ஹாக்கினி முத்திரை ஒன்று போதுமே கவனம் உருவாக

செய்முறை, பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

A Hockney logo is enough to generate attention - Recipe, Benefits in Tamil

ஹாக்கினி முத்திரை ஒன்று போதுமே கவனம் உருவாக | A Hockney logo is enough to generate attention

ஆக்ஞை என்றால் ஆணை என்று பொருள். ஆக்ஞா சக்கரத்தின் அதி தேவதை ஹாக்கினி என்பதாகும்.

ஹாக்கினி முத்திரை ஒன்று போதுமே கவனம் உருவாக:

ஆக்ஞை என்றால் ஆணை என்று பொருள். ஆக்ஞா சக்கரத்தின் அதி தேவதை ஹாக்கினி என்பதாகும். 

நமது உடலில், ஆறாவது சக்கரமாக ஆக்ஞா சக்கரம் உள்ளது. இந்த ஹாக்கினி, வெள்ளை வடிவம் உடையவள். இவளுக்கு ஆறு சிவந்த முகங்கள். ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள். ஆறு கைகள் உண்டு. இந்தச் சக்கரம், இடது பக்க மூளையை நன்கு செயல்படச் செய்கிறது. பிட்யூட்டரி சுரப்பி மற்றும் நரம்பு மண்டலத்தை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கிறது. மேலும், இந்தச் சக்கரம் வலது கண் மற்றும் வலது பக்க உடல் உறுப்புகளைப் வலுவாக்குகிறது.

இந்தச் சக்கரம் நன்கு செயல்பட ஹாக்கினி முத்திரை உதவுகிறது. இந்த முத்திரையை எங்கும், எந்த நேரத்திலும் செய்யலாம். அறிவை விருத்தி செய்யக்கூடியது. இதை முறையாகப் பயிற்சி செய்தால், பல அதிசய நிகழ்வுகளை உருவாக்கும்.

இந்த முத்திரையைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நமது தலையில் வலது பக்க மூளை, இடது பக்க மூளை என இரு பகுதிகள் உள்ளன. பெரும்பாலும், ஏதாவது ஒரு பக்க மூளைதான் வேலை செய்யும். ஹாக்கினி முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால், வலது பக்க மூளையும், இடது பக்க மூளையும் இணைந்து செயல்படும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

செய்முறை

வலது கை விரல் நுனிகளை இடது கை விரல் நுனிகளுடன் இணைக்க வேண்டும். இதுவே ஹாக்கினி முத்திரை. ஒரு விரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும். அதிக அழுத்தம் தராமல், சாதாரணமாகத் தொட்டுக் கொண்டிருந்தால் போதும். ஆக்ஞா சக்கரம் நெற்றிப் பகுதியில் உள்ளது. கண்களை மேல் நோக்கியபடி ஆக்ஞா சக்கரத்தைப் பார்க்க வேண்டும். நாக்கின் நுனியை மேல் தாடையில் பல் இணைந்திருக்கும் ஈறுப் பகுதியில் வைத்துக் காற்றை உள்ளிழுக்க வேண்டும். மீண்டும் நாக்கை கீழ்ப்புறம் கொண்டுவந்து மூச்சுக் காற்றை வெளியே விட வேண்டும். ஞாபக சக்திக்காகக் கொடுக்கப்படும் பயிற்சிகளில் இந்த ஹாக்கினி முத்திரையும் பரிந்துரைக்கப்பட்ட ஒன்று. இந்த முத்திரை, ஞாபக சக்தி சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வலது பக்க மூளையை நன்கு செயல்பட வைக்கிறது. சுவாசக் குழாய்களை நன்கு செயல்பட வைத்து, அதன்மூலம் மூளையை சுறுசுறுப்படையச் செய்து, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

பலன்கள்

1. கவனச் சிதறல் தடுக்கப்படும்.

2. வலது மற்றும் இடது பக்க மூளை இணைந்து செயல்படும்.

3. மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படும் பாதிப்புகளால் பேச்சு வராமல் இருக்கும். இந்தப் பாதிப்பை, இந்த முத்திரை ஓரளவுக்குக் குணப்படுத்தும்.

4. ஞாபக சக்தி அதிகரிக்கும்.

5. செய்யும் வேலையில் முழு ஈடுபாடு கொள்ளச் செய்யும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : ஹாக்கினி முத்திரை ஒன்று போதுமே கவனம் உருவாக - செய்முறை, பலன்கள் [ ] | Yoga Mudras : A Hockney logo is enough to generate attention - Recipe, Benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்