காரட்டை நாம் எல்லோரும் பச்சையாக கடித்து சாப்பிடலாம். ஆனால் பீட்ரூட்டை பச்சையாக கடித்து சாப்பிட முடியாது. பச்சையாக சாப்பிட ஒரு மாற்று முறை.
இள நரையை மறைக்கும் இயற்கை பீட்ரூட் கலவை:
காரட்டை
நாம் எல்லோரும் பச்சையாக கடித்து சாப்பிடலாம். ஆனால் பீட்ரூட்டை பச்சையாக கடித்து சாப்பிட
முடியாது. பச்சையாக சாப்பிட ஒரு மாற்று முறை. ஒரு பீட்ரூட்டை தண்ணீரில் கழுவி தோலுடன்
காரட் துருவும் சல்லடையில் சிறிய கண்ணில் பொடியாக துருவிக் கொள்ளவும். தேங்காய்ப்பூ
ஒரு மூடி சேர்க்கவும். 200
கிராம் தக்காளியை நன்றாக பிசைந்து ஊற்றவும். நாட்டு வெங்காயம் பொடியாக சற்று அதிகமாக
வெட்டிப் போடவும், கறிவேப்பிலை
மல்லி இலையை கத்தரியால் நூல்போல் வெட்டிப் போடவும். காரத்திற்கு தேவையான அளவு மிளகுத்தூள்
எலுமிச்சை இருந்தால் சாறு சிறிது சேர்க்கலாம். உப்பு போடக்கூடாது. வேக வைக்க கூடாது.
தேவையென்றால் காரட்டும் துருவிப் போடலாம். கலவையை நன்றாக கிளரி உடனே சாப்பிட்டுவிட
வேண்டும். அடுத்த வேளை உணவுக்கு உதவாது. இந்த இயற்கை பீட்ரூட் கலவையை தினமும் இயற்கை
உணவுடனும் சமையல் உணவுடனும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் புதியரத்தம் உருவாகி உடல்
பளபளப்படையும். பலச்சிக்கல் நீங்கும். கோதுமை
இரண்டு கிலோ - கேப்பை - கம்பு - சோளம் - மக்காச்சோளம் ஒவ்வொன்றும் வகைக்கு ஒரு லிலோ.
பாசிப்பயர் - கருப்பு உளுந்தம் பயர் வறுக்காத "நிலக்கடலைப் பருப்பு ஒவ்வொன்றும்
வகைக்கு 200 கிராம். இவைகளை வாங்கி சுத்தம் செய்து
வெயிலில் காய வைத்து மிஷினில் மாவாக அரைத்து வைத்து கொள்ளுங்கள். மாவை சற்று சொர சொரப்பாக
அரைக்க வேண்டும். அதிக நைசாக அரைத்தால் மாவில் நார்ச்சத்துக்கள் அழிந்துவிடும். அதற்காக
அதிக சொரசொரப்பாக அரைத்துவிடாதீர்கள். இந்த மாவில் 14 வகையான உணவுகள் தயார் செய்து சாப்பிடலாம்.
1) கஞ்சி (கூழ்)
2) கருப்பட்டி அல்லது நாட்டு வெல்லம்
கலந்து சத்துமாவு கஞ்சி-கஞ்சியை இருக்கியபின் தேங்காய்ப்பூ சேர்க்கவும். வாசனைக்கு
ஏலம், சுக்கு தூள் சிறிது சேர்க்கலாம்.
3) தோசை
4) இடியாப்பம்
5) நாட்டு வெங்காயம் கிடைத்த கீரை சிறிது
பொடியாக வெட்டிய கறிவேப்பிலை காரத்திற்கு மிளகுதூள் வாசனைக்கு சீரகத்தூள் தேவையான அளவு
உப்பு கலந்து வெங்காய தோசை செய்து சாப்பிடலாம்.
6) வெங்காய தோசைக்கு கலந்த அதே கலவையை
தண்ணீர் குறைவாக விட்டு மாவை கெட்டியாக பிசைந்து ரொட்டி செய்து சாப்பிடலாம். தோசை
- வெங்காய தோசை - ரொட்டி இவைகளுக்கு சட்னி தேவையென்றால் தேங்காய் சட்னி சேர்த்துக்
கொள்ளுங்கள்.
