நாம் சாதாரணமாகச் சண்டைக்கு வருபவரைப் பார்த்தால். கைவிரல்களை மடக்கியபடி முஷ்டி முத்திரையில்தான் வருவார். இவ்வாறு கைமுட்டி என்று அழைக்கப்படும் முறையில் கையை (படத்தில் உள்ளபடி) வைப்பதுதான் முஷ்டி முத்திரையாகும்.
அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும் முஷ்டி முத்திரை
நாம் சாதாரணமாகச்
சண்டைக்கு வருபவரைப் பார்த்தால். கைவிரல்களை மடக்கியபடி முஷ்டி முத்திரையில்தான்
வருவார். இவ்வாறு கைமுட்டி என்று அழைக்கப்படும் முறையில் கையை (படத்தில் உள்ளபடி)
வைப்பதுதான் முஷ்டி முத்திரையாகும்.
இந்த முத்திரை, அஜீரணக் கோளாறுகளை சரி
செய்யும். நமக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம், கோபமும், சண்டையும்தான். இதற்கு, உடல் நிலையில் உள்ள சில
நோய்களே காரணமாக உள்ளன.
கல்லீரலின் பலமின்மை, அஜீரணக் கோளாறுகள், அதைத் தொடர்ந்து வரும்
மலச்சிக்கல்,
இதயக் கோளாறுகள், படபடப்பு ஆகியவை, கோபப்படுவதற்கும்
பிறருடன் சண்டை செய்வதற்கும் காரணமாக உள்ளன.
இந்த முஷ்டி முத்திரையை
தொடர்ந்து செய்துவந்தால், கோபமும், அதனால் ஏற்படும் விளைவுகளும் கட்டுப்படுத்தப்படும். மனமும்
அமைதியாகும்.
கட்டை விரலைத் தவிர மற்ற
நான்கு விரல்களையும், இறுக உள்ளங்கையில் படியும்படி வைத்து, அழுத்தம் கொடுக்கவும்.
கட்டை விரலை மடித்து மோதிர விரலின் மேல் வைத்து அழுத்திப் பிடித்துக் கொள்ள
வேண்டும். இவ்வாறு விரல்களை இறுக்கமாக வைத்து இம்முத்திரையைச் செய்ய வேண்டும்.
இம்முத்திரையை அமர்ந்த
நிலையிலோ அல்லது நின்றுகொண்டோ செய்யலாம். கையைத் தவிர உடலின் மற்ற பாகங்கள்
தளர்வாக இருக்க வேண்டும்.
சுவாசம் ஒரே சீராக
இருக்க வேண்டும். ஆரம்ப நிலையில் கோபமும், சண்டை போடும் எண்ணமும் உருவாகலாம். அந்த நேரத்தில்
முத்திரையை நிறுத்த வேண்டும். சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து
செய்யலாம்.
15 நிமிடங்கள் வீதம்
மூன்று வேளைகளிலும் செய்யலாம். இம் முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, மனத்தில் இருக்கும்
கோபம், பழிவாங்கும் உணர்ச்சி, சண்டையிடுவதில் வேகம்
ஆகியவை கட்டுப்படும். மனதெதில் அமைதி ஏற்படும். சிலர் எடுத்ததற் கெல்லாம்
உணர்ச்சிவசப்படுவார்கள். அவர்களுக்கு இந்த முத்திரை நல்ல பலனைத் தரும்.
1. கல்லீரல் பலம் பெற்று
நன்கு செயல்படும்.
2. அஜீரணக் கோளாறுகள்
நீங்கும்.
3. மலச் சிக்கல்
நீங்கும்.
4. நன்றாகப் பசி
எடுக்கும்.
5. தன்னம்பிக்கை
உண்டாகும்.
6. படபடப்பு நீங்கும்.
7. இதயக் கோளாறுகள்
அகலும்.
8. மனம் அமைதியாகும்.
9. கோபம் குறையும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும் முஷ்டி முத்திரை - செய்முறை, நேர அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : A fist seal that cures indigestion - Recipe, time scale, benefits in Tamil [ ]