நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், ஏனென்றால்.... 1. டிரெட்மில்லை ( TreadMill ) கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார். 2. ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர் 57 வயதில் இறந்தார்.
உண்மையான நகைச்சுவை...!!
நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், ஏனென்றால்....
1. டிரெட்மில்லை ( TreadMill ) கண்டுபிடித்தவர் 54
வயதில் இறந்தார்.
2. ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர் 57 வயதில்
இறந்தார்.
3. உலக உடற்கட்டமைப்பு சாம்பியன் 41 வயதில்
இறந்தார்.
4. உலகின் சிறந்த கால்பந்து வீரர் மரடோனா தனது
60 வயதில் காலமானார்.
ஆனால்...
ஆனால்...
5. KFC கண்டுபிடிப்பாளர் 94
வயதில் தான் இறந்தார்.
6. Nutella பிராண்ட்
கண்டுபிடிப்பாளர் 88 வயதில் தான் இறந்தார்.
7. சிகரெட் தயாரிப்பாளர் வின்ஸ்டன் 102 வயதில்
தான் இறந்தார்.
8. அபின் கண்டுபிடிப்பாளர் 116 வயதில்
பூகம்பத்தில் இறந்தார்.
9. ஹென்னெஸியின் உலகப் புகழ்பெற்ற பிராந்தி
பிராண்டை கண்டுபிடித்தவர் 98 வயதில் இறந்தார்.
10. MDH மசாலா கொண்ட மனிதர் 97
ஆண்டுகள் வாழ்ந்ததால் அதிக மசாலாப் பொருள்களையும் உண்ணுங்கள்.
பிறகு உடற்பயிற்சி ஆயுளை
நீட்டிக்கும் என்ற முடிவுக்கு இந்த மருத்துவர்கள் எப்படி வந்தனர்?
முயல் எப்பொழுதும்
மேலேயும் கீழேயும் குதிக்கிறது, ஆனால் 2 வருடங்கள் மட்டுமே உயிர் பிழைக்கிறது.
ஆனால் உடற்பயிற்சி
செய்யாத ஆமை 400 வருடங்கள் உயிர் பிழைக்கிறது.
எனவே,
கொஞ்சம் ஓய்வெடுங்கள்...
அமைதியாக இருங்கள்...
குளிர்ச்சியாக
இருங்கள்...
பிடித்த உணவை நன்றாக
சாப்பிடுங்கள்...
நிறையாக தண்ணீர்
குடிக்கவும்...
பிடித்த பாடல்களை
எப்போதும் கேளுங்கள்...
முடிந்த வரை பிறருக்கு
உதவுங்கள்...
உங்கள் வாழ்க்கையை
முழுமையாக அனுபவிக்கவும்...😆😆😆😆😆😆😆😆
எந்தெந்த வழிகளில் அவை
உங்களுக்கு கிடைக்குமோ அந்த வழிகளை நீங்கள் கடைபிடிப்பதை இந்து மதம் தடுக்கவில்லை.
நிச்சயமாக தவறான
வழிகளின் மூலம் அவை கிடைக்கப் போவதில்லை.
காமுகனோ , கொலைகாரனோ, சூதாடியோ , பிறமனை நயந்து செல்லும்
பேதையோ ,
ஏமாற்றுக்காரனோ நிரந்தரமான நிம்மதியை அடைவதில்லை.
ஆகவே நிரந்தரமான
நிம்மதிக்காக பிறர் வெறுக்காத நல்ல வழிகளைதான் நீங்கள் நாட முடியும்.
அந்த வழி எதுவானாலும்
அதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வதை இந்து மதம் தடுக்கவில்லை.
நீங்கள் சொல்வது போல்
பற்றற்ற வாழ்க்கையை மட்டும் இந்து மதம் போதித்தால் ரிசர்வ் பேங்க் அச்சடிப்பதை
நிறுத்த வேண்டும்.
லோக்சபையும் மக்கள்
சபையும் பஜனை மடங்களாகும் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்.
இந்து மதம் லௌகீக
வாழ்க்கையை வற்புறுத்துகிறது என்பதுதான் இதுவரை நான் எழுதி வந்திருக்கும் தொடர்
கட்டுரையின் சாரமாகும்.
மனதுக்கு நிம்மதி என்பது
பந்த பாசங்களை அறுத்து விடுவதால் மட்டுமே கிடைக்கும் என்று நான் வாதாட வரவில்லை.
