சிக்கனம் என்பதற்கு ஆங்கில அகராதியில் "Frugality" என்று கூறுவார்கள். சிக்கனம் என்பதை பலவாறு நாம் விளக்கலாம்.
வாழ்க்கைக்குச் சிறந்த
வழி.
சிக்கனம்
என்பதற்கு ஆங்கில அகராதியில் "Frugality" என்று
கூறுவார்கள். சிக்கனம் என்பதை பலவாறு நாம் விளக்கலாம்.
உலகின்
மாபெரும் பொருளாதார மேதைகளுள் ஒருவராகிய வாரன் பஃபெட் ( Warren Buffet) சேமிப்புப்
பற்றிக் கூறும் போது, இப்படிச் சொல்கின்றார்,
"உங்களின்
வருமானத்தில், முதல் செலவு சேமிப்பாக
இருக்கட்டும்; உங்கள் வருமானத்தில், சேமிப்புப்
போக மீதியைச் செலவு செய்யுங்கள்"
சேமிப்பின்
அடிப்படையே சிக்கனம் தான். வளங்களை வீணடிக்காமல், திறமையாகக்
கையாள்வதை இது குறிக்கும்.
அதாவது
அவசியத் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வது. சிக்கனமும், சேமிப்பும்
ஒரு குடும்பத்துக்கு மட்டும் பயன் அளிப்பதில்லை.
நாட்டின்
பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது
பொதுவாக, செலவு
செய்வதைக் கஞ்சத்தனம், சிக்கனம், ஆடம்பரம், ஊதாரித்தனம்
என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
கஞ்சத்தனம்
என்பது,
அவசியத்
தேவைகளைக் கூட நிறைவேற்ற மனம் இல்லாதவர்களைக் குறிக்கும். இது அவர்களின்
வாழ்க்கையில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.
சிக்கனம்
என்பது,
தகுதியறிந்து
செலவு செய்வது. இது சுமூகமான வாழ்க்கைக்கு சிறந்த வழி.
மூன்றாவதாக
ஆடம்பரம் என்பது,
மற்றவர்களிடம்
வசதியானவன் எனக் காட்டுவதற்காக தகுதிக்கு மீறிச் செலவு செய்வது.
நான்காவதாக
உள்ள ஊதாரித்தனம் என்பது,
கண்மூடித்தனமாக
தேவையில்லாத செலவுகளைச் செய்வது. இது அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.
சேமிப்புப்
பழக்கத்தை எறும்பு, தேனீக்கள் ஆகியவற்றில் இருந்து
கற்றுக் கொள்ளலாம். நமது முன்னோர்கள் இப்பழக்கத்தைச் சரியாகச் செய்தனர். பணத்தை
மட்டும அல்லாமல், பண்டங்களையும் சேமித்தனர்.
இன்றையக்
காலகட்டத்திலும் நம் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, இருக்கும்
போதே சேமித்துக் கொள்ளும் பழக்கத்தை, சிறு வயது முதல் குழந்தைகளுக்கு
ஏற்படுத்த வேண்டும். நாமும் பழக வேண்டும்.
குடும்பத்தில்
அனைவரும் சிக்கனமாக இருந்தால் தான் சேமிப்பு உருவாகும்..
*இன்று
வரை
சிக்கனம்
என்றால் என்ன என்று கேட்பவராக இருந்தாலும் பரவாயில்லை.
இனியாவது
சேமிக்கத் தொடங்குங்கள்.
சிக்கனமும், சிறு
சேமிப்பும் தான் மகிழ்வான வாழ்விற்கு வழி வகுக்கும்.
⏱⏱⏱⏱⏱⏱⏱⏱⏱
கஷ்டபடுவதில்தான்
இன்பம் இருக்கிறது. எனவே கஷ்டத்தை எதிர்கொள்ள தன்னை ஆயத்தப்படுத்திக்
கொள்பவனே சிறந்த மனிதன்.....!!!!
எல்லோரிடமிருந்தும்
கற்றுக் கொள்பவனே ஆகச் சிறந்த
மனிதன்....!!!!!
நமது
மனிதநேயத்தின் அளவை அளக்கும் கருவி.., நாம்
பிறருக்கு உதவி செய்யும் போது ஏற்படும் மகிழ்ச்சியின்
அளவைப் பொறுத்தது.......!!!!
எதிலும்
துணிந்து பங்கேற்று பல்வேறு அனுபவங்களையும் கடப்பதில்
மட்டுமே வாழ்க்கை நேராகும், சீராகும்....!!!!
கஷ்டப்பட்டு
முன்னேறுவதில் தான வாழ்க்கை திடமாக இருக்கும்..
வீட்டுக்கு அழைத்து உணவு கொடுத்தால் அது விருந்தாகும்..!
கேட்டபின் கொடுத்தால் அது பிச்சையாகும்..!
இருக்கும் இடம் தேடி சென்று
கொடுத்தால் அது தர்மமாகும்..!
யார் என்று தெரியாமல் கொடுத்தால் அது தானமாகும்..!💞💞
ஒரு பெரும் கூட்டத்துடன்
தவறான திசையில் பயணிப்பதை விட தனி ஒருவராக நேர்வழியில் பயணிப்பது தான் சிறந்தது.
-
கெளதம புத்தர்.
இதுபோன்ற பல பயனுள்ள
தகவல்களுடன் நமது ஆன்மீக பயணம் தொடரும்!
இறைபணியில்
அன்புடன்....
༺🌷༻தமிழர் நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க 🙌 வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை
பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
ஊக்கம் : வாழ்க்கைக்குச் சிறந்த வழி. - குறிப்புகள் [ ஊக்கம் ] | Encouragement : A better way to live. - Tips in Tamil [ Encouragement ]