மகள்களை பெற்ற அப்பாவா?

கன்னிகாதானம்

[ இல்லறம்: உறவுகள் ]

A father of daughters? - Kannikadanam in Tamil



எழுது: சாமி | தேதி : 24-06-2023 11:21 am
மகள்களை பெற்ற அப்பாவா? | A father of daughters?

உங்களுக்கான பதிவு தான் இது. அப்பா என்று முதல் முறை என் அழைப்பை கேட்டு எப்படி ஆனந்தம் அடைந்திருப்பார் என்று...

மகள்களை பெற்ற அப்பாவா?


உங்களுக்கான பதிவு தான் இது.

அப்பா என்று முதல் முறை என் அழைப்பை கேட்டு எப்படி ஆனந்தம் அடைந்திருப்பார் என்று...

என் பிள்ளை எனை அழைத்த போது உணர்ந்தேன்..

அந்த ஒற்றை சொல்

முதல் முறை கேட்க்கும் போது தோன்றும் ..

மீண்டும் ஒர் ஆயிரமுறை பிறந்திட மாற்றோமா என்று....

மகளை பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பணம்

 

கன்னிகாதானம்:

 

"கன்னிகாதானம்" என்றால் என்ன?


 

வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள்.

 

நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.

 

ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!


 

திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி

.

'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,

மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..' என்று அந்த மந்திரம் நீள்கிறது.

 

அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.


 

உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.


ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!

 

ஆக, பெண் பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம் சொல்கிறது...

மகள்களுக்காக தந்தை எப்படி எல்லாம் மாறுகிறார்கள் என்பதை புராண கதை வாயிலாக தெரியலாம். நாம் அனைவரும் அறிந்த கதை தான். வசிஷ்டர் எவ்ளவோ விஸ்வாமித்திரர் தவஉலகத்தை தெரிந்தும் ரிஷி பட்டத்தை கொடுக்க மறுக்கிறார். விஸ்வாமித்திரரும் அதை எதிர் பார்த்த போது வசிஸ்டர் கொடுக்கவில்லை. கோவம், வீராப்பு கொண்ட விஸ்வாமித்திரரை தலை குனிய வாசற் படியை தாழ்த்தி வைத்தும் பார்த்தார். அவரோ பின்னாடி தலையை சாய்ச்சி, நெஞ்சை நிமிர்த்தி உள்ளே சென்றார். மனுசனை ஜெய்க்க முடிய வில்லை. ஆனால் அவரும் தன் மகளின் திருமணத்திற்காக தலை குனியும் போது தான் அவருக்கு ரிஷி பட்டம் கிடைத்தது. இப்பொழுது விச்வாமுத்திரர் கேட்கிறார் வசிஷ்டரிடம். நான் எதிர் பார்த்த போது கிடைக்காத பட்டத்தை, இப்பொழுது எதிர் பார்க்காத சமயத்தில் தருகிரேரே என்ன என்று கேட்கும் பொழுது அவர் சொல்வதே உலகின் தலை சிறந்த பண்பே இந்த அன்பு தான். மகளின் அன்பிற்காக விட முடியாத அனைத்தையும் விட்டு கொடுக்கும் இந்த செயலே உலகை வெல்லும் மந்திரம். ஆயுதம். ஆயுதத்தை எடுக்க நேர்ந்தால் அன்பை ஆயுதமாக எடுங்கள். அது உங்களையும், சமுகத்தையும் பாதுகாக்கும்.


எப்படியொரு வாய்ப்பு! அந்த வாய்ப்பை பெற்ற அனைவரையும் ஆண்டவன் வள்ளல் ஆக்கி அழகு பார்ப்பான். சோதனைகள் வரும் அது சாதனைகளாக மாறும். 


பெண்கள் சாதிக்கும் துறையே இப்ப எதுவும் கிடையா நிலைக்கு வந்து விட்டது. ஆட்டோ ஓட்டுனர் ஆனாலும் சரி, ராக்கெட் செல்லும் நபர் ஆனாலும் பெண்கள் இருக்கிறார்கள். 

பெண்கள் நாட்டின் கண்கள் தான். அந்த பெண்களை கண்ணும் கருத்துமாகப் பார்க்கும் கண்களில் முதலில் தந்தை என்னும் ஆண் தான் முதலில் வருகிறார். அடுத்து கணவன் என்னும் ஆண்கள் தான் இரண்டாம் கட்டத்தில் இருக்கிறார். அடுத்து மகனாக மூன்றாம் கட்டத்திலும் ஆண்கள் இருக்கிறார்கள். வளரட்டும் தலை முறை! வாழ்த்தட்டும் ஒவ்வொரு முறையும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

இல்லறம்: உறவுகள் : மகள்களை பெற்ற அப்பாவா? - கன்னிகாதானம் [ இல்லறம் ] | Household: Relationships : A father of daughters? - Kannikadanam in Tamil [ domesticity ]



எழுது: சாமி | தேதி : 06-24-2023 11:21 am