1- சத்தமான குரலில் பேசப்படுவதெல்லாம் உண்மை என்றும், மென்மையான குரலில் சொல்லப்படுவது பொய் என்றும் நினைக்காதீர்கள். வலிமையான உண்மைகள் பலவும் மெல்லிய குரலில்தான் வெளிப்படும்.
வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்தும் 12 விஷயங்கள்!
🍁🍁🍁
1- சத்தமான குரலில்
பேசப்படுவதெல்லாம் உண்மை என்றும், மென்மையான குரலில் சொல்லப்படுவது பொய் என்றும் நினைக்காதீர்கள்.
வலிமையான உண்மைகள் பலவும் மெல்லிய குரலில்தான் வெளிப்படும்.
🍁
2- உங்களின் சிறந்த
செயலை எல்லோருமே பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். பலரும், தங்களுக்குப் பிடித்ததை
நீங்கள் செய்தால்தான் பாராட்டுவார்கள். அப்படிப்பட்ட பாராட்டுகளுக்கு
மயங்காதீர்கள்.
🍁
3- உங்களை நிறைய பேர்
வெறுத்தால்,
நீங்கள் தவறானவர் என்று
அர்த்தமில்லை. உங்களைக் கட்டுப்படுத்த முடியாதபோது, தாங்கள் நினைத்ததைச் செய்யவைக்க
முடியாதபோது சிலர் உங்களை வெறுக்கலாம். அது உங்களின் தவறல்ல!
🍁
4- உணர்வுகள்
தற்காலிகமானவை,
கோபமோ, எரிச்சலோ, அந்த உணர்வின்
தாக்கத்தில் நீங்கள் ஏதேனும் முடிவுகள் எடுக்கலாம். அந்த முடிவுகளின் விளைவுகள்
நிரந்தரமானவை. எனவே, முடிவுகளைக் கவனமாக எடுங்கள்.
🍁
5- ஒய்வெடுக்கும் நேரம்
போக, மற்ற நேரங்களில் ஏதோ ஒரு
வேலையில் உங்களை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் ஏதேதோ விஷயங்கள்
குறித்து யோசித்துக் குழம்ப மாட்டீர்கள். கடந்த காலத் தவறுகளை நினைத்து வருந்த
மாட்டீர்கள்.
🍁
6- உங்களைச் சுற்றி
நடக்கும் ஒவ்வொன்றுக்கும் நீங்கள் எப்படி எதிர்வினை நிகழ்த்துகிறீர்கள் என்பதைக்
கவனியுங்கள். உங்களுக்குத் தொடர்பில்லாத எதை எதையோ நினைத்து நிம்மதியைத்
தொலைக்காதீர்கள்.
🍁
7- நீங்கள் சொல்லும்
அறிவுரைகளை யாரும் பின் பற்றுவதில்லை. நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதைப்
பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள். உங்கள் குழந்தை களுக்கும், உங்களைச்
சுற்றியிருப்பவர்களுக்கும் நல்ல முன்மாதிரியாக இருங்கள்.
🍁
8- ஏதோ ஒரு சூழலில் யாரோ
ஒருவருடன் விவாதம் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றலாம். அவர் சொல்லும் கருத்தில்
உடன்பாடு இல்லாமல் போகலாம். ஆனால், அவர் உங்களின் அன்புக்குரியவர் என்றால், விவாதத்தை
தவிர்த்துவிடுங்கள். கருத்துகளைவிட உறவுகள் முக்கியம்.
🍁
9- உங்களைப் பற்றி
உங்களைவிட நன்றாகஅறிந்தவர் வேறு யாருமில்லை. நீங்கள் எப்படிப்பட்டவர் என்று
அடுத்தவர்கள் தீர்மானிக்கக்கூடாது. அதை நீங்கள் முடிவுசெய்யுங்கள்.
