சோழநாட்டுத் திருப்பதிகள் - 40, நடுநாட்டுத் திருப்பதிகள் - 2, தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22, வடநாட்டுத் திருப்பதிகள் - 11, மலைநாட்டுத் திருப்பதிகள் - 13, நவதிருப்பதி
108 திவ்விய தேசம் பற்றிய முழு விவரங்கள்
1) ஸ்ரீ ரங்கம்
ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களிலே முதன்மையானதாக
"கோயில்" இக்கோயில் திருச்சி - விழுப்புரம் கார்டுலைனில் உள்ள
ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது.
திருச்சியிலிருந்து டவுண் பஸ்ஸில் சென்றால் கோயில் தெற்குக்கோபுர வாசலிலேயே
இறங்கலாம்.
மூலவர் : ஸ்ரீ ரங்கநாத பெருமாள் (ஆதிசேஷ சயனத் திருக்கோலம்)
2) திருக்கோழி (உறையூர்)
இது திருச்சி முனிஸிபாலிடியிலேயே ஒரு பகுதி. டவுண் ஜங்ஷன்- மெயின்
கார்டுகேட் மார்க்கத்தில் உறையூர் என்ற இடத்தில் இறங்கலாம். திருச்சி
ஜங்ஷனிலிருந்து 3
கி.மீ. தூரம்த்தில் உள்ளது.
மூலவர் : அழகிய மணவாளப் பொருமாள், நின்ற திருக்கோலம்.
3) திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்)
இது திருச்சி அருகில் கார்டுலைனில் உள்ள ஒரு சிறிய ஸ்டேஷன்
ஸ்ரீரங்கத்திலிருந்து வடக்கே 3/4 கி.மீ. திருச்சியிலிருந்தும், ஸ்ரீரங்கத்திலிருந்தும்
திருவெள்ளறை போகும் பஸ் வழியில் இங்கு இறங்கலாம்.
மூலவர் : புருஷோத்தமன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
4) திருவெள்ளறை (வேதகிரி, ச்வேதகிரி)
திருச்சியிலிருந்து துறையூர் போகும் பஸ் பாதையில் சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது.
மூலவர் : புண்டரீகாக்ஷன், செந்தாமரைக் கண்ணன் நின்ற திருக்கோலம்
5) திருஅன்பில் (அன்பில்)
திருச்சி - கல்லணை, கும்பகோணம் பஸ் மார்க்கத்தில் உள்ளது. திருச்சிக்கு அருகே
உள்ள லால்குடியிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது.
மூலவர் : வடிவழகிய நம்பி, புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
6) திருப்பேர் நகர் (கோயிலடி, அப்பக்குடத்தான்)
அன்பிலில் இருந்து கொள்ளிடத்திற்கு அக்கரையில் 5 கி.மீ தூரத்தில் உள்ளது. தோஹுர் - திருக்காட்டுப்பள்ளி -
தஞ்சை பஸ்ஸிலும் சென்று வரலாம்.
மூலவர் : அப்பக்குட்த்தான், அப்பாலா ரெங்கநாதன்
7) ஸ்ரீ
ரங்கம்
தஞ்சையிலிருந்து வடக்கே திருவையாறு செல்லும் பஸ்ஸில் 9 - 10 கி.மீ தூரத்தில் உள்ளது. டவுன் பஸ் வசதி உள்ளது.
மூலவர் : ஹரசாபவிமோசனப் பெருமாள், நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்
8) திருக்கூடலூர் (ஆடுதுறைப் பெருமாள் கோயில்]
தஞ்சாவூரிலிருந்து பஸ் மார்க்கமாய் திருவையாறு சென்று
அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பஸ்ஸில் 11 கி.மீ தூரம் சென்று இவ்வூரை அடையலாம்.
மூலவர் :
வையங்காத்த பெருமாள், உய்யவந்தார்,
நின்ற திருக்கோலம்,
9) திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)
பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வண்டியில் வரலாம். கும்பகோணத்திலிருந்து
திருவையாறு பஸ்ஸில் வரலாம்.
மூலவர் : கஜேந்த்ர வரதன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்
10) திருப்புள்ளம்பூதங்குடி [புள்ளபூதங்குடி)
கும்பகோணத்திலிருந்து சுவாமி மலை வழியாக திருவைகாவூர் செல்லும்
டவுண் பஸ் பாதையில் சுவாமிமலைக்கப்பால் 45 கி.மீ தூரத்தில் உள்ளது.
மூலவர் : வல்வில் ராமன், கிழக்கே திருமுக மண்டலம்
11) திரு ஆதனூர்
சுவாமிமலையிலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு வசதிகள் எதுவும் இல்லை.
மூலவர் : ஆண்டளக்குமையன், கிழக்கே திருமுக மண்டலம்
12) திருக்குடந்தை (சாரங்கபாணி சுவாமி கோயில்)
கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இக்கோயில் சுமார் 2-3 கி.மீ தூரம். இந்த
ஊரில் ஹோட்டல், சத்திரம்
முதலிய வசதிகளும் உண்டு.
மூலவர் : சாரங்கபாணி. கிழக்கே திருமக மண்டலம்
13) திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோயில்]
தங்க வசதி உண்டு. கும்பகோணத்திலிருந்து 6-7 கி.மீ. தூரத்திலேயே இருப்பதால் அங்கேயே தங்கி காரிலோ,
பஸ்ஸிலோ இந்த சேஷத்திரத்தை ஸேவிக்கலாம்.
மூலவர் : ஒப்பிலியப்பன், கிழக்கே திருமுக மண்டலம்.
14) திருநறையூர் (நாச்சியார் கோயில்)
கும்பகோணத்திலிருந்து 9-10 கி.மீ. தூரத்திலுள்ளது. பல வெளியூர் பஸ்களிலும்
(முக்கியமாக, குடவாசல்,
திருவாரூர் வழி) போகலாம். எல்லா வசதிகளும் உண்டு.
மூலவர் : ஸ்ரீநிவாஸன், திருநறையூர் நம்பி, வாஸுதேவன் என்ற பெயர்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கே
திருமுக மண்டலம்.
15) திருச்சேறை (பஞ்சஸாரக்ஷேத்ரம்)
கோயிலில் இருந்து 10 நாச்சியார் சுமாராக கி.மீ. கும்பகோணத்திலிருந்து
தென்கிழக்கில் 24 கி.மீ
தூரத்தில் திருவாரூர் நெடுஞ்சோலையில் உள்ளது. டவுண் பஸ் மூலம் செல்லலாம். சத்திரம், ஹோட்டல்களும் உண்டு.
