
நம்முடைய முன்னோர்கள் கூறிய பல சம்பவங்கள் அறிவியல் சார்ந்தவையாக, உண்மையை உரைப்பதாக உள்ளன. அப்படி நமக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தும் மகாராஷ்டிரா குகை கோவிலை பற்றி பார்ப்போம்....!
மர்மம் அடங்கிய தூணும். நீருக்கு நடுவில் சிவலிங்கமும்.!!
🙏 நம்முடைய முன்னோர்கள் கூறிய பல சம்பவங்கள் அறிவியல் சார்ந்தவையாக, உண்மையை உரைப்பதாக உள்ளன. அப்படி நமக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தும் மகாராஷ்டிரா குகை கோவிலை பற்றி
பார்ப்போம்....!
🙏 மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில்
அமைந்துள்ள கிரேஷ்வர் எனும் கிராமத்தில் காணப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த
கோவில்தான் "ஹரிஷ்சந்திரகாட் கோவில்". இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த
கோவிலாகும்.
🙏 இது 6ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலுக்கு அருகில் தான்
"கேதாரேஸ்வர்" என்ற இந்த அதிசய குகை உள்ளது
🙏 இந்த குகைக்கு உள்ளே சென்றால் நீரால் சூழப்பட்ட 5 அடி உயர சிவலிங்கம் ஒன்று உள்ளது. இந்த தண்ணீரைக் கடந்துதான் லிங்கத்தை அடைய வேண்டும்.
🙏 சிவலிங்கத்தை சுற்றி காணப்படும் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதை
கடந்து லிங்கத்தை அடைவது கடினமான ஒன்றாகவே உள்ளது. ஆனால், மழைக் காலங்களில் குகைக்கு அருகில்கூட செல்ல முடியாத அளவுக்கு உள்ளது.
🙏 இந்த சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமைந்துள்ளன. இவற்றில் மூன்று தூண்கள் ஏற்கனவே சேதமடைந்து விழுந்த நிலையில், ஒரே ஒரு தூண் மட்டுமே உள்ளது. 
ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும்
உங்களுக்கு இலவசமாய் தர வருகிறது... 
🙏 இந்த தூண் எப்போது சேதமடைந்து கீழே விழுகிறதோ அன்று இந்த உலகமே அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
🙏 சிவலிங்கத்தை சுற்றியுள்ள நான்கு தூண்களை "சத்ய யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம்" ஆகிய நான்கு யுகங்களை தெளிவுப்படுத்துவதாக
கூறப்படுகின்றது.
🙏 ஒவ்வொரு யுகமும் முடிவடையும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போதைய 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்து
உலகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: சிவன் : மர்மம் அடங்கிய தூணும். நீருக்கு நடுவில் சிவலிங்கமும்.!! - ஹரிஷ்சந்திரகாட் கோவில்..!! [ ] | Spiritual Notes: sivan : A pillar of mystery. Shiva lingam in the middle of the water.!! - Harishchandragad Temple..!! in Tamil [ ]