8 லட்சுமிகள்... ஆறுகால பூஜை...!!

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில்...!!

[ திருத்தலம் ஒரு பார்வை ]

8 Lakshmis... six-time puja...!! - Blessed Ashtalakshmi Temple...!! in Tamil



எழுது: சாமி | தேதி : 06-10-2023 02:08 pm
8 லட்சுமிகள்... ஆறுகால பூஜை...!! | 8 Lakshmis... six-time puja...!!

இன்று அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

 

8 லட்சுமிகள்... ஆறுகால பூஜை...!!


               

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில்...!!

 

திருத்தலம் ஒரு பார்வை:

இன்று அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

 

இந்த கோயில் எங்கு உள்ளது?

 

சென்னை மாவட்டத்தில் உள்ள பெசன்ட் நகரில் அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் அமைந்துள்ளது.

 

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

 

சென்னையிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள பெசன்ட் நகரில் அஷ்டலட்சுமி திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னையின் எல்லா பகுதியிலிருந்தும் இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

 

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

 

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது.

 

8 லட்சுமிகளும் ஒரே கோயிலில் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருப்பது சிறப்பு. இந்த எட்டு லட்சுமிகளும் நான்கு நிலைகளில் காட்சியளிக்கின்றனர்.

 

முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி உள்ளனர். இரண்டாம் தளத்தில் மகாலட்சுமியும், மகா விஷ்ணுவும் உள்ளனர்.

 

மூன்றாம் தளத்தை அடைந்தால் அங்கு சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்தியாலட்சுமி மற்றும் கஜலட்சுமியும் உள்ளனர். நான்காம் தளத்தில் தனலட்சுமி காட்சியளிக்கிறார்.

 

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயிலில் கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது, இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.

 

வேறென்ன சிறப்பு?

 

இத்திருக்கோயிலில் ஆறுகால பூஜைகள் நடப்பது சிறப்பம்சமாகும்.

 

இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.

 

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயிலில் பத்து தசாவதாரங்கள், குருவாயூரப்பன், கணபதி, தன்வந்திரி மற்றும் அனுமன் ஆகியோருக்கும் சன்னதிகள் அமைந்துள்ளது.

 

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

 

புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் நடைபெறும்.

 

தீபாவளி, லட்சுமி பூஜை, தை வெள்ளி, ஆடி வெள்ளி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

 

இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

 

இத்திருக்கோயிலில் உள்ள மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

 

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயிலில் உள்ள சந்தானலட்சுமியை வணங்கினால் குழந்தை வரம் கிடைக்கும்.

 

வித்யாலட்சுமியை வணங்கினால் கல்வி ஞானம் அதிகரிக்கும்.

 

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக் கடன்கள் செலுத்தப்படுகிறது?

 

இத்திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அஷ்டலட்சுமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தும், புடவை சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

 

இறைபணியில்

அன்புடன்....

🌷தமிழர் நலம்🌷

💥நன்றி!

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்...

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥இல்லறம்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

 

திருத்தலம் ஒரு பார்வை : 8 லட்சுமிகள்... ஆறுகால பூஜை...!! - அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில்...!! [ ஆன்மீகம் ] | A view of the shrine : 8 Lakshmis... six-time puja...!! - Blessed Ashtalakshmi Temple...!! in Tamil [ spirituality ]



எழுது: சாமி | தேதி : 10-06-2023 02:08 pm

தொடர்புடைய வகை



தொடர்புடைய தலைப்புகள்