முருகனின் 12 வகை கோலவடிவங்களும் அவற்றை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களும் :

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

12 types of idols of Murugan and benefits of worshiping them: - Tips in Tamil

முருகனின் 12 வகை கோலவடிவங்களும் அவற்றை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களும் : | 12 types of idols of Murugan and benefits of worshiping them:

1. ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஞானசக்திதரர்' திருக்கோலமாகும்.

முருகனின் 12 வகை கோலவடிவங்களும் அவற்றை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களும் :

 

1. ஞானசக்திதரர்:

 

இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஞானசக்திதரர்'  திருக்கோலமாகும்.

 

2. கந்தசாமி:

 

இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் கந்தசாமி

திருக்கோலமாகும்.

 

3. ஆறுமுக தேவசேனாபதி:

 

இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும்.

சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.

 

4. சுப்பிரமணியர்:

 

இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.

 

5. கஜவாகனர்:

 

இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.

 

6. சரவணபவர்:

தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

 

7. கார்த்திகேயர்:

 

இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.

 

8. குமாரசாமி:

 

இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.

 

9. சண்முகர்:

 

இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.

 

10. தாரகாரி: `

 

தாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.

 

11. சேனானி:

 

இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.

 

12. பிரம்மசாஸ்தா:

 

இவரை வழிபட்டால் எல்லா வகை வித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும்.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : முருகனின் 12 வகை கோலவடிவங்களும் அவற்றை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களும் : - குறிப்புகள் [ ] | Spiritual Notes : 12 types of idols of Murugan and benefits of worshiping them: - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்