1. பெண் வளர்ந்து பெரியவளானால் சோகை தவிர்க்க நாகப்பழம். 2. கூடவே கூடாது சூடேற்றும் பப்பாளி.
பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 20 பாட்டி வைத்தியங்கள்.
1. பெண் வளர்ந்து
பெரியவளானால் சோகை தவிர்க்க நாகப்பழம்.
2. கூடவே கூடாது
சூடேற்றும் பப்பாளி.
3. மசக்கையில்
வாந்தியெடுத்தால் மணத்தக்காளி.
4. பிள்ளயைத் தாங்கும்
மாதங்களில் - ஜீரண சக்திக்குச் கசந்திடும்
சுண்டைக்காய்.
5. சிறுநீர்க்
கடுப்புக்கு அண்ணாசிப் பழம்.
6. வேண்டாக் கொழுப்பு
கூடாமலிருக்கப் பன்னீர் திராட்சை.
7. தாயும் மகவும்
தளறாமலிருக்க வாழைப்பூக் கூட்டு.
8. பிறந்த குழந்தைக்காக
பால் சுரக்க பசு நெய்யோடு வெள்ளைப்பூண்டு லேகியம்.
9. மடியில் குழந்தையைத்
தாங்கிய சூடு நீங்க கம்பங்களியும் கருணைக் கிழங்கு மசியலும்.
10. தூங்காமல்
தாலாட்டித் தலைவலி வந்தால் முள்ளங்கிச்சாறு.
11. நன்முலைப் பால்
சுரந்து , நல்லமுதூட்டும் பெண்ணவளுக்கு வாயு கொண்டால் – அது பிள்ளைக்கும் போய்ச் சேருமாம், மண்ணைக் கிள்ளியெடுத்த சில
கிழங்குகள் தவிர்த்திடுங்கள்.
12. நாலைந்து பிள்ளை
பெற்றவளுக்கு மூட்டு வலி வந்தால் எப்போதும் சூடான சோறு.
13.
இரத்தக்கொதிப்பிருந்தால் அகத்திக் கீரை.
14. இரத்தத்தூய்மைக்கு
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இதுவே மருந்து.
15. இரப்பையில் ஏதோ
புண்ணிருந்தால் எலுமிச்சைச்சாறு.
16. ஓடியாடிக் களைத்த
பின் கால் தேய்ந்து வாதம் வந்தால் - தடுத்திட அரைக்கீரை.
17. உடல் தடித்திடாமல்
பருமன் குறைய முட்டைக்கோஸ்.
18. உண்டது செரிக்க, கல்லீரல் சுரக்க நல்ல கொய்யாப் பழம்.
19. பித்தம்
தலைக்கேறினால் நெல்லிக்காய்.
20. சித்தம்
தெளிவாயிருக்க வில்வம்
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆரோக்கியம் குறிப்புகள் : பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 20 பாட்டி வைத்தியங்கள் - உணவே மருந்து உடலே மருத்துவர் [ ] | Health Tips : 20 Patty Remedies Women Must Know - Food is medicine body is doctor in Tamil [ ]