100 பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 3

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

100 Medicinal Herbs and their Uses - Part 3 - Medicine Tips in Tamil

100 பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 3 | 100 Medicinal Herbs and their Uses - Part 3

சில பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 2 [ 100 மூலிகைகள் ]

சில பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும்

பகுதி 3  [ 100 மூலிகைகள் ]

 

 201. பேதிக்கிழங்கு

 பேதியை உண்டாக்கும். குடலை சுத்தம் செய்யும். தாது புஷ்டியை உண்டாக்கும்.

202. பேராமுட்டிவேர்

 தாகம் தணியும். சகல சுரங்களும் தீரும்.

203. பொடுதலை

உஷ்ணம், குடற்புண், மூல நோய்கள், ரத்தப்போக்கு ஆகியன நீங்கும். கட்டிகள் கரையும். நீரிழிவு நீங்கும்.

 204. பொற்சீந்தில் கிழங்கு

 சர்க்கரை நோய், காசநோய், இளைப்பு, ரத்த பித்தம், காய்ச்சல் போன்றவை தீரும். மேனி அழகு பெறும்.

205. பொன்னாங்கண்ணி

 கண்பார்வையை கூர்மையாக்கும்.உடல் வலிமை பெறும். தலைமுடி வளரும். அனைத்து வியாதிகளுக்கும் ஏற்றது.

206. பொன்னாவாரை

 உடல் பருமன், மலச்சிக்கல்,கிருமிநோய், தோல்நோய்கள், குஷ்டம் ஆகியன தீரும்.

 207. மகிழம்பூ

குளிர்ச்சி தரும். குடற்புண், மூலம் ஆகியன நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.

 208. மஞ்சள் கிழங்கு

உடல் நாற்றம், வாந்தி, பித்த தோஷம், கபம், தலைவலி, தலைபாரம்,

மேகநோய், வீக்கம், விஷகடி ஆகியன தீரும். புருஷவசியம் உண்டாகும்.

209. மணத்தக்காளிகீரை

 உஷ்ணம், குடற்புண், வாய்புண், தொண்டைப்புண், மூட்டுவலி, தோல்நோய்கள் ஆகியன தீரும்

 210. மந்தாரப்பூ

உடலுக்குக் குளிர்ச்சி தரும். வசியம் உண்டாகும். கண் குளிர்ச்சி பெறும்.

211. மயிர்மாணிக்கம்

மேகநோய்கள், வெள்ளைப்படுதல், காசநோய் போன்றவற்றை நீக்கும். புண்கள் ஆறும்.

 212. மரக்காரைப்பழம்

 காய்ச்சல், வயிற்றுப் பொருமல், மயக்கம், ரத்தப்போக்கு ஆகிய வற்றைக் குணப்படுத்தும். நல்ல அறிவு உண்டாகும்.

213. மருக்கொழுந்து

கண்பார்வைக் கோளாறுகள், கபநோய், உஷ்ணம், பசியின்மை , உடல் பலவீனம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

214. மருள்கிழங்கு

 தொண்டையைப்பற்றிய வியாதிகள், கபம், உடல்பருமன், பல் வீக்கம், மூலநோய்கள், பசியின்மை ஆகியன தீரும்.

 215. மருத மரம்

இலைக்கு மூல நோய்களும் பட்டைக்கு சர்க்கரை நோயும் இதய நோயும் குணமாகும். உடலைத் தேற்றும்.

 216. மலைத்தேன்

கபம், இருமல், விக்கல், வெப்பம், பசியின்மை ஆகியன நீங்கும்.

217. மலை வேம்பு

இதன் இலையால் புத்திரப்பேறு உண்டாகும். மலட்டுப்புழு சாகும்.

218. மல்லிகைப்பூ

வெப்பம் தணியும். லட்சுமி வசியம் உண்டாகும். சிற்றின்ப இச்சையை அதிகப்படுத்தும்.

 219. மாங்காய்

தாதுநஷ்டம், வாதம், பசியின்மை போன்றவை உண்டாகும்.

220. மாங்கொட்டை பருப்பு

 குடற்புண், ரத்தப்போக்கு, சர்க்கரைவியாதி, வயிற்றுவலி ஆகியன தீரும்.

221. மாசிக்காய்

வாய்ப்புண், ரத்தப்போக்கு, சிறார்களுக்கு உண்டாகும் கணைநோய் ஆகியன தீரும். மேக நோய்களையும் குணமாக்கும்.

222. மாதுளம்பழம்

 தாகம், பித்தம், மலட்டு நோய்கள், கசப்பு, வாந்தி, விக்கல், நெஞ்செரிவு, காதடைப்பு, மயக்கம் போன்றவை தீரும்.உடலுக்குக் குளிர்ச்சி தரும்.

