அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவது தெரிந்த விஷயம். ஆனால், 17ஆம் நூற்றாண்டில் நேபாளத்தில் துர்க்கைக்கு நாக்கையறுத்துப் படையல் செய்யும் பழக்கம் இருந்தது.
வித்தியாசமான படையல்!
அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவது தெரிந்த
விஷயம். ஆனால், 17ஆம் நூற்றாண்டில் நேபாளத்தில் துர்க்கைக்கு
நாக்கையறுத்துப் படையல் செய்யும் பழக்கம் இருந்தது.
காத்மாண்டுவிலிருந்து 32 கி.மீ கிழக்கில் இருக்கும்
நாகர்கோட்டில் இந்தப்பழக்கம் இருந்து வந்தது!. வேறு எத்தனையோ விதமான படையல்கள் துர்க்கைக்கு
அளிக்கப்பட்டாலும், மிகவும்
முக்கியமானதும் பயங்கரமானதும் இந்த மனிதர்களின் நாக்கு அறுப்புப் படையல் தான்!!.
நாக்கை அறுத்தெடுத்து துர்க்கைக்குப்
படையலிட்டால் நினைத்தது நிறைவேறும். மறு நாளே அறுந்த நாக்கு மீண்டும் வளர்ந்து விடுமாம்!!.
கர்நாடக மாநிலத்திலும் பழங்காலத்தில்
இது நடைபெற்று வந்ததாம். முகலாயர்கள் குற்றவாளிகளின் நாக்கையறுப்பதை ஒரு தண்டனையாகக்
கடைப்பிடித்தனர்.
மகாகவி காளிதாஸ் வாழ்ந்த காலத்திலும்
காளி தேவியின் அருளைப் பெறுவதற்குப் பெண்கள் விரதம் மேற்கொண்டு, நாக்கை அறுத்துப் படையலிட்டதாகச் சரித்திரச்
சான்றுகள் உள்ளன. இலங்கையில் நுவரேலியாவில் இப்போதும் கூட ஒரு திருவிழாவின் போது நாக்கை
அறுத்துப் படையலிட்டுத் தெய்வ வழிபாடு நடத்தப்படுகிறது!.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : வித்தியாசமான படையல்! - அம்மன் [ அம்மன் ] | Amman: History : A different army! - Amman in Tamil [ Amman ]