், ஒற்றைத்தலைவலி, ஆஸ்துமா, காசநோய் ஆகியன தீரும்.
146. தான்றிக்காய்
மூலநோய்கள், கண்ணோய், பித்தம், குடற்புண் ஆகியன குணமாகும். உடலுக்கு வலிமை தரும்.
147. திப்பிலி
சளி, காசம், ஆஸ்துமா ஆகியன குணமாகும். நல்ல பசி உண்டாகும்.
148. திருநீற்றுப் பச்சிலை
தோல்நோய்கள், வண்டுகடி, தீரும். சளிக்கட்டு உடையும். ஒற்றைத் தலைவலிக்கு நன்மருந்து.
149. துத்தி
உஷ்ணம் தணிக்கும். உடல் தேற்றும். மூலம், சீழ் ரத்த மூலங்கள் ஆகியவற்றைக் குணமாக்கும். ஆசனகடுப்பு, கட்டிகள் மறையும்.
150. தும்பை இலை
சளி, சைனஸ், காசம், ஆஸ்துமா நீங்கும். சகல விஷமும் தீரும்.
151. துவரம் பருப்பு
வாதம் நீங்கும், உடல் வலிமை தரும்.
152. துளசிவிதை
கபம் தணியும். ருசியின்மை நீங்கும்.
153. தூதுவளை
மார்புச்சளி, இரைப்பு நோய், காசநோய், நுரையீரல் நோய்கள், இருமல் ஆகியன நீங்கும். நல்ல பசியை உண்டாக்கும்.
154. தென்னம்பூ
வாய்ப்புண், குடற்புண், அதிக உதிரப் போக்கு, வெள்ளைப் படுதல், மேக நோய்கள், சர்க்கரை நோய் ஆகியன குணமாகும்.
155. தேங்காய்
உடல் அழகு தரும். உடல் வலி மை தரும். புண் ஆற்றும். தோல் நோய்கள் தீர்க்கும். உடலைப் பேணிப் பாதுகாக்கும்.
156. தேயிலை
உஷ்ணத்தைத் தரும். சுத்த ரத்தம் உண்டாகும். உதிரப்போக்கை நிறுத்தும். நரம்புகளுக்குப் புத்துணர்வு தரும்.
157. தேற்றான்கொட்டை
இளைத்த உடலைத் தேற்றும். சளி, இருமல், காசநோய் மறையும். சர்க்கரை வியாதியைப் போக்கும்.
158. நண்டுக்கல்
இதன் பற்பத்தினால் கல் லடைப்பு, நீரடைப்பு, சிறுநீரக நோய்கள் ஆகியன தீரும்.
159. நந்தியாவட்டபூ
கண்காசம், கண்படலம், கருவிழி நோய், தலைநோய் ஆகியன தீரும்.
160. நரிவெங்காயம்
உடலில் ஏற்படும் விஷக்கழிவுகளை நீக்கும். இரைப்பு,மூலநோய் ஆகியன தீரும்.
161. நெருஞ்சில்
கல்லடைப்பு, நீரடைப்பு, வெள்ளைப்படுதல், விந்துக் குறைபாடுகள், உடல் பலவீனம் ஆகியன தீரும்.
162. நல்வேளை
தலைவலி, மார்பு நோய்கள், வாதநோய்கள், ரத்தசோகை ஆகியன தீரும்.
163. நவஷாரம்
உடல் பருமன், வயிற்றுவலி, கல்லடைப்பு, வாதநோய்கள், தேள்விஷம் ஆகியன நீங்கும்.
164. நன்னாரி
வெறிநாய், விஷக்கடி, ஜலதோஷம், பித்தம், தாகம், வெட்டைச்சூடு, சர்க்கரை நோய்,
புண், காய்ச்சல் தீரும்.
165. நாயுருவி
காரம், கசப்புமுள்ள நாயுருவி வேரால் வசியம் உண்டாகும். இலையால் மூலநோய், பேதி, வியர்வை ஆகியன நீங்கும் மாதவிடாய்க் கோளாறுகள் தீரும்.
