ஒரு இளம் பெண் தன் தந்தையிடம் சென்று, "அப்பா, எனக்கு ஒரு மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடத்தைக் சொல்லிக்கொடுங்கள். ஒரு இளம் பெண்ணாக, நான் என்னை நன்கு புரிந்துகொண்டு என் வாழ்க்கையில் வரும் சவால்களை சமாளிக்க கற்றுக்கொள்ள விரும்புகிறேன். தந்தை ஒரு கணம் யோசித்தார், பின்னர் தனது தொண்டையை செருமிவிட்டு, "ஒரு சோகமான இளவரசியைப் பற்றிய கதையைச் சொல்கிறேன். கதையை கவனமாகக் கேளு. மாயா என்ற அழகான இளம் வயது இளவரசி ஒருவள் இருந்தாள். அவள் மிக அழகாகவும், பிரகாசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாள். அவளுடைய அன்பும், பிரகாசமான அழகும் அவளைச் சுற்றியுள்ள அனைத்தையும் பிரகாசமாக்கியது. 21 வயதில், இளவரசி மாயா தொலைதூர இராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார இளவரசனை மணந்தார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு, அவள் நினைத்த இனிமையான வாழ்க்கை அவளுக்கு அமையவில்லை. ஏனென்றால் அவளுடைய கணவர் அடிக்கடி அவளை அடித்து துன்புறுத்துவதும், வன்முறையில் ஈடுபடுவதுமாக இருந்தார். தினமும் கொடுமைகளை அனுபவித்தாள். அவள் மிகவும் தனிமையை உணர்ந்தாள், மற்றவர்களால் நேசிக்கப்படவில்லை, அனைவராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டாள். ஒரு நாள், மாயா தனது தந்தையிடம் சென்று: அப்பா, என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க. நான் இனிமேல் இந்த திருமண வாழ்க்கையில் இருக்க மாட்டேன். என தனது துயரங்களை விவரித்தாள். இருப்பினும், அவரது தந்தை அதற்கு சம்மதிக்கவில்லை. திருமணமான பெண் கணவரை வேண்டாம் என்று விட்டுவிட்டு வருவது நம் சமுதாயத்திற்கே அவமானம். என்னால் வீட்டிற்கு உன்னை அழைத்துச் செல்ல முடியாது என்று கூறிவிட்டார். மாயா கண்ணீருடன் தனது தாயிடம் சென்று, "அம்மா, என் திருமண வாழ்க்கையை இனி என்னால் சமாளிக்க முடியாது. தயவுசெய்து என்னை வீட்டிற்கு வர விடுங்கள்! ".என்றாள். அம்மாவும் அதற்கு சம்மதிக்கவில்லை. திருமண வாழ்க்கை என்றால் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும். கவலைப்படாதே அவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுவார்... என்றார். மாயா, மிகுந்த வேதனையுடன் தனது நண்பர்களிடம் சென்று உதவி கேட்டாள். "என் கணவர் என்னை எப்போதும் அடிக்கிறார். நான் அவரை விட்டுவிட்டு வீட்டிற்கு வர விரும்புகிறேன்! ". என்னை காப்பாற்றுங்கள்... என்று அழுதாள். அவளுடைய நண்பர்கள் அவளை ஆறுதல்படுத்தி அறிவுரை கூறினர். "திருமணம் வாழ்க்கை எளிதானது அல்ல", இன்ப துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், போகப் போக அனைத்தும் சரியாகிவிடும். உன் கணவருடனே இரு என்று அறிவுரை கூறினர்.
அப்பா மகளிடம் சொன்ன வாழ்க்கை பாடம்!!!
ஒரு இளம் பெண் தன் தந்தையிடம் சென்று, "அப்பா, எனக்கு ஒரு மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடத்தைக்
சொல்லிக்கொடுங்கள். ஒரு இளம் பெண்ணாக, நான் என்னை நன்கு புரிந்துகொண்டு என் வாழ்க்கையில் வரும் சவால்களை சமாளிக்க கற்றுக்கொள்ள
விரும்புகிறேன்.
தந்தை ஒரு கணம் யோசித்தார், பின்னர் தனது தொண்டையை செருமிவிட்டு, "ஒரு சோகமான இளவரசியைப் பற்றிய கதையைச் சொல்கிறேன். கதையை கவனமாகக் கேளு.
மாயா என்ற அழகான இளம் வயது இளவரசி ஒருவள் இருந்தாள்.
அவள் மிக அழகாகவும், பிரகாசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாள். அவளுடைய
அன்பும், பிரகாசமான அழகும் அவளைச் சுற்றியுள்ள அனைத்தையும்
பிரகாசமாக்கியது. 21 வயதில், இளவரசி மாயா தொலைதூர இராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார இளவரசனை மணந்தார்.
ஆனால், திருமணத்திற்குப் பிறகு, அவள் நினைத்த இனிமையான வாழ்க்கை அவளுக்கு அமையவில்லை.