கீதையை கண்ணன்
உபதேசித்தது அர்ஜுனனுக்கு!
ஆகவே பந்த பாசத்தை
அறுப்பது என்பது கீதையின் முழு நோக்கமாக இருக்க முடியாது.
அர்ஜுனன் பந்த
பாசங்களுக்கு கட்டுப்பட்டவன்.
காதல் உணர்ச்சி
மிகுதியும் உள்ளவன்.
போர் என்று வந்தபின்
உறவு பார்க்கக் கூடாது என்றுதான் கண்ணன் வாதாடுகிறார்.
அர்ஜுனன் ஆத்ம ராகம்
சஞ்சலிப்பதைத்தான் நிறுத்த முயல்கிறான்.
தியானத்தின் மூலம் மனதை
ஒருமுகப்படுத்த முடியும் என்றுதான் கூறுகிறார்.
யாரையும் சந்நியாசியாக
போகச் சொல்வது இந்து மதத்தின் நோக்கம் அல்ல.
வாழ்வை கண்டு
பயந்தவர்கள், நொந்தவர்கள் லௌகீக வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று
கண்டவர்கள் பற்றற்ற வாழ்வுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ள இந்துமதம்
அனுமதிக்கிறது.
ஆனால் லௌகீக
வாழ்க்கையிலே சரியானவற்றை தேர்ந்தெடுத்து மன நிம்மதியை பெறக்கூடியவர்களை அது
தடுக்கவில்லை.
அதை ஊக்கப்படுத்துகிறது
என்று கூடச் சொல்லலாம்.
உங்களுடைய சலனம் லௌகீக
வாழ்க்கையில் மன நிம்மதியை பெறுவது எப்படி என்பதே?
நீங்கள் எவ்வளவு விவேகம்
உள்ளவராக இருந்தாலும் அந்த நிம்மதிக்கு இடையூறு எப்போதாவது வந்து சேருகிறது.
அது உங்கள் தலை எழுத்தை
பொறுத்தது.
ஒரு நல்ல பெண்ணை
தேர்ந்தெடுத்து அவளோடு நிம்மதியாக வாழ நீங்கள் விரும்புகிறீர்கள் என்று வைத்துக்
கொள்ளுங்கள் அந்த தேர்வில் விதி உங்களை வென்று விடக்கூடும்.
நீங்கள் எண்ணியது போன்ற
மனைவியாக அவர் இல்லாமல் போய்விடக்கூடும்.
நிம்மதியாக வாழ நீங்கள்
தேர்ந்தெடுத்த பெண்ணே உங்கள் நிம்மதியை கெடுக்கும் சக்தியாக ஆகி விடக்கூடும்.
வாழ்க்கைக்கு பொருள்
வேண்டுமே என்று நீங்கள் தொடங்குகிற வாணிபம் ஒரு கட்டத்தில் வீழ்ச்சி உற்று உங்கள்
நிம்மதியை அழித்து விடவும் கூடும்.
உங்கள் நண்பர்கள் நன்றி
கெட்டவர்கள் ஆகி உங்கள் நிம்மதியை கொன்று விடவும் கூடும்.
அதுவே லௌகீக
வாழ்க்கைக்கு மன நிம்மதியை வேண்டுபவன் முதலில் அந்த மனதை எந்த அதிர்ச்சியையும்
தாங்கக் கூடியதாக பக்குவம் செய்து கொள்ள வேண்டும்.
லௌகீக வாழ்க்கையில்
மனதைக் கெடுப்பதற்குதான் ஏராளமான வழிகள் உள்ளன என்பதை முதலில் புரிந்து கொள்ள
வேண்டும்.
கீதையில் கண்ணன் சொல்வது
போல் எதிலும் சமநோக்கு ஏற்படும் நிலை வந்தால்தான் மன நிம்மதி சாத்தியமாகும்.
எனது வாழ்க்கையிலேயே
இதற்கான அனுபவங்கள் உண்டு.
முதலில் நான் மனதார
காதலித்த பெண் எனக்கு கிடைக்கவில்லை நான் கவலைப்பட்டு நிம்மதி இழந்தேன்.
பிறகு திருமணம்
பேசும்போது நான் குறிப்பிட்ட பெண் எனக்கு கிடைக்கவில்லை.
