வில்வமரம், சிவனின் இருப்பிடமாகத் திகழும் இமய மலையில் அதிகம் காணப்படுகின்றது.
ஸ்ரீ விருட்சம் எனப்படும் வில்வம்!
வில்வமரம், சிவனின் இருப்பிடமாகத் திகழும் இமய
மலையில் அதிகம் காணப்படுகின்றது. இதிலிருந்தே சிவபெருமானுக்கும் வில்வமரத்திற்கும்
இடையிலான தொடர்பை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
சிவ அர்ச்சனையில் முக்கிய இடம் வில்வத்
தளத்திற்கே உண்டு. வில்வத்தினால் சிவனை அர்ச்சித்து வழிபடுவது பாவங்களைப் போக்கும்
என்பது ஐதீகம்!
வில்வத்தின் மூன்று இலைகள், சிவ பெருமான் ஏந்தியுள்ள திரிசூலத்தின்
வடிவத்தையும், சிவனின் முக்கண்களையும் உணர்த்துவதாகக்
கூறுவர்.
பிரதோஷ காலத்தில் சிவலிங்கத்தை வில்வம்
கொண்டு 'ருத்ர த்ரிசதி' என்ற நாமார்ச்சனை செய்வதனால் கிடைக்கக்கூடிய
பெரும் பலன் பற்றி காளஹஸ்தி புராணம் தெளிவாக எடுத்து உரைக்கின்றது. வில்வ மரப் பலகையின்
மீது கணபதி மகாலட்சுமி மந்திரங்களை வரைந்து பூஜித்துவந்தால், வீட்டில் சகல சௌபாக்யங்களும் உண்டாகும்
என்பது ஆன்றோர் வாக்கு. வில்வ மரம் வளர்ப்பதால் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்
என்பதும் ஐதீகமாக இருந்து வருகிறது. அத்தோடு, ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்த பலனும் கிடைக்கும் என்று
கருதப்படுகிறது. மேலும் சுங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் கிடைக்கும்.
காசி முதல் ராமேஸ்வரம் வரையுள்ள புண்ணிய சில தலங்களுக்குச் சென்று வழிபட்ட பலன் உண்டாகும்!.
வில்வ இலைகளை பூஜைக்காகப் பறிக்கும்போது, சிவ நாமத்தை உச்சரித்துக் கொண்டே பறிக்க வேண்டும்!.
இந்த வில்வ இலைகளை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் பறிக்கக்கூடாது
என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பூமியில் விழுந்த வில்வ தளங்கள், பூச்சிகள் அரித்த வில்வ இலைகள் ஆகியவற்றை
பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது.
வில்வமரத்தில் மஹாலட்சுமி வாசம் செய்வதாகவும்
ஒரு கூற்று இருக்கிறது. எனவே வில்வ இலைகளை சிவன் காலடியில் சமர்ப்பித்து அர்ச்சனை செய்யும்போது, 'எல்லா செல்வங்களையும் உன் திருவடிகளில்
அர்ப்பணித்து விட்டு உன்னைச் சரணடைகிறேன்....' என்று கூறி வழிபட வேண்டும். விசேஷப் பலன் தரும் இந்த வில்வத்தை
வீட்டிலும் வளர்க்கலாம். ஸ்ரீ விருட்சம்' எனப்படும் இந்த வில்வம் நம் குடும்பத்தை மேன்மைப்படுத்தும்!.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : ஸ்ரீ விருட்சம் எனப்படும் வில்வம்! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : A bow called Sri Vrutsam! - Tips in Tamil [ spirituality ]