மனித வாழ்க்கை என்பது ரசித்து, அனுபவித்து வாழக்கூடிய ஒன்று. ஆனால், எப்போதும் இயந்திரம் போல ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களுக்கு பெரும்பாலும் மனதில் அமைதி இருப்பதில்லை. நிம்மதியான வாழ்க்கைக்கு ஜென் தத்துவம் சொல்லும் எட்டு அழகான வாழ்க்கைப் பாடங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நிம்மதியான வாழ்க்கைக்கு "ஜென் தத்துவம்" சொல்லும் 8 வாழ்க்கைப் பாடங்கள்!
༺🌷༻
மனித வாழ்க்கை என்பது
ரசித்து,
அனுபவித்து வாழக்கூடிய ஒன்று. ஆனால், எப்போதும் இயந்திரம் போல
ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களுக்கு பெரும்பாலும் மனதில் அமைதி இருப்பதில்லை.
நிம்மதியான வாழ்க்கைக்கு ஜென் தத்துவம் சொல்லும் எட்டு அழகான வாழ்க்கைப் பாடங்கள்
பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
༺🌷༻
எந்த ஒரு வேலையையும்
கடனே என்று செய்யக் கூடாது. அதை ரசித்து நிதானமாக முழு கவனத்தையும் வைத்து செய்வது
அவசியம். ஒரு வேலை செய்யும்போது அதை மட்டுமே செய்ய வேண்டும். இன்னொன்றையோ அல்லது
இன்னும் இரண்டு மூன்று வேலைகளையோ சேர்த்து செய்யும்போது கவனம் சிதறும். செய்யும்
வேலையில் அக்கறை இல்லாமல் போகும். எனவே, ஒரே ஒரு வேலையை மிகுந்த
கவனத்துடன் செய்யும்போது அதை ரசித்து ஈடுபாட்டுடன் செய்யலாம்.
༺🌷༻
2. தற்போதைய தருணத்தில்
கவனம்:
கவனத்துடன் செயல்படும்போது
அந்தந்த தருணத்தில் ஒருவரால் வாழ முடியும். பதற்றம் அல்லது மன அழுத்தம் இதனால்
வருவதில்லை. மன அமைதியுடன் அந்தந்த நிமிடத்தில் ரசித்து வாழ வேண்டும்.
༺🌷༻
வாழ்க்கை என்பது
நிலையாமை நிறைந்தது. எல்லாவற்றையும் எல்லா மனிதர்களாலும் கட்டுப்படுத்த முடியாது.
இந்த உண்மை புரிந்து விட்டால் அவர்கள் உறவுகள், பொருள், வாழ்க்கை சூழ்நிலை என
எதையும் கட்டுப்படுத்த முயல மாட்டார்கள். இந்தப் போக்கை கடைப்பிடிக்கும்போது
இயல்பான மன நிம்மதியும் சந்தோஷமும் ஒருவருக்கு வந்து சேரும்.
༺🌷༻
4. தேவையானதை மட்டும்
நாடுதல்:
அதிக அளவில் உடைகள், நகைகள், சொத்துக்கள் என்று
மனிதர்கள் மேலும் மேலும் சேர்க்கும்போது அது பேராசைக்கு மட்டுமே வழிவகுக்குமே
அன்றி,
துளி கூட அமைதியை தராது. எத்தனை பொருட்களை சேர்த்தாலும் உற்சாகம்
வராது. அதனால் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அவ்வளவு மகரயாழ் உடைமைகள் மட்டுமே
ஒருவருக்குப் போதும்.
༺🌷༻
5. நிலையற்ற தன்மையை
ஏற்றுக் கொள்ளுங்கள்:
வாழ்க்கை ஒரு நிலையற்ற
தன்மையைக் கொண்டது. ‘நாம் எல்லாம் ஒரு நாள் இறக்கப் போகிறோம்’ என்ற எண்ணத்தை முற்றிலும்
புறக்கணித்து வாழ்கிறோம். ஆனால், ஜென் தத்துவம் இதைத் தவறு என்று
கூறுகிறது. நிலையற்ற தத்துவத்தை அறிந்து கொண்டால்தான் வாழும் வாழ்க்கையை
மகிழ்ச்சியாக வாழ்வோம் என்று கூறுகிறது.
༺🌷༻
6. எல்லாவற்றிலும்
சமத்துவம்:
நாம் பார்க்கும் வேலை
மற்றும் குடும்பம் இரண்டிற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நிறைய பேர்
குடும்பத்துக்கு முன்னுரிமை அளித்து விட்டு வேலையை அரைகுரையாக செய்வார்கள்.
இன்னும் சிலர் அலுவலக வேலையில் ஆழ்ந்த கவனம் செலுத்தி விட்டு குடும்பத்தினரைக்
கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். ஆனால் இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும்.
༺🌷༻
7. தியானம் செய்யுங்கள்:
தினமும் 20 நிமிடங்கள்
தியானம் செய்து, சுவாசத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் மன அமைதி
அடையலாம். மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கலாம். அந்த நாளைக்கான தெம்பை தியானம்
செய்வதன் மூலம் பெறலாம். எத்தனையோ குழப்பங்களை சந்தித்தாலும் தியானத்தின் உதவியால்
மனம் எதற்கும் அலைபாயாமல் அமைதியாக இருக்கும்.
༺🌷༻
8. பிறருக்கு உதவுங்கள்:
சுயநலமாக வாழ்வது
நல்லதல்ல. இயற்கை ஒருபோதும் சுயநலமாக இருப்பதில்லை. எனவே, மனிதர்கள் பிறருக்கு
உதவி,
அதன் மூலம் மகிழ்ச்சி மற்றும் மனதிருப்தியை அடையலாம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
வெற்றியாளர்கள் : நிம்மதியான வாழ்க்கைக்கு "ஜென் தத்துவம்" சொல்லும் 8 வாழ்க்கைப் பாடங்கள்! - ஒரு விஷயத்தில் மட்டும் கவனம், கட்டுப்படுத்த முடியாததை விட்டு விடுதல் [ ] | Winners : 8 Life Lessons From "Zen Philosophy" For A Peaceful Life! - Focusing on one thing only, letting go of the uncontrollable in Tamil [ ]