166. நாய்க்கடுகு
சூதக வாய்வு, ரத்த வாதம் ஆகியன குணமாகும். இதன் விதையை அரைத்து குதிகால் வலிக்கு பற்றிட குணமாகும்.
167. நார்த்தங்காய்
வாதநோய்கள், வயிற்றுக் கோளாறுகள் கிருமிநோய் ஆகியன நீங்கும். தேக சுத்தம், பசி தீபனம் உண்டாகும்.
168. நாவல்பழம்
சர்க்கரை நோய் கட்டுப்படும். வாயுக்கோளாறுகள் , வயிற்றுக்கடுப்பு, ரத்த அழுத்தம், தாகம் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படும். உடலுக்கு மந்தம் அரிப்பினைத் தரும்.
169. நிலாவரை
வாத நோய்கள், வாயுக்கோளாறு கள், மலச்சிக்கல், மூலநோய்கள், உடல்பருமன், கிருமிநோய்கள் அனைத்தும் நீங்கும்.
170. நிலப்பனங்கிழங்கு
மேக உஷ்ணம், வெண்குஷ்டம்,மேக நோய்கள், கரும்புள்ளி ஆகியன தீரும். விந்துவை போஷித்து உயிரணுக்களை அதிகப்படுத்தி மிகுந்த ஆண்மையை உண்டாக்கும்.
171. நிலவேம்பு
வாதசுரம், தலைபாரம், விஷக் கடிகள், பித்த மயக்கம், கிருமி நோய்கள், தேமல் ஆகியன நீங்கும்.
172. நீரடி முத்து
கிரந்தி, குஷ்டம், வாதநோய்கள் படை, நமைச்சல் நீங்கும். பித்தம், உஷ்ணம் போன்றவை உண்டாகும்.
173. நீர்முள்ளி வித்து
மேக நோய்கள், உடலில் நீர்சுரப்பு, உடல்பலவீனம் ஆகியன நீங்கும். விந்தினை கட்டுப்படுத்தும். போகம் நீட்டிக்கும். ஆண்குறி எழுச்சியை அதிகப்படுத்தும்.
174. நுணா மரம் பரு
இதுவே 'மஞ்சணத்தி' மரம் எனப்படும். இதன் பட்டைக்கு கரப்பான், காய்ச்சல், புண், கிரந்தி ஆகியன தீரும். இதன் இலைக்கு மந்தம், மேகநோய்கள் குணமாகும். உடலுக்குத் தேஜஸ் உண்டாகும்.
175. நெல்லிக்கனி
வாந்தி, பித்தம், தலைச்சுற்றல், மயக்கம், வாய்ப்புண், வயிற்றுப் புண், ருசியின்மை , பசியின்மை , உடல் பலவீனம், சர்க்கரை நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
176. பசலைக்கீரை
நீர்க்கடுப்பு, நீரடைப்பு, மேக நோய்கள் ஆகியன குணமாகும்.
177. பசும்பால்
அனைத்து நோய்களையும் போக்கும் அனுபான மருந்தாகும். பாலகர் முதல் கிழவர் வரை அனைவருக்கும் ஏற்றது.
178. கிச்சிலிக்கிழங்கு
நீர் வடியும் புண்கள், விஷக்கடிகள், கபம் ஆகியன நீங்கும். உடலுக்கு அழகுதரும்.
179. பச்சைக்கற்பூரம்
வாதம், வலி, மேக நோய்கள், கபம் நீங்கும்.
180. பச்சைவிலாமிச்சை வேர்
தாகம், குஷ்டம், உஷ்ணம், திரிதோஷம் ஆகியன நீங்கும். எலும்பு மஜ்ஜையைப் போஷிக்கும். உடல் அழகு உண்டாகும்.
181. பருப்புக்கீரை
பித்தம் நீங்கும். உஷ்ணம் தணியும்.
182. பலாப்பழம்
வாதம், கபம், பித்தம், படை, சொறி, மேகநோய்கள் ஆகியன உண்டாகும்.
183. பவளம்
இதன் பற்பத்தினால், வெட்டைச் சூடு, மேகநோய்கள், கண்ணோய், உடல் பலவீனம், ஆண்மைக்குறைவு, ஈளை, இருமல், ஆஸ்துமா போன்றவை குணமடையும்.
