திருமணத் தடை நீக்கி கல்யாண வரம் அருளும் கோயில்!

பெருமாள்

[ பெருமாள் ]

A temple that removes the ban on marriage and grants marriage blessings! - Perumal in Tamil

திருமணத் தடை நீக்கி கல்யாண வரம் அருளும் கோயில்! | A temple that removes the ban on marriage and grants marriage blessings!

'திருமண் கல்யாண லக்ஷ்மிநாராயணப் பெருமாள் கோயில் கொண்டு அருள் பாலித்து வரும் 'திருமண் மலை' ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் அமைந்துள்ளது.

திருமணத் தடை நீக்கி கல்யாண வரம் அருளும் கோயில்!

 

'திருமண் கல்யாண லக்ஷ்மிநாராயணப் பெருமாள் கோயில் கொண்டு அருள் பாலித்து வரும் 'திருமண் மலை' ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான சூழ்நிலையில், நடுநாயகமாக அமைந்து உள்ள சிறிய குன்றின் மீது ஸ்ரீ பத்மாவதி ஸமேத ஸ்ரீ வேங்கடாசலபதிப் பெருமானுக்கு ஓர் அழகிய திருக்கோயில் எழுப்பப்பட்டடுள்ளது. தென்திருப்பதி என்று சொல்லும் அளவுக்கு இக்கோயில் பக்தர்களின் இடையே பிரபலமாகி வருகின்றது!.

 

சுமார் 250 ஆண்டு பழமைமிக்கதாகக் கருதப்படும் இவ்வால யத்திலும் திருப்பதி போன்றே ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் நின்ற கோலத்தில், அதே போன்ற ஆபரணங்கள், அலங்காரங்களுடன் பக்தர் களுக்குக் காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார். மலையின் மீது அமைக்கப்பட்டுள்ள படிகள் கீழே சாலையிலிருந்தே துவங்குகின்றன. இச்சிறிய குன்றின் மீது சுமார் 200 மீட்டர் நடந்து சென்றால், முதலில் நாம் தரிசிப்பது, பன்னிரண்டு அடி உயரமுள்ள விஸ்வரூப வீர அஞ்சலி ஹஸ்த ஆஞ்சநேயரை!!...

 

இந்த அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் தோற்றம் நம்மை வியப்படையச் செய்கிறது!... மேற்கு முகமாகக் கூப்பிய கரங் களோடு, பெருமாளைப் பார்த்தவாறு கம்பீரமாகக் காட்சி தருகிறார். தலையில் கிரீடம், காதில் குண்டலம், கோரைப் பற்கள், புள்கை முகம், கையில் ஜபமாலை, பாதத்தின் கீழ்புறம் வால், வாலில் மணியும், சிரசின் உச்சியில் சிகாமணியுடனும் சேவை சாதிக்கின்றார்!. ஆஞ்ச நேயருக்கு நேர் எதிரே கல்யாண லக்ஷ்மி நாராயணப் பெருமாள், நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி தரிசனம் தரக்காணலாம்!. இங்கே வரும் பெருமாள் பக்தர்களை நோக்கி வணங்கி வரவேற்கும் தோரணையோடு, பக்தியையும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளின் அருளையும் பரஸ்பரம் பரிமாறி வைக்கும் அரும் சேவையை ஆற்றி வருகிறார் இந்தப் பன்னிரண்டு அடி உயரமுள்ள ஆஞ்சநேயர்! சகல தோஷங்களையும் நீக்கும் சக்தி அனுமனுக்கு இருப்பதால் இங்கு நிறையப் பக்தர்கள் அனுதினமும் வருகிறார்கள். இந்த அனுமனுக்கு வடைமாலை சாத்தி வழிபட ராகு, கோது தோஷங்கள் விலகி ஓடும் என்பது நன்னம்பிக்கை ..ஹனுமத் ஜெயந்தி இங்கே ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

 

காரமடையில் பெருமாள் லிங்க வடிவில் சுயம்புவாக வெளிப்பட்டது போல, இவ்வாலயத்திலும் இறைவன் சுயம்புவாகத் தானே தோன்றி, தனது வலது புறத்தில் தாயார் சேவை சாதிக்க. திருமண் கல்யாண லக்ஷ்மி நாராயணராக' அருட்காட்சி புரிகின்றார்!

 

இவ்வாலயத்தின் பலிபீடம் அற்புதமான சக்திகளைக் கொண்டது என்று பக்தர்கள் தீவீர நம்பிக்கை கொண்டுள்ளனர். பேய், பிசாசு, பில்லி சூனியம் இவற்றை அகற்றும் அற்புத சக்தியை இப்பலிபீடம் கொண்டுள்ளது. நோய்வாய்ப்பட்டவர்களும், கெட்ட ஆவிகளால் துன்புறுபவர்களும் இவ்வாலயத்தில் வந்து வழிபாடு செய்து தங்களது இன்னல்களைத் தீர்த்துக் கொள்கின்றனர்.

