நிலம், நீர், ஒளி, காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது தேங்காய், இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப்படுகிறது , இது சித்தர்கள் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது
சிதறுகாய் தேங்காய் பற்றிய பதிவு:
நிலம், நீர், ஒளி, காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத்
தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது தேங்காய், இது உடைபடும் இடங்களில்
இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப்படுகிறது , இது சித்தர்கள்
விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது
இது சிவனின் மூல
சக்தியாக உள்ளது இதில் உள்ள முக்கண்களில் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு
சேமிக்கப்படுகிறது
தேங்காயின் உட்புறத்தில்
பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும். கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய்
உடைக்கும் போது அது இறைசக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது . இதனால்
மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது .
ஒரே இடத்தில் தேங்காய்
சிதறு காய் இடும்போது அங்கே பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும்.
முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும்போது அங்கே தீய துர்சக்திகள் விலகும்.
தோஷம் உடையோர்
ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகலில் , திங்கள் கிழமையின் முற்பகலில் , முச்சந்தி விநாயகருக்கு
வாரம் தோறும் சிதறுகாய் இட்டால் கால சர்ப்ப தோஷம் கூட சரியாகி விடும். வீட்டில்
தேங்காய் உடைத்து பூஜை செய்தால் பிணிகள் நீங்கி லஷ்மி கடாட்சம் பெருகும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : சிதறுகாய் தேங்காய் பற்றிய பதிவு: - ஏன் தேங்காயை முச்சந்தியில் உடைக்கிறோம் தெரியுமா? [ ] | Spiritual Notes : A post about the saffron coconut: - Do you know why we break the coconut at the junction? in Tamil [ ]