184. பறங்கிக்காய்
உஷ்ண நோய், பித்தம் ஆகியன நீங்கும். நல்லபசி உண்டாகும். கபத்தை உற்பத்தி செய்யும்.
185. பறங்கிப்பட்டை
வாதநோய்கள், தாதுநஷ்டம்,புண், பிளவை, மேகநோய்கள், மூலநோய்கள், குஷ்டம், கபம், வாந்திநோய், முகப்பரு, தேமல், விஷக்கடிகள், சோரியாஸிஸ் என்னும் கொடிய தோல்நோய் ஆகியன நீங்கும்.
186. பற்பாடகம்
சகல சுரங்களும் நீங்கும். பித்தம் தணியும். கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
187. பனங்குருத்து
ரத்தப்போக்கு, வயிற்று நோய்,நீர்க்கட்டு ஆகியன நீங்கும். உடல் வலிமை உண்டாகும்.
188. பாகற்காய்
காய்ச்சல், மேகநோய்கள், காசநோய், இரைப்பு நோய், மூலம், குஷ்டம், கிருமி பரவுதல் ஆகியன நீங்கும்.
189. பால் சொறிக்கீரை
வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல், சீதபேதி, ரத்தப்போக்கு ஆகியன நீங்கும்.
190. பிண்ணாக்கு கீரை
மலச்சிக்கல்,நீரடைப்பு, மேகநோய், உஷ்ணம், வெட்டை நோய் போன்றவை குணமாகும்.வாதம், கரப்பான் உண்டாகும்.
191. பிரண்டை
உடலுக்கு வலிமை தரும். குடற்புண், உடல் பருமன் ஆகியன நீங்கும். எலும்புக்கு வலி மை தரும். மாதவிடாய்க் கோளாறுகள், சூதகவலி ஆகியன
நீங்கும்.
192. பிளப்பு சீரகம்
பித்தம் தணியும். வாதம் நீங்கும். உடலுக்கு அழகு தரும்.
193. புங்கமர வேர்
வாதக்கடுப்பு, மயக்கநோய், காய்ச்சல், வாதகுன்மம், அதிக ரத்தப்போக்கு என சகல விஷக்கடிகளும் நீங்கும்.
194. புத்திரசீவிவிதை
மூல நோய்கள், உஷ்ணம், வெட்டைநோய், மேகநோய், வயிற்றுப் பொருமல், தாகம் ஆகியன நீங்கும். மிகு போகம் விளைவித்து, புத்திரப்பேற்றை உண்டாக்கும்.
195. புளிய இலை
புண் ஆறும். நீர்க்கட்டு உடையும்.கண்ணோய்த் தீரும்.
196. பூசணி விதை
குளிர்ச்சி தரும். நீர்க்கட்டைஉடைக்கும். வெள்ளை, வெட்டை நீங்கும்.
197. பூனைக்காலி விதை
வாத நோய்கள், நரம்பு நோய்கள்,மூளையைச் சார்ந்த நோய்கள் ஆண்மைக்குறைவு ஆகியன குணமாகும்.
198. பெருங்கட்டுக்கொடி
அதிக ரத்தப்போக்கு, பேதியை விந்துவை கட்டுப்படுத்தும்.
199. பெருங்காயம்
விஷக்கடிகள், வாதநோய்கள், மார்பு நோய்கள், அஷ்டகுன்மம், உடல் பருமன், கருப்பை நோய்கள் தீரும்.
200. பெருஞ்சீரகம்
ஜீரணசக்தி தரும். மயக்கம் தீரும். பித்தம் தணியும். உடலழகு தரும்.
குறிப்பு: இங்கு கூறப்பட்டுள்ள மூலிகைகள் மற்றும் பதார்த்தங்களின் அடிப்படையில் சுயசிகிச்சை மேற்கொள்ள விரும்பினால் சித்த மருத்துவரின் தகுந்த ஆலோசனையுடன் மேற்கொள்ள வேண்டுகிறேன்.
மருத்துவ குறிப்புகள் : 100 பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 2 - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : 100 Medicinal Herbs and their Uses - Part 2 - Medicine Tips in Tamil [ Medicine ]