கேட்க காதுகள் இருந்தால் போதும்... அப்பாவின் மிதிவண்டியும், அவரின் கழுத்து துண்டும் சொல்லும் ஓய்வில்லா கதைகளையும், ஓராயிரம் கவிதைகளையும்... அப்பா என்பவர் மகளுக்கு கொடைக்கானல், மகனுக்கு ஊட்டி, மனைவிக்கு சிரபுஞ்சி, உடன் பிறந்தவனுக்கு ஏற்காடு, உடன் பிறந்தவளுக்கு காஷ்மீர், பேரனுக்கு சாரல், பேத்திக்கு தூறல்,
அப்பா என்பவர் யார் என்னும் கவிதை!!!
கேட்க காதுகள் இருந்தால் போதும்...
அப்பாவின் மிதிவண்டியும்,
அவரின் கழுத்து துண்டும்
சொல்லும் ஓய்வில்லா கதைகளையும்,
ஓராயிரம் கவிதைகளையும்...
அப்பா என்பவர்
மகளுக்கு கொடைக்கானல்,
மகனுக்கு ஊட்டி,
மனைவிக்கு சிரபுஞ்சி,
உடன் பிறந்தவனுக்கு ஏற்காடு,
உடன் பிறந்தவளுக்கு
காஷ்மீர்,
பேரனுக்கு சாரல்,
பேத்திக்கு தூறல்,
கொள்ளுப் பேரனுக்கு சாமரம்,
கொள்ளுப் பேத்திக்கு பூமரம்...
இப்படியாக எல்லோருக்கும்
எல்லாமுமாக இருந்தாலும்,
அவருக்கென அவர் மனதில் எஞ்சியிருப்பது
கவிதை மாதிரியான சில நினைவுகளும்,
நினைவுகளில் நீங்காத சில நிகழ்வுகளும்...
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அப்பா : அப்பா என்பவர் யார் என்னும் கவிதை - குறிப்புகள் [ ] | Dad : A poem about who is father - Notes in Tamil [ ]