🍁
10- நீங்கள் செய்யும்
நூறு நல்ல விஷயங்களை இந்த உலகம் எளிதில் மறந்துவிடும். ஆனால், ஒற்றைத் தவறை நீண்ட
காலம் நினைவில் வைத்திருக்கும். எனவே, செயல்களில் கவனமாக இருங்கள்.
🍁
11- நாம்
எப்படிப்பட்டவர் என்பதை நாம் வாழு சூழல் முடிவு செய்வதில்லை. நாம் எடுக்கும்
முடிவுகளே அதைத் தீர்மானிக்கின்றன. சிறந்த முடிவுகளையே எப்போதும் எடுங்கள்
🍁
12- சில நேரங்களில்
எதிர்பாராத பிரச்னைகள், நெருக்கடிகள், துன்பங்கள் நேரலாம். அதற்காக நொந்துகொள்ளவோ, நம்மைச்
சபித்துக்கொள்ளவோ தேவையில்லை. எப்போது, எதைச் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்பதைப்
புரிந்துகொண்டால் இவை நிகழாது.✍🏼🌹
நெருக்கடி என்கிற சூழலை
யாரும் விரும்புவது இல்லை. ஏனெனில், நெருக்கடி இல்லாத வாழ்க்கை தான் நல்லது, வசதியானது என்ற
மனப்போக்கு நம்மில் பல பேருக்கு உள்ளதைப் பார்க்கின்றோம்.*
ஆனால் ஒருவருக்கு
நெருக்கடி வருவது ஒரு நல்லது தான். கசப்பான மருந்து இல்லாமல் நோய் குணமாகாது,,*
ஜப்பானியர்களுக்கு உயிர்
உள்ள’ மீன் சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். ஆனால், ஜப்பானியக் கடல் பகுதியில்
மீன்கள் அவ்வளவாக இல்லை.*
படகுகள் கடலுக்குள்
வெகுதூரம் சென்று தான் மீன் பிடித்துக் கொண்டு திரும்ப வேண்டி இருந்தது.*
நீண்ட தூரம் சென்று மீன்
பிடித்து வருவதால் எப்படி உயிர் உள்ள’ மீன் இருக்கும்.* ஜப்பானியர்களுக்கு அந்தச்
சுவை பிடிக்கவில்லை. யோசித்தார்கள்
மீன் பிடித்து அதனை ஐஸ்
பெட்டியில் போட்டுப் பதப்படுத்தி கரைக்குக் கொண்டு வந்தார்கள்.*
இந்தச் சுவையும்
ஜப்பானியர்களுக்கு விருப்பமானதாக இல்லை. எப்படியாவது உயிருடன் கரைக்கு மீனைக்
கொண்டு வர வேண்டும் என்ன செய்வது? என்று மீண்டும் யோசித்தார்கள்..*
மீன் பிடிக்
கப்பலுக்குள் ஒரு பெரிய தொட்டி அமைத்து, பிடித்த மீனை அதனுள் விட்டார்கள். உயிரோடு கரைக்குக்
கொண்டு வந்தார்கள். சமைத்தார்கள்.*
பிரச்சனை தீர்ந்ததா? ம்ஹும். தீரவில்லை.