7) பனங்கருப்பட்டி தேங்காய்ப்பூ கலந்து
இனிப்பு தோசை
8) தேங்காய்ப்பூ நாட்டு வெல்லம் கலந்து
இனிப்பு கொழுக்கட்டை
9) உப்பு சேர்க்காமல் தேங்காய்ப்பூ
அதிகம் கலந்து அவிக்கும் சாதா கொழுக்கட்டை
10) இனிப்பு உப்பு சேர்க்காத புட்டு
11) இனிப்பு களி - களியை சாப்பிடும்போது
தேங்காய்ப்பூ கலந்து கொள்ளவும்
12) உப்புமா
13) வெல்லம் தேங்காய்ப்பூ தண்ணீர் சிறிது
கலந்து கெட்டியாக பிசைந்து எலுமிச்சை பழத்தின் அளவில் உருண்டையாக உருட்டினால் இது இயற்கை
லட்டு. இதை உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இடைத் தீனியாக தின்னக்கூடாது. உடனே
சாப்பிட்டு விடவும். இந்த பல தானிய மாவுடன் நாட்டு வெல்லத்தூள் கலந்து மாவாகவும். சாப்பிடலாம்.
இது இயற்கை சத்துமாவாகும். உங்கள் வீட்டின் சுற்றுப்புறங்களில் எறும்புக்கூட்டங்கள்
வாழ்ந்தால் அவைகளுக்கு உணவாக போடுங்கள் அறிவின் சிகரங்கள் பசியின்றி வாழட்டும். உணவு
தர்மம் செய்யுங்கள்.
தானியங்களாக
இருக்கும் போதும் அரைத்த மாவையும் வறுக்கக்கூடாது. வறுத்தால் உயிர்ச்சத்துக்கள் முழுமையாக
அழிந்து விடும். பச்சரிசி
மாவில் இடியாப்பம் செய்து தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம். புளித்து கெட்டுப்போன
மாவில் தயார் செய்வதுதான் இட்லி. இது உடல் நலத்திற்கு சிறிதும் உதவாது. சாப்பிட ஆசையாக
இருந்தால் வாரம் ஒரு நாள் ஒரு வேளை மட்டும் நான்கு இட்லிகள் சாப்பிடலாம். தேங்காய்
சட்னி அதிகமாக அதாவது இட்லிகளின் அளவு சாப்பிட வேண்டும். அரிசித் தோசையென்றால் வாரம்
ஒரு நாள் ஒரு வேளை மட்டும் இரண்டு தோசைகள் சாப்பிடலாம். தோசை மாவுடன் நாட்டு வெங்காயம், கறிவேப்பிலை, முறுங்கைக் கீரை சேர்த்து தோசை சுடலாம்.
கறுப்பு
சுண்டல் (கொண்டைக்கடலை) கறுப்பு மொச்சை - கறுப்பு உழுந்தம் பயிர் - பாசிப்பயர் இந்த
நான்கு வகை பயர்களை தனித்தனியாக அவித்து சாப்பிடலாம். அவித்த பயறு வகைகள் உடல் நலத்திற்கு
உதவாது. சாப்பிட ஆசையாக
இருந்தால் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் ஏதாவது ஒரு பயிறு வகையை அவித்து உப்பு
குறைவாக கலந்து தேங்காய்பூ கலந்து கறிவேப்பிலையை பொடியாக வெட்டி கலந்து தாளிதம் செய்யாமல்
சாப்பிடலாம். காரம் தேவையென்றால் மிளகுத்தூள் சிறிது போட்டுக் கொள்ளலாம். முழுமையான
உயிர்ச்சத்துள்ள தானியங்கள் மட்டும்தான். பயறுவகைகள் அவித்து முளைக்கட்டிய தானியங்கள்
சாப்பிடுவதை இடைத்தீனியாக தின்னாமல் ஒரு வேளை உணவாக சாப்பிட வேண்டும். அவித்த பயறுகளை
ஒரு அளவாக வைத்துக் கொண்டு அத்துடன் தேங்காய்,
பழங்கள், பச்சைக் காய்களில் கிடைத்தவைகளை
சேர்த்து சாப்பிடுங்கள். வயிறு நிறைந்து விடும்.