மூலவர் : ஸாரநாதன், நின்ற திருக்கோலம்
16) திருக்கண்ணமங்கை
திருச்சேறையிலிருந்து சுமார் 25 கி.மீ. கும்பகோணத்திலிருந்து சுமார் 40 கி.மீ.திருவாரூர் ஸ்டேஷனிலிருந்து வட மேற்கில் 6-7 கி.மீ. கும்பகோணம் - திருவாரூர் பஸ் மூலம் வரலாம்.
மூலவர் : பக்தவத்ஸலப் பெருமாள், நின்ற திருக்கோலம்.
17) திருக்கண்ணபுரம்
நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் போகும் பஸ்ஸில்
திருப்புகலூர் (திருப்புகூர்) என்ற இடத்தில் இறங்கி 2 கி.மீ. போக வேண்டும். இங்கு வசதிகள் ஒன்றும் இல்லை.
மூலவர் : நீலமேகப் பெருமாள், கிழக்கே திருமுக மண்டலம்.
18) திருக்கண்ணங்குடி
(க்ருஷ்ணாரண்ய க்ஷேத்திரம்)
திருவாரூருக்கு 14 கி.மீ கிழக்கு. பஸ் வழியாக சிக்கிலுக்கும் தீவளுருக்கும்
இடையேயுள்ள ஆழியூர் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து கி.மீ. தூரம் நடந்தோ
வண்டியிலோ செல்லலாம். இங்கு வசதிகள் ஒன்றும் இல்லை.
மூலவர் : லோகநாதன், நின்ற திருக்கோலம்,
19) திருநாகை (நாகபட்டினம்)
மாயவரத்திலிருந்து பஸ்ஸில் வந்து இறங்கினால் பஸ் நிலையத்திற்கு
எதிர்த்தெருவிலேயே சற்று தூரத்தில் அழகிய, பெரிய கோயில் உள்ளது.
மூலவர் : நீலமேகப்பெருமாள்
20) திருத்தஞ்சை மாமணிக் கோயில் [தஞ்சாவூர்]
தஞ்சாவூர் ஜங்ஷனிலிருந்து 4 கி.மீ தூரத்தில் வெண்ணாற்றங்கரையில்
உள்ளன.
1) தஞ்சை
மாமணிக்கோவில்
மூலவர் : நீலமேகப்பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம்
2) மணிக்குன்றம்
மூலவர் : மணிக்குன்றப்பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம்
3) தஞ்சையாளி
நகர்
மூலவர் : நரஸிம்மன், வீற்றிருந்த திருக்கோலம்
21) திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில், தக்ஷிண ஜகந்நாதம், ஸ்ரீனிவாஸஸ்தலம்)
கும்பகோணத்திலிருந்து பஸ்ஸில் கொருக்கை என்ற ஊருக்கு வந்து
அங்கிருந்து 2.5 கி.மீ.
தூரம் செல்ல வேண்டும். வழியில் ஒரு வாய்க்காலை கடக்க வேண்டும்.
மூலவர் : ஜகந்நாதன், வீற்றிருந்த திருக்கோலம்
22) திருவெள்ளியங்குடி
[வெள்ளியங்குடி]
கும்பகோணம் (அ) திருப்பனந்தாளிலிருந்து அணைக்கரை செல்லும்
பஸ்ஸில் சேங்கானூரில் இறங்கி 1 கி.மி. நடந்து திருவெள்ளியங்குடி செல்ல வேண்டும்.
மூலவர் : கோலவில்லி ராமன், கிழக்கே திருமுக மண்டலம்.
23 திருவழுந்தூர் (தேரழுந்தூர்)
மாயவரத்திலிருந்து தென்மேற்கே 21 கி.மீ டவுன் பஸ்ஸில் போகலாம்.
மூலவர் : தேவாதிராஜன், நின்ற திருக்கோலம்
24) திருச்சிறுபுலியூர் (சிறுபுலியூர்)
மாயவரம்-திருவாரூர் ரயில் பாதையில், கொல்லுமாங்குடி ஸ்டேஷனிலிருந்து 3 கி.மீ. மாயவரத்திலிருந்து டவுன் பஸ்ஸில் கொல்லுமாங்குடி
போகலாம். இங்கு வசதிகள் ஒன்றுமில்லை.
மூலவர் : அருள்மாகடல், புஜங்கசயனம். தெற்கே திருமுக மண்டலம்
25) திருத்தலைச் சங்க நாண்மதியம் [தலைச்சங்காடு]
மாயவரத்திலிருந்து ஆக்கூர் போய் அங்கிருந்து சீர்காழி
செல்லும் பஸ் சாலையில் 3 கி.மீ சென்று இவ்வூரை அடையலாம்.
மூலவர் : நாண்மதியப்பெருமாள். நின்ற திருக்கோலம்
26) திருஇந்தளூர் (மயிலாடு துறை, திருவிழந்தூர்)
இது மாயவரம் முனிஸிபாலிட்டியிலேயே ஒரு பகுதி. டவுண் பேருந்தில்
போகலாம். காவேரிக்கு அக்கரை.
மூலவர் : பரிமள ரங்கநாதன், வீரசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
27) திருக்காவளம்பாடி
(திருவாங்கூர்)
சென்னை - மாயூரம் ரயில் பாதையில் வைத்தீசுவரன் கோயில் ரயில்
நிலையத்திலிருந்து 8
கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இங்கு வசதிகள் இல்லை.
மூலவர் : கோபாலகிருஷ்ணன் நின்ற திருக்கோலம்
28) திருக்காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி]
சீர்காழி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 1 கி.மீ. தூரத்திலுள்ளது. பஸ்ஸில் சென்றால் கோயில் ஸந்நிதி
வாசலிலேயே இறங்கலாம்.
மூலவர் : த்ரிவிக்ரமன், நின்ற திருக்கோலம்.
29) திருஅரிமேய விண்ணகரம் [திருநாங்கூர்]
சீர்காழி ஸ்டேஷனுக்குத் தென்கிழக்கே 8 கி.மீ. தொலைவில் திருநாங்கூருக்குள்ளேயே உள்ளது.
குடமாடுகூத்தர் கோயில் என்றுதான் பலருக்குத் தெரியும்.
மூலவர் : குடமாடுகூத்தன். வீற்றிருந்த திருக்கோலம்.