223. மாதுளம்பூ

வாந்தி, பித்ததோஷம், மூலக் கடுப்பு, ரத்த மூலம் போன்றவை குணமாகும். ரத்த விருத்தி உண்டாகி உடல் பலமடையும்.

 224. மிசரிப்பருப்பு

 விந்துகட்டும். சிற்றின்பத்தை நீட்டிக்கச் செய்யும்.

 225. மிதிபாகற்காய்

 பித்தம், தோல்நோய்களை உண்டாக்கும். பாஷாணங்களை முறிக்கும்.

226. மிளகரணை

கபம், அஜீரணவாதம், பித்த சூலை, ஈளை, இருமல், இரைப்பு, சைனஸ் ஆகியன தீரும்.

 227. மிளகு

கபசுரம், உடல்பருமன், குன்மம், வாதம், ருசியின்மை , மூலம், காசம், மேகநோய்கள், காமாலை ஆகியன தீரும்.

 228. மிளகுதக்காளி இலை

 ரத்தசோகை, வாந்தி, சுழல்வாயு, மேகச்சொறி, வெட்டை நோய், உடல் உஷ்ணம் போன்றவை தீரும்.

229. முயற்காதிலை

 தலைபாரம், தலைவலி, உடலில் பிறநோய்களால் உண்டாகும் வீக்கம் ஆகியன குணமாகும்.

230. முசுட்டை

வாதம், கபம், கெட்ட நீர், மலச்சிக்கல், வறட்சி, சொறி, சிரங்கு தீரும்.

231. முசுமுசுக்கை இலை

 சளி, இருமல், இரைப்பு, காசநோய், டான்சில், தலைவலி, தலைபாரம், தும்மல், மூக்கில் நீர் கொட்டுதல், பசியின்மை ஆகியன தீரும்.

232. முடக்கற்றான்

கை, கால், இடுப்பு, கழுத்து வலி கள், பாரிசவாதம், மலச்சிக்கல், வாயுக்கோாறு, உடல்பருமன் ஆகியன குணமாகும்.

233. முத்து

இதன் பற்பத்தினால் நுரையீரல் பலமடையும். உடல் வலிமை பெறும். ஆண்மை உண்டாகும்

234. முத்துச்சிப்பி

இதன் பற்பத்தினால் மூட்டுவலி, உடல் பலவீனம், வெட்டை , வெள்ளைப்படுதல் ஆகியன தீரும்.

235. முந்திரிப்பருப்பு

அபாரமாக விந்தினை உற்பத்தி செய்யும். போகம் நீட்டிக்கும். இனிப்பு நோய், பித்தவாய்வு உண்டாகும்.

236. முருங்கைப்பட்டை

கபம், ஜன்னிசுரம், வாய்வு, சகல விஷங்களும் தீரும்.

237. முருங்கைப்பிசின்

நீரிழிவு, வாய்வு நீங்கும். விந்து கட்டியாகும். மேனி அழகு உண்டாகும்

238. முருங்கை இலை

கபம், தலைபாரம், சைனஸ், தொண்டைச்சதை வளர்ச்சி, குத்திருமல் ஆகியன நீங்கும்.

239. முருங்கைப்பூ

ஆண்களின் உயிரணுக்களை அதிகப்படுத்தும். பெண்களின் கருப்பையை சுத்தமாக்கும்.

240. முருங்கைவித்து

ஆண்மைக்குறைவை நீக்கும். உடலுறவில் விருப்பமின்மை நீங்கும். உடல் பலமடையும்

241. முல்லைப்பூ

உடல் உஷ்ணம் நீங்கும். கவர்ச்சி தரும். கண்குளிர்ச்சி உண்டாகும்.

242. முளைக்கீரை

 காசநோய் தீரும். நல்ல பசியுண்டாகும்.

 243. முள்ளங்கி கிழங்கு

 வாதம், படை, கபம், தலைநோய், பல்நோய், இரைப்பு, மூலக்கடுப்பு ஆகியன தீரும்.

 244. முள்ளங்கி இலை

 வாய்வு, பித்தம், கிருமிநோய், நெஞ்செறிவு, வயிற்றுவலி ஆகியன தீரும்.

 245. முள்ளிக்கீரை

 நீர் பெருக்கும். உடல் சூட்டை உண்டாக்கும். தங்கத்தைப் பஸ்பமாக்கும்.

246. மூக்கிரட்டை

சீதம், நமைச்சல், வாதநோய் ஆகியன நீங்கும். பேதி, பித்தம் உண்டாகும்.

247. மூங்கில் இலை

 குடல்நோய்கள், வயிற்றுவலி, ரத்தநோய், சூதகக்கட்டு ஆகியன நீங்கும்.

 248. மூங்கிலரிசி

ரத்தபித்தம், காய்ச்சல், கண்ணோய் ஆகியன நீங்கும்.

