சிதம்பரத்தில் தில்லைக்காளி ஆலயத்தில் மூன்று முகங்களும், நான்கு கரங்களும் கொண்ட பிரம்ம சாமுண்டியாகவும், தில்லைக் காளியாகவும் இரண்டு அம்பிகைகளை நாம் தரிசிக்கலாம்!
கோயில் ஒன்று; காளி இரண்டு!
சிதம்பரம் தில்லைக்காளி ஆலயத்தில்
மூன்று முகங்களும், நான்கு
கரங்களும் கொண்ட பிரம்ம சாமுண்டியாகவும், தில்லைக் காளியாகவும் இரண்டு அம்பிகைகளை நாம் தரிசிக்கலாம்!
தில்லைக் காளி தனியே உக்கிரமாக அமர்ந்து அருள்கிறாள். இந்த அன்னைக்கு நல்லெண்ணெயால்
மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. வெள்ளை ஆடை அணிந்து மேனி முழுவதும் குங்குமம் துலங்க
காட்சி தரும் அன்னையைத் தரிசிக்கும்போதே மெய்சிலிர்க்கும்! இல்லை என்பதே தில்லைக் காளியிடம்
இல்லை என்கிறார்கள் பக்தர்கள். தீயசக்திகளின் பாதிப்புகளில் இருந்து இன்னொரு காளியின்
உருவமாக உள்ள 'பிரம்ம சாமுண்டி' நம்மைக்காத்து ரட்சிக்கின்றாள். சிதம்பரம்
செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் இந்த அற்புத அன்னையின் ஆலயத்திற்கு ஒருமுறை சென்று
வாருங்கள்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : கோயில் ஒன்று; காளி இரண்டு! - சிதம்பரம் தில்லைக்காளி [ அம்மன் ] | Amman: History : A temple; Kali two! - Chidambaram Thillaikali in Tamil [ Amman ]