30) திருவண்புருடோத்தமம் (திருநாங்கூர்)
இந்த ஸ்தலமும் சீர்காழியிலிருந்து 8 கி.மீ தூரத்தல் திருநாங்கூரிலேயே உள்ளது.
மூலவர் : புருஷோத்தமன், நின்ற திருக்கோலம்.
31) திருசெம்பொன்செய் கோயில் (திருநாங்கூர்)
இதுவும் சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் திருநாங்கூரிலேயே உள்ளது. பஸ் வசதி
உண்டு.
மூலவர்: பேரருளாளன், நின்ற திருக்கோலம்
32) திருமணிமாடக்கோயில் (திருநாங்கூர்)
சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் திருநாங்கூருக்குள்ளேயே உள்ளது.
தங்குவதற்கு ராமாநுஜகூடம் உண்டு.
மூலவர் : நாராயணன், வீற்றிருந்த திருக்கோலம்
33) திருவைகுந்த
விண்ணகரம் [திருநாங்கூர்]
சீர்காழியிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. பஸ் வசதிகள் உண்டு இதுவும்
திருநாங்கூரிலேயே உள்ளது.
மூலவர் : வைகுந்த நாதன், உபய நாச்சிமார்களும் வீற்றிருக்கின்றனர்.
34) திருவாலியும் திருநகரியும்
திருவாலி: சீர்காழி
- திருவெண்காடு பஸ் சாலையில் உள்ளது சீர்காழி ஸ்டேஷனிலிருந்து தென்கிழக்கே 8 கி.மீ திருநாங்கூரிலிருந்து இவ்வழி 5-6 கி.மீ.தான். இங்கு வசதிகள் எதுவம் இல்லை.
மூலவர் : லக்ஷ்மி ந்ருஸிம்ஹர், வீற்றிருந்த திருக்கோலம்
திருநகரி : திருவாலியில்
இருந்து சுமார் 5
கி.மீ தூரம் உள்ளது.
மூலவர் : வேதராஜன், வீற்றிருந்த திருக்கோலம்.
35) திருத்தேவனார் தொகை (கீழச்சாலை)
சீர்காழி ஸ்டேஷனிலிருந்து தென் கிழக்கே 6 கி.மீ. சீர்காழி- திருவெண்காடு பஸ் மார்க்கத்தில்
திருவாலியில் இறங்கி முக்கால் மைல் வண்டியில் வரலாம். இங்கு வசதி ஒன்றும்
கிடையாது.
மூலவர் : தெய்வநாயகன், நின்ற திருக்கோலம்
36) திருவாலியும் திருநகரியும்
சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ள திருநாங்கூருக்குள்ளேயே உள்ளது.
பள்ளிகொண்ட பெருமாள் என்றே ப்ரஸித்தம். கீழவீதியிலிருந்து மேற்கே செல்லும்
சாலையில் உள்ளது.
மூலவர் : செங்கண்மால், புஜங்கசயனத் திருக்கோலம்
37) திருமணிக்கூடம் (திருநாங்கூர்)
சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ள திருநாங்கூர் எல்லையிலிருந்து
கிழக்கே 1 கி.மீ.
தூரத்தில் உள்ளது.
மூலவர் : வரதராஜப்பெருமாள். நின்ற திருக்கோலம்.
38) திருவெள்ளக்குளம் (அண்ணன் கோயில்)
சீர்காழி ஸ்டேஷனிலிருந்து தென்கிழக்கில் 10 கி.மீ. சீர்காழி நாகை பேருந்துகள் அனைத்திலும் செல்லலாம்.
மூலவர் : ஸ்ரீநிவாஸன், நின்ற திருக்கோலம்
39) திருபார்த்தன்பள்ளி (திருநாங்கூர்)
சீர்காழியிலிருந்து 12-13 கி.மீ. தூரத்தில் உள்ளது. இடையில் சிறிய காவிரி ஆற்றைக்
கடந்து வர வேண்டும். சிறிய ஊர். வசதிகள் ஒன்றும் இல்லை.
மூலவர் : தாமரையாள் கேள்வன், நின்ற திருக்கோலம்
40) திருச்சித்ரகூடம் (சிதம்பரம்)
சென்னை - திருச்சி மெயின் லைனில் சிதம்பரம் ரயில்வே
ஸ்டேஷனிலிருந்து 2
கி.மீ. தூரத்தில் தில்லை நடராஜர் கோயிலுக்குள் உள்ளது.
மூலவர் : கோவிந்தராஜன், போகசயனம்
41) திருவஹீந்த்ரபுரம்
சென்னை - திருச்சி மெயின் லைனில் திருப்பாதிரிபுலியூர்
ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மேற்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடலூரில் தங்கியும் லேவிக்கலாம்.
மூலவர் : தெய்வநாயகன், நின்ற
திருக்கோலம்.
42) திருக்கோவலூர்
விழுப்புரம் – காட்பாடி ரயில் பாதையில் திருக்கோவலூர் ஸ்டேஷனிலிருந்து
கோயில் 3 கி.மீ
தூரத்தில் இருக்கிறது. திருவண்ணாமலையிலிருந்து 36 கி.மீ எல்லா வசதிகளும் உண்டு.
மூலவர் : த்ரிவிக்ரமன்
43) திருக்கச்சி அத்திகரி
(அத்தியூர்,
காஞ்சீபுரம்,
ஸத்யவ்ரதக்ஷேத்ரம்)
செங்கற்பட்டு - அரக்கோணம் ரயில் பாதையிலுள்ள இந்த ஸ்டேஷனை
சென்னை கடற்கரை - காஞ்சீபுரம் ரயிலில் சென்றும் அடையலாம்.
மூலவர் : வரதராஜன், நின்ற திருக்கோலம்
44) அஷ்டபுயகரம் (காஞ்சீபுரம்)
காஞ்சியிலேயே வரதராஜர் ஸந்நிதியிலிருந்து 2 கி.மீ. மேற்கே ரங்கசாமி குளத்திற்கு தெற்கே உள்ளது.
மூலவர் : ஆதிகேசவப் பெருமாள். நின்ற திருக்கோலம்
45) திருத்தண்கா (தூப்புல், காஞ்சீபுரம்)
காஞ்சியிலேயே அஷ்டபுயகரத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் மேற்கே உள்ளது.
மூலவர் : தீபப்ரகாசர், விளக்கொளிப் பெருமாள்
46) திருவேளுக்கை (காஞ்சீபுரம்)
காஞ்சீபுரத்திலேயே, அஷ்டபுயகரத்திலிருந்து 1 கி.மீ தென்மேற்கே விளக்கொளிப் பெருமாள் கோயிலுக்கு அருகில்
உள்ளது.