249. மெருகன் கிழங்கு

மேகநோய்கள், வயிற்றுவலி, மூலம், ஈளை, அஸ்தி சுரம், தேகக்குளிர்ச்சி போன்றவை உண்டாகும்.

 250. மொச்சைக்கொட்டை

 வாதம், பித்தம், கபம், வாய்வு போன்றவற்றை உண்டாக்கும்.

 251. யானைத்திப்பிலி

 சளி, இருமல், மூக்கடைப்பு, தும்மல், இரைப்பு நோய் ஆகியன தீரும்.

 252. யானை நெருஞ்சில்

 வெள்ளை , வெட்டைச்சூடு, மூத்திரக் கோளறுகள் , உடல்பருமன் ஆகியன தீரும்.

253. லவங்கப்பட்டை

 காமத்தைப் பெருக்கும். நல்ல பசியை உண்டாக்கும்.

 254. லவங்கப்பத்திரி

 அஜீரணம், பெருவயிறு, உடல் பருமன், மலக்கட்டு ஆகியன நீங்கும்.

 255. வரிக்குமட்டி இலை

 விஷம் நீங்கும். ரத்த பித்தம் தணியும்.

 256. வலம்புரிக்காய்

 கண்நோய், செவிநோய், குளிர், மேகநோய், சகல தோஷங்கள் போன்றவை நீங்கும்.

257. வல்லாரை

நினைவாற்றல் தரும். நரம்பு களுக்கு வலிமை தரும். இதயநோய், ரத்த அழுத்தம் குணமாகும்.

 258. வளையலுப்பு

குடல்வாதம், மூச்சிரைப்பு, வயிற்றுவலி, உடல் உஷ்ணம் ஆகியன தீரும்.

259. வள்ளைக்கீரை

 வாய்வினை நீக்கும். தாய்ப்பால் அதிகரிக்கும்.

 260. வன்னி மரம்

வாதம், ஜன்னி, கபம், நமைச்சல் போன்றவை குணமாகும். உஷ்ணம் உண்டாகும்.

 261. வாகைப்பிசின்

 மேகநோய்கள், கிரந்தி, கட்டிகள் போன்றவற்றை நீக்கும். மேனி அழகு உண்டாகும்.

262. வாகைப்பூ

விஷக்கடிகள், கபம் ஆகியன நீங்கும். பக்கவாதம் குணமாகும்.

263. வாசனைப்புல்

 வாதபித்தம், காய்ச்சல், கபம் போன்றவை குணமாகும். நல்ல பசியுண்டாகும்.

264. வாதுமை பருப்பு

 உடலைத் தேற்றும். உடலுறவை ஊக்குவிக்கும். உடல் பலமடையும்.

265. வாய்விளங்கம்

வாய்வு, மலச்சிக்கல், தலைவலி, பல்வலி, உடல்பருமன், பெரு வயிறு ஆகியவற்றை குணப்படுத்தும்.

266. வாலுழுவை அரிசி

 வயிற்றுக்கடுப்பு, வலி, மனநலக்கோளாறுகள், காசநோய், மலக்கட்டு ஆகியன தீரும்.

267. வாலேந்திர போளம்

 காசநோய், சொறி, கரப்பான், வயிற்றுவலி போன்றவை குணமாகும்.

268. வால்மிளகு

வாதகபம், காய்ச்சல், மேகநோய் ஆகியன குணமாகும். பசியை உண்டாக்கும்.

269. வாழைப்பூ

ரத்த மூலம், வெட்டை , பித்தம், வயிற்றுக்கடுப்பு, கைகால் எரிச் சல், ஆண்மைக்குறைவு ஆகியன தீரும்.

270. வாழைப்பிஞ்சு

 ரத்த மூலம், நீரிழிவு, குடற்புண், வயிற்றுக்கடுப்பு ஆகியன நீங்கும்.

 271. வாழைப்பழம்

 பித்தநோய், மயக்கம் போன்றவைத் தீரும்

 272. விடத்தேர்

ரத்தமூலம், முளை மூலம்குணமாகும்.

 273. வில்வமரவேர்

 குன்ம வாயு, கபம், பித்தம், நீரேற்றம், ஜன்னி, வலி, விக்கல், பித்த சுரம், போன்றவை நீங்கும். அழகுடன் உடல் வலிமையும் உண்டாகும்.

274. விழுதியிலை

கரப்பான், வெண்குஷ்டம், கிருமிநோய் போன்றவற்றை குணப்படுத்தும். பேதியை உண்டாக்கும்.

275. விளாம்பிசின்

 வெள்ளைப்படுதல், அதிக ரத்தப் போக்கு, நீரிழிவு ஆகியன நீங்கும்.

276, விளாம்பழம்

ஈளை, இருமல், கபம், உஷ்ணம், தாகம் ஆகியன நீங்கும். நல்ல பசி உண்டாகும்.