 

திருமண்ணால் (நாமக்கட்டியைக் குழைத்து) இங்கே எழுந் தருளியிருக்கும் இறைவன், இறைவியைத் தினசரி அலங்கரித்து விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது. இங்கே வருகின்ற பக்தர் களுக்குப் பிரசாதமாகத் திருமண்ணையே கொடுக்கிறார்கள்.

 

திருமணத் தடை உள்ளவர்கள், மகப்பேறு இல்லாதவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பதவி உயர்வு பெறவும், வியாபார அபிவிருத்திக்காகவும் சனிக்கிழமை தோறும் இக்கோயிலில் அருள்பாலித்து வரும் பெருமாளை வந்து வழிபட்டு நற்பேறு பெறுகிறார்கள். குறைகள் அனைத்தும் நீங்கி, நினைத்த காரியங்கள் நிறைவேறும் சிறப்புப் பெற்றது இப்பழம்பெரும் கோயில்!.

 

அக்காலத்தே யானைகள் இம்மலைப் பகுதிகளிலும், காட்டுப் பகுதிகளிலும் இருந்து வந்ததன் பொருட்டு ஆனைக் கரட்டுப் பெருமாள்' என்றும் இவ்விறைவன் அழைக்கப்படுகிறார். ஒரு சில சமயங்களில், குறிப்பாக பிரதோஷ காலத்தில் இவ்விறைவன் உக்கிரமாகி, நரசிம்மராக மாறுவதாகச் சொல்லப்படுகிறது!!. திருமண்ணால் (நாமக்கட்டியால்) அலங்கரிக்கப்பட்ட திருமாலின் முகத்தில் சீரிய வெடிப்புக்கள் ஏற்படும்!. அப்போது உக்கிரநரசிம்ம மூர்த்தியாக மாறுகிறார் என்கிறார்கள்!!.

 

தனது வலது புறத்தில் அன்னை பத்மாவதித் தாயாரோடு இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி தருவதால், இங்கே வந்து திருமணம் ஆகாதவர்கள் தங்களது ஜாதகத்தை வைத்துப் பிரார்த்திக்கிறார்கள். அப்படி ஜாதகத்தை வைத்துப் பிரார்த்தித்து வணங்கியவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் திருமணத் தடைகள் நீங்கித் திருமணங்கள் நடந்தேறி உள்ளன என்பதற்கு ஆதாரமாகக் கருவறை அருகே வைக்கப்பட்டிருக்கும் கல்யாணப் பத்திரிகைகளே.சான்றாக உள்ளன.

 

பெருமாளுக்காக சுத்தமான கம்பு, அரிசியினை விரதத்துடன் அரைத்து, பனைவெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து, சிறிது ஏலப் பொடியும் கலந்து, வெள்ளைத் துணியில் முடிந்து இவ்வாலயத்தில் கொண்டு வந்து வேண்டுதலைக்காரர்கள் கொடுக்கிறார்கள். இது பல்லாண்டுகளாக இன்றுவரை நடந்து வருகிறது. பெருமாளுக்குப் பிடித்த நைவேத்தியமாக இதைக் கருதுகிறார்கள். இம்மலை அருகே கிடைத்த ஒரு பழங்காலக் கல்வெட்டில் 'பொரிமாவும், பெருமாளும்...' என்ற வாசகம் காணப்படுகிறது!!.

 

இம்மலைக்கு வரும் பக்தர்களுக்கு அர்ச்சகர் கொடுக்கும் குங்குமம், துளசித்தீர்த்தம் தவிர, இம்மலை மண்ணையே பிரசாத மாசுக் கொடுப்பதையும் காண முடிகிறது.

 

திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக் கடன் செய்வதாக வேண்டிக் கொண்டவர்கள் தங்களால் திருப்பதி செல்ல முடிய வில்லையெனில் அதற்குப் பதிலாக இவ்வாலயத்திற்கு வந்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என திடமான நன்னம்பிக்கை உள்ளது.

 

இந்த ஆலயத்திலுள்ள பெருமானை ஆதிசேஷன் பூஜித்த தாகவும் கூறப்படுகிறது. மேலும் நாகவடிவில் வந்து பலர் இப்பெரு மாளைச் சேவித்ததாகவும் வரலாறு உள்ளது. இவ்வாலயத்தின் வடமேற்குப் பகுதியில் மிகப்பெரிய பாம்புப் புற்று ஒன்று இன்றும் காணப்படுகின்றது.

 

இந்த ஆலயத்தில் 'கருட சேவை' முக்கியமான திருவிழா வாகும். உற்சவமூர்த்தி கருடன் மீது அமர்ந்து உலா வருவது மெரவணை என்று சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் இவ்விழா நடைபெறுகிறது. இம்மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை அன்று 'சமாராதனை' என அழைக்கப் படும் அன்னதானம் நடத்தப்படுகிறது.

 

ஈரோடு மாவட்டம், பவானி அருகே ஒட்டபாளையம் என்ற பருவாச்சி செல்லும் சாலையில் செல்ல வேண்டும்)


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்


பெருமாள் : திருமணத் தடை நீக்கி கல்யாண வரம் அருளும் கோயில்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : A temple that removes the ban on marriage and grants marriage blessings! - Perumal in Tamil [ Perumal ]