இப்போதும் மீன் ருசியாக இல்லை.*
எங்கேயோ நடுக்கடலில்
பிடித்த மீன் உயிரோடு தானே கரைக்கு வருகிறது. இதற்கு மேல் என்ன செய்வது என்று
யோசித்தார்கள்.*
பிரச்சனை என்னவென்றால், மீன் தொட்டியும், கடலும் ஒன்றில்லை. அந்த
வித்தியாசம் மீன்களுக்குப் புரிந்ததும், அவை அலுத்துப் போய் சும்மா இருந்து விட்டன.*
சோர்ந்து போன மீன்களின்
சுவை ஜப்பானியர்களுக்குப் பிடிக்கவில்லை.*
எப்படியாவது தொட்டிகளில்
உள்ள மீன்களைச் சுறுசுறுப்பாக்க வேண்டும். என்ன செய்யலாம்?*
நடுக்கடலில் மீன்கள்
நடமாடும் தொட்டிக்குள் ஒரு சிறிய சுறாவை விட்டார்கள்.*
சுறா, மீன்களைத் துரத்தி
வேட்டை ஆட முயன்றது. மீன்கள் முன்பை விட அதிக சுறுசுறுப்புடன் தொட்டியைச் சுற்றி
வந்தன.*
சில மீன்கள் சுறாவிடம்
அகப்பட்டு உயிர் இழந்தன. ஆனால் பெரும்பான்மையான மீன்கள் மிகவும் சுறுசுறுப்பாக
இருந்தன..*
அதன் ருசி
ஜப்பானியர்களுக்கு முழு திருப்தியைத் தந்தது.ஆக, தொட்டியில் சும்மா சுற்றி வருகிற
மீன்கள் இலக்கு இல்லாமல், நெருக்கடி எதுவும் இல்லாமல், சமாளிப்பதற்கு சவால் ஏதும் இல்லாமல் போரடித்துப் போய்
சோர்ந்து விட்டன.*
அந்த மீன்கள் மீண்டும்
சுறுசுறுப்பாவதற்கு சுறாக்குட்டி என்கிற நெருக்கடி தேவைப்பட்டது..*
ஆம்., தோழர்களே..
🏵 நெருக்கடியை சாதிக்கப் பிறந்தவர்கள் சந்திக்கவும் சோர்ந்தும் போவதில்லை.
⚽ நெருக்கடி இல்லை என்றால், வாழ்க்கையே சுவையற்றுப் போய் விடும்.
🏵 நெருக்கடிகள் நம்மை முடுக்கும் போது, நமக்கு முன்னர் சாதித்தவர்கள்
வாழ்வில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
⚽ மேலும் ஒவ்வொரு நாளையும் புதிய துவக்கமாகவும், வாழ்வில் புதிய திருப்பமாகவும் பார்த்தால் வெற்றி நிச்சயம்.
🏵 சராசரி மனிதர்களும் இப்படித் தான் எந்தவித நெருக்கடி இல்லாத வாழ்க்கை தான் விரும்புகிறார்கள்.
⚽ ஆனால் உண்மையில், நெருக்கடிகள் தான் நம்மை மேலும் வலுவாக்குகிறது. போராடத்
தூண்டுகின்றன
🏵 நம்மிடம் இல்லாத திறமைகளைக் கூட வெளிக் கொண்டு வருகின்றன....✍🏼🌹
🌹🌹🌹
நாம் பள்ளியில்
படிக்கும் கணிதப் பாடம், பள்ளிப் படிப்போடு முடிந்து விடுவதில்லை. அது நம் வாழ்க்கைக்கும்
பெரிதும் பங்காற்றுகிறது. அவ்வகையில் நம் வாழ்க்கைக்கு எந்த வகையில் கணிதம்
உதவுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.
நம் அன்றாட வாழ்விலும், அறிவைச் சார்ந்த அனைத்து
இடங்களிலும் கணிதத்தின் பயன்பாடு மிக முக்கியப் பங்காற்றுகிறது. தொழில்நுட்ப
வளர்ச்சிக்கு முக்கிய வழிகாட்டியாக திகழ்வதும் கணிதம் தான். கணிதம்
விஞ்ஞானிகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மட்டுமே உரித்தானது அல்ல. சாதாரண
மனிதர்களுக்கும் உதவக் கூடியது. அன்றாட வாழ்விலும், நாம் செய்யும் வேலையிலும் நமக்கே
அரியாமல் கணிதத்தின் பயன்பாடு முக்கியப் பங்காற்றி வருகிறது.
கொடுக்கல் வாங்கலில்
தொடங்கி வியாபாரம், பயணச்சீட்டு, வங்கிப் பயன்பாடு மற்றும் நமது அன்றாடத் தேவைகள் என அனைத்திலும்
கணிதம் இடம் பெற்றிருக்கிறது. அனைவருக்கும் பொதுவான ஒரு மொழி தான் கணிதம்.
