திருவாரூருக்கு அருகில் உள்ள அற்புதமான திருத்தலம், திருக்கண்ணபுரம். இந்தத் தலத்து நாயகனின் திருநாமம்- ஸ்ரீசௌரிராஜப் பெருமாள். மூலவர்- ஸ்ரீநீலமேகப் பெருமாள். ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீகண்ணபுரநாயகி மற்றும் ஸ்ரீஆண்டாள் என நான்கு தாயார்களுடன் திருமால் அருள் பாலிக்கும் ஒப்பற்ற க்ஷேத்திரம் இது! கோயிலுக்குத் தென்புறம் உள்ள தடாகத் தீர்த்தக் குளத்தை பூதம் ஒன்று காத்து வருவதாகவும், அங்கிருந்தபடி ஸ்ரீசௌரிராஜப் பெருமாளை நினைத்து தவமிருந்து வருவதா கவும் ஐதீகம். இந்தத் தடாகத்தை பூதாவட தீர்த்தக் குளம் என்பார்கள். இந்தக் குளத்தில் நீராடிவிட்டு, பெருமாளை அர்ச்சித்து ஸேவித்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்; நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது நம்பிக்கை. மிகப் பிரமாண்டமான, புராதனமான இந்த ஆலயம், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்விய தேசம். ராஜகோபுர நுழைவாயிலைக் கடந்து செல்லும்போது, பெருமாள் சந்நிதியை நோக்கி ஒரே வட்டத்தில் ராசி மண்டலம் அமைந்துள்ளது. நவக்கிரகங்களும் ஐக்கியமாகி இருக்கிற ராசி மண்டலக் கட்டத்தின் நடுவில், ஸ்ரீதேவி- பூதேவியுடன் பெருமாள் தரிசனம் தருகிறார். வேறெங்கும் காண்பதற்கு அரிதானது இந்த நவக்கிரகக் கட்டங்கள் எனச் சிலாகிக்கின்றனர், பக்தர்கள்! இந்த நவக்கிரகக் கட்டங்களுக்குக் கீழே நின்றபடி, பெருமாளை மனதாரப் பிரார்த்தித்தால், நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!
🌹 9 படித்துறைகள்...
9 நெய்தீபம்... 9 வார தரிசனம்🌹
திருவாரூருக்கு அருகில் உள்ள அற்புதமான திருத்தலம், திருக்கண்ணபுரம். இந்தத் தலத்து நாயகனின் திருநாமம்- ஸ்ரீசௌரிராஜப் பெருமாள். மூலவர்-
ஸ்ரீநீலமேகப் பெருமாள். ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீகண்ணபுரநாயகி மற்றும் ஸ்ரீஆண்டாள் என நான்கு தாயார்களுடன் திருமால் அருள் பாலிக்கும்
ஒப்பற்ற க்ஷேத்திரம் இது!
கோயிலுக்குத் தென்புறம் உள்ள தடாகத் தீர்த்தக்
குளத்தை பூதம் ஒன்று காத்து வருவதாகவும், அங்கிருந்தபடி ஸ்ரீசௌரிராஜப் பெருமாளை நினைத்து தவமிருந்து வருவதா கவும் ஐதீகம்.
இந்தத் தடாகத்தை பூதாவட தீர்த்தக் குளம் என்பார்கள்.
இந்தக் குளத்தில் நீராடிவிட்டு, பெருமாளை அர்ச்சித்து ஸேவித்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்; நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது நம்பிக்கை.
மிகப் பிரமாண்டமான, புராதனமான இந்த ஆலயம், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்விய
தேசம். ராஜகோபுர நுழைவாயிலைக் கடந்து செல்லும்போது, பெருமாள் சந்நிதியை நோக்கி ஒரே வட்டத்தில் ராசி மண்டலம் அமைந்துள்ளது.
நவக்கிரகங்களும் ஐக்கியமாகி இருக்கிற ராசி மண்டலக்
கட்டத்தின் நடுவில், ஸ்ரீதேவி- பூதேவியுடன் பெருமாள் தரிசனம் தருகிறார்.
வேறெங்கும் காண்பதற்கு அரிதானது இந்த நவக்கிரகக் கட்டங்கள் எனச் சிலாகிக்கின்றனர், பக்தர்கள்!
இந்த நவக்கிரகக் கட்டங்களுக்குக் கீழே நின்றபடி, பெருமாளை மனதாரப் பிரார்த்தித்தால், நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!
கோயில் திருக்குளத்தில் ஒன்பது படித்துறைகள் உள்ளன.
அவை, ஒன்பது கிரகங்களுக்கு உரிய படித்துறைகள் என்கிறது
ஸ்தல புராணம்.
ஜாதகத்தில் குறைபாடுகள் உள்ளவர்கள், செவ்வாய் முதலான தோஷம் உள்ளவர்கள், தொடர்ந்து ஒன்பது வாரங்கள், திருக்குளத்தில் நீராடி, நவக்கிரகங்களுக்கு ஒன்பது நெய் தீபங்களேற்றி, பெருமாளை சேவித்துத் தொழுது வந்தால், கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் .
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : 9 படித்துறைகள் 9 நெய்தீபம் 9 வார தரிசனம் - குறிப்புகள் [ ] | Spiritual Notes: Temples : 9 steps 9 Neydeepam 9 week darshan - Notes in Tamil [ ]