81 அடி உயர சிவபெருமான் சிலை.......

நக்கீரரால் வணங்கப்பட்ட சிவபெருமான் அருளும் ஆலயம் எது தெரியுமா.....?

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

81 feet tall statue of Lord Shiva - Do you know which temple of Lord Shiva is worshiped by Nakkeer? in Tamil

81 அடி உயர சிவபெருமான் சிலை....... | 81 feet tall statue of Lord Shiva

அதன் அருகில் 7 அடி உயர அளவிற்கு நக்கீரன் சிலை..... சிறிய கிராமம் என்றாலும் இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள 20 சிற்றூர்களின் திருமணங்கள் இந்த திருத்தலத்தில் தான் நடைபெறுகின்றன . இந்த தலத்தின் சிறப்பை அறிய..... படிக்கலாம். வாருங்கள்.......

81 அடி உயர சிவபெருமான் சிலை.......

அதன் அருகில் 7 அடி உயர அளவிற்கு நக்கீரன் சிலை.....

சிறிய கிராமம் என்றாலும் இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள 20 சிற்றூர்களின் திருமணங்கள் இந்த திருத்தலத்தில் தான் நடைபெறுகின்றன .

இந்த தலத்தின் சிறப்பை அறிய.....

படிக்கலாம். வாருங்கள்.......

நக்கீரரால் வணங்கப்பட்ட சிவபெருமான் அருளும் ஆலயம் எது தெரியுமா.....?

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சியின் மையப்பகுதியில் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்திருக்கிறது ஒப்பில்லாமணி உடனுறை மெய்நின்றநாதர் திருக்கோயில். இக்கோயிலின் முன்னே உள்ள தடாகத்தில் 2016ம் ஆண்டு கட்டப்பட்ட பீடத்துடன் சேர்த்து 81 அடி உயரமுடைய நின்ற நிலையில் உள்ள சிவபெருமானின் சிலை உள்ளது. இந்த சிலையே தென்னிந்தியாவின் உயரமான சிவன் சிலை எனவும் கூறப்படுகிறது.

 

சங்க காலத்தில் நக்கீரருக்கும் சிவபெருமானுக்கும் நடந்த வார்த்தைப் போருக்குப் பிறகு இந்தத் திருத்தலத்திற்கு வந்த நக்கீரர், இக்கோயிலில் முன்னிருக்கும் தடாகத்தில் நீராடி விட்டு ஈர மேனியோடு ஈசனிடம் சென்று தனது வாதத்தில் என்ன தவறு என்று முறையிட்டதாக இக்கோயில் வரலாறு கூறுகிறது.

நக்கீரரால் வழிபாடு செய்யப்பட்ட திருத்தலம்

என்பதால்தான் இந்த ஊருக்கு நக்கீரமங்கலம் என்ற பெயர் உருவானதாகவும், அதுவே மருவி கீரமங்கலம் என அழைக்கப்பட்டதாகவும் இந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.

தடாகத்தின் நடுவே இருக்கும் எண்பத்தி ஒரு அடி சிவன் சிலைக்கு நேராக கோயிலின் முன்னர் ஏழரையடி உயரத்தில் புலவர் நக்கீரருக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கருவறையில் மெய்யே உருவாக மெய்நின்ற

நாதர் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறத்தில் தெற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார் அம்பிகை ஒப்பிலாமணி.

 

கோயில் பிராகாரத்தில் விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் மற்றும் பைரவர் என அருள்பாலிக்கின்றனர். இத்தல இறைவனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. ஏறத்தாழ 1,000 ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றை உடைய இக்கோயிலுக்கு 800 ஆண்டுகளுக்குப் பிறகு 2016 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கீரமங்கலத்தை சுற்றி இருக்கும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளவர்களின் வீட்டுத் திருமணங்கள் இந்தக் கோயில் வளாகத்தில் நடைபெறுவது கூடுதல் சிறப்பாகும்.

தெரிந்து கொள்வோம்.....


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : 81 அடி உயர சிவபெருமான் சிலை....... - நக்கீரரால் வணங்கப்பட்ட சிவபெருமான் அருளும் ஆலயம் எது தெரியுமா.....? [ ] | Spiritual Notes: sivan : 81 feet tall statue of Lord Shiva - Do you know which temple of Lord Shiva is worshiped by Nakkeer? in Tamil [ ]