மூலவர் : அழ்கியசிங்கர்,
பத்மாஸந திருக்கோலம்
47) திரு நீரகம் (காஞ்சீபுரம்)
பெரிய காஞ்சீபுரத்தில் (ஊரகம் )உலகளந்த பெருமாள் கோயிலேயே உள்ளது.
உத்ஸவர் : ஜகதீச்வரர், நின்ற திருக்கோலம்.
48) திருப்பாடகம் (காஞ்சீபுரம்)
இதிலிருந்து ஒன்பது திவ்ய தேசங்கள் பெரிய காஞ்சீபுரத்தில்
உள்ளன. கங்கைகொண்டான் மண்டபத்தின் அருகில் இந்த ஸந்நிதி இருக்கிறது.
மூலவர் : பாண்டவ தூதர், வீற்றிருந்த திருக்கோலம்
49) திரு நிலாத்திங்கள் துண்டம் (காஞ்சீபுரம்)
பெரிய காஞ்சீபுரம் ஏகாம்பரேச்வரர் கோயிலில் உட்பராகாரத்தில்
மிகச் சிறிய ஸந்நிதியாக உள்ளது.
மூலவர் : நிலாத்திங்கள் துண்டத்தான்
50) திரு ஊரகம் (காஞ்சீபுரம்)
பெரிய காஞ்சீபுரத்தில் பஸ் நிலையத்திற்கு ஸமீபமாகவே உள்ளது.
மூலவர் : திரிவிக்ரமன், உலகளந்த பெருமாள், நின்ற திருக்கோலம்
51) திருவெஃகா (காஞ்சீபுரம்)
இது காஞ்சீபுரத்திலுள்ள அஷ்டபுயகரத்திலிருந்து வடக்கே தூரத்திலுள்ளது.
யதோக்தகாரி கோயில் என்று விசாரிக்கவும்,
மூலவர் : யதோக்தகாரி, சொன்னவண்ணம் செய்த பெருமாள்.
52) திருக்காரகம் (காஞ்சீபுரம்)
பெரிய காஞ்சியில் (ஊரகத்தில்) உலகளந்த பெருமாள் கோயில்
ப்ராகாரத்திலேயே உள்ளது.
மூலவர் : கருணாகரப் பெருமாள், நின்ற திருக்கோலம்
53) திருக்கார்வானம் (காஞ்சீபுரம்)
பெரிய காஞ்சியில் (ஊரகத்தில்) உலகளந்த பெருமாள் கோயில்
மேற்கு ப்ராகாரத்திலேயே ஒரு ஸந்நிதியாக உள்ளது.
மூலவர் : கார்வானர், நின்ற திருக்கோலம்
54) திருக்கள்வனூர் (காஞ்சீபுரம்)
பெரிய காஞ்சீபுரத்தில் காமாக்ஷி அம்மன் கோயிலுக்குள்,
அம்மன் கர்ப்பக்ரஹத்துக்கு வலது பக்கத்தில் இருக்கிறது.
மூலவர் : கள்வர். நின்ற திருக்கோலம்
55) திருப்பவளவண்ணம் (காஞ்சீபுரம்)
பெரிய காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயிலுக்குக் கிழக்கே
அருகிலுள்ளது. ஸந்நிதிகள் இரண்டையுமே ஒரே திவ்யஸ்தலமாகச் சேர்த்தே ஸேவிப்பது
இரண்டையுமே ஒரே திவ்யஸ்தலமாகச் சேர்த்தே ஸேவிப்பது வழக்கமாகவிருக்கிறது.
மூலவர் : பவளவண்ணன். நின்ற திருக்கோலம்
56) திருப்பரமேச்சுர விண்ணகம்
[காஞ்சீபுரம் - வைகுண்ட பெருமாள்
கோயில்]
பெரிய காஞ்சீபுரத்தில் ரயிலடியிலிருந்து சற்று தூரத்தில்
உள்ளது. காமாட்சியம்மன் கோயிலுக்குக் கிழக்கே பஸ் ஸ்டாண்டிற்குப் பின்புறமுள்ள.
கிழக்கு ராஜவீதியில் வலதுபுறம் செல்லும் சாலையில் உள்ளது.
மூலவர் : பரமபத நாதன், வீற்றிருந்த திருக்கோலம்
57) திருப்புட்குழி
காஞ்சீபுரத்திலிருந்து 11 கி.மீ. மேற்கே சென்னை-வேலூர் சாலையில் பாலுசெட்டி சத்திரம்
என்ற ஊரிலிருந்து இடது புறம் 1/2கி.மீ. (ஹைவே) தூரத்தில் ''வெள்ளை கேட்" என்று சொல்லப்படும் லெவல் க்ராஸிங்
தாண்டி வலது பக்கத்தில் உள்ளது. சென்னையிலிருந்து 50 மைல் இவ்வூரில் வசதிகள் ஒன்றும் இல்லை.
மூலவர் : விஜயராகவப் பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம்
58) திருநின்றவூர் (திண்ணனூர்)
சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் திருநின்றவூர் என்ற ரயில்வே
ஸ்டேஷனிலிருந்து சுமார் 2கி.மீ. தெற்கே சென்று கோயிலை அடைய வேண்டும்.
சென்னையிலிருந்து பஸ் வசதியும் இதர வசதிகளும் உண்டு.
மூலவர் : பக்தவத்ஸலப் பெருமாள். நீன்ற திருக்கோலம்
59) திருஎவ்வுள் (திருவள்ளூர் - புண்யாவர்த்த, வீக்ஷாரண்ய க்ஷேத்ரம்)
சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் திருவள்ளூர் ரயில்வே
ஸ்டேஷனிலிருந்து சுமார் 4 – 5 கி.மீ. வண்டியில்
அல்லது டவுண் பஸ்ஸில் போக வேண்டும்.
மூலவர் : வீரராகவப் பெருமாள். புஐங்கசயனம்
60) திருவல்லிக்கேணி (ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம்)
சென்னை - எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 5.கி.மீ திருமயிலை மெட்ரோ ரயில் பாதையில் தனி ஸ்டேஷன் உண்டு
இந்த ஆலயத்தில் 5
ஸந்நிதிகள் உள்ளன.
மூலவர் : வேங்கடகிருஷ்ணன் நின்ற திருக்கோலம்.