நான் மீண்டும் நம்பிக்கை
இழந்தேன்.
விரும்பியது
கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு என்ற பழமொழி படி கிடைத்ததை விரும்பத் தொடங்கி
செயற்கையான நிம்மதியை தேடிக்கொண்டேன்.
நான் 25 ரூபாய்
சம்பளத்தில் ஓர் இடத்தில் வேலை பார்த்த போது அது 75 ஆகாதா என்று ஏங்கினேன்.
ஆயிற்று!
அது 200 ஆகாதா என்று
ஏங்கினேன் கிடைத்தது.
ஆயிரம் வராதா என்று
அமைதி இழந்து கேட்டது மனது.
அதுவும் வந்தது.
அது லட்சம் வரை
போயிட்டு!
அப்போதும் நிம்மதி
இல்லை.
வந்த ஏதும் தங்கவில்லை.
செல்வம் என்பது
செல்வதற்காக வருவதுதான் என்று முடிவு கொண்டேன்.
பொருளைப் பெரிதாக
பொருட்படுத்தாமல் வருவது வரும் போவது போகும் என்று சமநோக்கு முடிவு கொண்டேன்
நிம்மதி வந்தது.
ஆனால் லௌகீக
வாழ்க்கையில் ஒரு நிம்மதி வரும்போது ஒரு துன்பமும் கூட வருகிறது.
என்ன செய்ய பேதலித்த
மனதை பார்த்து , நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? என்று அழுது , இரண்டு மனம் வேண்டும்
என்று இறைவனை கேட்டேன்.
உபதேசத்தில் இறங்கி
இருக்கும் எனக்கே இன்னும் முழு நிம்மதி கிட்டவில்லை.
பகவத் கீதையின் தியான
யோகம் என்னை செம்மைப்படுத்தி வருகிறது.
என்றோ ஒருநாள் சாகப்
போகிறோம். செத்த பிணத்தின் முன் இனி சாகப் போகும் பிணங்கள் கதறி அழ போகின்றன.
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
ஆம் கதை ஒரு நாள்
முடியப்போகிறது.
சிலர் அழுது முடிக்கப்
போகிறார்கள்.
பிறகு எல்லோரும் மறந்துவிடப்
போகிறார்கள்.
காந்தியையும் நேருவையும்
மறந்து விட்ட ஜனங்கள் என்னையா நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறார்கள்?
இப்படி நினைப்பேன்!
போனால் போகட்டும் போடா
வாழ்க்கையை அனுபவித்து சாவோம் என்று முடிவு கட்டுவேன்.
ஒரு நாள் மயங்கி
கிடப்பேன்
மறுநாள் எதிர்காலத்தைப்
பற்றிய பயம் வரும்
உடனே அந்த பயத்தை
மாற்றிக் கொள்வேன்.
ஆகவே லௌகீக வாழ்க்கையில்
இருந்து கொண்டே மனநிம்மதியை பெற எண்ணினால் தினசரி வருகின்ற இடையூறுகளை களைந்து
கொண்டே இருக்க வேண்டும்.
இடையூறுகள் வந்தே
தீரும்.
அவற்றுக்கு
பயப்படக்கூடாது.
எல்லாம் கண்ணனின் கட்டளை
என்று சிரித்துக்கொண்டே அப்புறப்படுத்தி விட வேண்டும்.
இப்படி ஓராண்டுக்குச்
செய்து பாருங்கள்.
பிறகு உள்ளம்
மரத்துப்போகும். ஈட்டி வந்து குத்தினாலும் வலிக்காது.
முள்ளின் மீது
உட்கார்ந்து கொண்டு ரோஜா பூவை பற்றி பாடுகிற சக்தி வந்து விடும்.
நமது பிறப்பு கண்ணனின்
விளையாட்டு என்ற ஞானம் வந்துவிடும்.
மற்றவர்கள் எல்லாம்
சிறியவர்களாகவும் நாம் கொஞ்சம் பெரியவர்களாகவும் நமக்கு தோன்றும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
வாழ்க்கை பயணம் : உண்மையான நகைச்சுவை...!! - மனிதனின் மனதுக்கு முதல் தேவை அமைதியும் நிம்மதியுமே! [ ] | Life journey : A real joke...!! - The first need of the human mind is peace and tranquility! in Tamil [ ]