 277. விஷ்ணு கிரந்தி

 படை, சொறி, கரப்பான், வாதநோய் ஆகியன நீங்கும்.

278. வெங்காய கிழங்கு

 வெப்பம், மூலம், இரத்தபித்தம், தாகம், வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

279. வெங்காயப்பூ

 - வயிற்றுநோய், வாதவலி தீரும்.

 280. வெடியுப்பு

நீர்க்கட்டு, சூதகவாய்வு, கல்லடைப்பு, பெருவயிறு, கபம் ஆகியன நீங்கும்.

281. வெங்காரம்

வெள்ளைப்படுதல், உஷ்ண நோய், இருமல் மலக்கட்டு போன்றவை குணமாகும்.

282. வெட்டிவேர்

 தாகம், காமாலை, குஷ்டம், தலைநோய், விந்து நஷ்டம், புண்கள், கண்ணோய், மேகக் கட்டி போன்றவற்றைக் குணப்படுத்தும்.

 283. வெட்சிப்பூ

காய்ச்சல், தாகம், இளைப்பு ஆகியன நீங்கும். மிகுந்த வாசனை தரும்.

 284. வெட்பாலை இலை

 மேகநோய்கள், காசநோய்கள், கபம் ஆகியன தணியும். 'சோரியாஸிஸ்' எனப்படும் செதில் நோய் இதனால் குணப்படும்.

 285. வெட்பாலை அரிசி

 பித்தம், வாதம், கரப்பான், குடல்வாதம், வயிற்று உப்புசம் போன்றவைத் தீரும்.

286. வெண்சிவதை வேர்

 பித்தம், வயிற்றுக்கிருமிகள் ஒழியும். பேதியை உண்டாக்கும்.

 287. வெண்டைக்காய்

 குளிர்ச்சி தரும். நரம்புகளைப் பலப்படுத்தும். புண் ஆற்றும்.

 288. வெதுப்படக்கி இலை

 சீதம், காய்ச்சல், வாதம், உட்காய்ச்சல் ஆகியன தீரும்.

 289. வெந்தயம்

 பேதி, சீதக்கழிச்சல், மேகம், தாகம், இருமல் ஆகியன நீங்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும். போகம் உண்டாக்கும்.

290. வெந்தயக்கீரை

 வயிற்றுபொருமல், வாய்வு, கபம், ருசியின்மை போன்றவை தீரும்.

291. வெள்ளரிக்காய்

 கரப்பான், நமைச்சல், நீர்க்கடுப்பு போன்றவற்றைக் குணப்படுத்தும். நல்ல பசி உண்டாகும்.

 292. வெள்ள ருகு

குன்மம், வாய்வு, குடல்வாதம், கிரந்தி, சொறி, சிரங்கு ஆகியன தீரும்.

293. வெள்ளை குங்கிலியம்

 புண்கள், தொப்புளில் உண்டாகும் புண்கள், மேகநோய்கள், மூட்டுவலி ஆகியன தீரும்.

 294. வெண்தாமரைப்பூ

 இதய நோய், இரத்த அழுத்தம், உஷ்ண நோய், மனஉளைச்சல், மயக்கம், பித்தம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

295. வெள்ளைப்பூண்டு

 கொழுப்பினை கரைக்கும். இரத்த அழுத்தம், பசியின்மை வயிற்றுப்பொருமல் ஆகியன நீங்கும்.

 296. வெள்ளை மிளகு

வாதகபம், காய்ச்சல், மேகநோய்கள் தீரும். நல்லபசியை உண்டாக்கும்.

 297. வேங்கைமரம்

குத்திருமல், வெட்டைச்சூடு, புண், மலச்சிக்கல் ஆகியன தீரும். கண்பார்வை கூர்மையாகும்.

 298. வேப்பிலை

கிருமி, குஷ்டம், விஷக்கடிகள், காய்ச்சல், நீரிழிவு, உடல்பருமன் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

 299. வேப்பம்பூ

வயிற்று நோய்கள், கட்டிகள், தோல்நோய்கள் ஆகியன தீரும்.

 300. வேளைப்பூ

வாதம், கபம், காய்ச்சல் போன்றவை தீரும். பசியை உண்டாக்கும்.

 

குறிப்பு: இங்கு கூறப்பட்டுள்ள மூலிகைகள் மற்றும் பதார்த்தங்களின் அடிப்படையில் சுயசிகிச்சை மேற்கொள்ள விரும்பினால் சித்த மருத்துவரின் தகுந்த ஆலோசனையுடன் மேற்கொள்ள வேண்டுகிறேன்.

 

மருத்துவ குறிப்புகள் : 100 பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 3 - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : 100 Medicinal Herbs and their Uses - Part 3 - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்