61) திருநீர்மலை (தோயாத்ரி க்ஷேத்ரம்)
சென்னை - தாம்பரம் ரயில் பாதையில் பல்லாவரம் ஸ்டேஷனிலிருந்து
சுமார் 6 கி.மீ
தூரத்தில் உள்ளது. இங்கு பெருமாள் நான்கு திருக்கோலங்களில்
எழுந்தருளியிருக்கிறார்.
மூலவர் : நீர்வண்ணன்
62) திரு இடவெந்தை (திருவடந்தை)
சென்னை - கோவளம் வழியாக மகாபலிபுரம் செல்லும் இல் (மெயின்ரோடிலேயே மேற்கில்) சுமார் 40 கி.மீ தூரத்திலுள்ளது. கோயில் வாசலிலேயே இறங்கலாம். வேறு
வசதிகள் இல்லை.
மூலவர் : லக்ஷ்மீ வராஹப் பெருமாள். நின்ற திருக்கோலம்
63) திருக்கடல்மல்லை (மஹாபலிபுர க்ஷேத்ரம் அர்த்த
சேது)
சென்னையிலிருந்து 55 கி.மீ. தூரத்திலுள்ள
திருவிடவெந்தையிலிருந்து சுமார் 15 கி.மீ. க்கு அப்பாலும்
உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை பழைய மஹாபலிபுரம் ரோடு இரண்டிலுமே பஸ் வசதியும்
ஊரில் மற்றும் வசதிகளும் உண்டு.
மூலவர் : ஸ்தலசயனப் பெருமாள். சயனத் திருக்கோலம்
64) திருக்கடிகை (சோளிங்கபுரம்)
சென்னை - பெங்களூர் ரயில் மார்க்கம். அரக்கோணத்திலிருந்து
சுமார் 27 கி.மீ. வாலாஜாப்பேட்டையிலிருந்து சுமார் 23 கி.மீ. பஸ்ஸில் வரலம்.
அதே போல் திருத்தணியிலிருந்தும், சித்தூரிலிருந்தும் பஸ்ஸில் வரலாம்.
மூலவர் : யோக நரஸிம்ஹர், வீற்றிருந்த திருக்கோலம்
65) திருவயோத்தி (அயோத்யா)
மொகல்சராய் (காசி-வாராணஸி) லக்னௌ ரயில் மார்க்கத்தில்
பைசாபாத் ஸ்டேஷனிலிருந்து வண்டியில் போக வேண்டும். அங்கிருந்து அயோத்தி சுமார் 5 கி.மீ. உள்ளது. இவ்வூரில் தங்குவதற்கு பல சத்திரங்களும்
சாப்பாட்டுக் கடைகளும் உள்ளன.
மூலவர் : ஸ்ரீராமன். சக்கரவர்த்தித் திருமகன்,
வீற்றிருந்த திருக்கோலம்
66) திருநைமிசாரண்யம்
கல்கத்தா - டேராடூன் ரயில் மார்க்கத்தில் பாலமாவ்
ஜங்ஷன்வந்து அங்கிருந்து சீதாப்பூர் போகும் கிளை ரயிலில் ஏறி வழியிலுள்ள
நைமிசாரண்யா ஸ்டேஷனில் இறங்கி 4 கி.மீ. தூரம் வண்டியில் அல்லது நடந்து சென்று இவ்வூரை
அடையலாம். தில்லி-லக்னோ ரயில் பாதையில் ஹர்தோய் என்ற ஸ்டேஷனில் இறங்கியும் இவ்வூரை
அடையலாம்.
மூலவர் : தேவராஜன் (ஸ்ரீஹரி), நின்ற திருக்கோலம்.
67) திருப்பிருதி (ஜோஷிமட் - நந்தப்ரயாக்)
ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள
ஜோஷிமட் என்ற இடந்தான் திருப்பிருதி என்பது பொதுவான அபிப்ராயம். ஹரித்வாரிலிருந்து
246 கி.மீ.
மூலவர் : பரமபுருஷன், புஜங்கசயனம்
68) திருக்கண்டமென்னும் கடிநகர் (தேவப்ரயாகை)
ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் 70 கி.மீ. தூரத்திலும், ஹரித்வராரத்திலிருந்து பத்ரிக்குச் செல்லும் மார்க்கத்தில் 80 கி.மீ.லும் உள்ளது. பத்ரியிலிருந்து திரும்புகையில் இறங்கி
ஸேவித்துவிட்டு அடுத்த பஸ்ஸில் வரலாம். ரகுநாத்ஜீ மந்திர் என்றால் தெரியும்.
மூலவர் : நீலமேகப்பெருமாள். நின்ற திருக்கோலம்
69) திருவதரியாச்ரமம் (பத்ரிநாத்)
டெல்லியிலிருந்து எஸஹாரன்பூர், லக்ஸார் வழியாக அல்லது கல்கத்தா - டேராடூன் எக்ஸ்பிரஸில்
ஹரித்வார் ஸ்டேஷனுக்கு வந்து அங்கிருந்து ரிஷிகேசில் தங்கி,
அங்கிருந்து 300 கி.மீ. பஸ்ஸில் ஹிமாலய மலையில் பிரயாணம் செய்து,
பத்ரிநாத்தை அடைய வேண்டும். இங்கு ஏராளமான சத்திரங்களம் பல
வசதிகளும் உண்டு.
மூலவர் : பத்ரி நாராயணன், வீற்றிருந்த திருக்கோலம்
70) திருச்சாளக்ராமம்
(ஸாளக்ராமம் முக்திநாத்)
இந்த திவ்ய தேசம் நேபாள நாட்டில் உள்ளது. இந்திய எல்லையைக்
கடப்பதற்கு ஸனோலி, ராக்ஸால்
என்ற இரண்டிடங்கள் தான் சிறப்பானவை. போகும் வழியில் எங்கும் தங்குமிடமோ. உணவு
வசதிகளோ கிடையாது. மலையேறுபவர்கள் சொந்த வசதிகளுடனே கூட்டமாகச் செல்லவேண்டும்.
போக்ராவிலிருந்து 1
மணி நேரத்தில் ஹெலிகாப்டர் மூலம் அடையலாம்.
