விளக்கேற்றிய வீடு வீண் போகாது. வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா இருக்கே

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

A lighted house is not wasted. There is so much to do with lighting at home - Tips in Tamil

விளக்கேற்றிய வீடு வீண் போகாது.  வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா இருக்கே | A lighted house is not wasted. There is so much to do with lighting at home

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே! “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா? தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் தோன்றும். எல்லோருமே சோர்வாக இருப்பார்கள். இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம். நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது. நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது. சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது. நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது. பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது. திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை.

விளக்கேற்றிய வீடு வீண் போகாது...

 

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே!

 

விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.

 

நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?

 

தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு.

 

அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.

 

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் தோன்றும்.

 

எல்லோருமே சோர்வாக இருப்பார்கள்.  இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.

 

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.

 

அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.

 

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.

 

சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.

 

சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது.

 

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது.

 

நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.

 

பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது.

 

திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை.

 

ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு.  இதை கருக்கல் நேரம் என்பர்.

 

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது.

 

ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும்.  எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.

 

ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது.

 

அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் மாலையில் தன் மகனும் மருமகளும் 

தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.

 

ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள்.

 

ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உன்க்கு இதெல்லாம் புரியாதம்மா.

 

எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம்.

 

ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம்.

 

மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.

 

அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார்.

 

அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.

 

இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர்.

 

அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச்சொல்கிறார்.

 

இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர்.

 

பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.

 

குறிப்பு:-

 

மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும்.

 

ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய்.

 

மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.

 

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும்.

 

இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : விளக்கேற்றிய வீடு வீண் போகாது. வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா இருக்கே - குறிப்புகள் [ ] | Spiritual Notes : A lighted house is not wasted. There is so much to do with lighting at home - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்