ஏனென்றால் அவளுடைய கணவர் அடிக்கடி அவளை அடித்து துன்புறுத்துவதும், வன்முறையில் ஈடுபடுவதுமாக இருந்தார். தினமும் கொடுமைகளை அனுபவித்தாள். அவள் மிகவும்
தனிமையை உணர்ந்தாள், மற்றவர்களால் நேசிக்கப்படவில்லை, அனைவராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டாள்.
ஒரு நாள், மாயா தனது தந்தையிடம் சென்று: அப்பா, என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க. நான் இனிமேல் இந்த திருமண வாழ்க்கையில்
இருக்க மாட்டேன். என தனது துயரங்களை விவரித்தாள். இருப்பினும், அவரது தந்தை அதற்கு சம்மதிக்கவில்லை. திருமணமான பெண் கணவரை வேண்டாம் என்று விட்டுவிட்டு
வருவது நம் சமுதாயத்திற்கே அவமானம். என்னால்
வீட்டிற்கு உன்னை அழைத்துச் செல்ல முடியாது என்று கூறிவிட்டார்.
மாயா கண்ணீருடன் தனது தாயிடம் சென்று, "அம்மா, என் திருமண வாழ்க்கையை இனி என்னால் சமாளிக்க முடியாது.
தயவுசெய்து என்னை வீட்டிற்கு வர விடுங்கள்! ".என்றாள். அம்மாவும் அதற்கு சம்மதிக்கவில்லை. திருமண வாழ்க்கை என்றால் நல்லது கெட்டது இருக்கத்தான்
செய்யும். கவலைப்படாதே அவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுவார்... என்றார்.
மாயா, மிகுந்த வேதனையுடன் தனது நண்பர்களிடம் சென்று உதவி கேட்டாள். "என் கணவர் என்னை
எப்போதும் அடிக்கிறார். நான் அவரை விட்டுவிட்டு வீட்டிற்கு வர விரும்புகிறேன்!
". என்னை காப்பாற்றுங்கள்... என்று அழுதாள். அவளுடைய நண்பர்கள் அவளை ஆறுதல்படுத்தி
அறிவுரை கூறினர். "திருமணம் வாழ்க்கை எளிதானது அல்ல", இன்ப துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், போகப் போக அனைத்தும் சரியாகிவிடும். உன் கணவருடனே இரு என்று அறிவுரை கூறினர்.
மாயா சோகமாகவும், மன உளைச்சலுடனும், விரக்தியுடனும் இருந்தாள். கணவனை விட்டு விலகுவதற்கான
அவளது முடிவை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவளுக்கு வேதனை அளித்தது. எப்படியாவது
இங்கிருந்து வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் இறைவனை வேண்டினாள்.
சில மாதங்களுக்குப் பிறகு, மாயா இறுதியாக தனது திருமண வாழ்க்கையை விட்டுவிட்டு தனது பெற்றோரிடம் வீடு திரும்பினார்.
அதுவே எனது கதையின் முடிவு "என்று கூறினார்.
கதையைக் கேட்டதும், அந்த இளம் பெண் ஆர்வத்துடன், கதை அவ்வளவுதானா? இதில் என்ன "வாழ்க்கை பாடம்" இருக்கிறது என்று கேட்டாள்.
தந்தை ஒரு கணம் நின்று, பின்னர் பெருமூச்சு விட்டு, "ஆம், மாயா இறுதியாக வீட்டிற்கு திரும்பி வந்தாள். ஆனால், அவரது கணவர் கத்தியால் குத்தி கொலை செய்ததால், அவள் சவப்பெட்டிக்குள் இருந்தாள். அவள் இறந்த உடல் தான் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது!
"
அந்த நேரத்தில், தந்தை தனது மகளின் காதருகே மென்மையாக அவளிடம் சொன்னார், கவனமாக கேளு மகளே...
உன்னுடைய வாழ்க்கையை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் இந்த மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடத்தை
நான் உனக்கு கற்பிக்க விரும்புகிறேன்.
1. சவப்பெட்டியில் வீட்டிற்கு வருவதை விட தோல்வியடைந்த திருமணத்திலிருந்து வீடு திரும்புவது
நல்லது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
2. திருமண வாழ்கையில் மனைவி இறந்தால், உடனடியாக கணவருக்கு இன்னொரு திருமணம் செய்ய பெண் கிடைத்துவிடும். ஆனால் பெண்ணை
இழந்த பெற்றோருக்கு தன் மகளை போன்ற மற்றொரு மகள் கிடைக்கமாட்டாள்.
3. கொடுமைகளை தினம் தினம் அனுபவிக்கும் திருமண வாழ்கையை விட பிரிந்து வாழும் தனிமையான
வாழ்க்கையே மேல்.
4. ஒரு பெண்ணானவள், எப்போது விட்டுக்கொடுக்க வேண்டும்... எப்போது விட்டு விலக வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும்.! என்று தன் மகளிடம் கூறினார்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
அப்பா : அப்பா மகளிடம் சொன்ன வாழ்க்கை பாடம் - குறிப்புகள் [ ] | Dad : A life lesson from a father to his daughter - Notes in Tamil [ ]