மூலவர் : ஸ்ரீமூர்த்தி, முக்தி நாராயணன், நின்ற திருக்கோலம்
71) திரு வடமதுரை (மதுரா)
(ப்ருந்தாவனம், கோவர்த்தனம்
அடங்கியது)
டெல்லியிலிருந்து ஆக்ரா போகும் ரயில் பாதையில் மதுரை என்ற
ஜங்ஷனிலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் ஊரும் கோயில்களும் உள்ளன. இங்கு தங்கும்
வசதிகள் இல்லாததால் 10
கி.மீ தூரத்திலுள்ள பிருந்தாவனம் என்ற ஊரில் தங்கிக் கொள்ளலாம்.
மூலவர் : கோவர்த்தநேசன், நின்ற திருக்கோலம்
72) திருவாய்ப்பாடி (கோகுலம், கோகுல்)
மதுரா ஜங்ஷனிலிருந்து வண்டி பிடித்துக்கொண்டு 41/2 கி.மீ தூரமுள்ள யமுனைப் பாலத்தைக் கடந்து அங்கிருந்து 7 1/2 கி.மீ. பஸ்ஸில் சென்று இவ்வூரை அடையலாம். வசதிகள்
ஒன்றுமில்லை.
மூலவர் : மனமோஹன கிருஷ்ணன், நின்ற திருக்கோலம்
73) திருத்வாரகை (துவரை, துவாரபதி)
பம்பாய், ஆமதாபாத், வீரம்காம், ராஜ்கோட், ஜாம்நகர் வழியாக ஓகா துறைமுகம் செல்லும் ரயில் பாதையில்
துறைமுகத்துக்கு சுமார் 32 கி.மீ. தூரத்தில் துவாரகா ரயில்வே ஸ்டேஷன் உள்ளது.
அங்கிருந்து 4 கி,மீ. வண்டியில் போய், கோயிலை அடையலாம். வசதிகள் எல்லாம் உண்டு.
ஆமதாபாத்திலிருந்தும் நேராக துவராகைக்கு பஸ்கள் செல்கின்றன.
மூலவர் : கல்யாண நாராயணன், நின்ற திருக்கோலம்
74) திருச்சிங்கவேள் குன்றம் (அஹோபிலம்)
சென்னை - பம்பாய் ரயில் பாதையிலுள்ள கடப்பா ஸ்டேஷனில்
இறங்கி, அங்கிருந்து
பஸ்ஸில் (பஸ் ஸ்டாண்டு 2 கி.மீ. தூரத்தில் உள்ளது) 85 கி.மீ. தூரம் சென்று அர்லகட்டா என்ற ஊரில் இறங்கி,
அங்கிருந்து வேறு பஸ்ஸில் 1 மணி நேரத்தலி 25 கி.மீ தூரத்தில் உள்ள அஹோபிலம் போய்ச் சேரலாம். நந்தியாலில்
இருந்து 65 கி.மீ
ஹைதாரபாதிலிருந்து பஸ்ஸில் வரலாம். இவ்வூரில் திருப்பதி தேவஸ்தானத்தாரால்
நடத்தப்படும் விடுதி ஒன்றும் உள்ளது.
மூலவர் : ப்ரஹ்லாதவரதன், வீற்றிருந்த திருக்கோலம்
75) திருவேங்கடம்
(திருப்பதி,
திருமலை,
ஆதிவராஹ க்ஷேத்ரம்)
சென்னை - பம்பாய் ரயில் பாதையிலுள்ள ரேணிகுண்டாவிலிருந்து
சுமார் 12 கி.மீ.
தூரத்திலுள்ள ரயில்வே ஸ்டேஷன் திருப்பதி சென்னையிலிருந்து நேராக வரும் ரயில்
வண்டிகளும் உண்டு.
1) கீழ்த்திருப்பதி: கோவிந்தராஜப் பெருமாள் கோவில்,
மூலவர் : கோவிந்தராஜப்பெருமாள், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
2) திருமலை
மூலவர் : திருவேங்கடமுடையான். நின்ற திருக்கோலம்.
பொதுவான குறிப்புகள்
இத்தலங்கள் வைணவத்
தலங்களாயினும் போத்திகளால் பூஜை செய்யப்படுகின்றன. பிரஸாதமாக சந்தனம். துளசி
மற்றும் புஷ்ட முதலியவற்றையும் கைபடாமல் தருகின்றார்கள். பெருமாளை ஆழ்வார்கள் அழைத்த பெயர்களை விட்டு வேறு
பெயரால் அழைப்பார்கள். பெரும்பாலும் தாயார் ஸந்நிதிகளே கிடையாது. திருவல்லவாவில்
விபூதி ப்ரஸாதம் கூடக் கொடுக்கிறார்கள். மஹாராஜாக்கள் உள்பட பெரிய மனிதர்கள் -
சிறிய மனிதர்கள் என்கிற பாகுபாடின்றி வேஷ்டியும் துண்டும் அணிந்து தான்
செல்லுகிறார்கள். சில கோயில்களில் கடைகளில் வேஷ்டிகள் வாடகைக்குக்
கொடுக்கிறார்கள். கோயில்களை மிகவும் தூய்மையாய் வைத்திருக்கிறார்கள்.
76) திருநாவாய்
சென்னை - கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் உள்ள இந்த
ஸ்டேஷனிலிருந்து ஊரும் கோயிலும் 2 கி.மீ. தூரத்தில் உள்ளன. ஷோரனூரிலிருந்து பஸ்ஸில்
குட்டீபுரம் வந்து அங்கிருந்து வேறு பஸ்ஸில் திருநாவாய் வந்ததும் கோயிலை அடையலாம்.
சிறிய ஊர். வசதிகள் கிடையாது.
மூலவர் : நாவாய் முகுந்தன், நின்ற திருக்கோலம்
77) திருவித்துவக்கோடு
(திருவிச்சிக்கோடு, திருவிஞ்சிக்கோடு)
ஷோரனூர் - கள்ளிக்கோட்டை மார்க்கத்தில் பட்டாம்பி ரயில்
நிலையத்திலருந்து 3
கி.மீ. தூரம். ஷோரானூரிலிருந்து குருவாயூர் போகும். பஸ்ஸில் 15 கி.மீ. தூரம் சென்று இறங்கி ஒரு குறுகிய சாலையில் 2 கி.மீ. நடக்க வேண்டும்
மூலவர் : உய்யவந்த பெருமாள், நின்ற திருக்கோலம்.
78) திருக்காட்கரை (த்ரிக்காக்கரா)
ஆலவாய் - திருச்சூர் ரயில் மார்க்கத்தில் இருஞாலக்கொடி
(இரிஞ்சாலக்குடா) ஸ்டேஷனிலிருந்தும் அங்கமாலி ஸ்டேஷனிலிருந்தும் வடகிழக்கே சுமார் 15கி.மீதாத்திலிருக்கிறது. ஆலவாய் போகும் பாதையில் 7 கி.மீ சென்று, அங்கிருந்து வேறு பஸ்ஸில் ஒரு கிளைப்பாதையில் போக வேண்டும்.