தினந்தோறும் நம்முடைய ஒவ்வொரு நகர்விலும் கணிதமானது நம்மையே அறியாமல் பயன்பட்டு
வருவதை எவராலும் மறுக்க இயலாது.
பொறியியல், அறிவியல், மருத்துவம், சமூக அறிவியல் மற்றும்
நிதியியல் போன்ற உலகின் பல முக்கியத் துறைகளில் துருப்புச் சீட்டாக கணிதம்
பயன்படுகிறது. பயன்பாட்டுக் கணிதம், அவ்வப்போது புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைத்
தூண்டவும்,
அவற்றை முறையாகப்
பயன்படுத்தவும் உதவுகிறது. ஆகையால் கணிதத்தை புரிந்து கொள்வதில் சிரமப்பட்டால், மற்ற அறிவியல்
நுணுக்கங்கள் மற்றும் விஞ்ஞானங்களைப் புரிந்து கொள்வதிலும் சிக்கல் ஏற்படும்.
படிக்கும் பருவத்திலேயே மற்ற பாடங்களைப் போலவே, கணிதப் பாடத்தையும் பரிந்து படித்தால் அது மிக எளிதாக
இருக்கும். சிறுவயதில் இருந்தே கணிதத்தைக் கற்பதும், கற்பிப்பதும் நமது முக்கிய கடமையில்
ஒன்றாக இருக்க வேண்டும்.
படிப்பறிவு இல்லாத ஊரில்
கணிதத்தின் பயன் இதுதான் என்று தெரிந்தால், அது அந்த ஊரையே மாற்றி விடும் அளவிற்கு வல்லமைப்
படைத்தது தான் கணிதம். மனிதனுக்கும், கணிதத்திற்கும் இடையே உள்ள பிணைப்பு எந்நாளும்
தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும்
வகுத்தல் இவை நான்கும் தான் கணிதத்தின் அடிப்படைத் தத்துவங்கள். நல்ல பழக்க
வழக்கங்களை அதிகரித்துக் கொள்ள கூட்டல் தத்துவமும், தீங்கு விளைவிக்கும் கெட்ட
செயல்களைத் தவிர்க்க கழித்தல் தத்துவமும், நியாயமான முறையில் பணத்தைப் பன்மடங்கு சம்பாதிக்க
பெருக்கல் தத்துவமும், காலத்திற்கு ஏற்றது போல் நேரத்தை திட்டமிட, வகுத்தல் தத்துவமும்
பயன்படுகிறது.
இந்த நான்கு கணிதத்
தத்துவங்களை நம் வாழ்க்கைப் பாடத்தில் முறையாகப் பயன்படுத்தினால், துன்பம் என்று ஒன்று
வருவதையே முற்றிலுமாக தவிர்த்து விடலாம். மேலும் எந்நிலையிலும் வாழ்வை சமநிலையோடு
வாழப் பழகினால்,
எந்நாளும் உங்களுக்கு
தித்திக்கும் நன்னாளாக அமையும்.✍🏼🌹
🍁 ஒருவர் உங்களை அளவுக்கு அதிகமாக புகழும் பொழுது முதலில் தித்திப்பாக தான்
இருக்கும் 🌼
🍁 அதே ஒருவர் கால போக்கில் அவரின் தேவை உங்களிடம் இருந்து
நிறைவேறிய பிறகு 🌼
🍁 உங்களை அலட்சியம் செய்யும் பொழுது தான் உண்மை என்னவென்று தெரியவரும்
🌼
🍁 இதில் தவறு உங்களை புகழ்ந்து உங்களால் பயன் அடைந்தவர் பக்கம் மட்டும் அல்ல
உங்கள் பக்கமும் தவறு
உள்ளது 🌼
🍁 புகழ்ச்சி என்னும் மாய வலையில் சிக்கி 🌼
🍁 சில விஷயங்கள் இழந்த
பிறகு நீங்கள்
வருந்தி எந்த
பயனும் இல்லை 🌼
🏵📿🏵📿🏵📿🏵📿🏵📿
🍁 இந்த மாய உலகில் மாறாத ஒன்று மாற்றங்கள் மட்டுமே
எந்த
மாற்றங்களிலும் மாறாத ஒன்று எல்லாம் வல்ல
இறைவனின் அன்பும் ஆதரவும் மட்டுமே என்று நினைவில் கொள் மனமே 🍁
☘ முதல் முயற்சி தோல்வி தரலாம்; ஆனால் தொடர் பயிற்சி
நிச்சயம் வெற்றியை தரும்
☘ உங்கள் வெற்றி உங்களிடம் இருந்தே தொடங்குகிறது.