இயற்கையிலே பீட்ரூட் ஹேர் டை தயார் செய்ய நம்மால்
முடியும் எப்படி என்பதை படித்து பார்த்துப் பயன் பெறுங்கள். கருவேப்பிலை எடுத்துக்
கொள்ளவும். சிவப்பு செம்பருத்தி பூவை கொஞ்சம் எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சை
சாற்றை ஒரு பழத்தில் இருந்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். தண்ணீர் மற்றும்
ஒரு பீட்ரூட், காபி தூள் நான்கு கரண்டி வைத்துக் கொண்டு பின்வருமாறு தயார் செய்து
தலையில் apply செய்துப் பாருங்கள்.
• அடுப்பில் தண்ணீர் ஊற்றி சூடு முதலில் செய்து வாருங்கள். தண்ணீர்
நன்றாக சூடாகிய பிறகு, நான்கு கரண்டி காபித் தூள் கலந்து
நன்றாக கிளறி விடுங்கள்.
• காபித்தூள் என்பது கொதிக்கும் தண்ணீரில்
கலந்து சூடாகும் போது நுரை கிளம்ப வாய்ப்பு இருப்பதால் அடுப்பை குறித்த மிதமான சூட்டில்
வைத்துக் கொள்ளுங்கள்.
• ஒரு மிக்சி ஜாரில் தோல் நீக்கிய
சிறு சிறு துண்டுகளாக நன்கு பீட்ருட்டை நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
• அப்புறம் கருவேப்பிலை, சிகப்பு செம்பருத்தி பூக்கள் நன்றாக அரைத்து கொள்ளுங்கள். ஒரு 15 நிமிடங்கள்
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்துக்குள் கலவை நன்றாக ஆறிவிடும்
என்பதாலும், குறைந்தப் பட்சம் மாலை நேரங்களில் தயாரித்து இரவு
முழுவதும் வைத்து அடுத்த நாளில் இந்த பீட்ருட் ஹேர் டையை உபயோகப் படுத்துங்கள்.
நாம்
தயார் செய்துள்ள ஹேர் டையை வடிகட்டி இல்லையென்றால் அப்படியே கூட உபயோகப்படுத்தலாம்.
வடிகட்டி உபயோகப்படுத்தும்போது, தலை அலசுவதற்கு மிகவும் எளிதாக
இருக்கும். ஹேர் டையை தலைக்கு உபயோகப்படுத்துவதற்கு முன்னமே ஒரு ஸ்பூன் எலுமிச்சப்
பழச் சாற்றை எடுத்து கலந்து பின்பு ஹேர் டையாக உபயோகப்படுத்த வேண்டும்.
இந்த
இயற்கை முறையில் தயார் செய்துள்ள ஹேர் டையில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாமே
இயற்கையானது மட்டுமல்லாமல், தலை முடிகளுக்கு எந்தவொரு பக்க விளைவுகள்
ஏற்படுத்த அதிக வாய்ப்பு கிடையாது. மேலும் கலவையில் கருவேப்பிலை அதிகம் சேர்க்கப்படுவதாலும்
நமக்கு இரும்பு சத்து கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அது முடிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. அது மட்டும் அல்லாமல் தலை முடிகளின்
வேர்களுக்கும் அதிக வலிமைகளை தர வல்லது. செம்பருத்தி
பூவில் உள்ள கொலுஜான் தலை முடிகளுக்கு நல்லதொரு போஷாக்கை தருகிறது. அடுத்து எலுமிச்சை
சாறு நம் தலையில் உள்ள அழுக்கு மற்றும் பொடுகை போக்க பெரிதும் பயன் செய்கிறது. மேலும்
பீட்ருட் இளநரைகள் மற்றும் நரை கொண்ட முடிகளுக்கு நிரந்தரமான கருமை நிறத்தை கொடுக்க
அதிக வாய்ப்பு இருக்கிறது. பீட்ருட் ஹேர் டையை தொடர்சியாக நான்கு வாரங்கள் தொடர்ந்து
உபயோகப்படுத்தினால் நரை முடிகள் மாற வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு
தகவலை பதிவிடுவோம்.
- தமிழர்
நலம்
சித்தா மருத்துவம் : இள நரையை மறைக்கும் இயற்கை பீட்ரூட் கலவை - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : A natural beetroot blend that covers young gray h - Siddha medicine in Tamil [ Health ]