கொச்சி, எர்ணாகுளத்தில்
தங்கிப் போகலாம்.
மூலவர் : காட்கரையப்பன், நின்ற திருக்கோலம்,
79) திருமூழிக்களம் (மூழிக்களம்)
ஆல்வாய் டவுனில் தங்கி அங்கிருந்து பஸ் ஏறி திருமூழிக்களம்
வரலாம். சாலையிலிருந்து சற்று தூரத்தில் பாரதப்புழை ஆற்றங்கரையில் கோவில் உள்ளது.
அங்கமாலி ரயில்வே ஸ்டேஷனிலிருந்தும் இங்கு பஸ்ஸில் வரலாம். இங்கு வசதிகள் எதுவும்
இல்லை.
மூலவர் : திருமூழிக்களத்தான், நின்ற திருக்கோலம்
80) திருவல்லவாழ் (திருவள்ளலா ஸ்ரீ வல்லப
க்ஷேத்ரம்)
கொல்லம் - எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் திருவல்லா ரயில்
நிலையத்திலிருந்து 5
கி.மீ தூரம், பஸ்
வசதிகளும் உள்ளது. திருவல்லாவில் சத்திரம் இருக்கிறது. எண் 80 முதல் 85 வரை உள்ள ஆறு ஷேத்திரங்களையும் ஸேவிக்கலாம்.
மூலவர் : கோலப்பிரான், நின்றக் கோலம்
81) திருக்கடித்தானம்
திருவல்லாவிலிருந்து கோட்டயம் சாலையில் 8 கி.மீ. பஸ்ஸில் சென்று, செங்கணச்சேரியில் இறங்பி, அங்கிருந்து வேறு சாலையில் கிழக்கே இரண்டு மைல் சென்று
இவ்வூரை அடையலாம். இங்கு வசதி ஒன்றும் கிடையாது.
மூலவர் : அத்புத நாராயணன், நின்ற திருக்கோலம்
82) திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு)
திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம் வழியாக எர்ணாகுளம்
செல்லும் ரயில் பாதையில் செங்கண்ணூர் திருவல்லாவிலிருந்து தெற்கே 10 கி.மீ. ஸ்டேஷன் இருக்கிறது.
மூலவர் : இமையவரப்பன், நின்ற திருக்கோலம்
83) திருப்புலியூர் (குட்ட நாடு)
செங்கண்ணூரிலிருந்து (மார்க்கம் 82 காண்க) மேற்கே 5 கி.மீ. தூரத்திலுள்ளது. வண்டியில் போகலாம். பஸ் வெகு
அரிதாகப் போகிறது. வசதி ஒன்றுமில்லை.
மூலவர் : மாயப்பிரான், நின்ற திருக்கோலம்
84) திருவாறன்விளை (ஆரம்முளா)
செங்கண்ணூரிலிருந்து கிழக்கே 9 கி.மீ, பஸ்ஸில் போகலாம், வசதிகள் குறைவு. ஆனால் தேவஸ்தான சத்திரம் இருக்கிறது.
மூலவர் : திருக்குறளப்பன், நின்ற திருக்கோலம்
85) திருவண்வண்டூர் (திருவமுண்டூர்)
ஷோரனூர் கள்ளிக்கோட்டை மார்க்கத்தில் பட்டாம்பி ரயில்
நிலையத்திலருந்து 3
கி.மீ. தூரம். ஷோரானூரிலிருந்து குருவாயூர் போகும் பஸ்ஸில் 15 கி.மீ. தூரம் சென்று இறங்கி ஒரு குறுகிய சாலையில் 2 கி.மீ. நடக்க வேண்டும்
மூலவர் : பாம்பணையப்பன், நின்ற திருக்கோலம்
86) திருவனந்தபுரம்
சென்னை - திருவனந்தபுரம் ரயில் மார்க்கத்தில்
திருவனந்தபுரம் ஹென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் கோயில் இருக்கிறது.
மூலவர் : அநந்தபத்மநாபன், புஜங்கசயனம்
87) திருவாட்டாறு
திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோயில் போகும் பஸ்ஸில்
சென்று தொடுவெட்டி என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து வேறு பஸ்ஸல் 9 கி.மீ. சென்று இவ்வூரை அடைய வேண்டும். திருவனந்தபுரம் -
கன்னியாகுமரி ரயில் பாதையில் உள்ளது.
மூலவர் : ஆதிகேசவப் பெருமாள், புஜங்கசயனம்.
88) திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்)
திருவாட்டாற்றிலிருந்து தொடுவெட்டி வந்து,
பஸ் மாறி, நாகர்கோவில் - திருநெல்வேலி பஸ் மார்க்கத்தில் நாகர்கோவில்
வந்து, அங்கிருந்து
4 கி.மீ. தூரம் வடக்கே
சென்று இவ்வூரை அடைய வேண்டும்.
மூலவர் : திருக்குறளப்பன், வீற்றிருந்த திருக்கோலம்
89) திருக்குறுங்குடி (வாமன க்ஷேத்ரம்)
திருநெல்வேலியிலிருந்து நேர் பஸ் வசதியுள்ளது (அல்லது)
திருநெல்வேலியிலிருந்து 25 கி.மீ. நாங்குனேரிக்கு பஸ்ஸில் வந்து அங்கிருந்து வேறு
பஸ்ஸில் 12 கி.மீ.
கடந்து இங்கு வரலாம். இவ்வூரில் ராமாநுஜ கூடங்களும் மடங்களும் உள்ளன.
மூலவர் : நின்ற நம்பி, நின்ற திருக்கோலம்
90) திருச்சிரீவரமங்கை
(திருச்சிரீவரமங்கல
நகர், வானமாமலை,
நாங்குனேரி,
தோதாத்ரி க்ஷேத்ரம்)
திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி வரும் வழியில் நாங்குனேரியில்
இறங்கியோ அல்லது திருக்குறுங்குடியிலிருந்து திரும்புகையிலோ பெருமாளை ஸேவிக்கலாம்.