☘ எவ்வளவு தூரம் வந்து இருக்கிறோம் என்பது மட்டுமல்ல, எங்கிருந்து துவங்கினோம்
என்பதும் முக்கியம்.
☘ வெற்றி பெற எப்போது முடிக்க போகிறோம் என்பதும் முக்கியம்
☘ இன்னைக்கு கிடைக்கிற வாய்ப்பு நாளைக்கு கிடைக்குமாங்கிறது சந்தேகம் தான்,, ஏன்னா இங்க வாய்ப்புங்கிறது அந்தந்த வினாடிக்கு சொந்தமானது.
கஷ்டத்தில் இருக்கும்
போது கண்ணுக்குத் தெரிபவர்களைக் கடவுள் என்பதை நம்ப மறுத்து விட்டு..!!!
என் கண்களுக்குக் கடவுள்
தெரிவதே இல்லை என்று குற்றம் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்..!!
ஒரு நிமிடம் உங்கள்
கவலைக்கு இடம் கொடுத்தால் நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் மகிழ்ச்சியை
இழப்பீர்கள்.
உங்கள் வாழ்வில் எதை இழந்தாலும் துணிச்சலோடு
போராடுங்கள். நகர்ந்து கொண்டே இருங்கள். பாதை தானாக திறக்கும்.
ஒருவர் புத்தரிடம் கேட்டார் நீங்கள் பெரிய
மகான் தரையில் ஏன் அமர்ந்து உள்ளீர்கள் என்று. புத்தர் சொன்னார் தரையில் அமர்பவன் ஒருபோதும் தவறி
விழ மாட்டான் என்று.
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது
தடைகளற்ற வாழ்க்கை அல்ல. தடைகளை வெற்றி கொள்ளும் வாழ்க்கை.
யார் உங்களை அவமதித்து
பேசினாலும்,
ஆவேசமடைந்து உடனே
மறுத்துப் பேச வேண்டாம். உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை.
எதிர் பார்த்த உடனே
எல்லாம் கிடைத்து விட்டால், வாழ்க்கை என்னவென்றே தெரியாமல் போய் விடும். எனவே தான் இறைவன்
எல்லாவற்றையும் எல்லோருக்கும் எல்லா நேரமும் கொடுப்பதில்லை. தேவையறிந்து
சமயமறிந்து இறைவன் கொடுக்கிறார்.
இந்த உலகில் எதை எதையோ
தேடி அழைந்தாலும், அனைவருக்கும் இறுதியில் தேவைப் படுவது அமைதியும் மகிழ்ச்சியும்
மட்டும் தான். இதைப் புரிந்தவர்கள் வாழ்கிறார்கள். புரியாதவர்கள்
புலம்புகிறார்கள்.
தன்னுடைய உழைப்பை நம்பி
செய்யும் எந்த செயலும் ஒரு போதும் தோற்பதில்லை.
வெற்றி நிச்சயம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
வாழ்க்கை பயணம் : வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்தும் 12 விஷயங்கள்! - "நெருக்கடிகள்', வாழ்க்கைப் பாடத்தை சிறப்பாக மாற்ற உதவும் கணிதம்! [ ] | Life journey : 12 things that reflect the facts of life! - "Crisis', Maths to Change Life Course for the Better! in Tamil [ ]