மூலவர் : தோதாத்ரிநாதன் (வானமாமலை) வீற்றிருந்த திருக்கோலம்
91 முதல் 98 வரை நவதிருப்பதி
திருத்தலங்களுக்கு விரிவான ஸ்தல புராணமும் முந்திய கட்டுரையில் எழுதி உள்ளோம். தெளிவாக
விவரித்துள்ளோம். javascript:nicTemp();
99) திருவில்லிபுத்தூர் (ஸ்ரீவில்லிபுத்தூர்)
தென்காசி விருதுநகர் ரயில் பாதையில் ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்டேஷனிலிருந்து இப்பெரிய ஊர் 2-3 கி.மீ. தூரத்திலுள்ளது.
மூலவர் : வடபத்ரசாயீ (ரங்கமன்னார்). புஜங்கசயனம்
100) திருத்தண்கால் (திருத்தண்காலூர்)
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்தும் விருதுநகரிலிருந்தும் இங்கு
பஸ்ஸில் வரலாம். திருத்தண்கால் ரயில்வே நிலையம் விருதுநகர் - தென்காசி ரயில்
பாதையில் உள்ளது. சிவகாசியிலிருந்தும் வரலாம்.
மூலவர் : நின்ற நாராயணன், கிழக்கே திருமுக மண்டலம்
101) திருக்கூடல் (கூடலழகர் ஸந்நிதி - மதுரை]
மதுரை ஊருக்குள்ளே பஸ் ஸ்டாண்டு அருகாமையில் கூடலழகர்
ஸந்நிதி உள்ளது.
மூலவர் : கூடலழகர், வீற்றிருந்த திருக்கோலம்
102) திருமாலிருஞ்சோலை (அழகர் கோயில்)
மதுரையிலிருந்து 17-18 கி.மீ. பஸ்ஸில் போக வேண்டும். மதுரையில் தங்கியே
ஸேவிக்கலாம்.
மூலவர் : அழகர், கள்ளழகர், நின்ற திருக்கோலம்
103) திருமோகூர்
மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து டவுன் பஸ்கள் பல
நேராக திருமோகூருக்குப் போகின்றன.
மூலவர் : காளமேகப் பெருமாள், நின்ற திருக்கோலம்
104) திருக்கோட்டியூர் [கோஷ்டி க்ஷேத்ரம்]
மதுரையிலிருந்து பஸ்ஸில் திருப்பந்தூரையடைந்து அங்கிருந்து
சுமார் 10 கி.மீ.
தூரத்திலுள்ள திருக்கோட்டியூருக்கு சிவகங்கை பஸ்ஸில் செல்ல வேண்டும்.
மூலவர் : உரகமெல்லணையான், புஜங்கசயனம்
105) திருப்புல்லாணி [ராமநாதபுரம் - தர்ப்பசயனம்]
காரைக்குடியிலிருந்து ராமநாதபுரத்துக்கு நேராக பஸ்ஸில் வரலாம்.
அங்கிருந்து திருப்புல்லாணிக்கு பஸ்ஸில் போகலாம். சேதுக்கரை பஸ்ஸில் போய் ஆதிஸேது
என்ற இடத்தில் இறங்கி ஸமுத்ரஸ்நானம் செய்துவிட்டு திரும்பி பஸ்ஸில் 5 கி.மீ. வந்து திருப்புல்லாணி கோயிலை அடையலாம்.
மூலவர் : கல்யாண ஜகந்நாதன் (தெய்வச் சிலையார்) நின்ற திருக்கோலம்
106) திருமெய்யம்
புதுக்கோட்டைக்கும், காரைக்குடிக்கும் மத்தியிலிருக்கும் ரயில்வே ஸ்டேஷன்.
ஸ்டேஷனிலிருந்து கோவில் 1 மைல் தூரம், வசதிகள் நன்றாக இல்லை.
மூலவர் : ஸத்யகிரிநாதன், நின்ற திருக்கோலம்.
107) திருப்பாற்கடல் (வ்யூஹம்)
இங்கு இந்த ப்ராக்ருத சரீரத்துடன் போக முடியாது. நில உலகில்
கண்ணால் பார்க்க முடியாது.
மூலவர் : ஷீராப்தி நாதன் (வ்யூஹ நிலை), ஆதிசேஷ சயனம்.
108) திருப்பரமபதம் [ஸ்ரீவைகுண்டம், திருநாடு, பரம்]
இது பூலோகத்தில் இல்லை. இது வைஷ்ணவர்களின் லக்ஷ்யமான மோக்ஷ
நிலையாகும்.
மூலவர் : பரமபத நாதன், வீற்றிருந்த திருக்கோலம்
108
திவ்விய தேச பரமாத்மனைப் பாடிய பன்னிரு ஆழ்வார்களின் ஸ்தலங்கள் மற்றும் பெயர்கள், அவதரித்த
நட்சத்திரங்கள்
ஆழ்வார்கள் - திருத்தலங்கள் - திருநக்ஷத்திரம்
1) பொய்கையாழ்வார் – திருவெஃகா, காஞ்சி -
ஐப்பசி -
திருவோணம்
2) பூதத்தாழ்வார் – கடல்மல்லை - ஐப்பசி -
அவிட்டம்
3) பேயாழ்வார் - திருமயிலை - ஐப்பசி – சதயம்
4) திருமழிசையாழ்வார் – திருமழிசை -
தை மகம்
5) நம்மாழ்வார் - ஆழ்வார் திருநகரி (நவதிருப்பதி) - வைகாசி -
விசாகம்
6) மதுரகவியாழ்வார் - திருக்கோளூர் (நவதிருப்பதி) - சித்திரை - சித்திரை
7) குலசேகரயாழ்வார் – திருவஞ்சிக்களம் - மாசி
புனர்பூசம்
8) பெரியாழ்வார் - ஸ்ரீவில்லிபுத்தூர் - ஆனி-ஸ்வாதி
9) ஆண்டாள் - ஸ்ரீவில்லிபுத்தூர் - ஆடி- பூரம்
10) தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமண்டலங்குடி - மார்கழி - கேட்டை
11) திருப்பாணாழ்வார் - உறையூர் - கார்த்திகை-ரோஹிணி
12) குமுதவல்லி ஸமேத திருமங்கையாழ்வார் - திருநகரி (திருவாலி) - கார்த்திகை –
க்ருத்திகை
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : 108 திவ்விய தேசம் பற்றிய முழு விவரங்கள் - ஆன்மீக குறிப்புகள், தல வரலாறு [ ஆன்மீகம் ] | Spiritual Notes : 108 Full details about Divvya Desam - Spiritual Notes, Head history in Tamil [ spirituality ]